July 14, 2011

கோபத்திற்கு குட்பை



மனிதனுக்கு இயற்கை தந்த பனிஷ்மெண்ட் என்று கோபத்தை சொன்னால் மிகை ஆகாது.ஆறுவது சினம் என்றார் அவ்வைப்பாட்டி.
கோபம் உள்ள இடத்தில் குணம் இருக்கும்,கோபம் சண்டாளம்,அடிக்கிற கைதான் அணைக்கும்,ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று ஏகப்பட்ட பழமொழிகள் சினத்தை குறிப்பிட்டு சொல்லப்பட்டவைகள்.
மனித வாழ்க்கை சீராக சுபமாக செல்லவேண்டுமாயின் கோபத்தைக்குறைப்பதுதான் கைகண்ட மருந்து.

கோபத்தினால் நரம்புகள் இறுகும்.தலைவலி,இரத்த அழுத்தம்,உடல் வலிமை இழத்தல்,நரம்புத்தளர்ச்சி,மூச்சிரைத்தல் இப்படி பற்பல உடல் உபாதைகளை வலிய வரவழைத்துகொள்ள
வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோம்.

கீழ்கண்ட காரணிகளால் கோப உணர்வுக்கு மனிதன் தள்ளப்படுகின்றான்.
1.இயலாமை
2.நினைத்ததை சாதிக்க இயலாமல் போகும் பொழுது
3.நிறைவேற்ற இயலாமல் போகும் காரியங்களினால்
4.பிறரைபற்றியே அதிகம் சிந்தித்தல்
5.பிறர் நம்மை மதிக்காத சந்தர்ப்பத்தில்
6.பிறர் நம்மை பொருட்படுத்தாத சூழ்நிலையின் பொழுது
6.சோம்பேறித்தனம் மிகும் பொழுது
7.பொழுத்து போகாமல் இருக்கும் பொழுது
8.ஏமாற்றங்களை சந்திக்கும் பொழுது
9.உடல் நலம் குன்றும் பொழுது
10.பொருளாதார சிக்கல் ஏற்படும் பொழுது
11.விவாதத்தின் பொழுது.
12.நம்முடைய கருத்துக்களை பிறர் ஏற்றுக்கொள்ளாத சூழ்நிலையின் பொழுது
13.பசியின் பொழுது

இப்படி பற்பல,வெவ்வேறு காரணங்களால் மனித மனம் இந்த கோப அரக்கனை இரத்தினம் கம்பளம் விரித்து வரவேற்கும் நிர்பந்தத்திற்குத்தள்ளப்படுகின்றது.
கோபம் கொள்ளும் பொழுது மனித மனங்களில், உடல்களிலும் ஏற்படும் மாற்றங்கள் எண்ணிலடங்காது.

சரி.இந்த கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது?
முதலில் கண்ணாடி முன் உங்கள் கோபமுகத்தை நோக்குங்கள்.
ச்சீ ...என்று வெறுத்து விடுவீர்கள்.எதனை ?கோபத்தைத்தான்.

கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு குளோஸ் சாட்டில் ஒரு போட்டோவும்,சிரித்த முகமாக வைத்துக்கொண்டு குளோஸ் சாட்டில்
மற்றொரு போட்டோவும்
எடுத்து படுக்கை அறை பக்கவாட்டு மேஜை மீது வைத்துக்கொண்டால் கோபம் கொள்வதில் இருந்து நம்மை மட்டுப்படுத்தலாம்.

கோபம் வந்தால் உடனே அந்த இடத்தை விட்டும் அகன்று சென்று விடுங்கள்.குளிர்ந்த நீரில் உடலை நனைத்தாலும் கண்டிப்பாக கோபம் மட்டுப்படும்.

மவுனத்தை கடைபிடியுங்கள்.ஈகோவை கைவிட்டு சுமுகநிலைக்கு தயாராகுங்கள்.

குழம்பும் மனதினை கட்டுப்படுத்தி ஒருமுகப்படுத்தக்கற்றுக்கொள்ளுங்கள்.
டேக் இட் ஈஸி பாலிசி மிகவும் நன்று.

இழந்த கவுரவத்தைப்பற்றி நினைத்துகொண்டே இராமல் மனதினை நிர்மூலப்படுத்துங்கள்.

இறைவன் நமக்கு அருளிய அருட்கொடைகளை எண்ணி உவகை கொள்ளுங்கள்.
எப்பொழுதும் சிரித்த முகத்துடன்,ஃபிரஷ் ஆக வளைய வரவேண்டும் என்பதில் தீர்மானமாக இருங்கள்.

கோபம் நம்மை விழுங்கி ஏப்பம் விட்டு கபளீகரம் செய்துவிடும் முன் நீங்கள் கோபத்தை மென்று ,விழுங்கி கபளீகரம் செய்து விடுங்கள்.

கோபத்துக்கு ஒரு பெரிய குட்பை சொல்லி விட்டு அப்புறம் பாருங்கள்.உங்கள் நட்பு வட்டமும்,உறவு வட்டமும் எப்படி பரந்து விரிந்து உங்களை பரவசப்படுத்துமென்பதை.















45 comments:

நட்புடன் ஜமால் said...

அஸ்ஸலாமு அலைக்கும்

மிக அழகா சொல்லியிருக்கீங்க ...

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.

இமா க்றிஸ் said...

யோசிக்கிற மாதிரி எல்லாம் சொல்லிட்டு... 'பூனை ஸ்பெஷல்' என்று வேற சொல்லி இருக்கிறீங்க. ;))

Yaathoramani.blogspot.com said...

இன்றைய சூழலில் அனைவருக்கும் தேவையான பதிவு
மிக அழகாகவும் சொல்லிப் போகிறீர்கள்
கோபத்திற்கு குட்-பை சொல்பவன்
உண்மையில் தீமைக்கும் கஷ்டத்திற்கும்
குட்-பை சொல்கிறான் என்றால் மிகை ஆகாது
பயனுள்ள தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

athira said...

ஆஆஆஆஆஆஆஆ... ஸாதிகா அக்கா... எனக்குத்தான் இண்டைக்கு வடையோ? கோபிக்காமல்.. புதினா சட்னியும் சேர்த்துத் தாங்கோ.....:)).. இதோ வாறன் நில்லுங்கோ...

athira said...

நிட்சயம் எல்லோருக்கும் அடிக்கடி நியாஆஆஆஆஆஆஆ பகப்படுத்த வேண்டிய ஒரு பதிவு.... எப்பூடி இப்பூடியெல்லாம் யோசிக்கிறீங்க ஸாதிகா அக்கா? உங்களுக்குக் கோபம் வருமோ? அவ்வ்வ்வ்வ்வ்:))

athira said...

//முதலில் கண்ணாடி முன் உங்கள் கோபமுகத்தை நோக்குங்கள்.
ச்சீ ...என்று வெறுத்து விடுவீர்கள்//

கடவுளே!!!!! ஆராவது சுட்டாறிய தண்ணி தெளியுங்கோஓஓஓஒ....

///.எதனை ?கோபத்தைத்தான்.//

ஓ... இதையா சொன்னீங்க?:)))).

சிலர் சொல்கிறார்களே ஸாதிகா அக்கா... “நீ கோபத்திலும் அழகாக இருக்கிறாய் “ என்று அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))

athira said...

//ஸாதிகா said... 61

athira said...
ஆ..ஸாதிகா அக்கா, குலாப் ஜாமூன் போலவே ஒரு பதிவு போட்டு பல அறிவுக்கண்களைத் திறந்திட்டீங்க.

இதேபோல... கோபக்காரருக்குமாகவும் ஒரு பதிவு போடுங்க, கோபம் வந்தால் எப்பூடிக் கன்ன்ன்ன்ன்ன்ன்ன்றோல் பண்ணலாம் என.... இப்போதைக்கு மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

February 22, 2011 5:10 PM//

ஆஆஆஆஆஆ.... ஸாதிகா அக்கா... இதை அப்பவே கேட்டுவிட்டு நான் மறந்தே போனன்.... :))..

உஸ்ஸ்ஸ்ஸ் இனியும் ஆருக்காவது கோபம் வருமோ?:)), ஆராவது கோபிப்பதைக் கண்டால் எனக்குச் சொல்லுங்கோ ஸாதிகா அக்கா.. என் கறுப்புப் பூனைப் படையை அனுப்பி வைக்கிறேன்:)))))).... ஆ.... பூ.......ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எ......ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))).

MANO நாஞ்சில் மனோ said...

கோபத்திற்கு காரணமும் பரிகாரமும் சூப்பர்.....!!!

Menaga Sathia said...

அருமையான பதிவு,அழகா சொல்லிருக்கீங்க...

சிநேகிதன் அக்பர் said...

அழகான பகிர்வு.

vanathy said...

அருமையான பதிவு.

Jayadev Das said...

\\இறைவன் நமக்கு அருளிய அருட்கொடைகளை எண்ணி உவகை கொள்ளுங்கள்.\\ அருமை!!

\\எப்பொழுதும் சிரித்த முகத்துடன்\\நம்மை புன்னகை மன்னன் [வேறொன்னுமில்லை இளிச்சவாயன் ..ஹி..ஹி..ஹி...] என்று நினைத்துவிடுவார்களே!

\\கோபம் நம்மை விழுங்கி ஏப்பம் விட்டு கபளீகரம் செய்துவிடும் முன் நீங்கள் கோபத்தை மென்று ,விழுங்கி கபளீகரம் செய்து விடுங்கள்.\\ கோபத்தை இந்த மாதிரி விழுங்குவது, ஏப்பம் விடுவது, காலவாக்கில் மனோ வியாதியில் கொண்டு போய் விடும். நியாயமான கோபம் வந்தால் அதை எல்லை மீறாமல் வெளிப்படுத்தி விட்டால் நலம். [நமக்கு].

எம் அப்துல் காதர் said...

எனக்கு கோபம் கோபமா வருது... கோபத்தை இவ்வளவு அழகா சொல்லி இருக்கிங்களே என்று!! :-))

ஸாதிகா said...

வ அலைக்கும் வஸ்ஸலாம் தம்பி ஜமால்.ரொம்ப நாட்கள் கழித்து வந்து இருக்கின்றீர்கள்.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ரத்னவேல் ஐயா.

ஸாதிகா said...

..ம்ம்..இமா..பதிவெல்லாம் போட்ட பிறகுதான் நம் பூஸ் சொன்னது ஞாபகம் வந்தது.கருத்துக்கு நன்றி இமா.

ஸாதிகா said...

ரமணி சார் தங்கள் தொடர் கருத்துக்களுக்கு நன்றி

ஸாதிகா said...

ஐயோ..வடை போச்சே அதீஸ்.வடை கிடைத்து இருந்தால் புதினா சட்னி என்ன குங்குமப்பூ சட்னியே செய்து தந்திருப்பேனாக்கும்.

//ப்பூடி இப்பூடியெல்லாம் யோசிக்கிறீங்க ஸாதிகா அக்கா? உங்களுக்குக் கோபம் வருமோ? // பின்னே பூஸ்க்கு அக்காவாச்சே நானு.கோபம் வருமான்னு கேட்டுட்டீங்க.ஒரு காலத்தில் அதிகம் அதிகம் வந்ததுதான்.இப்ப பக்குவப்பட்டாச்சு.
கருத்துக்கு நன்றி அதீஸ்

ஸாதிகா said...

அதீஸ் கருப்பு பூனைப்படை கூட உண்டா?பலே ஆள்தான் நீங்க.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி மேனகா

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி அக்பர்.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி வானதி.

ஸாதிகா said...

கோபத்தைப்பற்றிய தங்களின் கருத்துக்களையும் பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்துள்ளீர்கள் ஜெய தேவ் தாஸ்.தங்கள் கருத்துக்களுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

//MANO நாஞ்சில் மனோ said...

கோபத்திற்கு காரணமும் பரிகாரமும் சூப்பர்.....!// கருத்திட்டமைக்கு மிக்க நன்றி மனோ சார்.

அந்நியன் 2 said...

பயனுள்ள தரமான பதிவு.

ஸாதிகா said...

//எனக்கு கோபம் கோபமா வருது... கோபத்தை இவ்வளவு அழகா சொல்லி இருக்கிங்களே என்று!! :-))// இந்த வரிகளைபடிக்கையில் எனக்கு சிரிப்பு சிரிப்பாக வருது தம்பி அப்துல்காதர்,கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி அந்நியன்.

Asiya Omar said...

nalama thozhi? nalla pakirvu.neramillai aathalaal surukkamaana pinnuuttam.

ஸாதிகா said...

கடுமையான வேளைப்பளுவுக்கும் இடையில் வந்து பின்னூட்டியதற்கு நன்றி தோழி ஆசியா.இந்தியா வந்தாச்சா?

ஜெய்லானி said...

இருக்கிற கோபத்தை வெளியே காட்ட ஒரு ஐடியா குடுங்களேன் பிளீஸ் :-))

ஸாதிகா said...

// ஜெய்லானி said...
இருக்கிற கோபத்தை வெளியே காட்ட ஒரு ஐடியா குடுங்களேன் பிளீஸ் :-))// அப்போ உங்களுக்கு கோபமே வராதா ஜெய்லானி?very good.keep it up.

மனோ சாமிநாதன் said...

அர்த்தமுள்ள, இன்றைய வாழ்க்கைக்குத் தேவையான பதிவு ஸாதிகா! பாராட்டுக்கள்! கோபம் வராமலிருக்க சொன்ன யோசனைகளும் நன்றாக இருந்தன. உணர்வுகளைக் கட்டுப்படுத்த ஒரு பாட்டில் தண்ணீர் கடகடவென்று குடிப்பது ஒரு நல்ல தீர்வு!

Aashiq Ahamed said...

சகோதரி,

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு ....

அருமையான ஆக்கம்....ஜசாக்கல்லாஹு கைரன்...

குர்ஆன் கூறுகின்றது, "இறைவன் பொறுமையாளர்களுடன்" இருக்கிறானென்று...நான் அடிக்கடி நினைவுபடுத்தி கொள்ளும் வசனம் அது. உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தால் என்னை சாந்தப்படுத்தும் மருந்து அது.

அதுபோலவே நபிமொழிகளும்...கோபம் குறித்து மிக அற்புதமான விசயங்களை சொல்லிருக்கின்றார்கள் இறுதித்தூதர் (ஸல்) அவர்கள்...

உதாரணத்துக்கு சில,

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மல்யுத்தத்தில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன், மாறாக கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்மையான வலிமை வாய்ந்தவன் ஆவான்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “கோபம் ஷைத்தானியப் பாதிப்பின் விளைவாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கின்றான். நெருப்பு, நீரால் மட்டுமே அணைகின்றது. எனவே, உங்களில் ஒருவருக்கு கோபம் வந்துவிட்டால் அவர் ஒளு செய்து கொள்ளட்டும்.
அறிவிப்பாளர் : அத்தியா அஸ் ஸஅதி (ரலி)
நூல்:அபூதாவூத்

சரி.இந்த கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது?

வெரி சிம்பிள். இறைவனை அஞ்சுவோர்/அவனுடைய தூதர் மீது மிகுந்த அன்பு வைத்திருப்போர் பொறுமையை பேணிக்கொள்ளுட்டும். மறுமையில் சீரும் சிறப்புமாக இருக்க விரும்புவோர் இறைவன் சொல்வதை கேட்டு நடக்கட்டும்.

ஆக்கப்பூர்வமான பதிவிற்கு மற்றொருமுறை ஜசாக்கல்லாஹு க்ஹைர்....

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

//ஸாதிகா said...

ஐயோ..வடை போச்சே அதீஸ்.வடை கிடைத்து இருந்தால் புதினா சட்னி என்ன குங்குமப்பூ சட்னியே செய்து தந்திருப்பேனாக்கும்.///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... இல்லை இல்ல எனக்குக் கோபம் வரேல்லை... நான் சிரிச்சுக்கொண்டுதான் கர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்றன்:)).

*) கோபம் முதற் கட்டத்தில் வென்றதுபோல் தெரிந்தால், நிரந்தரமாகத் தோல்வி அடையப்போகிறது என்று பொருள்.

*)சீறிச் சினப்பதற்கு 60 தசைகள் இயங்க வேண்டும், ஆனால் சிரிப்பதற்கு 13 தசைகள்தான் இயங்க வேண்டும், அப்போ ஏன் நாம் கோபித்து சக்தியை வீணாக்க வேண்டும்.

*)எது நடந்திடக்கூடாது என்பதற்காக, கோபப்பட்டு நிதானம் இழக்கிறீர்களோ, நீங்கள் கோபப்பட்ட காரணத்திற்காக அது நடந்தே விடுகிறது.

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

//ஜெய்லானி said...

இருக்கிற கோபத்தை வெளியே காட்ட ஒரு ஐடியா குடுங்களேன் பிளீஸ் :-))
///

அதுக்கு முதல்ல தண்ணியை விட்டு வெளில வரச் சொல்லுங்கோ ஸாதிகா அக்கா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). கோபிக்கப்படா எனக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிற:) என் வாழ்க்கையில, இப்பூடிப் பதிவுகள் போட்டு கோபிக்கப்பண்ணிடுவினம்போல இருக்கே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))). ஒரு செம்பு ஐஸ் வோட்டர் பிளீஸ்ஸ்ஸ்ஸ்...

zumaras said...

ஸலாம்
பயனுள்ள பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி

R.Gopi said...

சரியாக சொன்னீர்கள் ஸாதிகா..

கோபமே அனைத்து நல்ல விஷயங்களுக்கும் முதல் எதிரி...

உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதில் கூட முதல் பங்கு இந்த கோபத்திற்கு தான்..

கோபம் குறைப்பதை விட, கோபத்தை அறவே விட்டொழித்தால், ஒரு அழகான அன்பு சாம்ராஜ்யத்தையே நாம் நிறுவிடலாம்...

ஸாதிகா said...

//உணர்வுகளைக் கட்டுப்படுத்த ஒரு பாட்டில் தண்ணீர் கடகடவென்று குடிப்பது ஒரு நல்ல தீர்வு!
// இதுவு நான் அறிந்திருக்கிறேன் மனோ அக்கா.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

//
*) கோபம் முதற் கட்டத்தில் வென்றதுபோல் தெரிந்தால், நிரந்தரமாகத் தோல்வி அடையப்போகிறது என்று பொருள்.

*)சீறிச் சினப்பதற்கு 60 தசைகள் இயங்க வேண்டும், ஆனால் சிரிப்பதற்கு 13 தசைகள்தான் இயங்க வேண்டும், அப்போ ஏன் நாம் கோபித்து சக்தியை வீணாக்க வேண்டும்.

*)எது நடந்திடக்கூடாது என்பதற்காக, கோபப்பட்டு நிதானம் இழக்கிறீர்களோ, நீங்கள் கோபப்பட்ட காரணத்திற்காக அது நடந்தே விடுகிறது.// யப்போய் அதீஸ் பொன்மொழி மழையாய் பொழிகின்றதே.கிட்னியை நல்லா யூஸ் பண்ணுறீங்க பூஸ்

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி ஜுமாராஸ்

ஸாதிகா said...

சகோ கோபி நீங்களும் கருத்துரை மூல அழகிய கருத்துக்களை பகிர்ந்துள்ளீர்கள்.பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

வ அலைக்கும் வஸ்ஸலாம் ரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹு சகோ ஆஷிக்.குர் ஆன் வசத்துடன் ஹதீஸையும் எடுத்தியம்பி அழகியதொரு விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க மகிழ்ச்சி சகோ ஆஷிக்.நான் பல வருடங்களுக்கு முன் இது குறித்து ஜமா அத்துல் உலமா மாத இதழில் ஒரு கட்டுரை எழுதி இருந்தேன்.தங்கள் பார்வைக்காக விரைவில் பதிவிடுகின்றேன்.மிக்க நன்றி.

Aashiq Ahamed said...

வ அலைக்கும் ஸலாம்,

தங்களுடைய ஊக்கத்திற்கு நன்றி...அல்ஹம்துலில்லாஹ்...

இன்ஷா அல்லாஹ்..அந்த பதிவை எதிர்ப்பார்க்கின்றேன்..

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

கோமதி அரசு said...

வலைச்சர வாரத்தில் உங்களின் கோபத்திற்கு குட்பை என்ற பதிவை பகிர்ந்து கொண்டு இருக்கிறேன்.
2ம் தேதியிலிருந்து, 8ம் தேதிவரை வலைச்சரப் பொறுப்பில் இருந்தேன்.