கண்ணாடி முன் நின்று
சீவி சிங்காரித்து ஒயிலாக சிரிக்கும் நீ
கண்கொட்டாமல் பார்க்கும் என்னை
செல்லச்சிணுங்கலுடன் மையிட்ட உன்
மான் விழிப்பார்வையில் ஓடுவது
வெட்கமா சிருங்காரமா மோகனமா
மகிழ்வுடன் புரியாமல் நான் தவிப்பேன்
இன்று குளிரூட்டிய கண்ணாடி
நீள்வடிவ பெட்டியினுள்
கண்களை இறுக மூடி
மீளாதுயில் கொண்டு,மீளா துயர் தந்து
அமைதியாக படுத்திருக்கும்
உன் முகத்தை கண் கொட்டாமல்
மனம் முழுக்க பாரமுடன்
நான் பார்க்கும் இவ்வேளை
உன் வதனத்தில் உறைந்திருப்பது
என்னென்று புரியாமல்
அழுகையுடன் தவிக்கின்றேன்.
சிரிக்க சிரிக்க நீ பேசி
என் சிந்தையை கவர்ந்தவளே
இன்று வாய் மூடி மவுனியாக
படுத்திருக்கும் நிலை கண்டு
சித்தம் கலைந்து நிற்கின்றேன்
வகை வகையாக சமையல் செய்து
தளிர் கரத்தால் பரிமாறி
வயிறு நிரம்ப வைத்தவளே
இந்நொடியில் அக்கரங்கள்
செயலிழந்து போனதுவே
வெள்ளிக்கொலுசொலிக்க
ஒய்யாரமாய் நடை நடந்து
ஓவியமாய் வலம் வந்த
உன் கால்விரல்கள் வெண் துணியால்
கட்டப்பட்டு இருக்கும் நிலை
கண்டும் நான் செய்வதறியேன்
இந்நொடியில் குளிர் பெட்டியினுள் நீ
நாளையோ வளியில்லா மண்ணறையில்
குளிரூட்டீய நம் அறையில் இனி
என்னை தனியாக தவிக்க விட்டு
மண்ணறையில் துயில் கொள்ள
பறந்து விட்டாயே என்னவளே
Tweet |
25 comments:
பிரிவின் வலியை கவிதை அழகாக உரைக்கிறது.
//வெள்ளிக்கொலுசொலிக்கஒய்யாரமாய் நடை நடை நடந்துஓவியமாய் வலம் வந்தஉன் கால்விரல்கள் வெண் துணியால் கட்டப்பட்டு இருக்கும் நிலைகண்டும் நான் செய்வதறியேன்//
மனதை தொட்டன இந்த வரிகள்.
அவ்வ்வ்வ் ஸாதிகா அக்கா. நீங்களுமா? சொல்லி வச்சதுபோல எல்லோரும் புதுத்தலைப்பு...:)).. சிலமணி இடைவெளியில்:)
அருமையான கவிதை ஸாதிகா அக்கா.. ரொம்ப இன்ஸ்றட்டாப் படிச்சு வந்தேன்ன்.. முடிவு வலித்து விட்டது.. என்ன சொல்ல????
அருமையான கவிதை ஸாதிகாக்கா! மனைவிய இழந்த கணவனின் பரிதவிப்பை அழகாய்ப் பிரதிபலிக்கும் வரிகள்!
மிக உருக்கமான வரிகள். உண்மையில் தாயின் பிரிவு தானோ!
வேதா. இலங்காதிலகம்.
என்னுடைய ஈடுசெய்ய இயலாத சில இழப்புகளை
இக்கவிதை ஞாபகப் படுத்திப் போனது
படைப்பின் வெற்றி என்பது அதுதானே
மனம் கவர்ந்த பதிவு
நல்லாயிருக்கீங்களா ஸாதிகா? சோகமான உருக்கமான கவிதை. முடிவு மனசை வலிக்கச் செய்தது.
துணையை இழந்த ஆணின் வேதனை கவிதையில் அழகாய் பிரதிபலித்திருக்கிறது. ரொம்ப நல்லா இருக்குக்கா...
வகை வகையாய் சமையல் செய்து தளிர்க் கரத்தால் பரிமாறி... -அன்பின் விளக்கம்! வெள்ளிக் கொலுசொலிக்க
ஓவியமாய் வலம் வந்த உன் கால் விரல்கள் -ரசனையின் உச்சம்! துணையைப் பிரிந்ததின் உருக்கம் கவிதையில் அருமையாய் பிரதிபலித்திருக்கிறது. அருமை!
!!! இந்நொடியில் குளிர் பெட்டியினுள் நீ
நாளையோ வளியில்லா மண்ணறையில் !!!
சிந்திக்க வேண்டிய வரிகள்!
மிகவும் மனதை தொடும் கவிதை.
மனதை நெகிழவைக்கும் கனமான கவிதை.
அருமையான கவிதை
அன்பானவளின் பிரிவு தரும் மனதுயரத்தை, அவலத்தை,துக்கத்தை,கவிதையில் வடித்துள்ளீர்கள்.மனதை நெருடும் கவிதை.
நேற்றே படித்து விட்டு மன பாரத்தோடு போய் விட்டேன் ஸாதிகா
பிரிவென்பது அதுவும் உயிராய் பழகியோரை உயிர் தந்தவரை அந்நிலையில் பார்ப்பது கொடுமை .தாயை நினைத்து எழுதிய கவிதையாக நான் உருவகப்படுதிக்கொண்டேன்
துள்ளலாக ஆரம்பித்து ரம்யமாக பயணித்து சோகமாக முடிந்து, துயரத்தை ஏற்படுத்தியது நெஞ்சில் :(
பிரிவு = மனசு வலிக்கிறது....
மனதைத் தொட்ட... மெதுவே வலிக்கவும் வைத்த கவிதை.
கவிதைக்கரு உருவான காரணம் ஏதுமுண்டா ஸாதிகா!
ஆசியா
அதிரா
மஹி
வேதா இலங்கா திலகம்
ரமணி சார்
விச்சு நிரஞ்சனா
கணேஷண்ணா
மீரான்
வானதி
வி ஜி கே சார்
காஞ்சனா ராதாகிருஷ்ணன்
ராதாராணி
ஏஞ்சலின்
வரலாற்று சுவடுகள்
மேனகா
இமா
அனைவருக்கும் நன்றி!
இமா கவிதை உருவானதற்கு காரணம் ஏதுமில்லை.:)என் தந்தையையின் நினைவில் எழுதிய கவிதையை வாசித்திருக்கின்றீர்களா?
http://shadiqah.blogspot.in/2009/10/blog-post_30.html
:-( :-(
படிக்கும்போதே என்னவோ செய்கிறது. ஏதேதோ நினைவுகள் வருகிறது.
To give information for you
Please visit
மதீனா நேரலை - வலைத்தளங்களுக்காக
http://nidurseasons.blogspot.in/2010/08/blog-post_8319.html
மக்கா நேரலை - வலைத்தளங்களுக்காக
http://nidurseasons.blogspot.in/2010/08/blog-post_22.html
உங்கள் தேடுதலை எளிமையாக்க இங்கே சில இணைப்புகள் ! Here are some links to simplify your search!
http://nidurseasons.blogspot.in/2011/09/here-are-some-links-to-simplify-your.html
மனவலியைப் போக்கக் கவிதை வடிகாலோ. என்னவோ செய்துவிட்டது மனதை ஸாதிகா.
வாசித்து முடித்தவுடன் மனதில் ஏதோ ஒன்று கனமாக தோன்றுகிறது... கணவனோ மனைவியோ இருவரில் யாரோ ஒருவர் இந்நிலைமையைச் சந்தித்துதானே ஆக வேண்டும் ஹ்.ம்...
அருமையான கவிதை ஸாதிகா.
Post a Comment