கிளாக் டவர்
உலகின் மிக உயரமான கட்டிடமான துபையில் இருக்கும் புர்ஜ் கலீஃபா கட்டிடத்தை விட 36 அடி மட்டிலுமே குறைவான உயரத்தில் உள்ள இந்த கிளாக் டவர் உலகின் மிகப்பெரிய கடிகாரம் என்ற பெருமையை பெற்றுள்ளது இந்த மக்கா கிளாக் டவர் ராயல் ஓட்டல் உச்சியில் உள்ள கடிகாரம்.
இந்த ஓட்டலின் மொத்த உயரம் 1591 அடி. மொத்தம் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் இந்த ஓட்டல் கட்டப் பட்டுள்ளது. புனித நகரமான மக்காவில் மிகவும் ஆடம்பர, அதிக கட்டணம் கொண்ட ஓட்டல் இதுதான். இந்த ஓட்டலில், 1005 அறைகள் உள்ளன. அதில் தங்கி இருப்பவர்கள் பயணிக்க, 76 லிப்ட்கள் உள்ளன.தொழுகை நடத்தும் ஹால்கள்,ஷாப்பிங் மால் புட் கோர்ட் என்று சகல வசதிகளும் அமையபெற்ற வளாகம் இது
இதன் உச்சியில் காணப்படும் ஜெர்மனி யில் தயாரான இந்த கடிகாரம் 147 அடி அகலம், 141 அடி உயரம் கொண்டது. கட்டடத்தின் நான்கு பக்கங்களிலும் காணப்படும் இந்தக்கடிகாரம் மக்காவின் எந்த வீதியில் இருந்து பார்த்தாலும் கண்களுக்கு புலப்படும்.
நீர்வீழ்ச்சி
மக்காவில் வாகனத்தில் செல்லும் பொழுது ஆங்காங்கே இப்படி அழகானதொரு நீர்வீழ்ச்சியை கண்டு இருக்கிறேன்.இது நிஜமா செயற்கையா என்று தெரியவில்லை.முக்கிய போக்குவரத்து மிக்க சாலைகளில் இப்படி அருவிகள் கொட்டிக்கொண்டு இருப்பது கண்கொள்ளாகாட்சியாக இருக்கும்
அரஃபா டூ முஸ்தலிஃபா
தையல் இல்லாத வெண்ணிற ஆடையை(இஹ்ரான்)அணிந்து ஆண்கள் ஹஜ்ஜை நிறைவேற்றுவார்கள்.அப்படி வெண்நிற ஆடை தரித்து அரபா தினத்தன்று மைதானத்தில் கூடி இருக்கும் ஹஜ்ஜாளிகளை, அன்று மாலை அரபா மைதானத்தில் இருந்து முஸ்தலிஃபாவுக்கு கூட்டம் கூட்டமாக செல்லும் ஹஜ்ஜாளிகளை பார்க்க பிரமிப்பாக இருக்கும்.எங்கு பார்த்தாலும் வெந்நிற ஆடைதரித்து கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருப்பார்கள்.
மினா வீதியில்
மினாவில் தங்கி இருந்த பொழுது டெண்டினுள் அந்தமிகச் சிறிய படுக்கையிலேயே பொழுதை ஓட்டிக்கொண்டுதான் இருப்போம்.வெளியில் செல்ல பயம்.வழிதவறினால் மிகவும் கஷ்டமாகி விடும்.ஆயிரக்கணக்கில் ஒரே மாதிரியான வீதிகளில் ஒரே மாதிரியான டெண்டுகள்.அதை நினைத்தே எங்கும் செல்லாமல் இருப்போம்.கணவர்தான் காலாற நடக்கலாம் என்றுஅழைத்ததன் பேரில் தைரியமாக புறப்பட்டேன்.மினா டெண்டுகள் அடங்கிய கேட்டை விட்டு வெளியே வந்ததும் பிரமிப்பாக இருந்தது.வீதியெங்கும் கடை பரப்பி பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் வியாபாரம் கனஜோராக நடைபெற்றுக்கொண்டிருந்தது.வீதியின் ஒரு புறம் முழுக்க சாப்பாட்டுக்கடைகள்.நாங்கள் இருந்தடெண்ட் முஸ்தலிபாவுக்கு அருகில்.முசஸ்தலிஃபா பாலம் வரை நடைபாதை கடைகள் தொடர்ந்து கொண்டிருந்தன.
வியாபாரம் செய்யும் அநேகர் கருப்பின பெண்கள்தான்.ஏழு எட்டு வயதுடைய சிறுவர் சிறுமிகள் கூட வியக்கும் அளவுக்கு ஜரூராக வியாபரம் செய்து கொண்டிருந்தனர்.அந்த சிறுமிகளின் தலை அலங்காரத்தால் கவரப்பட்டு கேமராவை தூக்கினால் சுட்டு விரலை வேகமாக ஆட்டி படம் எடுக்க கூடாது என்று உக்கிரமாக மறுக்கின்றாள்.எப்படியோ ஒரு பெண்ணை படம் எடுத்து விட்டேன்.இதில் பெரியவர்களை விட சிறியவர்கள்தான் உஷாராக இருக்கின்றனர்.
முஸ்தலிஃபா
முஸ்தலிபாவில் உள்ள கூட்டம்.அரஃபா மைதானத்தில் இருந்து சாரை சாரையாக முஸ்தலிபாவுக்கு வந்து அன்றிரவு மட்டும் தங்கி இருந்து கற்களை பொறுக்கிகொண்டு செல்வார்கள். அர்ஃபாவுக்கும் மினாவுக்கும் இடையே அமைந்துள்ளது முஸ்தலிபா . இவ்விடம் அரஃபாவிற்கும் மினாவிற்கும் இடையே சுமார் 10 கி.மீ தூரத்தில் உள்ளது. அங்கு அனைவரும் கூடாரம் இல்லாத திறந்தவெளியில் இரவைக் கழிப்பார்கள்.சாலைகளில் பணக்காரர் ஏழை என்ற பாகுபாடின்றி அனைவரும் தெரு ஓரத்தில் படுத்துறங்க வேண்டும்.
சைத்தானுக்கு கல் எறியச்செல்லுதல்
ஜம்ராத்தில் கல் எறியும் பகுதியான மினாவில் உள்ள “ஜம்ராத் பாலம்”, ஐந்தடுக்குகளாக ஹை-டெக் வசதிகளுடன் உள்ளது. கிட்டத்தட்ட 4.5 பில்லியன் சவூதி ரியால் பட்ஜெட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த 5 அடுக்கு ஜம்ராத் பாலம், ஒரு மணி நேரத்தில், 3 லட்சம் பேர்கள் கல்லெறிய வசதியாக அமைந்துள்ளது. கல்லெறியும் இடத்தில் ஹாஜிகளுக்கு பாதுகாவலாகவும், கூட்டத்தை ஒழுங்கு படுத்தவும், 12000 காவல்துறையினர் தயாராக இருப்பார்கள் .அங்கு செல்வதற்கு முஸ்தலிபாவில் பொறுக்கிய கற்களுடன் மக்கள் சாரை சாரையாக புறப்பட்டு செல்வதை படத்தில் பாருங்கள்.
நுழைவு வாயில்
சைத்தானுக்கு கல் எறியும் தூண்கள் இருக்கும் பகுதியின் நுழைவு வாயில்.பளிரென்ற வெளிச்சத்துடன்.சில்லென்ற ஏஸி குளிரூட்டப்பட்ட இடமிது.
தூணில் மக்கள் கல் எரிந்து கொண்டுள்ளனர்
சைத்தானுக்கு ஹாஜிகள் கல்லெறிவதை படத்தில் காண்கின்றீர்கள்.இதுகூட்டம் இல்லாமல் இருந்த பொழுது நாங்கள் சென்ற ஹஜ்சர்வீஸில் அழைத்துப்போகப்போய் மிக நெருக்கத்தில் போய்,சுலபமான முறையில் கல் எறிந்து விட்டு வந்தோம்.இதுவே கூட்டமாக இருக்கும் பொழுது எப்படி கஇருக்குமென்று கடைசி படத்தினை பாருங்கள்.கடைசிப்படம் மட்டும் கூகுளில் இருந்து எடுத்தது.
கடைசி படத்தில் மெலிதாக தெரியும் தூண் அதற்கும் முந்திய படத்தில் சுவர் போன்று அகலமாக தெரிவது தூணுக்கு மிக அருகில் நின்று படம் எடுத்ததினால்.இது போன்று மூன்று தூண்கள் உள்ளது .ஒவ்வொரு தூணிலும் ஹாஜிகள் முன்று நாட்கள் தொடர்ச்சியாக வந்து கல்லெறிய வேண்டும்.
தூணை சுற்றி மக்கள் வெள்ளம்
Tweet |
58 comments:
அரிய தகவல்களை புகைபடங்களுடன் அறிந்து கொண்டேன், பகிர்விற்கு பாராட்டுக்கள் .
அரிய தகவல்களை புகைபடங்களுடன் அறிந்து கொண்டேன், பகிர்விற்கு பாராட்டுக்கள் .
Masha allah.. Padikum poluthey naanum antha idathil irupathu pool neenaikeren... Neeril paarka vendum endra aaval varukerathu..
வாவ்!!!! அருமையான படங்களும் விளக்கங்களும்!!!!
கல் எறியும் தூண் என்று சொன்னாலும் ஒரு சுவர்போல விஸ்தீரணமா இருப்பதால் கல்போய் தூணில் விழ ஏதுவாகத்தான் இருக்கிறது இல்லையா?
அங்கே விழும் கற்களே மலை போலக் குமிஞ்சுருமே.... அவைகளை என்ன செய்கிறார்கள்?
முஸ்தலீஃபா பெண்களுக்கு உண்டா? என்ன ஆடை அணிவார்கள்? வெள்ளைப்புடவையா? ஆம் என்றால் ப்ளவுஸ் எப்படி?
புதிதாக ஹஜ் செல்வோருக்கு நல்லதொரு வழிகாட்டியாக அமையும் [ இறைவன் நாடினால் ! ]
தொடர வாழ்த்துகள்...
சகோதரியே!
பகிருங்கள் அல்லாஹ்வினுடுனைய-
புனித காபாவை!
படித்து-
புனித படட்டும்-
எங்களது-
பார்வை!
மிகுந்த-
ஆவலுடன்-
எதிர்பார்க்கிறேன்-
அடுத்த -
பகிர்வை!
அல்லா-
நம் அனைவர்மீதும்-
பொழியட்டும்-
தன் அருளை!
படங்களுக்கும் தகவல்களுக்கும் நன்றி.
முதல் படம் அழகான கோணம். கூகுள் படம் தூணின் அமைப்பைப் புரிந்து கொள்ள உதவியது.
அறியாத பல விஷயங்கள்
அழகான படங்கள்
அருமையான விளக்கங்கள்
அசத்தலான பதிவு
பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
நல்ல தொகுப்பு ஸாதிகா. தொடர்ந்து அனுபவங்களையும் பகிருங்கள்..
கருத்துக்கு மிக்க நன்றி ராதாராணி
Padikum poluthey naanum antha idathil irupathu pool neenaikeரென்.////
வரிகளில் மகிழ்ச்சி.இரைவன் உங்களுக்கும் மிக விரைவில் இந்த பாக்கியத்தை தந்தருள்வானாக!மிக்க நன்றி பாயிஜா
அங்கே விழும் கற்களே மலை போலக் குமிஞ்சுருமே.... அவைகளை என்ன செய்கிறார்கள்?//லட்சக்கணக்கான மகக்ள் எறியும் கோடிக்கணக்கான கற்களே மலை போல் குவிந்துவிடும்தான் .அதனை டிஸ்போஸ் பண்ணுவார்கள் என்று நினைக்கிறேன் துளசிம்மா.
//முஸ்தலீஃபா பெண்களுக்கு உண்டா? என்ன ஆடை அணிவார்கள்? வெள்ளைப்புடவையா? ஆம் என்றால் ப்ளவுஸ் எப்படி?// ஹஜ் கிரியைகள் எல்லாமே பெண்களுக்கும் உண்டு.பெண்களுக்கான இஹ்ராம் ஆடை முடி தெரியாத அளவு தலையை கவர் செய்து முகம்,கைகள் மட்டும் தெரியுமளவிற்கு ஆடை அணிந்திருக்க வேண்டும்.
சாதரண எப்பொழுதும் அணியும் ஆடையை அணிந்து அதன் மேல் பர்தா அணிந்து கொண்டாலே போதும்.அது எந்த நிறத்தில் இருந்தாலும் சரியே.கருத்துக்கும் கேள்விகளுக்கும் மிக்க நன்றி துளசிம்மா.
//புதிதாக ஹஜ் செல்வோருக்கு நல்லதொரு வழிகாட்டியாக அமையும்// அல்ஹம்துலில்லாஹ்.பெரிய வார்த்தைகளில் பாராட்டி விட்டீர்கள்.கருத்துக்கும் முதல் வருகைக்கும் மிக்க நன்றி சேக்கனா M. நிஜாம் .
அல்லாஹு அக்பர்!என்னவொரு பெரிய வார்த்தையை சொல்லி விட்டீர்கள் சகோ சீனி.அல்லாஹ் எப்பொழுது உங்களை புனிதமாகவே ஆக்கி வைப்பானாக.உங்களுக்கும் வெகு விரைவிலேயே இந்த பாக்கியத்தை தந்தருள்வானாக ஆமீன்.நன்றி சகோ சீனி
மிக்க நன்றி ராமலக்ஷ்மி.படங்கள் தெலிவாகவும் பெரிதாகவும் வலைப்பூவில் தெரிவதற்கு உங்கள் உபயம்தான் மீண்டும் நன்றி.
கவிதை லயத்துடன் பின்ன்னூட்டிய வைகோ சாருக்கு நன்றிகள்.
மிக்க நன்றி தோழி ஆசியா.
படங்கள் மிகவும் அருமை.....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
விண்ணைத்தொடுமளவிற்கு வானளாவ உயர்ந்த அழகும் ப்ரமிக்க வைக்கும் கட்டிடங்கள்....
கல்லினை என்ன செய்யப்போறீங்களோன்னு காத்திருந்தேன்...ஓ..இதற்குத்தானா...
மக்கள் கூட்டத்தினைப் பார்க்கும்போது அங்கு போவோர் உடன் வந்திருப்போரை தவறவிடாமல் ஒன்றாக இணைந்து போய்க்கொண்டு அங்கு நிகழ்வனவற்றிலும் கலந்து கொள்வது பெரீய கஷ்டமாக இருக்குமோ....
அரிய பல விடயங்கள்..பகிர்வுக்கு மிக்க நன்றி...தொடருங்கள்...
ஐந்தடுக்கு கொண்ட “ஜமராத் பாலம்” வந்த பிறகுதான் நெரிசலால் ஏற்படும் விபத்துகள் முழுதும் தவிர்க்கப்பட்டுள்ளன. அல்ஹம்தில்லில்லாஹ்.
அதன் வடிவமைப்பை நேரில் பார்த்து மிகவும் அதிசயித்துப் போனேன் அக்கா. பல ஏரியாக்களிலிருந்து வருபவர்கள், ஒன்றுசேரும் தனித்தனிப் பாதையில் செல்ல ஏதுவாக பல துணைச்சாலைகள் அமைத்திருப்பது;
கல்லெறிய உள்ளே வருபவர்களும், வெளியே செல்பவர்களும் எதிரெதிரே வந்து கலந்து நெரிசல் ஆகாமலிருக்க எல்லா வழிகளையும் “ஒன் வே” ஆக்கியிருப்பதும்;
அதற்கேற்றவாறு தூண்களைப் பெரிதாக்கியிருப்பதும்;
போன்ற பல முறையான திட்டமிடல்கள் வியப்பைத் தந்தன. இறைவன் அவர்களின் முயற்சிகளுக்குப் பலனும், கூலியும் தரட்டும்.
பிரமிப்பாக இருக்கிறது அந்த இடங்கள். பிரம்மாண்டமாகவும் அழகாகவும் சுத்தமாகவும் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நாங்களும் உடன் வந்து திரும்பிய திருப்தி.
sathiga niraiya visayangal therinjukka mudinjuthu.naakeka ninasa kelvillam mathavanga kettu padilum kidaisuthu.padangalum nalla vanthirukku. (tamil font work panale)
நீங்கள் பார்த்துப் பரவசப்பட்ட இடங்களை நாங்களும் பார்க்க வைத்ததற்கு நன்றி. படங்கள் அருமை! க்ளாக் டவரை முழுவதுமாக படம் எடுக்க முடியாது போல. எல்லாமே பிரம்மாண்டம்தான்!
நீங்கள் பார்த்துப் பரவசப்பட்ட இடங்களை நாங்களும் பார்க்க வைத்ததற்கு நன்றி. படங்கள் அருமை! க்ளாக் டவரை முழுவதுமாக படம் எடுக்க முடியாது போல. எல்லாமே பிரம்மாண்டம்தான்!
மாசா அல்லாஹ் மிக அருமையான புகைப்படங்களுடன் கூடிய பதிவு அக்கா. இறைவன் இப்பாக்கியத்தை அனைவருக்கும் தந்தருளவேண்டும்..
மிக அருமையான தொகுப்பு.
படஙக்ளும் நேரில் பார்ப்பது போல் இருக்கு
இன்று தான் ஊரிலிருந்து வந்தேன்.உங்கள் ஹஜ் புனித யாத்திரை நலமாய் இருந்ததா?
உடல் நலமாய் இருக்கிறீர்களா?
உங்கள் பதிவுகளை படிக்க வேண்டும் தொடர்ந்து .
விரிவான பகிர்வுகள், படங்கள் எல்லாம் அருமை.
கூகுள் படத்தில் உள்ளது போல் கூட்டம் இருந்தால் கூட்டத்தில் கல் எறிதல் சிரமம் தான்.
//மக்கள் கூட்டத்தினைப் பார்க்கும்போது அங்கு போவோர் உடன் வந்திருப்போரை தவறவிடாமல் ஒன்றாக இணைந்து போய்க்கொண்டு அங்கு நிகழ்வனவற்றிலும் கலந்து கொள்வது பெரீய கஷ்டமாக இருக்குமோ....// உண்மைதான் இளமதி.கணவர் பிரிந்து மனைவியும்,உறவுகளை பிரிந்து ஏன் மூன்று நாள் வரைகூட காணாமல் போய் திரும்பி இருக்கின்றனர்.இப்படி பற்பல நிகழ்வுகள் அறிந்துள்ளேன்.இப்பொழுது நேரில் கண்டுள்ளேன்.கருத்துக்கு நன்றி இளமதி.
ஹஜ் பயணம்-என்று பெயர் மட்டுமே தெரிந்த எனக்கு உங்கள் விவரமான பதிவு இன்ட்ரஸ்டிங்கா இருக்கு ஸாதிகாக்கா! அதுவும் படங்களுடன் இருப்பது கூடுதல் போனஸ்! பகிர்வுக்கு நன்றி! சீக்கிரம் அடுத்து அடுத்து எழுதுங்க! :)
அசத்தலான படங்கள்.. நல்ல தெளிவா எடுத்திருக்கிறீங்க? அதுசரி எனக்காக என்ன வாங்கி வந்தீங்க?:))
கருத்துக்கு மிக்க நன்றி Easy (EZ) Editorial Calendar
மக்கள் கூட்டத்தினைப் பார்க்கும்போது அங்கு போவோர் உடன் வந்திருப்போரை தவறவிடாமல் ஒன்றாக இணைந்து போய்க்கொண்டு அங்கு நிகழ்வனவற்றிலும் கலந்து கொள்வது பெரீய கஷ்டமாக இருக்குமோ....///மக்கள் கூட்டத்தினைப் பார்க்கும்போது அங்கு போவோர் உடன் வந்திருப்போரை தவறவிடாமல் ஒன்றாக இணைந்து போய்க்கொண்டு அங்கு நிகழ்வனவற்றிலும் கலந்து கொள்வது பெரீய கஷ்டமாக இருக்குமோ....//உண்மைதான் இளமதி.காணாமல் போய் 3 நாட்கள் வரை வராமல் அதன் பின் கண்டு பிடித்ததைஎ ல்லாம் கேள்விப்பட்டுள்ளேன்.இதெல்லாம் அங்கு சகஜம்தான்.கருத்துக்கு மிக்க நன்றி.
//அழகாகவும் சுத்தமாகவும் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. // இவ்வளவு பெரிய இடத்தையும் அத்தனை சுத்தமாக வைத்திருப்பது மிக ஆச்சரியமே.சுத்தத்திற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.கருத்துக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.
கருத்துக்கு மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.
கிளாக் டவரை முழுதுமாக எடுப்பது சிறிது கஷ்டம்தான்.கருத்துக்கு மிக்க நன்றி ஷமீமா அன்வர்
வாங்க மலிக்கா.நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு வந்திருக்கீங்க.//இறைவன் இப்பாக்கியத்தை அனைவருக்கும் தந்தருளவேண்டும்..// ஆமீன்.கருத்துக்கு நன்றி.
கருத்துக்கு மிக்க நன்றி ஜலி
மிக்க மகிழ்ச்சி விசாரிப்புகளுக்கும் மிக்க மகிழ்ச்சி கோமதிம்மா.ஊரில் இருந்து வந்ததுமே பதிவைப்படித்து வரிசையாக பின்னூட்டி விட்டீர்கள்.மிக்க நன்றி.
ஹஜ் பயணம்-என்று பெயர் மட்டுமே தெரிந்த எனக்கு உங்கள் விவரமான பதிவு இன்ட்ரஸ்டிங்கா இருக்கு ஸாதிகாக்கா! ////வரிகளில் மிக்க மகிழ்ச்சி மகி.வருகைக்கு மிக்க நன்றி.
.//அசத்தலான படங்கள்.. நல்ல தெளிவா எடுத்திருக்கிறீங்க?// பூஸாரின் வாயிலிருந்து பாராட்டு மழை மிக்க நன்றி அதீஸ்.
//அதுசரி எனக்காக என்ன வாங்கி வந்தீங்க?:))// முதலில் இந்தியா வாங்க.உங்களுக்காக வாங்கி வந்ததை தருகின்றேன்.
படங்களும் தகவல்களும் அருமை.
தொடருங்கள் நாங்களும் வருகிறோம்.
நீர்வீழ்ச்சி செயற்கைன்னு பார்த்தா மரமெல்லாம் நிஜமானது போல் தெரிகிறதெ...உண்மையிலேயே உண்மையானதுதானோ? ;) குளிரூட்டப்பட்ட அறைகளினால் ஹஜ் எளிமையாக்கப்பட்டுவிட்டதே?:) மாஷா அல்லாஹ்... நீங்க கல்லெறியும்போது பக்கத்திலிருந்து எடுத்த போட்டோ மூலமாக ஒவ்வொரு கல்லும் ரொம்பப் பெரியது எனத் தெரிந்து கொண்டேன்.
அருமையான விளக்கங்கள்.
வாழ்த்துகள்.பகிர்வுக்கு நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும் ஸாதிகா லாத்தா.
தாமதமாக வந்ததற்கு ஸாரிமா. அருமையான படங்கள் நிறைய கைவசம் வைத்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன் :) நான் அவ்வளவா எடுக்கல. ஆனா இதே வியூவில் க்ளாக் டவரும், நீர்வீழ்ச்சியும் எடுத்துளேன். அழகா பகிர்ந்துள்ளீர்கள்.
இது என் 2 வது பதிவு:
http://payanikkumpaathai.blogspot.com/2012/12/2.html
நேரமிருக்கும்போது பாருங்க ஸாதிகா லாத்தா.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆதிவெங்கட்.
ஸாதிகா மிக மிக அருமை.
இரண்டாவதும் வாசித்து விட்டேன்.
நானும் உங்களுடன் கூட வந்த திருப்தி.
கண்கள் கலங்குகிறது. ஆனந்தக் கண்ணீரோ!
மிக்க நன்றி. இறைஆசி மேலும் பெருகட்டும்
வேதா. இலங்காதிலகம்.
I am skaring this on my face book.( Imean this 3 parts.
வருகைக்கு நன்றி பானு.
வருகைக்கு நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்
அலைக்கும்சலாம் அஸ்மா.வருகைக்கு நன்றி.
வருகைக்கு மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம்
ஹஜ் பயணம் குறித்த இத்தனை அருமையான
படங்களுடன் விளக்கங்களுடன் நான் படிக்கும் முதல் பதிவு
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி.வாழ்த்துக்கள்
புதிதாக ஹஜ் செல்வோருக்கு நல்லதொரு வழிகாட்டியாக அமையும் [ இறைவன் நாடினால் ! ]
தொடர வாழ்த்துகள்...
புதிதாக ஹஜ் செல்வோருக்கு நல்லதொரு வழிகாட்டியாக அமையும் [ இறைவன் நாடினால் ! ]//மிக்க மகிழ்ச்சி.அப்படி யாருக்காவது வழிகாட்டியாகாமைந்தால் மிக்க சந்தோஷம்.வருகைக்கு மிக்க நன்றி சகோ அர அல.
ஹஜ் பயணம் குறித்த இத்தனை அருமையான
படங்களுடன் விளக்கங்களுடன் நான் படிக்கும் முதல் பதிவு//மிக்க மகிழ்ச்சி.கருத்துக்கு மிக்கநன்றி ரமணிசார்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஸாதிகா!
jazakallah..
சலாம் சகோ.சாதிகா,
மாஷாஅல்லாஹ், அருமையான படங்களுடன் நல்லதொரு பதிவு.
"மக்கா ஆடம்பர ஓட்டல்கள்" என்று கூகுளில் தேடி இங்கே வந்தேன். இது போன்ற ஓட்டல்களை நான் வெறுக்கிறேன். இவற்றின் தேவைக்கு அங்கே வேலை இல்லை.
அப்புறம்...
பின்னூட்டங்களில் சகோ.துளசி கோபால்,
ஜமராவில் சேரும் கற்களை பற்றி ஒரு அருமையான கேள்வி கேட்டிருக்கார்.
//அங்கே விழும் கற்களே மலை போலக் குமிஞ்சுருமே.... அவைகளை என்ன செய்கிறார்கள்?// என்று..!
சகோஸ்...
நபி ஸல் அவர்கள் காலத்தில் ஜமராவில் கல் எறிவது என்பது... குறிப்பிட்ட மூன்று "இடங்களில்" கல்லை எறிவதுதான் என்று ஹதீஸ்களை படிக்கும்போது அறியலாம்.
நாளடைவில்... அந்த "இடங்களை" நியாபகம் வைத்து சுட்டிக்காட்ட 'கம்பு / தூண்' போன்றவை நடப்பட்டிருக்க வேண்டும்.
பின்னர்... அந்த தூணின் மீது படுமாறு கல்லை எறிவது என்றானது. பிறகு... குறி தவறி அடுத்த பக்கம் நிற்பவரின் மீது படும்போது... தூணுக்கு பதில் சுவர் வந்தது.
தூண் இருக்கும் பொது ஏழு கற்களையும் ஒரே இடத்தில் நின்று கற்களை எரியும்போது ஒரு நெரிசல்... தொடர்ந்த நகர்தல் இன்றி ஒரு 'ட்ராபிக் ஜாம்' ஆன நிலை... தள்ளுமுள்ளு... இதெல்லாமே சுவர் வந்த பிறகு சரியானது.
ஏனெனில்.. நடந்து கொண்டே... ஏழு கற்களையும் அடித்து விடும்படி... '50 அடி நீள சுவர்' இருப்பதும் எதிர்புறம் உள்ளவர் மீது கற்களை விழாமல் தடுப்பதாக இருந்ததும் அருமையான ஏற்பாடு..!
இங்கேதான் பலருக்கும் கேள்வி வந்தது..!
"அதெப்படி முன்னர் நபி காலத்தில் சில சதுர அடிகள் என்ற அளவில் இருந்த இடம் - தூணாக எழுப்பப்பட்டு இருந்த இடம் இப்போது 50 அடி அளவுக்கு சுவராக நீளமாகலாம்..? இது சரியா..? எனில் அந்த சுவரில் எந்த இடம் அந்த இடம்...?"
என்று குழம்பி...
பலர் இரண்டடுக்கு (நான் ஹஜ் போன போது.. இரண்டே அடுக்குதான். அப்போது பெரிய நெரிசல் விபத்து ஏற்பட்டு சுமார் 250 ஹாஜிகள் இறந்ததால்... அடுத்த நாளே இடிக்கும் பணி துவங்கி... அடுத்த வருடத்தில் இருந்து இந்த நான்கடுக்கு புது பில்டிங் கட்டப்பட்டது.....) "50 அடி நீள சுவர்"...நபிவழிக்கு மாறான ஏற்பாடாக உள்ளதே" என்று விபரம் அறிந்த அரபிகளிடம் நான் கேட்டபோது...... விஷயம் விளங்கியது..!
இங்கே தான்.... 'நான்கு அடுக்கு 50 feet சுவர்' மேட்டரில்... ஆச்சரியப்படும் படியான ஒரு சூப்பர் ஸ்டன்னிங் டெக்னிக் ஒன்று உள்ளது..!
முன்பு தூண் போல இருந்த இடம் கீழே தரைத்தளத்தில் இருக்கும். மேலே உள்ள முதல், இரண்டாம், மூன்றாம் நான்காம் தளத்தில் எல்லாம் சுவர் இருக்கும். ஒவ்வொரு சுவருக்கும் கீழே ஒரு மிகப்பெரிய ஓட்டை இருக்கும்.
நான்காவது தளத்தின் சுவரை சுற்றி உள்ள இந்த ஓட்டை... அப்படியே ஒரு புனல் போன்று கூம்பி... மூன்றாவது தளத்தின் உப்பிய சுவர் ஆகிவிடும். 4 வது தளத்தில் எறியப்பட்ட கற்கள் மூன்றாவது தளத்தின் உப்பிய சுவரின் hollow உட்புறத்தின் உள்ளே விழுந்து கொண்டு இருக்கும்.
அதேபோல...
மூன்றாவது தளத்தின் சுவரை சுற்றி உள்ள இந்த ஓட்டை... அப்படியே ஒரு புனல் போன்று கூம்பி... இரண்டாவது தளத்தின் உப்பிய சுவர் ஆகிவிடும். 4 வது தளத்தில் & 3 வது தளத்தில் எறியப்பட்ட கற்கள் இரண்டாவது தளத்தின் உப்பிய சுவரின் hollow உட்புறத்தில் விழுந்து கொண்டு இருக்கும்.
இரண்டாவது தளத்தின் சுவரை சுற்றி உள்ள இந்த ஓட்டை... அப்படியே ஒரு புனல் போன்று கூம்பி... முதலாவது தளத்தின் உப்பிய சுவர் ஆகிவிடும். 4 வது தளத்தில் & 3 வது தளத்தில் & 2 வது தளத்தில் எறியப்பட்ட கற்கள் முதலாவது தளத்தின் உப்பிய சுவரின் hollow உட்புறத்தில் விழுந்து கொண்டு இருக்கும்.
மேலே நான்கு தளத்தில் எறியப்பட்ட கற்களும்... ஒரு புனலின் மீது ஒரு புனல்... என்று நான்கு அடுக்கு புனல்களில் விழுந்த எல்லா கற்களும்... மழை போல... திரட்டப்பட்டு அன்று நபி ஸல் அவர்கள் எறிந்த சந்த சிறிய சில அடிகள் கொண்ட முன்னர் ஒரே ஒரு ஒற்றை தூண் இருந்த - அந்த சிறிய இடத்தில் தான் விழுந்து கொண்டு இருக்கும்.
அதாவது ஐம்பது அடிகள் நீளவாக்கில் எறியப்பட்ட கற்கள் ஒன்று திரட்டப்பட்டு நான்கு புனல்களின் ஊடே... ஒன்றன் ஊடே ஒன்றாக... விழுந்து வந்து... இறுதியில்.... சில அடிகள் நீள அகலம் கொண்ட தூண் இருந்த இடத்தின் மீது விழும்...!
இப்படி விழும் பொடிக்கற்கள்... மலை போல குவிய குவிய... அங்கே சில பல ட்ரக் மீது அவை ஷவல் லோட் மூலம் நிரப்பட்டு... அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு.... ஹஜ் முடிந்த பிறகு... ஹாஜிகள் எல்லாரும் வெளியான பிறகு... சாவதானமாக முஜ்தலிபா திடல் முழுதும் தூவப்படும் அல்லது இறைக்கப்படும். இந்த பொடி கற்களை அடுத்த வருடம் வரும் ஹாஜிகள் 7+ (21X 3) = 70 பொடிக்கற்களை சேமித்துக்கொள்வார்கள். எந்த வருஷமும் கற்களுக்கு பஞ்சம் இல்லை..!
இப்படித்தான் நடக்கிறது..!
@முஹம்மது ஆஷிக்!!
சேரும் கற்களை முஜ்தலிஃபாவில் இறைத்து விடுவார்கள் என்று (சிலர் சொல்லி) அறிந்திருந்தேன். மூன்று அடுக்குகளிலும் போடப்படும் கற்கள் புனல்-போன்ற அமைப்பினால் ஒன்று சேருவது புதிய தகவல். நன்றி.
//"மக்கா ஆடம்பர ஓட்டல்கள்" என்று கூகுளில் தேடி இங்கே வந்தேன். இது போன்ற ஓட்டல்களை நான் வெறுக்கிறேன். இவற்றின் தேவைக்கு அங்கே வேலை இல்லை.//
மிக உண்மை. அந்த இடத்திலுள்ள பெரிய ஓட்டல்கள், கஃபாவோடு ஒட்டாமல், ஒரு அந்நியத்தன்மையோடு நிற்கின்றன. அந்த பெரிய மணிக்கூண்டு, மக்காவை புனிதத் தலம் என்பதிலிருந்து சுற்றுலாத் தளம் ஆக்கிவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. இறைவன் காக்கட்டும்.
Post a Comment