July 5, 2011

கொஞ்சம் செக் பண்ணிக்கோங்க..



நாற்பது வயதைத்தொடும் முன் உணவு,உடை,அத்தியாவசிய பொருட்களுக்கு செலவு செய்வதைப்போன்று மருத்துவப்பரிசோதனைக்கு செலவு செய்வதுதான் புத்திசாலித்தனம்.நாம்தான் திட காத்திரமாக,ஆரோக்கியமாக,வலிமையாக இருக்கின்றோமே நாமே கற்பனை செய்து கொண்டு உடல் நலனில் அக்கரையின்றி இருப்பது அறிவீனம். உடல் பாதிப்புகளை வெளியில் சொல்வதற்கு கூச்சம்,நமக்கெல்லாம் அப்படி எதுவும் வந்து விடாது என்றொதொரு குருட்டு நம்பிக்கை,எதற்கு தேவை இல்லாமல் செலவு செய்து கொண்டு என்றதொரு அலட்சிய மனோபாவம் இவை அனைத்தையும் களைத்தெறியும் குணம் விழிப்புணர்வு நம்மிடம் மிக குறைவாகவே உள்ளது.

எனக்கு தெரிந்த ஒருவர் கை மிகவும் வலியாக உள்ளது என்று சாதரணமாக வலி நிவாரண தைலத்தை பூசிக்கொண்டு வலியைக்கட்டுப்படுத்திக்கொண்டே வந்தவர்,பிரிதொரு நாளில் மிகவும் தாங்க இயலாமல் மருத்துவரிடம் சென்ற பொழுது அவருக்கு இருந்த ஹை பிரஷரைப்பார்த்து டாக்டரே அதிர்ந்து விட்டார்.உடனடியாக ஈ சி ஜி எடுத்து அது நார்மல் என்றான பிறகுதான் பிரஷருக்குண்டான மாத்திரைகளை ரெகுலராக சாப்பிட பரிந்துரைத்தார் மருத்துவர்.இப்படியே அலட்சியமாக இன்னும் சில நாட்கள் இருந்திருந்தால் விபரீதமாகி இருக்கும் என்றார்.

நாற்பது வயதைத்தொடும் முன் இரத்தத்தில் சர்க்கரை அளவு,இரத்த அழுத்தம்,புற்று நோய் பரிசோதனை,கொலஸ்ட்ரால்,தைராய்டு போன்றமுக்கியாமான நோய்களுக்குண்டான பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லதொரு விழிப்புணர்வு.தனியார் மருத்துவ மனைகளில் முழு உடல் பரிசோதனை செய்கின்றார்கள்.தவிர அரசு மருத்துவ மனைகளில் குறைந்த கட்டணத்தில் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.

விழிப்புணர்வு மிக்க இன்னொரு தெரிந்த பெண்ணொருவர் பிரபல ஸ்கேன் செண்டரில் அக்டோபர் மாதம் நடந்த மார்பகபுற்று நோயை சலுகை கட்டணத்தில் பரிசோதிக்கின்றார்கள் என்பதை விளம்பரம் வாயிலாக அறிந்து விளையாட்டைப்போல பரிசோதனை செய்து கொள்ளப்போனார்.பரிசோதனையின் முடிவில் வந்த ரிப்போர்டை பார்த்து மயக்கம் வராத குறை.மார்பக புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் இருந்திருக்கின்றார்.எனக்கு எந்த பிரச்சினையும் இல்லையே?விளையாட்டாகத்தானே பரிசோதனைக்கு வந்தேன் என்று தவித்துப்போனார்.ஆரம்ப கட்டம் ஆதலால் மிக குறுகிய நாளில்,சுலபமான சிகிச்சைகள் மூல தற்பொழுது நோயில் இருந்து முழுமையாக மீண்டு விட்டார்.சீக்கிரம் கண்டறியப்பட்டதால் பெரும் விபரீதத்தில் இருந்து தப்பி விட்டேன் என்று இப்பொழுதும் சிலாகித்து கூறுவார்.

வரும் முன் காப்பது என்பது பல விபரீதங்களில் இருந்தும்,அளவுக்கதிகமான செலவுகளில் இருந்தும் தப்பிக்கலாம்.30 வயதைத்தாண்டிய பெண்களுக்கு ஆண்டு தோறும் புதியதாக நாண்கு லட்சம் பேருக்கு மார்பக,கர்பப்பை புற்று நோய்க்கு ஆளாகுகின்றனர்.இது இந்தியாவில் மட்டுமே.இப்புற்றுநோய்களுக்கான பரிசோதனையை முப்பதுவயதைத்தாண்டிய ஒவ்வொரு பெண்ணும் ஒருதடவை பார்ப்பது மட்டுமின்றி மூன்று ஆண்டுகளுக்கொரு முறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.வயது ஏற ஏற பரிசோதனை செய்யும் காலகட்டத்தின் இடைவெளி குறைய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

விழிப்புணர்வுடன் வருமுன் காத்து பொருள்,சந்தோஷம்,காலம் போன்றவற்றின் நஷ்டங்களில் இருந்து தவிர்த்து எல்லோரும் நலம் வாழ நல் வாழ்த்துக்கள்

30 comments:

Menaga Sathia said...

வருமுன் காப்பது மிக சிறந்தது...பகிர்வுக்கு மிக்க நன்றி!!

சிநேகிதன் அக்பர் said...

நல்ல பகிர்வு

அம்பாளடியாள் said...

பயனுள்ள நல்ல தகவலைப் பகிர்ந்துகொண்டமைக்கு
மிக்க நன்றி..............

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
.
நன்றி.

Yaathoramani.blogspot.com said...

பயனுள்ள எச்சரிக்கையூட்டும் தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

பயனுள்ள பதிவு....

kvn said...

Please have a look at following video :
http://www.youtube.com/watch?v=BuUBidmSr74&feature=player_embedded

MANO நாஞ்சில் மனோ said...

ஸாதிகா'வா கொக்கா.......சூப்பரான மிக மிக முக்கியமான, கண்டிப்பாக எல்லோருக்கும் பயனுள்ள பதிவு இது....!!!

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பர்.....மிக்க நன்றி.........

பிலஹரி:) ) அதிரா said...

ஸாதிகா அக்காஆஆஆஆஆ...
இதுக்குத்தான் தலைமறைவாக இருந்து கிட்னியை யூஸ் பண்ணினனீங்களோ?:)) சூப்பர் + மிகவும் தேவையான பதிவு. ஆளைக் காணவில்லையே என யோஓஓஓஒசித்தேன்... யாரும் வருத்தம் வருமுன் யோசிக்கிறார்களில்லையே....

பிலஹரி:) ) அதிரா said...

//நாற்பது வயதைத்தொடும் முன் இரத்தத்தில் சர்க்கரை அளவு,இரத்த அழுத்தம்,புற்று நோய் பரிசோதனை,கொலஸ்ட்ரால்,தைராய்டு போன்றமுக்கியாமான நோய்களுக்குண்டான பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லதொரு விழிப்புணர்வு//

வருமுன் காப்போனாக இருப்பது நல்லதுதான்.. சிலருக்கு ஒரு பெருமை.... எனக்கு 50 வயதாகிவிட்டது ஆனா இன்னும் ஹொஸ்பிட்டல் படி மிதிக்கவில்லை எனச் சொல்லிக்கொள்வது, அது நல்ல விஷயம்தான் ஆனா இப்படியானவர்களுக்குத்தான் திடீரென மலைபோல வருத்தம் வந்து சரித்த கதைகளும் உண்டு....

எனவே செக் பண்ணுவது சாலச் சிறந்ததே....

பிலஹரி:) ) அதிரா said...

நல்ல பதிவைப்போட்ட ஸாதிகா அக்காவுக்கு ஒரு ஓ......

ஊசிக்குறிப்பு:

நீங்க செக் பண்ணிட்டீங்களோ ஸாதிகா அக்காஆஆஆஅ.... ஆஆஆஆஆஆஅங்ங்ங்ங்ங்ங்ங் மீஈஈ.. எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..

Riyas said...

நல்ல பதிவு

Kanchana Radhakrishnan said...

பகிர்வுக்கு நன்றி.

Aalif Ali said...

காத்திரமானதொரு ஆக்கம். நன்றிகள்
www.aliaalif.tk

எம் அப்துல் காதர் said...

வருமுன் காக்கணும் என்று அழகாய் சொல்லி இருக்கீங்க ஸாதிகாக்கா!!

Mahi said...

உபயோகமான பதிவு ஸாதிகாக்கா!

ஸாதிகா said...

சகோ மேனகா

சகோ அக்பர்

சகோ அம்பாளடியாள்

சகோ ரத்னவேல் சார்

சகோ ரமணி சார்

சகோ கலாநேசன்

சகோ கே வி என்

சகோ நாஞ்சில் மனோ

சகோ அதிரா

சகோ ரியாஸ்

சகோ காஞ்சனா ராதாகிருஷ்ணன்

சகோ ஆலிஃப் அலி

சகோ அப்துல்காதர்

சகோ மகி

பதிவினை படித்து அன்புடன் கருத்திட்ட உங்கள் அனைவருக்கும் என் அன்பின் நன்றிகள்.

kvn said...

Hi Sathika,

Did you have a look at the youtube link i had provided before?


The person in this video explains in very simple terms about the ROOT causes of all known diseases to mankind ranging from BP, Diabetes, Cholesterol, Thyroid, Cancer, AIDS, etc . and also explains in very simple terms on how to cure all these diseases.

There is no need for us to do unnecessary Lab tests as you have mentioned in your article.

You need not spend even a single Rupee to follow this method of treatment.

Please check the following link and if you find it useful, please do share it with all your followers:

Link :
http://www.youtube.com/watch?v=g75zxUvHbqc

regards,
kvn

கோமதி அரசு said...

வரும் முன் காக்கும் விழிப்புணர்வு கட்டுரை அருமை.

நன்றி ஸாதிகா.

அன்புடன் மலிக்கா said...

பயனுள்ள நல்ல தகவல்கள் அக்கா.

அக்கா நீங்க கொடுத்த வேலையை செய்துட்டேன்.ஆனால் நீங்கதான் வந்துபார்க்கவேயில்லை. சரி சரி நான் வந்து சொல்லயின்னுதானே பார்க்கலை.

http://niroodai.blogspot.com/2011/07/blog-post_04.html முத்தான பேட்டை..

Ahamed irshad said...

Good Share.. Useful info..

மாதேவி said...

நல்ல பகிர்வு.

Julaiha Nazir said...

அஸ்ஸலாமு அலைக்கும்.. நல்ல பகிர்விற்கு நன்றி.. ஸாதிகா லாத்தா

ஸாதிகா said...

சகோ கே வி என் யூ டியூப் லின்க் கொடுத்தமைக்கு நன்றி.

சகோ கோமதி அரசு

சகோ மலிக்கா

சகோ அஹ்மது இர்ஷாத்

சகோ மாதேவி

சகோ ஜுலைஹா வ அலைக்கும் வஸ்ஸலாம் ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்தஹு.
உங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.

பித்தனின் வாக்கு said...

enna sister eppdi irukkinga?. anaivarum nalama?

ஜெய்லானி said...

யக்காவ்வ்வ் இன்னும் 40 ஆகலையே என்ன செய்ய :-)

டாக்டர் கிட்ட வாண்டடா நாமே போய் மாட்டிகிட்ட மாதிரி ஆகிடாதா அவ்வ்வ்வ்




நல்ல பகிர்வு :-)

ஸாதிகா said...

பித்தனின் வாக்கு

ஜெய்லானி

இருவருக்கும் நன்றி.

நெல்லி. மூர்த்தி said...

” எனக்கொன்றுமில்லை” “நான் ஆரோக்கியமானவன்/ள்” என்பதில் தான் பெருமிதம் கொள்ள முனைகின்றனரே தவிர “வருமுன் காப்போம்!” எனும் சிந்தனை மிகவும் குறைவு. இச்சிந்தனைக்கு வயது வரம்பு எதுவுமில்லை. மிகச் சிலரே.. “விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்!”

Jaleela Kamal said...

மிகவும் பயனுள்ள எல்லோருக்கும் தேவையான பதிவு.