December 26, 2012

ஹஜ் அனுபவங்கள் ‍ 4

1.சென்னையில் இருந்து கிளம்பி சுமார் ஆறுமணி நேரம் விமானத்தில் பயணித்து ஜித்தா ஏர்போர்டில் இறங்கும் பொழுது அந்த ஊர் நேரம் பகல் ஒரு மணி.நாங்கள் ஜித்தா ஏர்போர்டில் அமர்ந்திருந்து மக்கா செல்ல பஸ் ஏறும் பொழுது இரவு ஒருமணி.அத்தனை நேரம் ஏர்போர்டில் காத்து இருந்தோம்.ஏர்போர்ட் என்றால் சில் என்ற ஏஸி குளிரும்,குஷன் இருக்கைகளும் போடப்பட்டு இருக்கவில்லை.கொளுத்தும் வெயில்.நிழலுக்கு குடை போன்ற  கூடாரங்களுக்கு கீழ் வியர்வை வழிந்தோட அங்குள்ள சிமெண்ட் திண்டுகளில் அமர்ந்திருந்தோம்.அப்பொழுது நினைத்துக்கொண்டேன்.இப்புனித தளத்தில் பொறுமையும் சகிப்புத்தன்மையும் அதிகம் அதிகம் வேண்டும் என்ற நிலைப்பாடை இப்பொழுதே இறைவன் காட்டி விட்டான் என்று.சுமார் பனிரெண்டு மணி நேரம் காத்திருந்து பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கு நல்லதொரு பயிற்சியும் அந்த இடத்தில் எடுத்துக்கொண்டோம் என்பதும் உண்மை.


2.நடு நிசியில் ஜித்தாவில் இருந்து மக்கா செல்லும் பொழுது அசதியில் சற்றே கண்ணயர்ந்து விட்டேன்.அப்பொழுது ஜித்தாவில் இருந்து 55 கிலோ மீட்டர் தூரத்தில் மக்காவின் எல்லை ஆரம்பமாகும் இடமான ஹுதைபியா என்ற இடத்தில் ஹைவேயில் அகலமான சாலையில் பிரமாண்டமான ரைஹால்(குரான் வைக்கும் பலகை)மீது குர் ஆன் இருப்பது போன்ற அழகிய ஆர்ச்சை கவனிக்க முடியவில்லை.பிரிதொரு சமயம் ஜித்தா செல்லும் பொழுது இரவு நேரப்பயணத்தில் அதனை கண்டு கழித்தேன்.வண்ண மின் விளக்கு அலங்காரங்களுடன் கண்களை கவர்ந்தன அந்த அழகு ஆர்ச்.

3.மக்கா சென்றதும் நட்சத்திர ஹோட்டலில்,சகல வசதிகளுடன் தங்கி இருந்து புனித கஃபாவை தரிசனம் செய்து வந்தது போக ஹஜ்ஜின் ஆரம்பமாக முதலில் மினா டெண்டுக்கு அழைத்து சென்ற பொழுது ஒன்றேகால் அடி அகலமும் ஆறடி நீளமும் கொண்ட படுக்கையும்,அதே படுக்கையில் தொழவும் ஓதவும்,பிரார்த்தனை புரியவும்,சாப்பிடவும் தூங்கவுமாக ஐந்து நாட்களையும் கடத்தும் பொழுது மிக மிக பொறுமையும்,சகிப்புத்தன்மையும்,சேவைமனப்பான்மையும்,விட்டுக்கொடுத்தலும்,இறைவன் மீது அளவற்ற அச்சமும்,மனதில் ஏற்படுகிறது.

4.இடையில் அரஃபா மைதானம் சென்ற பொழுது சாமியானாவுக்கு கீழ் விளக்கு வெளிச்சம்,காற்று இல்லாமல் கரடு முரடான தரையில் கார்பெட் விரித்து அதிலும் தங்கி பிரார்த்தனை செய்த பொழுதும்,அங்கிருந்து முஸ்தலிபாவுக்கு சென்ற பொழுது அந்த  விரிப்புக்கூட இல்லாமல் கொண்டு சென்று இருந்த  பெட்ஷீட்டை விரித்து கற்கள் நிறைந்த நடு ரோட்டில் தங்கி இருந்த பொழுதும் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடின்றி பெருமை,புகழ்,உலகநோக்கங்கள்  வேறு சிந்தனை ஏதுவும் இன்றி இறைவன் ஒருவனுக்காகவே அத்தனை சிரமங்களையும் அனுபவித்து ஹஜ் கடமைகளில் ஈடு பட்டபொழுது மனம் மிகவுமே பக்குவப்பட்டு விடும்.

5.புனித கஃபாவை சுற்றி வலம் வரும் பொழுது உச்சிவெயிலானாலும் உச்சந்தலைதான் கொதிக்குமே தவிர நடக்கும் பொழுது கால் குளிரூட்டப்பட்டதைப்போன்ற குளுமையை அனுபவித்து ஆச்சரியப்பட்டுப்போனேன்.கொளுத்தும் வெயிலுக்கு தரை எப்படி சூடாக இருக்கும்?ஆனால் அந்த சூடே தெரியாத அளவுக்கு தரைகள்.செருப்பு அணியாத காலால் எப்படி வெயில் கொளுத்தினாலும் சிரமம் இல்லாமல் கஃபாவை வலம் வர ஏதுவாக இருந்தது மிக ஆச்சரியமே.

6.ஹரத்தில்  சொல்லப்படும் பாங்கு(தொழுகைக்கான அழைப்பு) பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும்.கணீர் என்ற கம்பீரக்குரல்.ஹரம் முழுக்க ஒலித்து செவிமடுப்போரின் செவியுனுள் பாய்ந்து,நெஞ்சமெல்லாம் நிறைந்து இதயம் முழுக்க ஊடுருவி,அல்லாஹ்வை வணங்க வாருங்கள் என்று அழைக்கும் ஒலி மனதினை பரவசப்படுத்தும்.பல இமாம்கள் இருந்தாலும் 14 வயதிலிருந்து அழைப்புப்பணியை மேற்கொண்டிருக்கும் ஷேக் அஹ்மது அலி முல்லா பாங்கு சொல்வதை நீங்களும் கேளுங்கள்.


7.உலகில் இருக்கும் இஸ்லாமிய நாடுகள் மொத்தம் 59 ஆகும்.இதில் அதிகளவு மக்கள் தொகை கொணட நாடு இந்தோனிஷியா ஆகும்.ஹஜ் செய்வதற்கு இந்நாட்டில் .இருந்து அதிக மக்கள் வருகின்றனர்.

8.புனித நீரான ஜம்ஜம் நீர் பூமியிலேயே சிறந்த நீராகும்.ஜம்ஜம் கிணறு தோன்றி 4853 ஆண்டுகள் என்று படித்தறிந்துள்ளேன்.30 மீட்டர் ஆழமுள்ள இக்கிணற்றில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு சுமார் 39,600 லிட்டர் நீர் ஊறுகின்றது.கோடிகோடியான மக்கள் குடித்தும்,கேன்களில் தங்கள் சொந்த நாடுகளுக்கு எடுத்து சென்றும் சிறிதேனும் வற்றாத அற்புத நீர் அது.சிறந்த நோய் நிவாரணியும் கூட.

9.மக்காவிலும் சரி.மதினாவிலும் சரி ஐந்து வேளை தொழப்போகும் பொழுதெல்லாம் தொழுகைக்குப்பிறகு ஜனாஸா தொழுகை(மரணித்தவர்களுக்காக)நடக்காத வேளையே இல்லை.ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஜனாஸாக்கள்(சடலங்கள்).தொழுகை நடத்தபட்ட பின் மின்னல் வேகத்தில் ஜனஸாக்களை சுமந்து செல்வார்கள். மையவாடியை(அடக்கஸ்தலம்)நோக்கி.

10.மனதினை உலுக்கியஇன்னொரு நிகழ்வு.நாங்கள் பயணித்த டிராவல்ஸில் ஒரு மலேஷிய தமிழ் குடும்பம்.பெரிய குழுவாக வந்திருந்தனர்.மிகவும் அன்பாக பழகியதில் அக்குடும்பத்தினருடன் ஐக்கியமாகி விட்டேன்.சுமார் 50 இல் இருந்து 55 வயது இருக்கும் கம்பீரமான உருவம்கொண்டவர்.பெயர் மெஹர் பானு.இவர் மட்டும் அதிகம் பேச மாட்டார்.நானோ “அக்கா,வெள்ளி(மலேசிய பணம்)தந்தால் தான் பேசுவீர்களா” என்று பேசி பேசியே அவரை கலகலப்பாக்கினேன்.ஹஜ் கிரியைகள் முடிந்து,இக்கிரியைகளை முடித்த பின்னர் கஃபாவை வலம் வந்தால் ஹஜ் பூர்த்தியாகி விடும்.இதற்கு தவாபே ஜியாரத் என்பர்.இதனை பூர்த்தி செய்து விட்டு ஹோட்டல் அறைக்கு திரும்ப இருக்கும் பொழுது ஹரத்தில் வைத்தே திடீர் என்று மரணம் அடைந்து விட்டார்.அவரது மரணம் அனைவரையும் உலுக்கி விட்டது.ஹாஜியாக முழுமை பெற்ற சில நொடிகளிலேயே மரணம் எய்து விட்டார்.என்னதொரு அற்புதமான மரணம்!இருப்பினும் மனித மனம் தவிக்கும் தவிப்பை நிறுத்த இயலவில்லையே.அவர் மரணம் அடைந்த பொழுது அவருடன் சேர்ந்து அந்த வேளை தொழுகைக்கு மட்டும் 47 ஜனாஸாக்கள்(சடலங்கள்)கொண்டு வரபட்டதாக அவரது உறவினர் கூறினார்.

11.ஜித்தாவுக்கு குடும்ப நண்பர் ஒருவர் அழைத்து இருந்தார்.ஜித்தாவை சுற்றிக்காட்டிய பொழுது தலை வெட்டி பள்ளிவாசல் என்ற ஒரு பள்ளிக்கு அழைத்து சென்றார்.அந்தப்பள்ளியில்தான் தப்பு செய்தவர்களை கை கால் தலை வெட்டுவார்களாம்.பள்ளிக்கு வந்த மக்கள் கூடி இருக்கும் பொழுதே குற்றவாளியை திடும் என்று அழைத்து வந்து தண்டனை கொடுப்பார்கள் என்று அவர் விளக்கிய பொழுது மனது பக் என்றாகி விட்டது.கூட வந்தஇன்னொருவர் இதனை கேட்டு விட்டு  ”வாங்க சீக்கிரம் போய்டுவோம் ”என்ற அவசரப்படுத்திய பொழுது சிரிப்பும் வந்தது.ஜித்தா நகரில் மிகபழமையான கட்டிடங்கள் இருக்கும் பகுதி ஒன்றும் பார்க்க வேண்டியவை.

12.அடுத்த பதிவில் ஹரத்தில் வைத்து நிகழ்ந்த ஒரு இனிய சந்திப்புடன் ஹஜ் அனுபவங்கள் நிறைவு பெறுகின்றது.

48 comments:

Avargal Unmaigal said...

அனுபவங்கள் அருமையாக உள்ளன.

Unknown said...

Intha padivum arumai akka.. Makkah pathi pala visayagal therinthukonden.. Ennathu uravinarum oruvar haji il vaithu mauthu. Allah avargaluku narpathavi kodupaanagavum aameen

துளசி கோபால் said...

புண்ணியாத்மா அந்த மெஹர் பானு. அவர்களைக் கடவுளே அழைச்சுக்கிட்டுப் போயிட்டார் பாருங்க!!!

ஒன்னேகால் அடி அகலப் படுக்கையை நினைச்சுப் பார்த்தேன். சகிப்புத்தன்மையை வளர்க்க இதைவிட வேறென்ன வேணும்?

பதிவு அருமை! கூடவே வந்துக்கிட்டு இருக்கோம்.

Seeni said...

maasha allah!

nalla seythikal....

thodarungal.....

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா உன் ஹஜ் பயண அனுபவங்கள் தொடர்ந்து படிக்கிரேன் .பலவிஷயங்கள் தெரிந்து கொள்ளும்படி தெளிவாக விவரமாக சொல்லி வரே. இந்த பதிவுல ஹஜ் நிறை வேற்றியதுமே மரணித்த அந்த பெண்மணி யை பற்றி படிக்கும்போது ஆண்டவனின் அருள் அவங்களுக்கு முழுமையாக கிடைத்து விட்டது என்றே எண்ணத்தோன்றுகிரது.

கார்த்திக் சரவணன் said...

நல்ல அனுபவம்... கண்ணயர்ந்ததால் ஒரு கண்கொள்ளா காட்சியைத் தவற விட்டுவிட்டீர்கள்... நன்றி....

Asiya Omar said...

ஹஜ்ஜின் எதார்த்ததை
சுருக்கமாக புரியும் படியாக பகிர்ந்தது சிறப்பு.மெஹர் பானுவின் மரணம் உங்களை மட்டுமல்ல எங்களையும் பாதித்தது.
தோழி, பாங்குப் பகிர்வுக்கு பாராட்டுக்கள் பல.அடுத்த பகிர்வு நிறைவுப் பகிர்வா? எதிர்பார்த்தவண்ணம்...

இராஜராஜேஸ்வரி said...

மிக மிகபொறுமையும்,சகிப்புத்தன்மையும்,
சேவைமனப்பான்மையும்,
விட்டுக்கொடுத்தலும்,
இறைவன் மீது அளவற்ற அச்சமும்,மனதில் ஏற்படுகிறது தங்களின் உணவுப்பூர்வமான பகிர்வைப்படிக்கும் பாக்கியம் பெற்றபோது .. நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் ..

எல்லாப்புகழும் இறைவனுக்கே

Radha rani said...

புனித காபாவை சுற்றி வரும் போது கொளுத்தும் வெயில் தரையில் சூடு தெரியாமல் இருப்பதும், ஜம் ஜம் கிணற்று புனித நீர் தினமும் கோடிக்கணக்கான பேர் எடுத்தாலும் வற்றாத ஊற்றாக இருப்பதும் மிக ஆச்சரியமே...! மெஹர் பானு ரொம்ப புண்ணியம் செய்தவர்கள்..அவர்களுக்கு கிடைத்தது அரிய பேறு .. அருமையான பகிர்வு.

mohamed said...

சலாம் சகோதரி,

மாஷா அல்லாஹ் அருமையான ஆக்கம்.மிக அழகாக சுவாரஸ்யம் குறையாமல் பதிவை எழுதியுள்ளீர்கள்.ஜஜாகல்லாஹ் ஹைர்

சாந்தி மாரியப்பன் said...

தொடர்ந்து வாசிச்சுட்டு வரேன். அருமையான பயணம். ஆண்டவனின் இருப்பிடத்திலேயே அவனுடன் இரண்டறக்கலக்கும் பேறு எத்தனை பேருக்குக் கிடைக்கும். கொடுத்து வெச்சவங்க.

ஸ்ரீராம். said...

பயண அனுபவங்களைச் சுவாரஸ்யமாகச் சுருக்கித் தந்திருக்கிறீர்கள். மெஹர் பானு மனதில் தங்கி விட்டார்.

shamimanvar said...

புனித ஹஜ் பயணம் வாய்ப்பதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஹஜ்ஜின் போது மௌத் ஆவதற்கு நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். சென்று வந்த எல்லோராலும் இப்படி எழுதிவிட முடியாது. நன்றி.

ராமலக்ஷ்மி said...

படம் பிரமிப்பூட்டுகிறது. ஜம்ஜம் நீர் ஆச்சரியம் தருகிறது. அனுபவங்களை மிக அற்புதமாகப் பகிர்ந்திருக்கிறீர்கள். மெஹர் பானுவை இறைவன் அழைத்துக் கொண்டு விட்டார்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்.

ஸாதிகா said...

என் பகிர்வு மூலம் பலவிஷயங்களை அறிந்து கொண்டேன் என்ற வரிகளுக்கு மகிழ்ச்சியும்,நன்றியும் பாயிஜா.

ஸாதிகா said...

//
பதிவு அருமை! கூடவே வந்துக்கிட்டு இருக்கோம்.//மிக்க மகிழ்ச்சி.கருத்துக்கு மிக்க நன்றி துளசிம்மா

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி சகோ சீனி.

ஸாதிகா said...

//மரணித்த அந்த பெண்மணி யை பற்றி படிக்கும்போது ஆண்டவனின் அருள் அவங்களுக்கு முழுமையாக கிடைத்து விட்டது என்றே எண்ணத்தோன்றுகிரது// கண்டிப்பாக லக்ஷ்மிம்மா.ஹஜ்ஜை முடித்ததும் இறைவனால ஏற்றுக்கொள்ளக்கூடிய ஹஜ்ஜின் பக்கியத்தை பெற்றவர்கள் அன்று பிறந்த பாலகனாகி விடுகின்ற‌னர்.ஆகவே சகோதரி மெஹர்பானு ஹஜ்ஜை முடித்ததுமே இறப்பெய்து அந்த பாக்கியத்துடன் இற‌ந்துவிட்டார்.
கருத்துக்கு மிக்க நன்றி லக்ஷ்மிம்மா

ஹுஸைனம்மா said...

பாவங்கள் முற்றும் நீங்கி, பிறந்த குழந்தையின் நிலையில் மெஹர் அவர்களை இறைவன் அழைத்துக் கொண்டது... என்ன சொல்வது... அவருக்குப் பாக்கியம் என்றாலும், உடன் வந்தவர்களின் நிலை எப்படி இருக்கும்...!!

நாங்கள் போயிருந்தபோது, ஹஜ் முடிந்த அடுத்த நாளே என் மாமியாருக்கு கடுமையான காய்ச்சல்... மிகமிகப் பலவீனமாகி, மருந்துகளின் தாக்கத்தில் அவர் கட்டை போல தொடர்ந்து உறங்கிக் கிடந்ததைக் கண்டு பதறி நடுநடுங்கி விட்டேன். இறைவனருள், ஊர் திரும்புவதற்குள் ஓரளவு நலமாகிவிட்டார்.

//அசதியில் சற்றே கண்ணயர்ந்து விட்டேன்.... ரைஹால்(குரான் வைக்கும் பலகை)மீது குர் ஆன் இருப்பது போன்ற அழகிய ஆர்ச்சை கவனிக்க முடியவில்லை.//
அதனாலென்ன அக்கா. அது ஒரு அலங்கார வளைவு; எல்லையைக் குறிக்கும் ஒரு அடையாளம், அவ்வளவே. இதைத் தவறவிடுவதால், நம் பிரார்த்தனைகளுக்கு எந்த இடையூறும் இல்லையே.

மக்கத்து பாங்கு மிகவும் இனிமையாக இருக்கும். நீங்கள் மேலும் விபரங்களுடன் அதைத் தனி காணொளியே தந்துட்டீங்களே, நன்றிக்கா.

Naazar - Madukkur said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

மிக அழகாக பகிர உங்களால் முடிகிறது.
நன்றி

பிலஹரி:) ) அதிரா said...

ஆஆ ஸாதிகா அக்கா.. அந்தப் படம் நீங்க எடுத்ததா? இல்ல கூகிளிலோ? என்னா சூப்பர்ர்.... அனுபவம் இனிமை...

ஸாதிகா said...

கண்ணயர்ந்ததால் ஒரு கண்கொள்ளா காட்சியைத் தவற விட்டுவிட்டீர்கள்... நன்றி.... //பிரிதொரு சமயம் பார்த்தும் விட்டேன் சகோ ஸ்கூல் பையன்.கருத்தளித்தமைக்கு நன்றி,

ஸாதிகா said...

ஆம்,ஆசியா.அடுத்த பகிர்வுடன் நிறைவுறுகிறது.இன்னும் விளக்கமாக எழுதினால் பதிவுகளின் எண்ணிக்கை அதிகமாகிவிடும்.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

இறைவன் மீது அளவற்ற அச்சமும்,மனதில் ஏற்படுகிறது தங்களின் உணவுப்பூர்வமான பகிர்வைப்படிக்கும் பாக்கியம் பெற்றபோது//மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் இராஜராஜேஸ்வரி.தொடர் கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

மெஹர் பானு ரொம்ப புண்ணியம் செய்தவர்கள்..அவர்களுக்கு கிடைத்தது அரிய பேறு .உண்மைதான் ராதாராணி.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

//மாஷா அல்லாஹ் அருமையான ஆக்கம்.மிக அழகாக சுவாரஸ்யம் குறையாமல் பதிவை எழுதியுள்ளீர்கள்.// அல்ஹம்துலில்லாஹ் சகோ முஹம்மத்.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

தொடர்ந்து வாசிச்சுட்டு வரேன்//மிக்க மகிழ்ச்சி அமைதிச்சாரல்.கருத்துக்கு நன்றி தொடர்ந்து வாங்க.

ஸாதிகா said...

//மெஹர் பானு மனதில் தங்கி விட்டார். // ஆம் அனைவர் மனதினிலும் தங்கி விட்டார்.கருத்துக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ஷமீமாஅன்வர்.

ஸாதிகா said...

படம் கூகுளில் இருந்து எடுத்தது ராமலக்ஷ்மி.கருத்துக்கு மிக்க நன்றி.

இளமதி said...

எத்தனை எத்தனை அனுபவங்கள்...

பொறுமை, சகிப்புப்பு, சேவை, விட்டுக்கொடுப்பு, மனதை உருக்கிடும் இழப்புக்கள் இப்படி வாசிக்கும் எமக்கும், அங்கே நாமும் இவற்றை எல்லாம் அனுபவித்த உணர்வினைத் தந்தது உங்கள் பதிவு.

மனதில் படமாக நிறைக்கிறது உங்கள் எழுத்து. பகிர்வுக்கு மிக்க நன்றி.
தொடருங்கள்...

துளசி கோபால் said...

//அடுத்த பகிர்வுடன் நிறைவுறுகிறது.இன்னும் விளக்கமாக எழுதினால் பதிவுகளின் எண்ணிக்கை அதிகமாகிவிடும்.//

இல்லை ஸாதிகா. எண்ணிக்கையைப் பற்றிய எண்ணத்தை விடுங்க. இதெல்லாம் நாங்கள் )வேற்று மதக்காரர்கள்) போக முடியாத இடங்கள் அல்லவா? வாசித்தாவது மனக்கண்ணால் பார்த்துக் கொள்வோமே....

விவரமா இன்னும் எல்லாவற்றையும் எழுதுங்கப்பா.

ஸாதிகா said...

என்ன சொல்வது... அவருக்குப் பாக்கியம் என்றாலும், உடன் வந்தவர்களின் நிலை எப்படி இருக்கும்...!!
//உண்மைதான் ஹுசைனம்மா.அவரது சமப்ந்தி எனக்கு போன் செய்வார்.இன்னும் ஒரே புலம்பல்தான்.அவர் இறப்பெய்ததும் ஊருக்கு போய் அவங்க பிள்ளைகஐ எப்படி பார்க்கப்போறேனோ என்று கதறினார்.

//எல்லையைக் குறிக்கும் ஒரு அடையாளம், அவ்வளவே. இதைத் தவறவிடுவதால், நம் பிரார்த்தனைகளுக்கு எந்த இடையூறும் இல்லையே. // பிரார்த்தனைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாவிட்டாலும் சவுதியில் பார்க்க வேண்டியவை எவ்வளவோ உள்ளது.பிரிதொரு சமயம் அந்த வளைவையும் பார்த்து விட்டேன்.முடிந்த வரை நமது பிரார்த்தனைக்கு இடையூறு இல்லாமல் அவைகளை பார்த்து விட்டு வரலாம்தானே.ஆகவே தான் காலையில் அவ்வப்பொழுது காரை வாடைக்கு எடுத்துக்கொண்டு ஓரளவு போகக்கூடிய இடங்களுக்கு சென்று விட்டு லுஹர் தொழுவதற்கு ஹரத்திற்கு திரும்பி விடுவோம்.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

மிக அழகாக பகிர உங்களால் முடிகிறது.//அல்ஹம்துலில்லாஹ்.கருத்துக்கு மிக்க நன்றி சகோ நாசர்.

ஸாதிகா said...

அந்தப் படம் நீங்க எடுத்ததா? இல்ல கூகிளிலோ? //இந்தப்[படம் கூகுளில் எடுத்தது.என்னிடம் பிளாகில் போடுவதற்குறிய படங்கள் தீர்ந்து விட்டது.:)
கருத்துக்கு நன்றி அதீஸ்.

ஸாதிகா said...


மனதில் படமாக நிறைக்கிறது உங்கள் எழுத்து.//மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் இளமதி.

ஸாதிகா said...

விவரமா இன்னும் எல்லாவற்றையும் எழுதுங்கப்பா.//துளசிம்மா....நான் அங்கு குறிப்பு எடுத்துகொள்ள வில்லை.ஞாபகசக்தியும் உங்கள் அளவு இல்லை.இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) அடுத்த முறை உம்ரா செல்ல நாடி உள்ளோம்.அப்பொழுது குறிப்புகள் எல்லாம் எடுத்துக்கொண்டு விலாவாரியாக எழுதுகிறேன்.சரியா?மிக்க நன்றிம்மா.

உம்ரா என்றால் ஹஜ்ஜுக்கு உரிய கிரியைகள் செய்யத்தேவை இல்லை.ஹஜ்ஜுக்கு குறிப்பிட்ட நாளில்தான் செல்ல வேண்டும்.ஆனால் உம்ராவுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் சென்று வரலாம்.:)

enrenrum16 said...

//ஹாஜியாக முழுமை பெற்ற சில நொடிகளிலேயே மரணம் எய்து விட்டார்.// ஹ்..ம்... கிடைத்தால் இப்படியொரு மரணம் கிடைக்கணும்.

பல ஆச்சரியத் தகவல்களுடன் ஹஜ் பயணக்கட்டுரை அருமையாக இருந்தது. ஆனா ரொம்ப சீக்கிரத்தில் முடிந்தது போல இருக்கு.

ஸாதிகா said...

//அது ஒரு அலங்கார வளைவு; எல்லையைக் குறிக்கும் ஒரு அடையாளம், அவ்வளவே. இதைத் தவறவிடுவதால், நம் பிரார்த்தனைகளுக்கு எந்த இடையூறும் இல்லையே. // இடயூறு இல்லைதான் பிரார்த்தனைக்கு அப்பாற்பட்ட எத்தனையோ இடங்களுக்கும் அங்கு பார்த்து வந்துள்ளோம்.அதில் இதுவும் ஒன்று.:)
கருத்துக்கு மிக்க நன்றி ஹுசைனம்மா.

ஸாதிகா said...

//அந்தப் படம் நீங்க எடுத்ததா? இல்ல கூகிளிலோ? என்னா சூப்பர்ர்.... அனுபவம் இனிமை...//கூகுளில் எடுத்தது அதிரா.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

மனதில் படமாக நிறைக்கிறது உங்கள் எழுத்து...மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் இளமதி.

ஸாதிகா said...

இல்லை ஸாதிகா. எண்ணிக்கையைப் பற்றிய எண்ணத்தை விடுங்க. இதெல்லாம் நாங்கள் )வேற்று மதக்காரர்கள்) போக முடியாத இடங்கள் அல்லவா? வாசித்தாவது மனக்கண்ணால் பார்த்துக் கொள்வோமே....

விவரமா இன்னும் எல்லாவற்றையும் எழுதுங்கப்பா.//துளசிம்மா.அங்கு குறிப்பெல்லாம் எடுத்து வைத்துக்கொள்ள வில்ல்லை.நிறைய படம் எந்தஎந்த என்று சற்று குழப்பமாக உள்ளதால் படங்களையும் போடவில்லை.இன்ஷா அல்லாஹ்(அல்லாஹ் நாடினால்)இன்னொரு முறை விரைவில் சென்று வந்து அனைத்தையும் எழுதுகிறேன்.ஆர்வத்திற்கு மிக்க நன்றிம்மா.

ஸாதிகா said...

ஆனா ரொம்ப சீக்கிரத்தில் முடிந்தது போல இருக்கு.//அநேகருடைய கருத்தும் இதுதான்.இன்ஷாஅல்லாஹ் நீங்கள் விரைவில் அங்கு சென்று குறிப்பெல்லாம் எடுத்துக்கொண்டு விபரமாக எழுதுங்க பானு.நானும் துஆ செய்கிறேன்.மிக்க நன்றி.

Julaiha Nazir said...

இன்றுதான் படிக்க ஆரம்பித்தேன் அடுத்த பதிவு நிறைவு பதிவா ஈன் லாத்தா இவ்ளோ சீக்கிரம் முடித்துவிட்டிர்கள் ..சகோதரி மெஹர்பானுவின் மரணம் பற்றி அப்பொழுதே கேள்விபட்டேன் அவங்க உங்கள் குருப்பில் வந்தவங்களா அந்த சமயம் ரொம்ப கஷ்டமாக இருந்து இருக்கும் அல்லவா..?

Vijiskitchencreations said...

ஹஜ் அனுபவங்கள் தொடரை ஒரு வழியாக நேற்று படித்து கரண்ட் லெவல் வரைக்கும் படித்து விட்டேன்.
வான் என்ன ஒரு எழுத்து நடையைல் எங்க எல்லோரையும் அங்கு அழைத்திட்டு போயிட்டிங்க.
எங்களால் அங்கு போகமுடியவில்லை என்கிற குறை இல்லை.
பொறுமையும் சகிப்பு தன்மையும் வருவது ஏற்று கொளவது பெரிய வரம்.

கடவுள் துணை எப்போதும் கிடைக்கட்டும்.
அடுத்த தொடருக்காக வெயிட்டிங்.
நன்றி.

அஜீம்பாஷா said...

அஸ்ஸலாமு அலைக்கும், ஹஜ் பயணம் நல்ல படியாக முடிந்தது கேட்டு மிக்க மகிழ்ச்சியுற்றேன். நானும் எல்லாம் வல்ல இறைவனின் அருளால் இருபது வருடமாக ஜித்தாவில் வேலை செய்து வருகிறேன். நீங்கள் பார்த்த தலை வெட்டு பள்ளிவாசலின் பெயர் JUFFALI பள்ளிவாசல் என்று பெயர். திடும் என்றெல்லாம் கையோ, தலையோ வெட்ட மாட்டார்கள். தண்டனை கொடுக்கப்படும் நாள் என்றால் மதியம் 12.00 மணி அளவிலே போலிஸ் வண்டிகள் அங்கே பாதுகாப்புக்கு வந்து விடும்,தண்டனை கொடுக்கப்படும் மைதானத்தில் பார்கிங் செய்ய விட மாட்டார்கள் அதை வைத்தே இன்று குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கப்படும் என்று புரிந்து கொள்ளலாம். மேலும் ஜூம்ஆ தொழுகை முடிந்த பிறகு தீர்ப்பு அரபியில் படித்து காட்டுவார்கள். கொலை கேசாக இருந்தால் தீர்ப்பு படித்து முடிந்தவுடன் கொல்லப்பட்டவரின் உறவினரிடம் கேட்பார்கள் குற்றவாளியை மறந்து மன்னித்து விடுங்கள் என்று, அவர் மறுத்தால்தான் தண்டனையை நிறைவேற்றுவார்கள். நீங்கள் பார்த்த அந்த பள்ளிவாசலுக்கு அருகில் ஐந்து வருடம் வசித்துள்ளேன். அதனால் என்னால் உண்மையான நிலையை சொல்ல முடியும்.
மேலும் விமான நிலையத்தில் நீங்கள் இறங்கிய இடத்திற்கு பெயர் ஹஜ் டெர்மினல், இங்கு ஹஜ் மற்றும் உம்ரா பயணிகளுக்காக மட்டும் இயக்கப்படும் இடமாகும். சாதாரண பயணிகளுக்கு இங்கு அனுமதி இல்லை. உங்கள் ஹஜ் குரூப் சவூதி ஏஜென்ட் வருவதற்கு தாமதமானதால் மக்கா செல்ல நேரமாகி விட்டது என்று நினைக்கிறேன்.

Anonymous said...

ஹஜ் அனுபவங்கள் ‍ 4"
வாசித்துவிட்டேன் இனிய நன்றி. மேலும் தொடர்வேன்.
வேதா. இலங்காதிலகம்.