May 7, 2012

அஞ்சறைப்பெட்டி - 8

சென்னை தீவுத்திடல் மைதானத்தில் செவன் ஒண்டர்ஸ் என்று உலக அதிசயங்கள் ஏழினையும் செயற்கையாக உருவாக்கி சீனப்பெருஞ்சுவரையும் உருவாக்கி சீனப்பெருஞ்சுவரில் ஏறி எல்லா அதிசயங்களையும் கண்டு களிக்கும் படி உருவாக்கி சென்ற வாரம் திறப்புவிழாவும் நிகழ்த்தி நாளிதழ்களில் விளம்பரமும் செய்து இருந்தனர்.

அத்தனையும் நேரில் போய் பார்த்தால் லட்சங்கள் பல செலவாகும்.அது நடக்கக்கூடிய காரியமில்லை என்று ஒரு பெரிய பட்டாளத்துடன் ஏழு அதிசயங்கள் பார்க்க கிளம்பினோம்.கடற்கரை சாலையில் நுழைந்து சற்று தூரம் போனாலே பிரமாண்டமாக தாஜ்மகால் தூரத்தே தெரிந்து சென்னையில்தான் இருக்கிறோமா என்ற உணர்வினை ஏற்படுத்தியது.

அருகில் போய்ப்பார்த்தால் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் அப்பொழுதுதான் உருவாகிக்கொண்டிருந்தது.டிக்கெட் கவுண்டர் திறக்கப்பட்டு டிக்கெட் விற்பனை மந்தமாக நடந்து கொண்டிருந்தது. இவ்வளவுதூரம் வந்தாச்சே என்று பலர் டிக்கெட் எடுத்து உள்ளே நுழைந்து கொண்டிருந்தனர்.சம்மர் ஹாலிடே முடியும் தருவாய் வரப்போகின்றதே என்று அரையும் குறையுமாக திறப்புவிழா நடத்தி விட்டனர்.பணத்தைக்கட்டி முழுமை இல்லாமல் பார்ப்பதை விட பணிகள் நிறைவடைந்ததும் முழுமையாக கண்டு களிக்கலாம் என்று முன் ஜாக்கிரதையாக திரும்பி விட்டோம்.


**********

சென்னை மக்களை அக்னி வெயில் வறுத்தெடுக்கிறது.104டிகிரி வெப்பத்தில் மக்கள் அவனுக்குள் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது.கடற்கரை சாலை,சிறுவர் பூங்கா இருக்கும் சாலை மற்றும் முக்கிய பூங்காக்கள் இருக்கும் சாலை அனைத்தும் டிராபிக் ஜாமில் மாட்டிக்கொண்டு தத்தளிக்கின்றது.

இது போதாது என்று மெட்ரோ டிரெயின் பணிகள் நடப்பதால் சென்னை ஸ்பென்சரில் இருந்து சைதாப்பேட்டை வரை வருவதற்குள் உயிர் போய் உயிர் வந்து விடும்.வாகனஓட்டிகள்,குறிப்பாக இரு சக்கரவாகன ஓட்டிகள் நிலை பரிதாபம்தான்.இதை எல்லாம் பார்க்கும் பொழுது மெட்ரோ டிரெய்ன் பணிகள் முடியும் வரை மவுண்ட் ரோடையே உபயோகப்படுத்தாமல் இருக்கலாம் என்று எரிச்சல் வருகிறது.நடகின்றகாரியமா?

**********

இந்த கொளுத்தும் வெயிலில் வியர்வை வழிந்தோட டிராஃபிக் போலீஸார் கண்களில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு வாகன ஓட்டிகளை பிடித்து பைன் போட்டு வசூல் செய்வது ஜரூராக நடந்து கொண்டுள்ளது.சென்ற வாரம் ஓ எம் ஆர் சாலையில் ஒரு ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு போன் பேசிக்கொண்டிருந்த காரணத்தினால் இது நோ பார்க்கிங் என்று பைனை போட்டு விட்டனர்.வாகன ஓட்டிகள் பெட்ரோலை நிரப்புவாங்களோ இல்லையோ பர்ஸை நிரப்பிக்கொண்டுதான் செல்லவேண்டும் போலும்.தமிழக அரசுக்கு இந்த சாலை வசூல் அமோக வருமானத்தை உண்டுபண்ணி விடும்.

**********

ஒரு பிரபல வி ஐ பி நீர் மோர்பந்தல் திறப்புவிழாவை பத்திரிகைளில் கட்டம் கட்டி வெளியிட்டு இருந்தனர்.வீதியெங்கும் போஸ்டர் வேறு.தினமும் நீர் மோர் வழங்கப்படும் என்று அறிவிப்பு வேறு .அந்த வழியாக பல முறை சென்று வருகின்றேன்.ஒரு நாள் கூட நீர் மோர் பானையை கண்ணால் பார்க்கவில்லை.பெரிதாக ஷாமியானா பந்தல், அம்மா படம் ஐயா படம் என்ற அமர்களத்திற்கு இடையில் ஒரு மேசை மீது தண்ணீர் கேனுடன் கேனுக்கு மேல் கிரீடமாக ஒரு கவிழ்த்து வைக்கப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர் தவிர வெறொன்றும் அறியேன் பராபரமே.

**********


இரண்டு கிலோவுக்கும் அதிக எடையில் உள்ள பாறை,கொடுவா,வாவல் வஞ்சிரம் போன்ற அதிக விலையுள்ள மீன்களை மார்கெட்டில் வாங்கி சமைத்து சாப்பிட்டால் ஒருவித கெமிக்கல் கலந்த மண்எண்ணை வாடை சாப்பிட விடாமல் தடுக்கிறது.சட்டியுடன் அப்படியே குப்பைக்கு போய் போய் விடும்.தவறுதலாக மண் எண்ணெய் கேன் மீன் மீது கவிழ்ந்து விட்டது போலும் என்று நினைத்து விட்டேன்.சில நாள் இடைவெளிக்குப்பிறகு மீண்டும் பெரிய வகை மீன்கள் வாங்கி சமைக்கும் பொழுது அதே வாசனை மூக்கை சுளிக்க வைத்தது.சமைத்த பின்னர்தான் வாசனையே தெரிகின்றது.பிறகு விசாரிக்கையில் மீன் கெட்டுப்போகாமல் இருக்க ஏதோ ஊசி மூலம் மருந்து செலுத்தப்படுகின்றதாம்.கேட்டு விட்டு அரண்டே விட்டேன்.மீன் விரும்பிகளே ஜாக்கிரதை.

**********

சென்னைக்கு புலம் பெயர்ந்த வெளியூர் வாசிகள் பவர்கட்டுக்கு பயந்தே கோடை விடுமுறைக்கு ஊருக்கு செல்ல பயந்து சென்னையிலேயே அடைக்கலமாகி விட்டனர் உதாரணத்திற்கு நான்.இப்பொழுது காற்றாலை மூலம் மின்சார சப்ளை அதிகரித்ததும் பவர்கட் குறைந்து இப்பொழுது மின்சார சப்ளை சீராக நடைபெற்று வருகின்றது என்பதை அறிந்து அனைவரும் சொந்த ஊருக்கு கிளம்ப ஆயத்தமாகி விட்டனர்.

**********

45 comments:

ரிஷபன் said...

விசாரிக்கையில் மீன் கெட்டுப்போகாமல் இருக்க ஏதோ ஊசி மூலம் மருந்து செலுத்தப்படுகின்றதாம்.கேட்டு விட்டு அரண்டே விட்டேன்.மீன் விரும்பிகளே ஜாக்கிரதை.

அட கண்றாவியே..

ரிஷபன் said...

ஒரு நாள் கூட நீர் மோர் பானையை கண்ணால் பார்க்கவில்லை.பெரிதாக ஷாமியானா பந்தல், அம்மா படம் ஐயா படம் என்ற அமர்களத்திற்கு இடையில் ஒரு மேசை மீது தண்ணீர் கேனுடன் கேனுக்கு மேல் கிரீடமாக ஒரு கவிழ்த்து வைக்கப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர் தவிர வெறொன்றும் அறியேன் பராபரமே.


Just Show ?!

ராமலக்ஷ்மி said...

/திறப்புவிழாவும் நிகழ்த்தி நாளிதழ்களில் விளம்பரசெய்து இருந்தனர்./

பணி முடியும் முன் விளம்பரம் செய்தது அவர்களது பொறுப்பின்மையைக் காட்டுகிறது. உங்களைப் போல் இன்னும் எத்தனை பேர் திடல் வரை சென்று திரும்பினார்களோ?

வெயில் இங்கே சற்று பரவாயில்லை.

நல்ல தொகுப்பு.

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

//பணத்தைக்கட்டி முழுமை இல்லாமல் பார்ப்பதை விட பணிகள் நிறைவடைந்ததும் முழுமையாக கண்டு களிக்கலாம் என்று முன் ஜாக்கிரதையாக திரும்பி விட்டோம்.//

ஸாதிகா அக்காவோ... கொக்கோ:)))

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

//சென்னை மக்களை அக்னி வெயில் வறுத்தெடுக்கிறது.104டிகிரி வெப்பத்தில் மக்கள் அவனுக்குள் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது.//

இப்பவே இப்படி எனில், யூன் யூலையை எப்படிக் கழிக்கப் போறீங்க?

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

///தினமும் நீர் மோர் வழங்கப்படும் என்று அறிவிப்பு வேறு .அந்த வழியாக பல முறை சென்று வருகின்றேன்.ஒரு நாள் கூட நீர் மோர் பானையை கண்ணால் பார்க்கவில்லை.////

ஹா..ஹா..ஹா.... கிடைகல்லியே என்ற பொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராண்மைதானே?:)))

Menaga Sathia said...

மீன் விச‌யத்தை படித்ததும் பயந்துவிட்டேன்....

அனைத்தும் கலக்கலான தொகுப்பு..அப்பப்போ அஞ்சறைபெட்டியை திறது மூடுங்கக்கா..

முத்தரசு said...

உட்கார்ந்த இடத்திலே சென்னையை சுற்றி (தகவலையும்) பார்த்து விட்டேன் - பகிர்வுக்கு நன்றி

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

//பிறகு விசாரிக்கையில் மீன் கெட்டுப்போகாமல் இருக்க ஏதோ ஊசி மூலம் மருந்து செலுத்தப்படுகின்றதாம்.கேட்டு விட்டு அரண்டே விட்டேன்.மீன் விரும்பிகளே ஜாக்கிரதை.///

நானும் கேள்விப்பட்டேன் அப்பிள் பழம் கலர் மாறாமல் அப்படியே இருப்பதற்காக, இறந்த உடம்பு கெட்டிடாமல் இருக்க பாவிக்கும் மருந்தை, இதுக்குப் பாவிக்கிறார்களாம்... நம் நாடுகளில்.. என்னத்தைச் சொல்வது.. காசு கிடைத்தால் போதும் எனும் காலம்.....

ஸாதிகா said...

உடன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரிஷபன்,

ஸாதிகா said...

//
பணி முடியும் முன் விளம்பரம் செய்தது அவர்களது பொறுப்பின்மையைக் காட்டுகிறது. உங்களைப் போல் இன்னும் எத்தனை பேர் திடல் வரை சென்று திரும்பினார்களோ?
// உண்மைதான் ராமலக்‌ஷ்மி.அதிலும் வெளியூரில் இருந்து வந்திருப்பவர்கள் ஊருக்கு திரும்பவேண்டுமே என்பதற்காக போய் பார்த்திருப்பார்கள்.எங்களைப்போல் திரும்பியவர்களும் உண்டு..கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

ஸாதிகா அக்காவோ... கொக்கோ:)))/// பின்னே..........?

யூன் யூலையை எப்படிக் கழிக்கப் போறீங்க?//
இந்த மாதங்களில் வெயில் குறைந்து விடும் அதிரா..பெப்ரவரி ஆரம்பத்தில் வரும் வெயில் ஜுன் இறுதிக்குள் இலகுவாகிவிடும்:)

ஹா..ஹா..ஹா.... கிடைகல்லியே என்ற பொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராண்மைதானே?:)))//செ....இத்தனை மட்டமாக என்னை எடை போட்ட பூஸுக்கு ஆழ்ந்த கண்டனங்கள்..:)தண்ணீர் பந்தலுக்கு கீழே நின்று மோர் குடிக்கும் ஸாதிகாவை கற்பனை செய்து பாருங்கள் அவ்வ்வ்வ்வ்வ்...

இறந்த உடம்பு கெட்டிடாமல் இருக்க பாவிக்கும் மருந்தை, இதுக்குப் பாவிக்கிறார்களாம்... நம் நாடுகளில்.. என்னத்தைச் சொல்வது.. காசு கிடைத்தால் போதும் எனும் காலம்.....////

ஐயையோ..இனி மீன் பக்கமும் ஆப்பிள் பழம் பக்கமும் போகவே மாட்டேன்.

கருத்துக்களுக்கு மிக்க நன்றி அதிரா.

ஸாதிகா said...

அஞ்சறைபெட்டியை திறது மூடுங்கக்கா..//கண்டிப்பாக மேனகா.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

உட்கார்ந்த இடத்திலே சென்னையை சுற்றி (தகவலையும்) பார்த்து விட்டேன் - //மகிழ்ச்சி நன்றி மனசாட்சி.

Angel said...

அஞ்சறைப்பெட்டி சுவை மணம் எல்லாம் அருமை .
மீன் விஷயத்தில் மிக கவனமா இருக்கணும் .சில வருடமுன் அலர்ஜி வந்து நான் பட்ட பாட்டில் .கடல் உணவை நினைத்தாலே மயக்கம் வருகிறது .இங்கே பதப்படுத்திய மீன்களில் க்ளோரோஃபார்ம் வாசனை மாதிரி வரும் .(ராயபுரம் /சிந்தாதிரிபேட் அருகில் வாங்கினாலும் இதே பிரச்சினையா ஸாதிகா ???)

சென்னை வெயிலை கொஞ்சம் எங்களுக்கு கடனாகவாது தரீங்களா ???
தொடர் மழையால் UK மக்கள் ரொம்ப கஷ்டப்படறாங்க .

ஆப்பிள் மற்றும்திராட்சை எந்த பழம்மாக இருப்பினும் உப்பு சேர்த்த நீரில் தோலுடன் சிரித்து நேரம் முக்கி வைக்க வேணுமாம் .அப்போ அதிலுள்ள வேண்டாத பொருட்கள் நீக்கப்படும் என்று கேள்விபட்டிருக்கேன்

நிரஞ்சனா said...

அவனில் வைத்த மாதிரி வெயில் வறுக்குதா S.s. நான் சிம்பிள் ட்ரிக் சொல்லட்டா...? ஃப்ரிட்‌ஜ் கதவைத் திறந்து விட்டுட்டு, பக்கத்துல உக்காந்துக்கங்க... (எங்கம்மா என் காதைத் திருகின மாதிரி உங்க வூட்டுக்காரர் செஞ்சா என்னைக் கேக்கக் கூடாதுப்பா) Hi... Hi...

நிரஞ்சனா said...

எங்க ஏரியாவுல கூட இந்த மாதிரி நீர்மோர்ப் பந்தல் ‌வைக்கப்படும் போது பாத்திருக்கேன். ஒரு நாள் ஒழுங்கா செயல்படும். அவ்ளவ்தான். நெக்ஸ்ட் டேலருந்து கண்டுக்கவே மாட்டாங்க...

மீன் பத்தின விஷயம் படிச்சது்ம் ‘திக்’ன்னுதான் இருந்துச்சு- நான் சாப்பிடற பழக்கம் இல்லாதவளா இருந்தாலும்கூட!

அஞ்சறைப்பெட்டியில நல்ல நல்ல சரக்குகளா வெச்சிருக்கீங்க... அடிக்கடி சப்ளை பணணுங்க S.S...

நிரஞ்சனா said...

எங்க ஏரியாவுல கூட இந்த மாதிரி நீர்மோர்ப் பந்தல் ‌வைக்கப்படும் போது பாத்திருக்கேன். ஒரு நாள் ஒழுங்கா செயல்படும். அவ்ளவ்தான். நெக்ஸ்ட் டேலருந்து கண்டுக்கவே மாட்டாங்க...

மீன் பத்தின விஷயம் படிச்சது்ம் ‘திக்’ன்னுதான் இருந்துச்சு- நான் சாப்பிடற பழக்கம் இல்லாதவளா இருந்தாலும்கூட!

அஞ்சறைப்பெட்டியில நல்ல நல்ல சரக்குகளா வெச்சிருக்கீங்க... அடிக்கடி சப்ளை பணணுங்க S.S...

பால கணேஷ் said...

ஏழு அதிசயங்களா...? சினிமாவுல பாத்தது, இவங்க உருவாககினது எப்படி இருக்குன்னு போய்ப் பாத்துட வேண்டியதுதான்! சமீப காலமா ட்ராஃபிக் விஷயம் ரொம்பத்தான்மா படுத்துது. ‌மவுண்ட்ரோட்லருந்து சைதாப்பேட்டை வர்றதுக்குள்ள... ஹப்பா...! எப்பத்தான் இந்த மெட்ரோ ரயில் வருமோன்னு இருக்கு. கரண்ட் கட் பண்றத நிறுத்திட்டாங்களேன்னு எங்கம்மாவை மதுரைககு அனுப்பி வெச்சேன். இப்ப மறுபடி கரண்ட் கட் ஆகுதாம். புலம்பறாங்க. டோட்டல் தமிழ்நாடு..? என்னமோ போம்மா...!

Radha rani said...

இங்க பவர் கட் ஆனாலும் கோடை வெயில் தாக்கம் தெரியாமல் மழை பெய்கிறது..

ஸாதிகா said...

நிரஞ்சனா has left a new comment on your post "அஞ்சறைப்பெட்டி - 8":

அவனில் வைத்த மாதிரி வெயில் வறுக்குதா S.s. நான் சிம்பிள் ட்ரிக் சொல்லட்டா...? ஃப்ரிட்‌ஜ் கதவைத் திறந்து விட்டுட்டு, பக்கத்துல உக்காந்துக்கங்க... (எங்கம்மா என் காதைத் திருகின மாதிரி உங்க வூட்டுக்காரர் செஞ்சா என்னைக் கேக்கக் கூடாதுப்பா) Hi... Hi...

விச்சு said...

அஞ்சறைப் பெட்டி மணமாக உள்ளது.

Mahi said...

அஞ்சறைப்பெட்டி அருமை! :)

ஹுஸைனம்மா said...

மீன் - அய்யோன்னு அலற வைக்குது. இனிமே நாமளே கடலுக்குப் போய் பிடிச்சுத் தின்னுக்க வேண்டியதுதான்போல!! :-(((

இந்தியா பொயிருக்கும்போது, உறவினர்கள் அரிசி, கீரை, கருவேப்பிலை, மல்லி இலை, காய்கறிகள், பழங்கள்னு ஒண்ணுவிடாம எல்லாத்தையும் மஞ்சள்-உப்பு போட்ட வெதுவெதுநீரில் சிறீது நேரம் ஊறவைத்துதான் பயன்படுத்துகிறார்கள். காலம் அப்படியாகிப் போச்சுக்கா!!

Asiya Omar said...

உங்க அஞ்சறைப்பெட்டி திறநதவுடன் சென்னையை சுற்றி பார்த்தது போலவே இருக்கு.பெட்டி வாசம் வழக்கம் போல் சூப்பர்.

ஸாதிகா said...

எங்க ஏரியாவுல கூட இந்த மாதிரி நீர்மோர்ப் பந்தல் ‌வைக்கப்படும் போது பாத்திருக்கேன். ஒரு நாள் ஒழுங்கா செயல்படும். அவ்ளவ்தான். நெக்ஸ்ட் டேலருந்து கண்டுக்கவே மாட்டாங்க...//எல்லா இடங்களிலும் இப்படித்தான் போலும்:(

நான் சிம்பிள் ட்ரிக் சொல்லட்டா...? ஃப்ரிட்‌ஜ் கதவைத் திறந்து விட்டுட்டு, பக்கத்துல உக்காந்துக்கங்க.//

இது பழைய ஐடியா நிரூ.அவ்வப்பொழுது பிரிட்ஜ் என்ன ஃபிரீஸர் கதவை திறந்து சிலென்ற குளிரை முகத்தில் வாங்கீகொண்டு கதவை மூடுவது உண்டு,இதுவே நீங்கள் சொல்வதைப்போல் செய்தால் ஆவ்வளவுதான்.இது ஜஸ்ட் ஒரு நிமிஷம்....எப்பூடி?

கருத்திட்ட சின்ன தங்கைக்கு நன்றிக்ள்!

ஸாதிகா said...

கடல் உணவை நினைத்தாலே மயக்கம் வருகிறது .இங்கே பதப்படுத்திய மீன்களில் க்ளோரோஃபார்ம் வாசனை மாதிரி வரும் .(ராயபுரம் /சிந்தாதிரிபேட் அருகில் வாங்கினாலும் இதே பிரச்சினையா ஸாதிகா ???)//நான் வாங்கியது கூட பெரிய மார்க்கெட்டில்தான் ஏஞ்சலின்

சென்னை வெயிலை கொஞ்சம் எங்களுக்கு கடனாகவாது தரீங்களா ???// கடன் என்ன ஃபிரீயாகவே எத்தனை டன் வேண்டுமானாலும் அள்ளிக்குங்க:)


ஆப்பிள் மற்றும்திராட்சை எந்த பழம்மாக இருப்பினும் உப்பு சேர்த்த நீரில் தோலுடன் சிரித்து நேரம் முக்கி வைக்க வேணுமாம் .அப்போ அதிலுள்ள வேண்டாத பொருட்கள் நீக்கப்படும் என்று கேள்விபட்டிருக்கேன்//நல்ல ஐடியா.நீளமான கருத்துக்கு மிக்க நன்றி ஏஞ்சலின்

ஸாதிகா said...

ஏழு அதிசயங்களா...? சினிமாவுல பாத்தது, இவங்க உருவாககினது எப்படி இருக்குன்னு போய்ப் பாத்துட வேண்டியதுதான்!//போய் பார்த்துட்டு பதிவா போடுங்க.அதற்கப்புறம் நான் போகிறேன்.கருத்துக்கு மிக்க நன்றி கணேஷண்ணா.

ஸாதிகா said...

அஞ்சறைப்பெட்டியின் மணத்தை நுகர்ந்து கருத்திட்டமைக்கு நன்றி விச்சு.

ஸாதிகா said...

இங்க பவர் கட் ஆனாலும் கோடை வெயில் தாக்கம் தெரியாமல் மழை பெய்கிறது//அருப்புக்கோடையில் இப்படியா?>பரவா இல்லை என் ஜாய் ராதா ராணி.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி மகி.

ஸாதிகா said...

மீன் - அய்யோன்னு அலற வைக்குது. இனிமே நாமளே கடலுக்குப் போய் பிடிச்சுத் தின்னுக்க வேண்டியதுதான்போல!! :-(((//ஆஹா இந்த ஐடியா கூட நல்லா இருக்கே.தோணியில் உட்கார்ந்து வலைவீசி எலேலா ஐலசா என்று பாடி மீன்களைப்பிடிக்கும்ஹுசைனம்மாவை இமேஜின் பண்ணி பார்க்கிறேன் ஹா,.,.ஹா....


கருத்துக்கு நன்றி ஹுசைனம்மா,

ஸாதிகா said...

உங்க அஞ்சறைப்பெட்டி திறநதவுடன் சென்னையை சுற்றி பார்த்தது போலவே இருக்கு.பெட்டி வாசம் வழக்கம் போல் சூப்பர்.//கருத்துக்கு மிக்க நன்றி ஆசியா.

Yaathoramani.blogspot.com said...

அஞ்சறைப் பெட்டி தகவல்கள் அனைத்தும்
அஞ்சறைப் பெட்டி பொருட்கள் போலவே
பயனுள்ளவைகளாக இருக்கின்றன
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

-தீவுத்திடல் போகவில்லை!
-மெட்ரோ ரயில் இருக்கட்டும்...மோனோ ரயில் வேறு வரப் போகிறதாம்..
-இந்தத் தண்ணீர் எல்லாம் சுத்தமானதா என்று அறியாமல் கேனில் இருப்பதாலேயே சுத்தம் என்று நம்பி மக்கள் எப்படிக் குடிக்கிறார்கள்?!
-நான்தான் எப்பவுமே மீன் சாப்பிடறதில்லையே...! :)))

ஜெய்லானி said...

ஏழு அதிசயமும் ஒரே இடத்திலா அட நம்ம ஊர் திருந்திடுச்சா...!! :-)).


மீன் மேட்டரை கேட்டாலே உடல் நடுங்குது அவ்வ்வ் . இன்னும் என்ன என்ன புதுப்புது வியாதிகள் இதனால் வரப்போகுதோ :-(

ஸாதிகா said...

வாழ்த்துக்க்கும் கருத்துக்கு மிக்க நன்றி ரமணி சார்.

ஸாதிகா said...

ஒவ்வொரு அஞ்சறைப்பெட்டிக்கும் ஒரு ஒரு வரியில் கமெண்ட்.மிக்க நன்றி ஸ்ரீராம்.

ஸாதிகா said...

மிக்க நன்றி ஜெய்லானி.

Unknown said...

அனைத்தும் அருமை! ஆனால்
ஒன்று! மின் வெட்டு மீண்டும்
பழையபடி வந்துவிட்டது.
காரணம் தெரியாது கேட்பதற்கும்
ஆளில்லை சொல்வதற்கும் நாதி
இல்லை.

புலவர் சா இராமாநுசம்

Jaleela Kamal said...

ஆஹா வருமுன்னே பயம்புடுத்துரீங்களே, அப்ப மவுண்ட் ரொம்ப ட்ராபிககா??/
எல்லா இடத்துக்கு நட ராஜாதான்...

மீன் விஷியம் ரொம்ப பயமா இருக்கு.
வந்தால் உஷாராக இருக்கனும்

Jaleela Kamal said...

மெட்ரோ டிரெயின் துபாயில் போடும் போதும் அப்ப்டி தான் திடீர் திடீருன்னு ரூட்ட மாற்றி விடுவாங்க


ஆனால் 3 வருடம் க்ழித்து பணி முடிந்தது, ஆஹா என்ன சொகுசு, எல்லா இடத்துக்கும் சீக்கிரம் போக் முடியுது.,

அதே போல் சென்னையில் மெட்ரோ வேலை முடிய எத்த்னை வருடம் ஆகப்போகுதுன்னு தெரியல

Jaleela Kamal said...

ஏழு அதிசயமும் ஒரே இடத்திலா ஊர் வருமுன் உங்கள் பிலாகஃபுல்லா ஒரு வலம் வந்துட்டுதான் வரனும்

எல்லா தகவலும் மிக அருமையாக அனைவருக்கும்பயன் படும் வண்ணம் பதிந்து இருக்கீங்க

கிரேட் ஸாதிகா அக்கா

mohamedali jinnah said...

கட்டுரை படிக்கும்போது உங்களுடன் தொடர்ந்து நாங்களுடன் பிரயாணம் செய்வதுபோல் மன நிலை உண்டாகின்றது.
சகோதரி மீன் சமைக்க நாமும் மகிழ்வாக ரசித்து சாப்பிடலாம் என்ற ஆர்வத்துடன் தொடர இறுதியில் ஒரு அறிவிப்போ அதிர்ச்சி
"மீன் கெட்டுப்போகாமல் இருக்க ஏதோ ஊசி மூலம் மருந்து செலுத்தப்படுகின்றதாம்.கேட்டு விட்டு அரண்டே விட்டேன்.மீன் விரும்பிகளே ஜாக்கிரதை."
. இன்ஷால்லாஹ் கெடாத மீன் சாப்பிட உங்கள் வீட்டிற்கு வர உங்கள் மெயில் முகவரி அனுப்புங்கள்
எனது வலைப்பூவில் சிறிது மாற்றம் .காம் வர இருப்பதால் மூன்று நாட்கள் படிக்க கடினம் புதிதாகத்தான் follower சேர வேண்டும்

Please visit
http://nidurseasons.blogspot.in/2012/05/blog-post_3782.html
பெண்கள் சட்டத்தினை உருவாக்குவார்கள் ஆனால்...!

மனோ சாமிநாதன் said...

அஞ்சறைப்பெட்டி சூடாக அனல் வீசுகிறது ஸாதிகா! உங்களுக்கு [ சென்னை வாசிகளுக்கு] பரவாயில்லை. தஞ்சை, குடந்தை, மயூரம் போன்ற உள்பகுதிகளில் ஒரு நாளில் 10 மணி நேரம் பவர் கட் விட்டு விட்டு இருக்கிறது. இரவு 10 மணிக்குப்போனால் நள்ளிரவு ஆகிறதாம் கரண்ட் வர!
மீன் விஷயத்தில் நல்லதொரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். பார்த்து தான் வாங்கணும்!