அல்-மஸ்ஜிதுன்னபவி (தீர்க்க தரிசியின் மசூதி)
மதீனா நகரிலுள்ள பிருமாண்டமான பள்ளி இது.இதனுள்ளேதான் நபிகளார் அடக்கம் செய்யப்பட்டு இருக்கின்றாரகள்.மதீனா செல்வதும், மஸ்ஜிதுன்னபவியில் தொழுவதும், நபி(ஸல்) அவர்களது கப்ரை ஜியாரத் செய்வதும் (அடக்கஸ்தலத்தை தரிசித்தல்)ஹஜ் கடமைகளில் உள்ளதல்ல என்றாலும் “பள்ளிகளில் சிறந்தது மூன்று: 1. மக்காவில் கஃபத்துல்லாஹ் 2. மதீனாவில் மஸ்ஜிதுன்னபவி 3. தாருஸ்ஸலாமில் மஸ்ஜிதுல் அக்ஸா. இவைகளில் தொழுவது சாலச் சிறந்தது” என்ற நபிமொழிக்கொப்ப மஸ்ஜிதுன்னபவியில் தொழுவது சிறப்புக்குறியது.
இவைகளை நிறைவேற்ற எந்நேரமும், எவ்வித உடையிலும் செல்லலாம். இஹ்ராம் (உம்ரா .ஹஜ்ஜை நிறைவேற்ற மனதில் உறுதி எடுத்து,அதற்குண்டான ஆடைகளை அணிதல்
தல்பியா (லப்பைக் அல்லாஹும்ம லப்பை ஓதுதல்)போன்றவை இல்லை. லட்சக்கணக்கில் செலவு செய்து பல்லாயிரக்கணக்கான மைல்களைக் கடந்து, அன்னிய நாட்டினராக வந்துள்ள ஹாஜிகள் இவைகளை செய்து வருவது சிறப்புக்குறியது மட்டுமேயன்றி கடமை அல்ல.
நபியவர்களின் வீடு மஸ்ஜிதுந் நபவிக்கு பக்கத்திலேயே இருந்தது. மஸ்ஜிதுந் நபவியும் நபியவர்களின் வீடும் ஒரே சுவராக இருந்தது. வீட்டுக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தால் பள்ளியில் என்ன நடக்கிறது என்று தெரிந்துவிடும். ஸஹாபாக்கள் (நபித்தோழர்கள்) பள்ளிக்குள் நபியவர்களை அடக்கம் செய்யவில்லை.
பரந்து விரிந்த பல ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தில் மிகப்பெரிய அளவில் மஸ்ஜிதுன்னபவி பள்ளியை மிக பிருமாண்டமாகவும் கலை நயத்துடனும்,அழகியமுறையில் உருவாக்கி உள்ளனர்.தரைப்பளப்பளவில் உலகிலேயே மிகப்பெரிய மசூதி இதுதான்.மேலடுக்குகள் இல்லாமலேயே தரைத்தளத்தில் மட்டும் ஒரே நேரத்தில் சுமார் 4 லட்சம் பேர் தொழக்கூடிய அளவு விஸ்தீரனமான மசூதி இது.
மேற்கண்ட படம் மசூதில் அழகு மிக்க கலை நயத்துடன் கூடிய பல நுழைவு வாயில்களில் ஒன்று
ரவ்லா ஷரீப்
பச்சை நிற டூமுக்கு கீழ்தான் நபிகளார் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.அவர்களுக்கு பக்கத்திலேயே அபூபக்கர் சித்தீக்(ரலி)உமர் (ரலி)
(நாற்பெரும் கலீபாக்களுள் இருவர்)இருவரும் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கு பெயர் ரவ்லா ஷரீப்.மஜிதுன்னபவிபள்ளிக்குள் போய் இந்த ரவ்லா ஷரிப்புகுள் போனாலும் நபிகளார் அடக்கம் செய்த இடத்தினை கண்ணால் பார்க்க இயலாது.
இந்த ரவ்லா ஷரீபுக்கு ஆண் பெண்களை தனித்தனியாக அனுப்புகின்றனர்.ஒவ்வோரு நாட்டவரையும் பிரித்து பிரித்து அனுப்புகின்றனர்.
முதலிலேயே எங்கள் இமாம் (குழுத்தலைவர்)ரவ்லா ஷரீஃபுக்குள் பய பக்தியுடன் மட்டிலுமே நுழையுங்கள்.அல்லாஹ்வின் தூதரை சந்திக்கிறோம் என்ற பய உணர்வு மேலோங்கி இருக்க வேண்டுமே தவிர கட்டிடக்கலையில் அழகையும்,கலை நுணுக்கங்களையும் ரசிக்காதீர்கள் என்று அறிவுறுத்தி இருந்தார்.இருப்பினும் அதன் கலை நயத்தையும்,நுணுக்கத்தையும்,பேரழகையும்,பார்த்து பரவசப்படாமல் அதிசயிக்க முடியாமல் ,ஆனந்தப்படமுடியாமல் இருக்க இயலவிலை.
சுப்ஹானல்லாஹ்!!!!இவ்வித பெரும் அழகும் இப்பூவுலகில் உள்ளதோ என்று மனம் ஆச்சரியப்படுகின்றது.எங்கு பார்த்திட்டாலும் லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர்ரசூலுல்லாஹ்
(இறைவன் ஒரருவனே.அவனது தூதர் நபி (ஸல்)அவர்கள் ஆவார்கள்)என்ற திரு நாமம் .
நபிகளாருக்கும்.உடன் அடக்கப்பட்டு இருக்கும் கலீபாக்களுக்கும் ஸலாத்தை எத்தி வைத்து விட்டு வெள்ளைதூணருகே பச்சை நிற கம்பளத்தின் மீது கூட்ட நெரிச்சலில் இரண்டு ரக் அத் தொழுது அல்லாஹ்விடத்தில் துஆ கேட்டு விட்டு கிளம்பினோம்.ஆற அமர அவ்விடத்தில் இருந்து தொழ இயலாதவாறு கூட்டம்,கண்காணிப்பாளர்கள் சீக்கிரம் நம்மை வெளியேற்றுவதில் கவனமாக இருக்கின்றனர்.ஏனெனில் காத்துக்கிடக்கும் கூட்டத்தினர் அத்தனை பேர்.
ரவ்லா ஷரீஃபுக்குள் கேமரா அனுமதி இல்லை.ஏன் மதினா பள்ளிக்குள்ளும் கேமராவை அனுமதிக்க மறுக்கின்றனர்.பெண்களின் கைப்பையை தரோவாக செக் செய்து அனுப்புகின்றனர்.இருப்பினும் சிலர் ஆர்வக்கோளாரினால் கேமராவை கொண்டுவந்து படம் எடுத்துக்கொள்கின்றனர்.எனது ஹேண்ட் பேகில் பேனா இருந்ததற்கே அதை எடுத்து அப்புறப்படுத்தி விட்டுத்தான் உள்ளே அனுப்பினாரகள்.ஆதாலால் நான் ரிஸ்க் எடுகவில்லை.ஆண்கள் பகுதியில் இவ்வளவு கறார் கிடையாது.ஆகையால் கணவர் உள்ளே இருந்த படியே நகரும் டூமை மட்டும் படம் எடுத்து வந்தார்கள்.
மஸ்ஜிதுந்நபவியில் இருந்து தெரியும் உஹது மலை
மக்கா மதினாவை சுற்றியுள்ள ஒவ்வொரு மலைகளும் ஒவ்வொரு வரலாறு படைத்தது.அதில் உஹத் மலையானது மிகவும் உகப்பான மலை.நபி (ஸல்)அவர்கள் உவந்து சிலாகித்த மலையாகும்.
"
உஹத் மலை நம்மை நேசிக்கிறது நாமும் அதை நேசிக்க வேண்டும்."என்பது நபிமொழியாகும்.மஸ்ஜிதுந்நபவியில் தொழுகை முடித்து விட்டு செல்லும் பொழுதெல்லாம் பள்ளிவளாகத்தினுள் இருநத படி தூரத்தே தெரியும் உஹத் மலையை ஆசையுடன் பார்த்து சிலாகிப்பார்கள் நாயகமவர்கள்.
மஸ்ஜிதுன்னபவில் இருந்த படி தூரத்தில் தெரியும் உஹத் மலையின் படம் இது.இரு கட்டிடங்களுக்கு இடையே கொஞ்சமே தெரிகின்றது.
நகரும் டூம்
மதினா பள்ளி மிகவும் பரந்து விரிந்த பள்ளியாதலால் காற்றுக்காகவும் வெளிச்சத்திற்காகவும் பள்ளியில் நகரும் டூம் அமைத்து இருக்கின்றனர்.திடீரென்று மூடி இருப்பது திறந்து கொண்டு வானம் தெரியும் பொழுது வியப்பாக இருக்கும்வெயில் மழை பனி நேரத்தில் மூடியும் மற்ற நேரத்தில் திறந்தும் இருக்கும்.மிக மெதுவாக அது நகர்வதைப்பார்க்க கண்கொள்ளாகாட்சியாக இருக்கும்.இப்பள்ளியில் மொத்தம் 27 நகரும் டூம்கள் உள்ளன.ஒரு டூம் நிர்மாணிக்க ஆன செலவு இந்திய ரூபாயில் பத்துகோடி
விரிந்து சுருங்கும் நிழற்குடைகள்
வானத்தை மறைத்திடும் அழகுக்குடைகள் விரிந்து வரவேற்கும் மஸ்ஜிதுன் நபவி மின் தூபிகள் உயர்ந்து நின்று, துதி செய்யும் மக்களுக்குச் சோபனம் கூறுவது போல் கம்பீரமாக காட்சி அளிக்கின்றது.
ஆம்.பரந்து விரிந்த அழகுப்பள்ளியை சுற்றிலும் வெயிலுக்காக மின் குடைகள் அமைத்து இருக்கின்றனர்.நெடுகிலும் நூற்றுக்கணக்கில் குடைகள் உள்ளன.வெயில் வந்ததும் அழகாக மெதுவாக விரியும் குடை வெயில் மறைந்ததும் அதே போல் மெதுவாக மூடிக்கொள்ளும் .நூற்றுக்கணக்காக குடைகளும் ஒரு சேர ஒரே அளவில் சுருங்கி விரியும் பொழுது காணும்அழகு இருக்கின்றதே அதனை வார்த்தைகளால் சொல்ல இயலாது.படத்தில் காண்பது விரிந்த குடைகள்.
விரிந்து கொண்டிருக்கும் குடைகள்
இந்த படம் குடை விரிந்து கொண்டு இருக்கும் பொழுது எடுத்தது.நான் அங்கு இருக்கும் பொழுது இரண்டு நாட்களாக விரிந்த குடை மடங்கவே இல்லை.குடை மடங்கும் நேரத்திற்காக அங்கு காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பினோம்.அதிக பனியின் காரணமாக குடையை இரண்டு நாட்களும் மூடாமல் வைத்து இருந்தார்களோ என்னவோ.
ஒரு வழியாக குடை விரிவதையும்,சுருங்குவதையும் பார்த்து படமும் எடுத்து விட்டேன்.
மடங்கிய குடைகள்
அழகான மினாரா போல் காட்சி தருவது குடை மூடியதும் உள்ள தோற்றம்.அத்தனை பெரிய குடை இத்தனை சிறிதாக அடங்கிவிட்டது பாருங்கள்.
குடையை சுத்தம் செய்யும் ஊழியர்
ஷரீ அத் கோர்ட்
ஷரீ அத் கோர்ட்.இஸ்லாமிய சட்ட திட்டங்கள் இங்கிருந்துதான் அமுலுக்கு வருகின்றது.இது புனித ரவ்லா ஷரிஃபுக்கு நேரெதிரில் அமையப்பட்டுள்ளது.நபி(ஸல்)அவர்கள் அடக்கஸ்த்தலத்திற்கு சரியாக நேரெதிரே மாஜிஸ்திரேட் அமர்ந்திருக்கும் இருக்கை போடப்பட்டு இருக்குமாம்.
ஜன்னத்துல் பகீ
மிகப்பெரிய ,பலஏக்கர்களைக்கொண்ட அடக்கஸ்தலம் .மஸ்ஜிதுனபவியின் கிழக்குப்பகுதியில் உள்ளது ஜன்னத்துல் பகீ.நபி(ஸல்)அவர்களின் மனைவிமார்கள்,பிள்ளைகள்,மற்றும் உறவினர் அடங்கப்பட்ட இமைகளை நனைக்கச்செய்யும் பூமி பரந்து விரிந்துள்ளது.இங்கு பெண்களுக்கு அனுமதி இல்லை.
மதினா பள்ளிக்கு வரும் ஜனாஸாக்களையும் (இறந்த உடல்களையும்)இங்குதான் அடக்கம் செய்கின்றனர்.ஒரு முறை என் கணவர் அங்கு சென்று ஒரு ஜனாஸா அடக்கத்தில் கலந்து கொண்டுவந்தார்கள்.நூற்றுக்கணக்கில் அடக்கம் செய்வதற்கு தயாராக குழிகள் தோண்டி தயாராக இருக்குமாம்.
உஹத் மலை
என்னதான் முயன்றும் உஹத் மலையின் முழுத்தோற்றத்தையும் கண்களால் அள்ள முடிந்ததே தவிர கேமராவால் இயலவில்லை.
உஹத் போரில் வீர மரணம் எய்தியவர்களின் அடக்கஸ்தலம்
ஹஜ்ரத் ஹம்ஜா(ரலி ) - நபிகளாரின் சித்தப்பா உட்படஉஹது போரில் வீர மரணம் அடைந்தவர்களை அடக்கம் செய்த அடக்கஸ்தலம்.எவ்வளவோ ரத்தம் சிந்தி,இன்னுயிர்களை இழக்கச்செய்த வீரம் நிறைந்த பூமியப்பார்க்கும் பொழுது மனம் நெகிழ்ந்தது.
குபா மசூதி
நபிகள் நாயகம் (ஸல்)அவர்களுடைய திருக்கரத்தால், அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்ட முதல் பள்ளி.மிகவும் அழகிய,பள்ளி அது.
குர் ஆன் பிரிண்டிங் பிரஸ்
உலகிலேயே மிக பெரிய குர் ஆன் பிரிண்டிங் பிரஸ் .வருடத்திற்கு 4 லட்சம் மில்லியன் பிரதிகள் தயாரிக்கப்படுகின்றது.இதனுள் நுழைய பெண்களுக்கு அனுமதி இல்லை.கணவர் எடுத்த படம் இது.பாலகனி போன்ற
நீளமான உயரமான வராண்டாவில் நின்று கீழே இருக்கும் பிரஸை பார்ப்பதற்கு வசதி அமைத்துள்ளார்கள்.
காந்த மலை
மதினா நகரில் இருந்து சற்று தொலைவில் உள்ள மலை இது.சாலையின் இருபக்கங்களிலும் எங்கு பார்த்தாலும் கருநிறமலை.
சாலையின் மீது உள்ள காந்த சக்தியால் கியர் இல்லாமல்,ஆக்சிலேட்டர் போடாமல் கார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வது ஆச்சரியம்.இப்படி சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு செல்கிறது.10 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிலிண்டர் வடிவதண்ணீர் கேனில் முழுதும் நீரை நிரப்பி சாலையின் மையத்தில் வைத்தால் உருளை வடிவ தண்ணீர் கேன் சாலையில் குடு குடு வென்று ஓடுகிறது.
Tweet |
50 comments:
பிரும்மாண்டமான படங்களும் அற்புதமான விளக்கங்களும் வெகு அருமையாக உள்ளன.
நாங்களும் தங்களுடன் பயணம் செய்தது போன்ற உணர்வினை ஏற்படுத்துகிறது.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
படங்களும் விவரங்களும் பார்க்கும்போதே பரவசமாக இருக்கிறதே!!!!
ஒரு சின்னக் கேள்வி.
வேற்று மதக்காரர்களுக்கு அங்கேபோய்வர அனுமதி உண்டா?
பதிவை படிக்க படிக்க மிக பிரமிப்பாக இருந்தது ஷாதிகா..தானாக சுருங்கி விரியும் குடை, காந்த சக்தி உள்ள சாலை , நபிகள் அடக்கம் செயயப்பட்ட இடத்தில் உள்ள நகரும் டும்கள், அனைத்தும் பிரமிக்க வைத்தன..அருமை.
படிக்கவும் படங்களை பார்க்கவும் உள்ளம் மகிழ்ச்சி அடைகிறது... எங்களுக்கு இதனை நேரில் காணம் பாக்கியம் சீக்கரம் கிடைக்க வேண்டும் என்று தூவா செய்துக்கொண்டிருக்கிறேன்,,
சில வார்த்தைகள் புரியவில்லை.
நகரும் டூம், தேவைக்குத் தகுந்தாற்போல் விரிந்து சுருங்கும் நிழற்குடைகள் (இதை ஏற்கெனவே கேள்விப் பட்டிருக்கிறேன். ஹுஸைனம்மா எழுதியா வேறெங்காவதா என்று ஞாபகமில்லை), அதை விடாமல் சுத்தம் செய்வது ஆகியவை பிரமிப்பு.
காந்தமலைத் தகவல் ஆச்சர்யம்.
நல்லதொரு வழிகாட்டக்கூடிய பதிவு !
புத்தகமாக வெளியிட்டு புதியவர்கள் பயன்பெற முயற்சிக்கலாம்.
தொடர வாழ்த்துகள்...
அன்பு ஸாதிகா,எத்தனை அழகான படங்கள். பக்தி மார்க்கத்தில் செல்லும் அனைவருக்கும் என் வணக்கங்கள்.இந்தப்பயணத்தை நீங்கள் மேற்கொண்டதால் எங்களுக்கு லாபம்.
காண்பதற்கரிய காட்சிகள்,விஷயங்கள் கலந்த பக்தி உலா அழைத்துச் சென்றதற்கு மிகவும் நன்றி.
ஸாதிகா படங்கள் எல்லாம் பாக்கவே பிரமிப்பா இருக்கு. நேரில் பார்க்கும் உனக்கு எப்படி பரவசமாக இருந்திருக்கும் . அதை உன் பகிர்விலேயே புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு விஷயமும் விட்டுப்போய் விடமல் எல்லாம் விவரமாகச்சொல்லி வருகிறாய்.ஹஜ் பயணம் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள அல்லாவின் பூரண அருள் உனக்கு கிடைச்சிருக்குன்னுதான் சொல்லனும்
காந்த மலை, உஹது மலை, குபா மசூதி,நகரும் டூம் போன்ற எண்ணற்ற புதிய தகவல்களையும் படங்களையும் பகிர்ந்ததில் மிக்க சந்தோஷம் அக்கா. ஹிஜ்ரிக்குப் பிறகு கட்டப்பட்ட முதல் மசூதி குபா மசூதியா? வரலாற்று சிறப்புமிக்க இடங்களைப் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சியுடன் அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் :)
@sriram
/ ஹுஸைனம்மா எழுதியா வேறெங்காவதா என்று ஞாபகமில்லை/ avangkalethan sonnaangka... nalla memory power ungkalukku irukkirathu.
படங்கள் அனைத்தும் மிக மிக அருமை......உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......
நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/
assalumu allakum sister
ஸாதிகாsister படங்கள் எல்லாம் பாக்கவே பிரமிப்பா இருக்கு. நேரில் பார்க்கும் உனக்கு எப்படி பரவசமாக இருந்திருக்கும்
.ஹஜ் பயணம் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள அல்லாவின் பூரண அருள் உனக்கு கிடைச்சிருக்குன்னுதான் சொல்லனும் .
please ask duas for all to visit to hajj
...............
சகோதரி ஸாதிகா...அருமையோ அருமையான உங்கள் புனிதப்பயணப் பதிவு.
நிச்சயமாக கொடுத்துவைத்தவர்தான் நீங்கள். உங்கள்மூலம் நாமும் உங்களுடனேயே பயணித்து அத்தனையையும் கண்டுகளிப்பதாக இருக்கிறது உங்கள் எழுத்தும் அழகான நிழற்படங்களும்....
ஆச்சரியப்படவைக்கும் பல விடயங்களில் காந்தமலையைப் பற்றி அறிந்த எனக்கு இன்னும்தான் அதிலிருந்து மீளமுடியவில்லை....
அழகான அருமையான பதிவு சகோதரி...மிக்க நன்றி.
வாவ்வ்வ் அந்தக் குடைகள் என்னா சூப்பர்ர்.... நேரிலே சுருங்கி விரிக்கும் போது பார்க்க இன்னும் அழகாக இருந்திருக்கும்....
காந்த மலையில் காந்தம் இருக்குமோ? ஏன் அப்படிப் பெயர் வந்திருக்கும்?
நகரும் டூம் அழகு....
நகரும் டூம்-களும் விரியும் குடைகளும், தகவல்களும் அற்புதம். துளசி கேட்ட கேள்வியையே நானும் கேட்கிறேன்.
எல்லோரும் போய் வரலாமா?
நாங்களும் தங்களுடன் பயணம் செய்தது போன்ற உணர்வினை ஏற்படுத்துகிறது.//மிக்க மகிழ்ச்சி.பாராட்டுக்களுக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி வி கே ஜி சார்
கருத்துக்கு மிக்க நன்றி ராதாராணி.
//எங்களுக்கு இதனை நேரில் காணம் பாக்கியம் சீக்கரம் கிடைக்க வேண்டும் என்று தூவா செய்துக்கொண்டிருக்கிறேன்,,// உஙக்ளின் துஆ விரைவில் நேர நானும் துஆ செய்கிறேன் பாயிஜா.
நிறையத் தெரிந்து கொள்ள முடிந்தது. நகரும் டூம், விரிந்து சுருங்கும் குடைகள் அழகு. படங்கள் யாவும் அருமை.
அஸ்ஸலாமு அலைக்கும்,
படங்களும், விபரங்களும் மிகவும் அருமை.
வேற்று மதக்காரர்களுக்கு அங்கேபோய்வர அனுமதி உண்டா?///மிக்க மகிழ்ச்சி துளசிம்மா.சவுதியில் மக்கா,மதீனா தவிர மற்ற ஊர்களுக்கு மட்டும் வேற்று மதத்தினருக்கு அனுமதி இல்லை//
சொல்லவந்தது மாறி விட்டதோ?
பகிர்வுக்கு மிக்க நன்றி.அனைத்தும் பிரமிக்க வைத்தன..அருமை.
வேற்று மதக்காரர்களுக்கு அங்கேபோய்வர அனுமதி உண்டா?///வருகைக்கு மிக்க மகிழ்ச்சி துளசிம்மா.சவுதியில் மக்கா,மதீனா தவிர மற்ற ஊர்களுக்கு மட்டும் வேற்று மதத்தினருக்கு அனுமதி உண்டு.//
மதினா பள்ளி மிகவும் பரந்து விரிந்த பள்ளியாதலால் காற்றுக்காகவும் வெளிச்சத்திற்காகவும் பள்ளியில் நகரும் டூம் அமைத்து இருக்கின்றனர்.திடீரென்று மூடி இருப்பது திறந்து கொண்டு வானம் தெரியும் பொழுது வியப்பாக இருக்கும்வெயில் மழை பனி நேரத்தில் மூடியும் மற்ற நேரத்தில் திறந்தும் இருக்கும்.//
நீங்கள் சொல்வதை கேட்கும் போது பார்க்க வேண்டும் போல் ஆவலாய் இருக்கிறது.
விரிந்து மடங்கும் குடை அழகு.
உங்களுடன் நானும் எல்லாவற்றையும் சுத்திப்பார்த்தது போல் உள்ளது அவ்வளவு அழகாய் படங்களுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள் ஸாதிகா.
இறை அருள் எங்களுக்கும் உங்களால் கிடைத்து விட்டது.
சில வார்த்தைகள் புரியவில்லை //மன்னிக்கணும் சகோ ஸ்ரீராம் .நான் இப்பொழுது அதற்கான விளக்கங்களை அடைப்புக்குறிக்குள் விளக்கி சேர்த்து விட்டேன்.சில வார்த்தைகள் புரியாவிட்டாலும் ஆர்வத்துடன் படித்து தொடர்ந்து பின்னூட்டம் அனுப்பி,புரிய வில்லை என்ற உண்மையையும் சொல்லிய உங்கள் செயலுக்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்.
நல்லதொரு வழிகாட்டக்கூடிய பதிவு !
புத்தகமாக வெளியிட்டு புதியவர்கள் பயன்பெற முயற்சிக்கலாம்.//மிக்க மகிழ்ச்சி சகோ நிஜாம்.புத்தகமாக வெளியிடும் அளவிற்கு என் பதிவில் விலக்கம் இல்லையே என்பதே என் கருத்து.உங்கள் ஆர்வத்திற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
வாங்க வல்லிம்மா.உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி.கருத்துக்கு மிக்க நன்றி.
ஹஜ் பயணம் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள அல்லாவின் பூரண அருள் உனக்கு கிடைச்சிருக்குன்னுதான் சொல்லனும்//இந்த வரிகளைப்பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டேன் லக்ஷ்மிம்மா.உங்கள் தொடர்ச்சியான விளக்கமான பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி.
பானு,ஆர்வமாக கேள்விகேட்கின்றீர்கள்.ஏதோ எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன்.நபிகள் ஸல் அவர்களின் திருக்கரத்தால் அடிக்கல் நாட்டி கட்டப்பட்ட முதல் மசூதி குபா மசூதி என்று அறிந்ஹு இருக்கின்றேன்.இன்னும் எக்கசக்க தளங்களுக்கு சென்று படம் எடுத்துள்ளேன்.எது என்ன இடம் என்று சற்று கன்ஃப்யூசன்.அதனால் அவற்றை எல்லாம் வெளியிட வில்லை.குறிப்பு எடுத்துக்கொள்ள வில்லையே என்று இப்பொழுது குறை.நீங்களாவது ஹஜ்ஜுக்கு செல்லும் பொழுது படங்கள் எடுப்பதுடன் ஞாபகத்திற்கு குறித்தும் வைத்துக்கொள்ளுங்கள்.அப்பொழுது உங்களுக்கு நிறைய டிப்ஸ் தருகிறேன்.இன்ஷா அல்லாஹ்.
//நான் இப்பொழுது அதற்கான விளக்கங்களை அடைப்புக்குறிக்குள் விளக்கி சேர்த்து விட்டேன்//
நன்றி. மறுபடி ஒருமுறை படித்து விட்டேன்.
கருத்துக்கு மிக்க நன்றி மலர்.
mathina said...
assalumu allakum sister //வ அலைக்கும்சலாம் மதினா.கருத்துக்கு மிக்க நன்றி.
உற்சாகமான கருத்துக்கு மிக்க நன்றி இலமதி.
காந்த மலையில் காந்தம் இருக்குமோ? ஏன் அப்படிப் பெயர் வந்திருக்கும்?//இரு புறமும் காந்த மலை அமைந்துள்ள பாதையில் ஈர்ப்பு சக்தி உள்ளதால்தான் கார் அப்ப்டி செல்கிறது.எங்களுடன் வந்திருந்த ஒருவர் அதை யெல்லாம் பார்த்து முடித்து விட்டு கார் ஸ்டார்ட் ஆனதும் கீழே இறங்கிப்போய் காந்தம் கிடைக்குமா என்று பார்க்கவேண்டும்.கிடைத்தால் பில்ளைகள் விளையாட ஊருக்கு கொஞ்சம் எடுத்து செல்லலாம் என்று கூற ஆரம்பித்து விட்டார் என்றால் பாருங்களேன்.கருத்துக்கு நன்றி அதிரா.
துளசி கேட்ட கேள்வியையே நானும் கேட்கிறேன்.
எல்லோரும் போய் வரலாமா?//துளசிம்மாக்கு அளித்த பதிலை பார்த்திருப்பீர்கள்.எல்லோரும் போய் வர இயலாது ரஞ்சனி மேம்.
கருத்துக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
வ அலைக்கும்சலாம் சகோ நாஸர்.//சொல்லவந்தது மாறி விட்டதோ?// ஆம் தவறினை சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி சகோ.திருத்தி விட்டேன்.கருத்துக்கு மிக்க நன்றி.
வ அலைக்கும்சலாம் சகோ நாஸர்.//சொல்லவந்தது மாறி விட்டதோ?// ஆம் தவறினை சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி சகோ.திருத்தி விட்டேன்.கருத்துக்கு மிக்க நன்றி.
கருத்துக்கு மிக்க நன்றி ஆசியா.
உங்களுடன் நானும் எல்லாவற்றையும் சுத்திப்பார்த்தது போல் உள்ளது அவ்வளவு அழகாய் படங்களுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள் ஸாதிகா.
இறை அருள் எங்களுக்கும் உங்களால் கிடைத்து விட்டது.//மிக்க சந்தோஷம் கோமதிம்மா.தொடர்ந்து வந்து கருத்து தரும் உங்களுக்கு மிக்க நன்றி.
மிக்க நன்றி சகோ ஸ்ரீராம்.
சலாம் ஸாதிகா லாத்தா. எப்போதுமே லேட்டா வர்ற நான் இந்த பதிவுக்கும் லேட், ஸாரி :)
நிறைய இடங்களை க்ளிக் பண்ணியிருக்கிறீங்களே.. மாஷா அல்லாஹ், அவ்வளவும் அழகு! சில படங்கள் நான் எடுத்த வியூவிலேயே உள்ளது. உங்கள் முந்திய பதிவில் உள்ளவையும்தான் :) ஆனா நீங்க நிறைய நாட்கள் தங்கியதால் கூடுதலான சில இடங்களுக்கும் போயிருக்கிறீங்க, கொடுத்து வச்சவங்கதான் போங்க. இன்ஷா அல்லாஹ் உம்ராவுக்கு செல்லும்போதுதான் எல்லா இடங்களுக்கும் போகணும். துஆ செய்யுங்க ஸாதிகா லாத்தா, எல்லோரும் சேர்ந்து ஒண்ணா போகலாம் இன்ஷா அல்லாஹ் :-)
அஸ்ஸலாமு அலைக்கும்,
மாஷா அல்லாஹ் சூப்பரோ சூப்பர். எங்களுக்காகவும் துவா செய்யுங்க அக்கா...
நான் தான் ரொம்ப லேட்டா :-)
அலைக்கும்சலாம் அஸ்மா.//ல படங்கள் நான் எடுத்த வியூவிலேயே உள்ளது.// நீங்களும் பதிவில் போடுங்கள் அஸ்மா.காணக்காத்திருக்கிறோம்.
//. துஆ செய்யுங்க ஸாதிகா லாத்தா, எல்லோரும் சேர்ந்து ஒண்ணா போகலாம் இன்ஷா அல்லாஹ் :-)// அல்லாஹுத்த ஆலா கண்டிப்பாக நம் ஹாஜத்துகளை நிறைவேற்றுவானாக ஆமீன்.நன்றி அஸ்மா.
அலைக்கும்சலாம் தம்பி ஆஷிக்.வரவுக்கு நன்றி.லேட்டாக வந்தாலும் மகிழ்ச்சி.தொடர்ந்து வாங்க..:)
maasha allah !
mikka natri sako...!
aduththa pakirvu kaaththirukkiren....
நன்றி சகோ சீனி.
அற்புதமான பதிவு
எல்லா புனித இடங்களையும் நேரடியாகப் பார்ப்பது போல
அருமையாகப் பதிவாக்கித் தந்தமைக்கு எப்படி நன்றி
சொல்வது எனத் தெரியவில்லை.வாழ்த்துக்கள்
காந்த மலை,நகரும் டூம் புதிய தகவல்களையும் படங்களையும் பகிர்ந்ததில் மிக்க சந்தோஷம்... நீங்கள் விவரித்து எழுத்து அழகைப்பார்த்தால் நேரில் போய் பார்த்த உணர்வை தருகிறது பகிர்விற்கு நன்றி ஸாதிகா லாத்தா..
''..பதிவை படிக்க படிக்க மிக பிரமிப்பாக இருந்தது ஷாதிகா..தானாக சுருங்கி விரியும் குடை, காந்த சக்தி உள்ள சாலை , நபிகள் அடக்கம் செயயப்பட்ட இடத்தில் உள்ள நகரும் டும்கள், அனைத்தும் பிரமிக்க வைத்தன..அருமை. ..'''
பதில்களிலும் பல விவரங்கள் அறிந்தேன் உண்மையில் எழுத்துப் பிழைகள் திருத்தி புத்தகமாக வெளியிடுங்கள் வேற்று மதகக்காரர் போக இயலாது என்றால் பார்த்து மகிழலாம். நான் கொடுத்து வைத்தவள் என்று என்னை எண்ணுகிறேன் இதை வாசிப்பதால்.
மிக்க நன்றி நன்றி ஸாதிகா. இறுதி அங்கமும் விரைவில் வாசித்து எழுதுவேன்.
இனிய நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
''..பதிவை படிக்க படிக்க மிக பிரமிப்பாக இருந்தது ஷாதிகா..தானாக சுருங்கி விரியும் குடை, காந்த சக்தி உள்ள சாலை , நபிகள் அடக்கம் செயயப்பட்ட இடத்தில் உள்ள நகரும் டும்கள், அனைத்தும் பிரமிக்க வைத்தன..அருமை. ..'''
பதில்களிலும் பல விவரங்கள் அறிந்தேன் உண்மையில் எழுத்துப் பிழைகள் திருத்தி புத்தகமாக வெளியிடுங்கள் வேற்று மதகக்காரர் போக இயலாது என்றால் பார்த்து மகிழலாம். நான் கொடுத்து வைத்தவள் என்று என்னை எண்ணுகிறேன் இதை வாசிப்பதால்.
மிக்க நன்றி நன்றி ஸாதிகா. இறுதி அங்கமும் விரைவில் வாசித்து எழுதுவேன்.
இனிய நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
Post a Comment