July 8, 2012

சில்க் ஃபேப் கண்காட்சி



மங்கையர்களுக்கு மரியாதையையும் மதிப்பையும் தருவது சேலைகள் என்பது உண்மை.நவநாகரீகமான ஆடைகள் அணிபவர்கள் கூட சேலை கட்டும் பொழுது அணிபவர்களை கம்பீரமாக காட்டக்கூடியது.

தமிழ் நாட்டில் சேலை அணியும் மாந்தர்கள் அநேகம்.தமிழக பெண்களுக்காக சென்னை வள்ளுவர் கோட்டம் ஆடிட்டோரியத்தில் இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் சில்க் பேப் என்ற புடவைகளின் கண்காட்சியை நடத்தி வருகின்றது.

ஆந்திரப்பிரதேசம்,அஸ்ஸாம்,பீகார்,கர்நாடகா,சட்டீஸ்கர்.குஜராத்,ஜார்கண்ட்,ஜம்மு காஷ்மீர்,மத்திய பிரதேசம்,மஹாராஷ்ட்ரா,ஒரிஸா,உத்திரபிரதேசம்,மேற்கு வங்காளம்,மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து இந்தியாவின் பாரம்பரிய,கைத்தறி துணிகளை கண்காட்சிக்கு வைத்து இருக்கின்றனர்.


வித விதமான புடவைகள் மட்டுமல்லாமல்,டிரஸ் மெட்டீரியல்கள்,ஃபர்னிஷிங்,துப்பட்டா, போன்ற அனைத்து உள்ளன.

சில நூறு ரூபாய் முதல் பல்லாயிரம் வரையிலான வித வித புடவைகள் கண்களை கவர்கின்றன்.இதுவே எக்ஸ்க்ளூசிவ் ஷோ ரூம்களில் சென்றால் பல நூறு அதிகமாக கொடுத்து வாங்க வேண்டும்.இங்கோ பேரம் பேசி வாங்கி பணம் சேமிக்கலாம்.

உயர் வகை பட்டுநூலால் தயாரிக்கப்படும் தமிழ்நாட்டு காஞ்சிபுரம்,கோயமுத்தூரின் கோவைகாட்டன்,சின்னாளபட்டி சுங்குடிவாரணாசியின் பனாரஸ்,ஒரிஸாவின் இக்கத்,ராஜஸ்தான் மற்றும் குஜராத்தின் பாந்தினி,கர்நாடகாவின் பன்கடி,ஆந்திராவின் போச்சம்பள்ளி ,வெங்கடகிரி,கத்வால், நாராயண்பேட்,மங்கள‌கிரி போன்ற வகை வகையான் புடவைகளின் அணி வகுப்பு எதனை வாங்க,எதனை விடுக்க என்று குழம்பவைத்து விடுகின்றது.
அசாம் சுலுகுசி,மஹாராஷ்ட்ரா பைதான்,பீகார் பங்கள்பூர் சில்க்,அஸ்ஸாம் முகா சில்க்,குஜராத் தஞ்சோய்,பட்டோலா,பாந்தினி,ப்ரகோட்,மஹாராஷ்ட்ரா பைத்தானி,மத்ய பிரதேஷ் சந்தேரி,மகேஷ்வரி,பெங்கால் பாலுச்சேரி,ராஜஸ்தான் கோட்டா,மேற்கு வங்காளம் ஜம்தானி இப்படி எண்ணற்ற வகையில் புடவைகள் விதம் விதமாக.
கண்காட்சியின் இறுதி நாட்களில் இன்னும் விலை மலிவாக கிடைக்கும் என்றாலும் கலெக்ஷன் மிகவும் குறைவாக இருக்கும்.



ஆர்கானிக் பழவகைகள்,காய் வகைகள் விற்பனைக்கு வந்துள்ளது போன்று ஜார்கண்ட் மாநில தயாரிப்பான ஆர்கானிக் சார் இங்கு புதுமையாக உள்ளது
வித விதமாக டஸ்ஸர்,ராசில்க் போன்ற‌வற்றில் அழகிய பார்டர்கள் தைத்து ரிச் லுக் தரும் புடவைகள் மிக குறைந்த விலையில் வாங்கலாம்.
கட்டினால் ஷாஃப்டாகவும் ரிச் ஆகவும் இருக்கும் சிம்மர் சில்க்,ஜாமேவார்,கடி சிஃபான்,பட்டர் சில்க்,பிரிண்டெட் சில்க்,பேப்பர் சில்க் என்று எத்தனை எத்தனை வகை.
அணிவதற்கு சுகமாக இருக்கும் பியூர் சில்க்,ஷாஃப்ட் சில்க் போன்றவை ஷோ ரூம்களில் இரண்டாயிரத்துக்கு மேல் கிடைப்பது இங்கோ ஆயிரத்து ஐநூறில் வாங்கலாம்.

அருமையான பிரிண்ட் போட்ட மதுபாணி புடவைகள்,மூன்று வித வெவ்வேறு மெட்டீரியலால் உருவாக்கப்பட்ட புடவைகள் என்று புதுமை புகுத்தி இருக்கின்றார்கள்.


சேலை வாங்கும் பொழுது துணியின் ஓரத்தை பலமாக இழுத்துப்பார்த்து அதன் பின் கிடைக்கும் ரிசல்ட்டை வைத்து பழைய ஸ்டாக்கா,புதிதா என்று தீர்மானித்து வாங்கும் சாதுர்யம் வேண்டும்.

ஆகவே ரங்க மணிகள் தங்க மணிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறேன்
பேர்வழி என்று தனியாக போய் புடவை வாங்கி வாங்கிக்கட்டிக்கொள்ளாமல் கூடவே தங்கமணிகளையும் அழைத்துச்சென்றால் நல்லது:)

தூரத்துக்கு ஒன்றாக ஓடிக்கொண்டு இருக்கும் பெடல்ஸ்டல் பேன் காற்று மேலும் வெப்பத்தைத்தர,வியர்வை வழியும் முகங்களுடன் மக்கள்ஸ் கை கொள்ளாமல் பைகளை அள்ளிச்சென்ற வண்ணம் இருக்கின்றனர்.

பர்சேஸ் பண்ணிய அலுப்பு தீர வெளிப்பகுதியில் வரிசைகட்டிக்கொண்டு இருக்கும் கடைகளில் பஜ்ஜி போண்டா,ஸ்பிரிங் ரோல்,குழிப்பணியாரம் போளி,கேழ்வரகு அடை என்று வகை வகையான சாப்பாட்டு ஐட்டங்கள் வேறு பசியை போக்க காத்திருக்கின்றன.

30 comments:

Seeni said...

adengappaaaaa!

iththanai vakai selaikalaa.......

naan therinthu kolla uthaviyathukku-
mikka nantri!

துளசி கோபால் said...

ஆஹா...... இத்தனை வகைகளா!!!!!

புடவைக்குன்னு ஒரு அழகு இருப்பதை மறுக்கவே முடியாது!

எனக்கு இப்போ இந்த கத்வால் புடவைகள் ரொம்பப் பிடிச்சுப்போச்சு.
டஸ்ஸர் ஸில்க் ரெண்டு வாங்கிட்டு இதுவரை கட்டவே இல்லை. ஒரு நாள் கட்டிப் பார்த்தால்...... படுசுமாரா எனக்கே பிடிக்கலை:(

ஆமாம்.... நீங்க என்னென்ன வாங்குனீங்க?

கோமதி அரசு said...

ஸாதிகா, புடவைகளின் வகைகள், அதன் தரம் விலை பட்டியல் எல்லாம் கொடுத்தீர்கள் ஆனால் நீங்கள் என்ன வாங்கினீர்கள் என்று சொல்லவில்லையே!

CS. Mohan Kumar said...

சுடிதார் மெட்டிரியல் இல்லீங்களா? நம்ம வீட்டம்மாவுக்கு அது தான் வேணும் !

மற்ற படி விரிவான அருமையான தொகுப்பு !

குறையொன்றுமில்லை. said...

புடவைகளில் இத்தனை ரகங்களா? எதை எடுப்பது என்று குழம்பித்தான் போவோம். பாக்க எல்லாம் நல்லாதான் இருக்கு.

Mahi said...

/சேலை வாங்கும் பொழுது துணியின் ஓரத்தை பலமாக இழுத்துப்பார்த்து அதன் பின் கிடைக்கும் ரிசல்ட்டை வைத்து பழைய ஸ்டாக்கா,புதிதா என்று தீர்மானித்து வாங்கும் சாதுர்யம் வேண்டும்.
/ ஆஹா! இது எனக்கே தெரியாதே! ;)

நல்ல கலெக்ஷன் ஸாதிக்கா! நீங்க எவ்வளவு சேலைகள் வாங்கினீங்க? அரை டஜன்? ஒரு டஜன்?! கடைசியில் அந்த படங்கள் இருக்கும்னு ஆவலா வந்தேன், ஏமாத்திப்புட்டீங்களே?! ;))))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

புடவைகள் பற்றிய நல்லதொரு அலசல் பதிவு.

சும்மா எல்லாப்புடவைகளையும் அடித்துத் துவைத்து, அலசிப்பிழிந்து, காயப்போட்டு விட்டீர்கள். ;)))))

படங்கள் யாவும் நல்ல அழகு.

பெண்ணாய்ப் பிறக்காமல் போனோமே என பெருமூச்சு விட வைத்து விட்டது என்னை.

நான் எழுதிய “மடிசார் புடவை”
என்ற கதையும் ஞாபகம் வந்தது.

இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2011/06/1-of-2.html

http://gopu1949.blogspot.in/2011/06/2-of-2.html

அன்புடன்
vgk

Radha rani said...

எங்க ஊர் பக்கம் ஆடி தள்ளுபடி சேல்ன்னு கடை,கடையா போட ஆரம்பித்து விட்டார்கள்..வள்ளுவர் கோட்டத்துல சில்க் ஃ பேப் கண்காட்சியா.பார்க்க ஆசைதான்..சூழ்நிலை ஒத்து வரல்லையே :)

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு தொகுப்பு ! தொடர வாழ்த்துக்கள் ! நன்றி ! (TM 3)

விச்சு said...

புடவை ரகங்கள் எல்லாமே சூப்பர். அழகாகப் படங்களும் எடுத்துள்ளீர்கள். சேலை என்றாலே அழகுதான் போல.

Radha rani said...

சில்க் சேலைகள் எல்லாம் நல்லா இருக்கு..ஷோ ரூமைவிட சில நூறு குறைத்து வாங்கலாமா.அப்போ ஆடி தள்ளுபடியா.... இங்க ஆடி சேல்ஸ் கடைக்கு கடை போட்டிருக்காங்க.

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா சேலைகள் பல ரகம் இப்போ எல்லாமே புது ரகம் நன்றிங்கோ...!

முத்தரசு said...

இப்பதான் புரியுது பெண்கள் சேலை எடுக்க ஏன் காலதாமதம் ஆகுதுன்னு

ராமலக்ஷ்மி said...

அருமையாகத் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்:).

ட்ரெஸ் மெட்டீரியல் பற்றி அறிய நானும் விரும்புகிறேன். பெங்களூருக்கு இந்த கண்காட்சி வந்தால் எட்டிப் பார்க்கலாமில்லையா?

ராமலக்ஷ்மி said...

அருமையாகத் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்:).

ட்ரெஸ் மெட்டீரியல் பற்றி அறிய நானும் விரும்புகிறேன். பெங்களூருக்கு இந்த கண்காட்சி வந்தால் எட்டிப் பார்க்கலாமில்லையா?

MARI The Great said...

கலக்கல்!

Yaathoramani.blogspot.com said...

தற்சமயம் சென்னையில்தான் உள்ளேன்
தங்கள் பதிவைப் பார்த்ததும் மனைவி
நாளையே போகலாம் என உத்தரவிட்டுள்ளார்
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Angel said...

அருமையான பகிர்வு ...புடவைகளில் எத்தனை எத்தனை வகைகள் .
இங்கெல்லாம் கிறிஸ்மசுக்கு மட்டுமே புடவை கட்டுவேன் அது கூடா ஸ்னோ இல்லைஎன்றால் தான் .காப்பர் சல்பேட் நிற புடவையும் second படத்தில் நடு பொம்மை கட்டியிருக்கும் sandal colour புடைவையும் சூப்பர் !!!
எல்லா புடவைகளும் அழகோ அழகு .ஒரே ஒரு குறை கண்காட்சி நடத்துபவர்கள் அந்த மாடல் பொம்மைகளுக்கு ஒரு விக் தலைமுடி மாட்டியிருந்தா இன்னமும் அழகா இருந்திருக்கும் .

Anonymous said...

சேலை என்றால் யார் வெறுப்பார்!
ஆகா! அழகு! பலர்
ஆசையைத் தூண்டும் பதிவு!
நன்றி சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.

சாந்தி மாரியப்பன் said...

நீங்க அள்ளிட்டு வந்த புடவைங்களைக் கண்ணுலயே காமிக்கலையே :-)))

நிரஞ்சனா said...

சேலையா... அம்மா திட்டித் திட்டி இப்பத் தான் எப்படிக் கட்டறதுன்னே சமீபத்துல கத்துக்கிட்டேன். போட்டோக்களைப் பாக்கறப்ப ஒண்ணு ரெண்டு வாங்கி வெச்சுக்கலாமான்னு ஆசையே வந்துடுச்சு. Thanks for Sharing Dear SS!

பால கணேஷ் said...

சேலைகளில் இத்தனை வெரைட்டிகள் இருக்கா... புகைப்படங்களுடன் பார்க்கையில் பிரமிப்பு. நல்ல பகிர்வு.

Avargal Unmaigal said...

ரங்க மணிகளின் பர்ஸை பதம் பார்க்க வைக்கிறது உங்கள் பதிவு. ஹலோ ரங்கமணிகளே உங்கள் வீட்டின் தங்கமணிகள் இந்த வலைதளத்திற்கு அந்த கண்காட்சி முடியும் வரை வருவதை தடை செய்துவிடுங்கள். இவர்கள் விவரித்ததை படித்தால் உங்கள் வீட்டு தங்கமணிகள் சேலைகலை வாங்கி குவித்து விடுவார்கள்

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

ஆஹா அருமை... புடவையில் எது அதிகம் அழகு, எது குறைவு எனச் சொல்லவே முடியேல்லை... அனைத்தும் சூப்பர்...

நீங்க எத்தனை ஸாதிகா அக்கா வாங்கினனீங்க?

VijiParthiban said...

புடவைகளின் வகைகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி... நீங்கள் என்ன வாங்கினீர்கள்... அதை காமிக்கவேயில்லை....

Athisaya said...

விதம் விதமாய் அழகு ....!
பகிர்விற்கு நன்றிகளும் பாராட்டும்.
சேலை என்றாலே அழகு தான்.எத்தனை நாகரீக ஆடைகள் வந்தாலும் சேலையின் மவுசு குறைவதேயில்லை...!

Anonymous said...

வந்தேன்..பார்த்தேன் செல்கிறேன். வாழ்க! வளமுடன். மீண்டும் வருவேன்.
அன்புடன்
வேதா. இலங்காதிலகம்.

mohamedali jinnah said...

அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.(பகுதி-5)

There are five article about him, (my father அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்)biography
அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப். He is my father. Please see the comment box of this site. Let me know above your view in the comment box not in via mail. It gives credit to the man who has sacrificed his life till his death

மாதேவி said...

சேலை கண்காட்சியே நடத்திவிட்டீர்கள்.:))

மனோ சாமிநாதன் said...

ஊரிலிருந்தும் இந்தப் புடவைக் கண்காட்சியை மிஸ் பண்ணிவிட்டதை நினைத்தால் வருத்தமாயிருக்கிறது! தெரிந்திருந்தால் சென்னைக்கு ஒரு விசிட் அடித்திருக்கலாம்!!