நான் நடுநிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயம்.”ஏர்வாடியில் இருந்து புதுசா டீச்சர் வர்ராங்களாம்”அதுதான் என் வகுப்பறையில் மாணவர்களுக்கிடையே ஹாட் டாபிக்.புது டீச்சருக்காக மிகுந்த எதிர் பார்ப்புடன்,வெகு ஆவலாக,வழிமேல் விழி வைத்து காத்திருந்தோம்.ம்ஹும்..புது டீச்சர் வந்த பாடில்லை.
“இந்த புது டீச்சர் எப்படி இருப்பாங்க”
“ரங்க நாதன் சார் மாதிரி இருந்துட்டா”
ரங்க நாதன் வாத்தியார்(பெயர் மாற்றப்பட்டுள்ளது)பிரம்பால் அடி வாங்காதவர்கள் இருக்கவே முடியாது.சிகப்பு நிற முட்டைக்கண்களை விழித்து,நாக்கை துருத்தி,விரல்களை மடக்கி ”நச்”என்று தலையில் வைத்த குட்டு இந்த நொடிவரை அவர் கையால அடி வாங்கியவர்கள் மறந்து இருக்க மாட்டார்கள் என்பது என் கணிப்பு.
“ஐயோ..அப்படி இருந்தாங்கன்னா அடுத்த வருஷமே இந்த ஸ்கூலை விட்டு விலகிடுவேன்”
ஆவலை கட்டுப்படுத்த முடியவில்லை.
மாணவ மாணவிகள் மத்தியில்
போர்டில் இலக்கணத்தை எழுதிக்காட்டிக்கொண்டிருந்த மிஸ்ஸிடம் ”மிஸ் மிஸ்”என்று குரல் கொடுத்து திரும்ப வைத்து ஆட்காட்டி விரலை மட்டும் நீட்டி பரிதாபமாக நின்றிருந்தோம்.
சாக்பீஸ் துகளை ஊதிய படி எரிச்சலுடன் உறுத்துப்பார்த்த மிஸ் புறங்கை காட்டி போகலாம் என்பதைப்போல் சைகையை வெறுப்புடன் வெளிப்படுத்த கண்டு கொள்ளாத நாங்கள் பாத்ரூம் இருக்கும் பக்கத்தை தவிர்த்து எதிர் கோடியில் ஹெட்மாஸ்டர் ரூம் பக்கம் சென்றோம்.
அங்கு புது டீச்சர் தரிசனம் கிடைக்காதா என்ற நப்பாசையில்.ம்ஹும்...ஹெட்மாஸ்டர் காந்திதாத்தா கண்ணாடி வழியே பைலை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தார்.ஏமாற்றத்துடன் நழுவினோம்.
இண்டர்வல்,லஞ்ச் டைம் எல்லாம் முடிந்து,மாணவர்களில் புது டீச்சர் பற்றிய முணு முணுப்பு ஓரளவு ஓய்ந்து,மறந்து இருந்த வேளை...
கிளாஸ் ரூமுக்கு மெர்குரி லைட் போட்டாற்போன்ற ஒரு வெளிச்சம்...
நெடிய ஒல்லியான உருவம்,ஆளை அசரடிக்கும் பளீர் என்ற அப்பொழுதுதான் சலவை செய்து வந்தாற்போன்று அசத்தலான நிறம்,பெரிய கருப்புநிற பிரேம் இடப்பட்ட அழுத்தமான மூக்கு கண்ணாடி,கைதேர்ந்த ஓவியன் மிக்க கருத்துடன் வரைந்த ஒரு பெண்ணோவியமாக நின்று இருந்த புது டீச்சரை பார்த்தத்தில் அத்தனை மாணவ மாணவியர்களுக்கும் ஒரே பரவசம்.மொத்தத்தில் பசி படத்தில் வரும் ஷோபாவைப்போன்ற் தோற்றம்...
உருவத்தைப்போன்றே அமைதியான குணம்,பரிவான வாஞ்சை,சட்டென்று புரியும் படி பாடம் நடத்தும் பாங்கு,அதே நேரம் அதீத கண்டிப்பு என்ற பல் கலவையுடன் பரிவாய் இருந்த ஆபிதா டீச்சரின் வரவு மாணவர்களுக்கு மிகவும் நிறைவாகவும்,சந்தோஷமாகவும் இருந்தது.
தினம் ஆசிரியருக்கு உரிய மெரூன் நிற பிளைன் மடிப்பு கலையாத காட்டன் சேலை,அதனை சற்றும் கலையாத வண்ணம் தலையில் முக்காடாக சுற்றி இருக்கும் பாங்கு,காண்ட்ராஸ்டாக வெள்ளை நிற ஜாக்கெட்,அதே கம்பீரத்தைக்கூட்டிக்காட்டும் கண்ணாடி,கையில் கருப்பு பட்டை கைக்கடிகாரம் என்று தினமும் அன்றலர்ந்த ரோஜாவாக காட்சி தரும் ஆபிதா டீச்சரின் செல்லப்பிள்ளையாகிப்போனேன் சொற்பநாட்களில்.
உரிமையுடன் அவரது வீட்டிற்கு செல்வதும்,புரியாத பாடங்களுக்கு விளக்கம் கேட்பது,பரீட்சை நாட்களில் ஸ்பெஷல் பீஸ் இல்லாமல் டியூஷன்,அவர் தருவதை சாப்பிடுவதும்,அவரிட்ட வேலைகளை உவகையுடன் செய்வதும்,வீட்டில் அம்மாவிடம் கேட்டு பட்சணங்கள் வாங்கி டீச்சருக்கு தந்து மகிழ்வதுமாக அந்த பள்ளியில் படித்து முடிக்கும் வரை மிக சந்தோஷமாகவே கழிந்தது நாட்கள்.
டீச்சரின் திருமணம்,குழந்தை பிறப்பு,புது வீடு கிரஹப்பிரவேசம் என்று ஒவ்வொரு வளர்ச்சியையும் நானும் வளர்ந்து கொண்டே பார்த்துக்கொண்டிருந்தேன்.
வாழ்க்கை சக்கரம் உருண்டோடிய வேகத்தில் டீச்சரின் வாழ்வில் எத்தனை எத்தனையோ சோகங்கள்.கர்ப்பவாய் வாய் புற்று நோயுடன் போராடி,மருத்துவ உதவியுடன் தனக்கே உரித்தான தன்னம்பிக்கையுடன் புற்றை வென்று நிம்மதியாக இருக்கையில் மீண்டும் வாழ்வில் விதி குரூரமாக விளையாடியது.இப்பொழுது வந்திருந்தது மார்பக புற்று நோய்.எத்தனையோ மாணவ மாணவிகளின் கல்விக்கண்களை திறந்து வாழ்வில் வெற்றி பெற தூண்டுகோலாய் இருந்தவர் இந்த மார்பக புற்றுநோயையும் எதிர்த்து போராடி இறைவன் உதவியால் வெற்றி கொண்டார்.
இன்றும் பல பேரன் பேத்திகள் கண்டிருந்தாலும் இத்தனை வாழ்கை சூறாவளிகளை சந்தித்தாலும்,அன்று பார்த்த ஆபிதா டீச்சரை இப்பொழுது பார்த்தாலும் முதல் நாள் பார்த்த அதே ஆபிதா டீச்சர் தோற்றத்திலேயே இருக்கின்றார்.சில வருடங்களுக்கு முன்னால் ரிடையர் ஆனார்.
இப்பொழுதும் அதே பாசத்துடன் என் பெயர் கூறி அழைத்து வாஞ்சையை பறிமாறும் பொழுது நான் மனம் நெகிழ்ந்து போவேன்.
ஊருக்கு செல்லும் பொழுதெல்லாம் நான் அவரை சென்றுபார்த்து வர மறந்தாலும் என்னை அவர் வந்து மறவாது பார்த்து செல்லும் பாசத்துக்கு விலை ஏது?
அன்பு ஆபிதா டீச்சர்,நீங்கள் இன்னும் பல்லாண்டு நோய் நொடியின்றி,சந்தோஷமாக வாழ வேண்டும் என்று இந்த ஆசிரியர் தினத்தன்று மனப்பூர்வமாக வாழ்த்தி பிரார்த்தனை செய்கின்றேன்.
அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் ஆசிரியர்தின வாழ்த்துக்கள்!
Tweet |
55 comments:
எனக்கு இப்படியொரு டீச்சர் கிடைக்கலையே :-(
மனதை நெகிழ வைக்கும் அருமையான பதிவு.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html
நாம் மிகவும் நேசிக்கும் எந்த ஒரு பொருளோ அல்லது உயிரோ . எப்பொழுதுமே அழகாகத்தான் தெரியும் என்பதை மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறது தங்களின் பதிவு ,. அருமை
ஆசிரியர் தினத்தன்று அவர்களின் சார்பாக
அபிதா டீச்சரை பிரதானப் படுத்தி எழுதியுள்ள பதிவு
மிக மிக அருமை.அனைவருக்குள்ளும் இப்படி ஒரு டீச்சரின்
உருவம் நிச்சயம் இருக்கும் அதை மிக அழகாக
ஞாபகப் படுத்தி போகுது உங்கள் பதிவு
(ஷோபனா டீச்சராக வந்தது மட்டும்
அழியாத கோலங்கள் என நினைக்கிறேன்)
உடனடியாக எழுதினாலும் இவ்வளவு சிறப்பாகப்
பதிவைத் தர முடியுமா என ஆச்சரியமாக உள்ளது
தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நினைவுகளை மீள்படுத்தி, ஆபிதா டீச்சரை ஒவியமாக்கி உங்கள் பதிவினை இனிப்பான கவிதையாக்கி விட்டீர்கள். பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.
ஆபிதா டீச்ச்ருக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்.. நல்ல பகிர்வு ஸாதிகா
பள்ளியில் பாடங்கற்று கொடுத்தவர், நோய்களை எதிர்த்துப் போராடி, வாழ்க்கையிலும் பாடம் கற்பிக்கிறார்!! நல்ல முன்மாதிரி.
//அன்பு ஆபிதா டீச்சர்,நீங்கள் இன்னும் பல்லாண்டு நோய் நொடியின்றி,சந்தோஷமாக வாழ வேண்டும் என்று இந்த ஆசிரியர் தினத்தன்று மனப்பூர்வமாக வாழ்த்தி பிரார்த்தனை செய்கின்றேன்.//
உங்களின் இந்த பிராத்தனை நிறைவேற நானும் பிராத்திக்கிறேன்...
வாங்க ஆமினா.முதல் வருகைக்கு ந்ன்றி.இவரை ஆசிரியராக பெற்றதில்,இவரது மனதுக்கு பிடித்த மாணவியாக நான் ஆனதில் எப்பொழுதும் எனக்கு மகிழ்வுண்டு.
ரத்னவேல் ஐயா கருத்துக்கும்,முகநூல் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
// ! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...
நாம் மிகவும் நேசிக்கும் எந்த ஒரு பொருளோ அல்லது உயிரோ . எப்பொழுதுமே அழகாகத்தான் தெரியும் // அழகாக சொல்லி பின்னூட்டி இருக்கின்றீர்கள் ஷங்கர்,கருத்துக்கு மிக்க நன்றி.
மிக்க மகிழ்ச்சி ரமணி சார்.சென்ற பதிவின் பின்னூட்டல் வாயிலாக உங்களின் தூண்டுகோலே இப்பதிவின் பிறப்பு.மிக்க நன்றி
அழகான ஒரு கவிதையை மாதிரி சொல்லிகிட்டே போய் நடுவில் சில சோகங்களும் ...!!
இதுப்போல எல்லாருக்கும் கிடைத்தால் அருமைதான் :-)
சோனகன் பின்னூட்டத்தையே ஒரு ஹைகூ வாக கொடுத்து இருக்கீங்க.மிக்க நன்றி.அந்த ரங்கநாதன் சாரிடம் நீங்கள் தலையில் நச் என்று குட்டு வாங்கியதுண்டா?:-)
நெடுநாள் கழித்து வந்த தேனுவுக்கு நன்றிகள்!
//பள்ளியில் பாடங்கற்று கொடுத்தவர், நோய்களை எதிர்த்துப் போராடி, வாழ்க்கையிலும் பாடம் கற்பிக்கிறார்!! நல்ல முன்மாதிரி.// சரியாக சொல்லி இருக்கீங்க ஹுசைனம்மா.கருத்துக்கு மிக்க நன்றி!
எனக்கு இப்பிடி ஒரு டீச்சர் கிடைச்சு இருந்தால் எல் கேஜியில் ஆறுவருஷம் பெயிலாகி இருந்திருக்க மாட்டேனே அவ்வ்வ்வ்வ்
//உங்களின் இந்த பிராத்தனை நிறைவேற நானும் பிராத்திக்கிறேன்...// மிக்க மகிழ்ச்சி.நன்றி சகோதரர் இஸ்மத்.நீண்ட நாட்களாக உங்கள் வலைப்பூவில் புதிய பகிர்தலை காணவில்லையே?
//அழகான ஒரு கவிதையை மாதிரி சொல்லிகிட்டே போய் நடுவில் சில சோகங்களும் ...!!
// சோகம் இல்லாமல் வாழ்க்கை இல்லையே ஜெய்லானி.கருத்துக்கு நன்றி!
//ஜெய்லானி said...
எனக்கு இப்பிடி ஒரு டீச்சர் கிடைச்சு இருந்தால் எல் கேஜியில் ஆறுவருஷம் பெயிலாகி இருந்திருக்க மாட்டேனே அவ்வ்வ்வ்வ்//
எல் கே ஜி யில் ஆறுவருடம் பெயிலா இறைவா!!!!!!!!!!!
//எல் கே ஜி யில் ஆறுவருடம் பெயிலா இறைவா!!!!!!!!!!! ///
நல்லவேளை யூ கேஜியில எட்டுவருஷமுன்னு சொல்லலாமுன்னு இருந்தேன் தப்பிச்சேன் ஹா..ஹா.. :-)
அபிதா டீச்சர் நீண்ட நாள் வாழ இறைவனை வேண்டுகிறோம்.
ஆசிரியர்தினத்துக்காக நல்ல ஒரு பதிவு.
ஆபிதா டீச்சர் அருமையான பகிர்வு.வாழ்த்துக்கள்.நானும் 2 வருடங்கள் ஆசிரியையாக அபுதாபியில் பணியாற்றிய காலங்கள் மனதில் வந்து செல்கிறது.
அபிதாபி ரீச்சர்..... படிக்கப் படிக்க ஆசையாக இருந்துது, முடிவில வருத்தம் என்றாலும் நல்ல விதியோடு இருக்கிறா. இன்னும் நீண்ட காலம் நலமோடு வாழ நானும் இறைவனை வேண்டுகிறேன்.
அருமையான ஆசிரியர் தின நினைவலைகள் .அபிதா டீச்சருக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
அழகான பகிர்வு ஸாதிகா.
உங்கள் ஆசிரியை நீண்ட நாட்கள் நலமாக இருக்க என் பிரார்த்தனைகள்.
நல்ல ஆர்வம ப்டித்து வந்தேன்
ஆனால் இடையில் புற்று நோய் என்றதும் இப்படி ஒரு அருமையான டீச்சருக்கா?
கடந்த 5 வருடமாகா மாதம் ஒரு புற்றுநோயாஅளிகளின் எண்ணிகக் அதிகரித்து கொண்டே போகுது
அந்த நோயை எதிர்கொண்டு போராடியும் இருக்கிறார்கள்
அவர்களின் தன்னம்பிக்கை தெரியுது,
ஆபிதா டீச்சர் நலமோடு வாழ என் ஆசிகள்
நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்...இது அனைவர்க்கும் கிடைக்காதவொரு வரப்பிரசாதம்....
எங்களுக்கு அப்படி அன்புடன் கண்டிக்கும் ஆசிரியர் கிடைக்கவே இல்லை...
அப்படிக் கிடைத்த 2 ஆசிரியர்களுடன் நீண்ட நாட்கள் இருக்கக் கிடைக்கவில்லை
அஸ்ஸலாமு அலைக்கும்
ஆசிரியர் தின பதிவுக்கு என் வாழ்த்துக்கள்.குருவை மறக்காம பதிவு போட்டு உள்ளீர்கள்.பாராட்டுக்கள்.
ஆபிதா டீச்சர் இப்போது எங்களுக்கும் பிரியமானவராய்..
அஸ்ஸலாமு அலைக்கும்,
நல்ல ஆசிரியருக்கு, நல்ல மாணவரின் நன்றியறிவிப்பு,
நன்றாக இருந்தது,
நன்று
நன்றியுடன் ( எனது ஆசிரியர்க்கு )
நாசர்
//நல்லவேளை யூ கேஜியில எட்டுவருஷமுன்னு சொல்லலாமுன்னு இருந்தேன் தப்பிச்சேன் ஹா..ஹா.. :-)// தப்பிச்சுட்டீங்க ஜெய்லானி.கருத்துக்கு நன்றி.
மிக்க நன்றி கருத்துக்கும் வருகைக்கும் கும்மாச்சி.
வாங்க லக்ஷ்மியம்மா.கருத்துக்கு நன்றிங்கம்மா.
ஆசியா,ஓ..ந்நிங்களும் மாஜி ஆசிரியைஆச்சே.உங்களுக்கும் நான் ஸ்பெஷலாக வாழ்த்து சொல்லி இருக்கணும்,.
அதீஸ்..நல்ல பிலையா சீரியஸ் பின்னூட்டம்.ஒகே தேங்க்ஸ்,
வாங்க இமா டீச்சர்.உங்களுக்கும் நேற்றே வாழ்த்துக்கள் சொல்லி இருக்கணும்.மிக்க நன்றி இமா.
ஆம் ஜலி,ஆபிதா டீச்சர் உண்மையில் மிக்க தன்னம்பிக்கை கொண்டவர் என்பது அவரது கம்பீரத்திலேயே தெரியும்.கருத்துக்கு நன்றி ஜலி.
//அப்படிக் கிடைத்த 2 ஆசிரியர்களுடன் நீண்ட நாட்கள் இருக்கக் கிடைக்கவில்லை// ஏன் என்ன ஆச்சு நிஹாஷா.இப்பல்லாம் பதி எழுதவதே இல்லையே ?ஏன்?
உங்கள் ஆசிரியைக்கு என் வணக்கங்களும் ஆரோக்கிய வாழ்வுக்கு பிரார்த்தனைகளும்.
நல்ல பகிர்வு ஸாதிகா.
நீங்கள் எல்லோரும் என்ன சொன்னிர்களோ அதைத்தான் நானும் சொல்கிறேன்.
வாழ்த்துக்களும் பிறார்த்தனைகளும்.
பெயர் மாற்றப்பட்ட ரங்கனாதன் வாத்தியார் யார் என்பது இன்னும் பிடிபடவில்லை. உன்மையான் பெயர சொல்லிவ்டுங்கள்.
//ஸாதிகா said...
அதீஸ்..நல்ல பிலையா சீரியஸ் பின்னூட்டம்.ஒகே தேங்க்ஸ்//
ஸாதிகா அக்கா, நான் ரொம்ப நல்ல பொண்ணு, 6 வயசிலிருந்தே:))...
எல்லோருடைய வாழ்க்கையிலும் இப்படி நினைச்சுப் பார்த்து சந்தோசப்பட ஒரு ஆபிதா டீச்சர் இருக்கறாங்க ..
உங்கள் டீச்சருக்கு வணக்கங்களும், அவரது நல்வாழ்விற்காக பிரார்த்தனைகளும்.
இதுதான் ஒரு ஆசிரியரின் வெற்றி. நல்லாசிரியர்கள் என்றைக்கும் இறந்துபோவதில்லை. அவர்கள் தாயாக தந்தையாக தனயனாக தமக்கையாக நட்பாக ஒவ்வொரு மாணவரிடததும் வாழ்ந்துகொண்டேயிருக்கிறர்ர்கள். ஸாதிகாவின் பதிவை ஆபிதா டீச்சர் பார்த்திருக்க வாய்ப்பிருக்காது. ஆனாலும் நல்ல மாணவியை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் அதன்மூலம் நல்ல ஆசிரியராகப் பதிவைப் படிக்கும் எல்லோரின் வாழ்த்துக்களையும் பெறுகிறார்கள். ஒரு பேராசிரியராக இருந்து இதை நெகிழ்வோடு பகிர்ந்து வாழ்த்துகிறேன் ஆபிதா டீச்சரை.
ராமலக்ஷ்மி நன்றி.
நன்றி அந்நியன்.
சோனகன்,
//பெயர் மாற்றப்பட்ட ரங்கனாதன் வாத்தியார் யார் என்பது இன்னும் பிடிபடவில்லை. உன்மையான் பெயர சொல்லிவ்டுங்கள்.//
இப்பொழுது அவர் எங்கிருக்கின்றார் என்று தெரியாது.அவர் இப்பதிவை படிக்க மாட்டார் என்ற தரியத்தில் உண்மையான பெயரை சொல்லுகின்றேன்.சிகப்பு நிற,பெரிய கண்களுடன் கற்பனை செய்தால் அந்த வாத்தியார் ஞாபகத்திற்கு வருமே!அதுதான் பஞ்சவர்ணம் வாத்தியார்.இப்போழுது ஞாபகம் வருகின்றதா?
//ஸாதிகா அக்கா, நான் ரொம்ப நல்ல பொண்ணு, 6 வயசிலிருந்தே:))...// அதிஸ் அப்போ ஆறு வயசுக்கு முன்னாடி..?????????????
///அமைதிச்சாரல் said...
எல்லோருடைய வாழ்க்கையிலும் இப்படி நினைச்சுப் பார்த்து சந்தோசப்பட ஒரு ஆபிதா டீச்சர் இருக்கறாங்க ..
உங்கள் டீச்சருக்கு வணக்கங்களும், அவரது நல்வாழ்விற்காக பிரார்த்தனைகளும்.///
உண்மைதான் அமைதிச்சாரல்.கருத்திட்டமைக்கு நன்றி.
//ஒரு பேராசிரியராக இருந்து இதை நெகிழ்வோடு பகிர்ந்து வாழ்த்துகிறேன் ஆபிதா டீச்சரை.///
மிக்க நன்றி பேராசிரியை ஹரிணி.தங்கள் பின்னூட்ட வரிகளில் நெகிழ்ந்து விட்டேன்.
அன்பு வணக்கங்கள் ஸாதிகா…
உங்கள் தளம் வந்து பார்த்தேன்பா…
முதல் பகிர்வே மனதை நிறைத்த பகிர்வுப்பா….
ஆசிரியர் என்றாலே அந்த காலத்தில் கடூஸாக தான் இருப்பாங்க என்ற சட்டத்தையே தவிடு பொடியாக்கிய அன்பு தேவதை ஆபிதா டீச்சர் ஆசிரியருக்கே உரிய அத்தனை பண்புகளும் குணநலன்களும் பெற்றிருப்பதால் தான் பிள்ளைகளுக்கு கல்வி கொடுப்பதோடு நிறுத்தாமல் தாயாய் இன்றும் எல்லோரும் நினைவில் வைத்துக்கொள்ளும் தெய்வமாய் ஆபிதா டீச்சர் இருந்திருக்காங்கன்னு உங்க பகிர்வில் இருந்து அறிய முடிகிறதுப்பா..
டீச்சரின் மேல் எத்தனை அன்பு உங்களுக்கும் இருக்கு என்பதை அவர்களை இப்பவும் நீங்க மறக்காம நினைவுக்கொண்டு எங்களுடன் பகிர்ந்ததில் இருந்தே தெரிகிறதுப்பா…
ஆபிதா டீச்சரின் நம்பிக்கை தளராமல் இருந்ததால் தான் கர்ப்பப்பை வாய்ப்புற்று நோய் வந்தபோதும் நம்பிக்கை இழக்காமல் போராடி உங்களைப்போன்றோரின் பிரார்த்தனைகளும் தான் இன்னொருமுறை மார்பகப்புற்று நோய் வந்தபோதும் மீண்டும் போராட முடிந்து அதில் இருந்து மீளவும் முடிந்ததே….
ரிடையர்ன்மெண்ட் ஆனப்பின் அவர் உங்க யாரையும் மறக்கலை என்பதை நீங்க ஊருக்கு போனால் அவர்களை போய் பார்க்கலன்னாலும் அவங்க உங்களை பார்க்க வருவதே உங்களுக்கு அவர்களின் ஆசி என்றும் உங்களுக்கு இருப்பதை உணரமுடிகிறதுப்பா….
மிக அருமையான ஒரு நல்ல பகிர்வை படிக்கும் வாயிலாக ஒரு நல்ல ஆத்மாவை அறியவும்முடிந்தது இந்த அன்பான ஸாதிகாவின் பதிவால்…
என் அன்பு பிரார்த்தனைகள் ஆபிதா டீச்சரின் நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும்… இனி நீங்க ஊருக்கு போனால் கண்டிப்பா என் அன்பு வணக்கங்களை மறக்காம அவங்க கிட்ட சொல்லனும்… சொல்லிட்டு என்னிடமும் சொல்ல்லனும் சரியாப்பா?
அன்பு நன்றிகள் ஸாதிகா மனம் நெகிழவைத்த பகிர்வு தந்தமைக்கு…
அனைத்து ஆசிரியர் ஆசிரியைகளுக்கு என் மனமார்ந்த அன்பு வாழ்த்துகள்...
நெகிழ்வான பகிர்வு.. ரொம்ப அருமை..
ரொம்ப தாமதமான பின்னூட்டத்திற்க்கு மன்னிக்கவும்..
Post a Comment