December 31, 2010

புத்தாண்டு கலாச்சாரங்கள்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

சென்னை வாசிகளின் கைபேசிகளின் மெசெஜ் இன்பாக்ஸ் முழுக்க இப்பொழுது நிறைந்து இருக்கும் மெசேஜ் 31 ஆம் தேதி இரவு ஹோட்டல்கள்,கிளப்புகள்,ரிசார்ட்டுகள் போன்றவற்றில் நடக்கும் கேளிக்கை,களியாட்டத்திற்கான விளம்பரம்.

பெரிய நட்சத்திர ஹோட்டல்களில்.பிரமாண்டமான ஏற்பாட்டை புத்தாண்டு கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்து வருகின்றன.1000 ரூபாய் முதல் 1 லட்சம் வரை இதற்காக கட்டணம் பெறப்படுகின்றது என்பது நம்மை விழி விரிய வைக்கின்றது.

இந்த காஸ்ட்லியான கேளிக்கை நிகழ்ச்சிகளில் பெரிய,சிறிய திரை உலக நடசத்திரங்கள் பங்கு பெற்று வாடிக்கையாளர்களுடன் ஆடிப்பாடி,உண்டு,அருந்தி களியாட்டம் போடுகின்றனர்.இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் திரை நட்சத்திரங்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப லட்சங்களிலும்,கோடிகளிலும் சம்பளம் நிர்ணயிக்கின்றனர்.

சமீபத்தில் வந்த செய்தி மும்பையில் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் புத்தாண்டு அன்று நடனமாட பாலிவுட் புகழ் கத்ரீனா கைஃபுக்கு 3 கோடி ரூபாய் தர முன் வந்தது.(ஆனால் மூன்று கோடி ரூபாயை ஒரே இரவில் சம்பாதித்து விடும் ஆசையை தன் மனம் நிறைவடையும் ஒரு காரியத்திற்காக சுலபமாக புறம் தள்ளி விட்டார் என்பது ஆச்சரியப்படவைத்த செய்தி.(இப்பொழுது அந்த மூன்று கோடி வேறு எந்த நட்சத்திரம் சம்பாதித்து இருப்பாரோ?)

இசை,நடனம்,மது,உணவு,விளையாட்டு,கேளிக்கைகளில் நடந்தேறும் அத்துமீறல்கள் என்று பண்பாட்டுக்கு ஒவ்வாத காரியங்கள் வருடந்தோறும் மிகை பட்டுக்கொண்டே இருகின்றது என்ற உண்மையை சமூக ஆர்வலர்கள் மிகவும் கவலையுடன் நோக்குகின்றனர்.

வரும் புத்தாண்டு நல்ல விதமாக அமைய வேண்டும்,விரும்பும் வாழ்கையை எட்ட வேண்டும் என்று எண்ணுவது மனித இயல்பு.அதனை இப்படி கலாச்சார கேட்டை ஏற்படுத்தும்,சமூகத்தில் சீர்கேட்டினை ஏற்படுத்தும் ஆர்ப்பாட்டங்களும்,அவலமும் தேவையா?

புத்தாண்டுகொண்டாட்டங்களை ஜரூராக ஏற்பாடு செய்து ஒரே இரவில் பணத்தை மூட்டை,மூட்டையாக அள்ளும் நிறுவனங்கள் தனியாக வருபவருக்கு ஒரு மாதிரிக்கட்டணம்,பெண்களுடன் வருபவருக்கு கட்டணசலுகை என்று ஆசை வலை விரித்து காலாச்சார பேரழிவுக்கு சிகப்புக்கம்பளம் விரிக்கின்றது என்பது அச்சபடவைக்கும் உண்மை.ஆண்களும்,பெண்களும் சேர்ந்து குடித்து ஆட்டம் போட்டு கேளிக்கை நடத்தி,இளையவர்களை கெடும் பாதைக்கு அழைத்து செல்லும் பப் கலாச்சாரம் நாட்டில் நடக்கும் பயங்கரவாதத்தில் ஒன்று என்றால் மிகை ஆகாது.

சில கட்சிகளும்,சமூகநல அமைப்புகளும் இத்தகைய அந்நிய கலாச்சார சீரழிவு நம் நாட்டுக்கு வேண்டாம் .அது நாளைய மன்னர்களை அழிவுப்பாதைக்கு அழைத்து செல்ல வழிகோலாகிவிடும் என்று கதறும் கதறலை நமது அரசாங்கம் வேடிக்கைப்பார்த்துகொண்டு வெறுமனே இருக்கின்றது.

தண்ணீரில் விழுந்து சாவு,பிரபல நட்சத்திர ஹோட்டலில் நீச்சல் குளம் மீது அமைக்கப்பட்ட நடனமேடை சரிந்து நீச்சல் குளத்தில் மூழ்கி சாவு என்று பத்திரிகைகளில் படித்து விட்டு “உச் “கொட்டுவதோடு சரி.


போலீஸ் சென்னையில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு வளையம் அமைத்து இருக்கின்றது.புத்தாண்டு என்றாலே பீச் ரோட்(காமராஜர் சாலை)முழுக்க ஆர்ப்பாட்டங்களும்,கொண்டாட்டங்களும் அமர்களப்படும்.இன்று நேப்பியர் பாலத்தில் இருந்து காந்திசிலை வரை வாகன போக்குவரத்தை தடை செய்து புத்தாண்டை கொண்டாட வழிவகை செய்து கொடுத்து இருக்கின்றார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் முதல் மாத முதல் நாளின் முதல் வினாடியை சந்தோஷத்துடன் கொண்டாட வேண்டும்.அப்படி ஆரம்பமானால் வருடம் முழுக்க சந்தோஷம் கிட்டும் என்று எண்ணுபவர்கள்,இத்தகைய கலாச்சார சீரழிவு நடத்தித்தான் கொண்டாட வேண்டும் என்று இல்லைதானே?

அந்நிய கலாச்சாரம் இளையவர்களை அலைகழிக்கின்றது.அத்தகைய கலாச்சார சீரழிவுக்கு காரணியாகாமல் இளையவர்கள் தம் பெற்றோர்கள் மகிழும் வண்ணம்,சமுதாயம் தலை நிமிரும் வண்ணம் நம் பண்பாட்டினையும் மறந்திடாமல் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்தி,வரும் புத்தாண்டை நல்ல விதமாக வரவேற்று நிறை வாழ்வு வாழவாழ்த்துக்கள்.

இன்னும் சற்று நேரத்தில் உதிக்கவிருக்கும் புதிய ஆண்டு என் பிரியமான இணைய நட்புக்களுக்கு எல்லாவித நலன்களையும்,வளங்களையும்,சிறப்புகளையும்,முன்னேற்றங்களையும் வாரி வழங்கிட நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!



25 comments:

சௌந்தர் said...

பழைய புத்தாண்டு கொண்டாட்டத்தை எல்லாம் நினைவு படுத்து விட்டிர்கள்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ராஜவம்சம் said...

சிறப்பானப்பதிவு வாழ்த்துக்கள்.

தூயவனின் அடிமை said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

சிநேகிதன் அக்பர் said...

புத்தாண்டு வாழ்த்துகள்!

Starjan (ஸ்டார்ஜன்) said...

* உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஸாதிகா அக்கா.

எம் அப்துல் காதர் said...

புத்தாண்டு நல் வாழ்த்துகள்
ஸாதிகாக்கா!!.

ஆயிஷா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஸாதிகா

ஹைஷ்126 said...

அருட்பேராற்றலின் கருணையினால்

தங்களும், தங்கள் குடுமபமும், சுற்றம் மற்றும் நட்பு அனைவரும்

இப் புத்தாண்டு முதல்

உடல் நலம்
நீள் ஆயுள்
நிறை செல்வம்
உயர் புகழ்
மெய் ஞானம்

பெற்று வாழ்க வளமுடன்.

Asiya Omar said...

புத்தாண்டு கொண்டாட்டம் அதனைப்பற்றிய அலசல் அருமை. பகிர்வுக்கு பாராட்டுக்கள்.அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழி.

Unknown said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ஆமினா said...

நேத்து புத்தாண்டு கொன்டாட்டங்களை டீவியில் பார்க்க அருவருப்பாகவே இருந்தது சாதிகா அக்கா......

புது வருட வினாடியை கொண்டாடுகிறோம் என்ற போர்வையில் குடித்துவிட்டு கேவலமான செயல்களை செய்யும் போது எங்கே போகிறது இந்த சமூகம் என என்ன வைக்கிறது

குறையொன்றுமில்லை. said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில்
நடக்கின்ற கலாச்சார சீர்கேடுகளை
மிகுந்த சமுதாய அக்கறையோடு
பதிவு செய்துள்ளீர்கள்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

ஜெய்லானி said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ...!!

இதை சொன்னா நீங்க பழைய தாத்தா பாட்டின்னு சொல்லிடுவாங்க ..கலாச்சாரம் அது மாதிரி மாறிகிட்டு இருக்கு
இதை தடுக்க பெற்றோர்கள் பிள்ளைக்கு தரும் பணத்தை அவர்கள் எப்படி செலவு செய்கிறார்கள்ன்னு கண்டிப்புடன் பார்தாலே போதும்

guna said...

சிறப்பானப்பதிவு

புவனேஸ்வரி ராமநாதன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Unknown said...

beautiful.Belated wishes for the happy and properous new year 2011

vanathy said...

எல்லாம் சினிமா படுத்தும் பாடு. வேறென்ன சொல்ல??
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

RAZIN ABDUL RAHMAN said...

சகோ சாதிக்கா அவர்களே.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
அன்புடன்
ரஜின்

enrenrum16 said...

//ஒவ்வொரு ஆண்டும் முதல் மாத முதல் நாளின் முதல் வினாடியை சந்தோஷத்துடன் கொண்டாட வேண்டும்.அப்படி ஆரம்பமானால் வருடம் முழுக்க சந்தோஷம் கிட்டும் என்று எண்ணுபவர்கள்,இத்தகைய கலாச்சார சீரழிவு நடத்தித்தான் கொண்டாட வேண்டும் என்று இல்லைதானே?//

கரெக்டா சொன்னீங்க அக்கா... என்னைக்குத்தான் திருந்தப் போறாங்களோ..தெரியல..

ஹுஸைனம்மா said...

ஒருகாலத்தில் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே உரியதாயிருந்த இந்த வகைக் கொண்டாட்டங்கள் இப்போ கீழ்த்தட்டு மக்களைக் கூட விட்டு வைக்கவில்லை என்பதுதான் வருத்தம்!!

டிலீப் said...

அருமையான பதிவு
நாங்க வேர்க்ல சின்ஸியர்
சொன்னா செஞ்சுடுவமில்ல

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Unknown said...

புத்தாண்டுப்பதிவு சிறந்த பதிவு

Jaleela Kamal said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

// இப்ப புத்தாண்டு , ஏதாவது விஷேஷம் என்றாலே, இது போல கேளிகைகள் கொண்டாட்டஙக்கள் தான் என்றாகிவிட்டது.
//

ஸாதிகா said...

சகோ.சௌந்தர்

சகோ.ராஜவம்சம்

சகோ.இளம் தூயவன்

சகோ.அக்பர்

சகோ.ஸ்டார்ஜன்

சகோ.அப்துல் காதர்

சகோ.ஆயிஷா

சகோ.ஹைஷ்

சகோ.ஆசியா உமர்

சகோ.கலா நேசன்

சகோ.ஆமினா

சகோ.லக்‌ஷ்மி

சகோ.நிஜாமுதீன்

சகோ.ஜெய்லானி

சகோ.குணா

சகோ.புவனேஸ்வரி ராமனாதன்

சகோ.கஸ்தூரி ராஜம்

சகோ.வானதி

சகோ.ரஜின்

சகோ.பானு

சகோ.ஹுசைனம்மா

சகோ.திலீப்

சகோ.வி.கே.மகாதேவன்

சகோ.ஜலீலா

அனைவருக்கும் அன்பு நன்றிகள்!