December 28, 2010

வெள்ளரி பவுலும்,விருதுகளும்.

என்னையும் மறவாமல் விருது கொடுத்து சிறப்பித்த அன்புள்ளங்களுக்கு என் நன்றிகள்!இந்த விருதோடு நான் என் உற்ற நட்புக்களுக்கு வைத்த சிறிய விருந்தில் நானே வெள்ளரிக்காயை செதுக்கி (carving ) அழகான பவுலாக்கி சாஸை நிரப்பி வந்தவர்களை விழி விரியச் செய்ததை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.அடுத்த முறை முழு பூசணிக்காய் கிடைத்தால் (சோற்றுக்குள் மறைத்து வைக்காமல்)ஒரு ரைஸ் பவுலாக்கி உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.சாஸ் பவுல் எப்படி இருக்கு என்று பார்த்து விட்டு சொல்லுங்கள்.

தோழி ஆசியா உமர் வழங்கிய விருது.

தங்கை மகி கொடுத்த விருது.


சகோதரர் அப்துல் காதர் கொடுத்த விருதுகள்.

விருது கிடைத்தமைக்கு என்னால் ஆன சின்ன ட்ரீட்.ஆளுக்கொரு பி பி கியூ சிக்கன் பீஸ் எடுத்துக்குங்க.குகும்பர் பவுலில் இருக்கும் டொமட்டோ சாஸ்,செராமிக் பவுலில் இருக்கும் மெயோனிஸ் செம காம்பினெஷனாக இருக்கும்

45 comments:

Jaleela Kamal said...

விருது பெற்ற உங்களுக்க்கு வாழ்த்துகக்ள்
ஸாதிகா அக்கா
வெள்ளரி கார்விங்கும், சிக்கன் பார்பிகியும் சூப்பர்.
சீக்கிரமா., நான் வந்த போது நீங்களே செய்து எனக்கு கொடுத்த மிக்ஸர் ரெசிபி போடுங்கள்.

Jaleela Kamal said...

இந்த வாழையிலை பிலேட் எங்கு பார்த்தாலும் என் கண்ணை உருத்திக்கொண்டே இருந்தது வாழையில் தான் சாப்பிட முடியல, அந்த பிளேட்டாவது வாங்குவோமுன்னு ஒரு வழியா வாங்கிட்ட்டேன்.
ரெசிபிகளும் நிறைய செய்து போட்டோ எடுத்தாச்சு ஆனால் போட தான் நேரமில்லை

அரபுத்தமிழன் said...

எனக்குக் கெடச்ச ஆஹா அவார்டை எப்படி
எடுக்குறதுன்னு தெரியல்ல, நீங்க கொடுத்த‌
ட்ரீட்டான கோழியையும் எடுக்க முடியல்ல‌
என்ன கணிணி என்ன நெட்டு :‍)

Mahi said...

விருதுகளுக்கு வாழ்த்துக்கள் ஸாதிகாக்கா!வெள்ளரி பவுல் நல்ல ஐடியா!

/ஆளுக்கொரு பி பி கியூ சிக்கன் பீஸ் எடுத்துக்குங்க.குகும்பர் பவுலில் இருக்கும் டொமட்டோ சாஸ்,செராமிக் பவுலில் இருக்கும் மெயோனிஸ் செம காம்பினெஷனாக இருக்கும்
/அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்,அப்ப என்னைப் போல சைவப் பட்சிணிகளுக்கு??!!

ஸாதிகா said...

// மிக்ஸர் ரெசிபி போடுங்கள்.
// என்னப்பா ஜலி,சமையல் ரெஸிப்பி போடக்கூடாது என்று வைராக்கியமாக இருக்கிறேன்.நீங்க மிக்சர் ரெசிப்பி போடுங்க என்ரு சொல்லி சமையல் ரெஸிப்பி போடும் எண்ணதை தூண்டுகின்றீர்களே!ஹ்ம்ம்..ஆல் இன் ஆல் குக்கிங் குயினே கேட்டாச்சு.டிரை பண்ணுகின்றேன்.நன்றி ஜலி.

ஸாதிகா said...

ஜலி இப்ப கம்பியூட்டர் வாழை இலை வந்துள்ளதே.அநேக இஸ்லாமிய இல்ல திருமணங்களில் இந்த இலையில்தான் பறிமாறுகின்றனர்.விலையும் மலிவும் நூறு பீஸ் கொண்ட ஒரு பாக் 100 - 120 தான்.சீக்கிரம் உங்கள் வாழை இலை பிளேட்டில் வைத்து எடுத்த குறிப்புகளைப்போடுங்கள்.

ஸாதிகா said...

சகோ அரபுத்தமிழன்,அவார்டை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து டெஸ்க்டாப்பில் வைத்துக்கொள்ளுங்கள்.சுலபமாக பிளாக்கில் இணைக்கலாம்.அதேபோல் கோழியையும் எடுத்துடலாம்.உங்கள் தங்க மணிகிட்டே சொல்லி செய்தும் சாப்பிடலாம்.கருத்துக்கு ரொம்ப நன்ரி பிரதர்.

ஸாதிகா said...

அட..ஆமால்ல..ரொம்ப சாரி மகி..இதே நேரம் செய்த பனீர் டிக்கா படம் கூட இருக்கு.ஒகேப்பா பரவா இல்லை.அப்படியே அந்த வெள்ளரிக்காயை நறுக்கி சாப்பிட்டு விடுங்கள்.(நேரில் வந்தால் நிஜமாவே பனீர் டிக்கா செய்து தந்துடுவேன்.நன்றிப்பா!

ஹுஸைனம்மா said...

சாஸ் பவுல் நல்ல ஐடியா. அதுவும், மேல் தோலை உரித்து, எடுத்துவிடாமல், மூடி போல விட்டு வைத்தது நல்லாருக்கு.

அடுத்து ரைஸ் பவுலா, பார்க்கலாம் எப்படியிருக்குன்னு!! :-))))

//சமையல் ரெஸிப்பி போடக்கூடாது என்று வைராக்கியமாக இருக்கிறேன்.//

நீங்களுமா? நானும் வைராக்கியமா இருக்கேன்; (ஆனா, அதுக்குக் காரணம் வேற). நீங்களும் எனக்குத் துணையா இருங்க. எக்காரணம் கொண்டும் வைராக்கியத்தை விட்டுடாதீங்க!! :-)))))

Unknown said...

சுண்டைக்காயில் பவுல் செய்வீங்களா மேம்?

சிந்தையின் சிதறல்கள் said...

விருந்தில் உளம் மகிழ்ந்தது

மென்மேலும் தங்களின் பணியில் உயர்வடைந்திட இறைவனை வேண்டுகிறேன்
என்றும் நேசமுடன்

குறையொன்றுமில்லை. said...

சூப்பர். இதுக்குமேல சொல்ல வார்த்தை வரலை.

ஆமினா said...

vellarikkaai bowl nallaa irukku akkaa

viruthukku vaazhththukkal

RAZIN ABDUL RAHMAN said...

ம்ம்..வெள்ளரிக்காய் பௌல்.நல்லாவே இருக்கு...
தெரம தான்,ஆனா அதெப்புடி,அழகா சின்ன சட்டி மாதிரியே செதுக்கி,ஒயிட் கலர் கோட்டிங் எல்லா குடுத்து,வெளிய டிஸைன் போட்டு,அப்ரோ ஸாஸ் வேர ஃபில் பண்ணி,பயங்கரமா ஃபீல் பண்ண வச்சுடீங்க சகோ..

ஆனா ஒயிட் கலர் ஸாஸ் இங்க தா முதமுறையா பாகுறேன்..ஹோம் மேட்'ஆ...

அப்ரோ அதென்ன பக்கத்துள பச்சகலர்ல அசிங்கமா...ஓக்கே ஏதாச்சும் திருஷ்டிக்காக வச்சுருப்பீங்க போல..

அப்ரோ விருதுகளுக்கு வாழ்த்துக்கள்கள்....

(just kidding)- வாழ்த்துக்களுக்கு மேல உள்ளவை..

அன்புடன்
ரஜின்

Thenammai Lakshmanan said...

ஏகப்பட்ட விருது., விருந்து., டிசைன்ஸ்னு கலக்குறேள் போங்கோ ஸாதிகா..:)) வாழ்த்துக்கள்..

ஸாதிகா said...

// (ஆனா, அதுக்குக் காரணம் வேற)// ஹுசைனம்மா,இந்த வரிகளுக்கு அவசியம் விளக்கம் வேண்டுமே.ஒரு பதிவா போட்டாலும் நோ ப்ராப்ளம்.//எக்காரணம் கொண்டும் வைராக்கியத்தை விட்டுடாதீங்க!! :-)))))
// அட..தப்பிச்சாச்சு என்று மட்டும் தப்புகணக்கு போட்டுடாதீங்க.அக்கா வருவாள்.ஆனால் வரமாட்டாள்..

ஸாதிகா said...

//சுண்டைக்காயில் பவுல் செய்வீங்களா // என்னங்க மர்யம் இப்படி கேட்டுட்டீங்க.நாங்க கடுகில் கூட பவுல் செய்வோம்ல.நன்றி

ஸாதிகா said...

பிரார்த்தனைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ஹாசிம்.

ஸாதிகா said...

லட்சுமி மேடம்,மிக்க நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ஆமினா.

ஸாதிகா said...

//ஆனா ஒயிட் கலர் ஸாஸ் இங்க தா முதமுறையா பாகுறேன்..ஹோம் மேட்'ஆ...
//இது மயோனைஸ் சகோ.விபரம் அறிய இங்கு பார்க்கவும்.

நீங்க//அப்ரோ அதென்ன பக்கத்துள பச்சகலர்ல அசிங்கமா...ஓக்கே ஏதாச்சும் திருஷ்டிக்காக வச்சுருப்பீங்க போல.// இப்படி சொன்னதுக்கப்புறம் பவர் கிளாஸ்,பூதக்கணானாடி,பைனாகுலர் எல்லாம் வைத்து அந்த படத்தை பார்த்துட்டேன்.நீங்க சொன்னாற்ப்போல் என் கண்ணுக்கு எதும் மாட்டலியே சகோ ரஜின்?:-)

ஸாதிகா said...

வாங்க தேனம்மை.சிறிய இடைவெளிக்கு பின் வந்து இருக்கீங்க.கருத்துக்கு நன்றி.

அந்நியன் 2 said...

விருது பெற்ற உங்களையும்,விருதை தந்த அவுங்களையும்,மனசார வாழ்த்தி மென் மேலும் நிறையா விருதுகளைப் பெற்று இனி பதிவிற்குப் பதிலா விருதினை வெளி இடுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.

அருமை.

சிநேகிதன் அக்பர் said...

விருது பெற்றதற்கு வாழ்த்துகள்.

அஸ்மா said...

எல்லாமே நல்லா இருக்கு ஸாதிகா அக்கா! முதலில் வெள்ளரிக்காய் பவுலை 'வெள்ளரிக்காய் செல்ஃபோன்' என்று நினைத்தேன் :) அழகா செய்திருக்கீங்க! இந்த வாழை இலை ப்ளேட்தான் வாங்க எனக்கும் ஆவலாக உள்ளது. சென்னையில் வாங்கினால் எங்கு வாங்கணும் ஸாதிகா அக்கா? ரேட் எவ்வளவு இருக்கும்? அது செராமிக்கா அல்லது எனாமல் கோட்டிங்கா?

Ahamed irshad said...

congrats... :))))

Asiya Omar said...

விருதிற்கு வாழ்த்துக்கள்,தோழி அருமையான பகிர்வு.bbq chicken செம டேஸ்டாக இருக்கே.

Asiya Omar said...

தோழி ஸாதிகா ஜலீலா உங்க வீட்டில் ருசித்த மிக்ஸர் எனக்கும் வேண்டும்,பார்சல் அனுப்புங்க.கீழக்கரை ஸ்பெஷல் ரெசிபீஸ் எப்படி இருக்கும்னு எனக்கும் மிகவும் ஆவலாய் இருக்கு.

Unknown said...

உங்களுடைய டிரீட் க்கு நன்றி.

தூயவனின் அடிமை said...

வாழ்த்துக்கள். சுவீட்டுக்கு பதிலாக சிக்கன் கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்கு.

ஸாதிகா said...

சகோதரர் அந்நியன்//இனி பதிவிற்குப் பதிலா விருதினை வெளி இடுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.
// இப்படி வாழ்த்திபூட்டீஹளே!மிக்க நன்றி!

ஸாதிகா said...

வாழ்த்துக்கு மிக்க நன்றி அக்பர்.

ஸாதிகா said...

// சென்னையில் வாங்கினால் எங்கு வாங்கணும்// சென்னையில் எல்லா பாத்திரக்கடைகளிலும் கிடைக்கின்றது அஸ்மா.நான் ஈவினிங் பஜாரில் உள்ள எத்திராஜ் நாயுடுவில் வாங்கினேன்.விலை அதிகம் இல்லை.100 ரூபாய்க்குள்தான்.ஸ்டீலில் எனாமல் கோட் செய்யப்பட்டது.சமீபத்தில் மெலமைன் வேரிலும் பார்த்தேன்.கருத்துக்கு மிக்க நன்றி அஸ்மா.

ஸாதிகா said...

வாழ்த்துக்கு மிக்க நன்றி இர்ஷாத்.

ஸாதிகா said...

ஆசியாதோழி வாழ்த்துக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.வாங்க அந்த மிக்சர் செய்து தருகின்றேன்.கீழக்கரை ஸ்பெஷல் ஐட்டங்கள் என்று சில பலகாரங்கள் உள்ளது.சமையம் கிடைக்கும் பொழுது அறிமுகப்படுத்துகின்றேன்.

ஸாதிகா said...

முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ இனியவன்.

ஸாதிகா said...

நன்றி இளம் தூயவன்.சிக்கன் படன் சமீபத்தில் இருந்தது .அதனைப்போட்டேன்.

vanathy said...

வாழ்த்துக்கள், அக்கா. இன்னும் பலவிருதுகள் வாங்க வாழ்த்துகிறேன். வெள்ளரிக்காய் அழகோ அழகு. பூசனிக்காய் எப்ப போடுவீங்க!!!

enrenrum16 said...

அட...வெள்ளரிக்காவா அது... கடையில வாங்கினா கூட ஜாடிக்கேத்த மூடி கிடைக்கறது கஷ்டம்..நீங்க ஜாடி மட்டுமில்ல மூடியும் சேர்த்து செஞ்சிட்டீங்களே...ஐடியா நல்லாருக்கு.

Vijiskitchencreations said...

விருது பெற்ற உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

வெள்ளரி கார்விங் சூப்பர். எங்கு கற்று கொண்டிங்க. இமா ஏதாவது கரஸ்ஸில் சொல்லி தந்தாங்களா?

என்னோட கம்யூட்டர் ப்ராப்ளத்தினால் ப்ளாக் பக்கம் வர இயலவில்லை.
இங்கு அசோஷியஷினில் ஸ்பெல் பீ இல் ஆர்கனேசர், ஆர்ட் ஷோவில் ஜட்ஸ் இப்படி கொஞ்சம் பிஸியா இருந்தேன். ஜனவரியில் நிறய்ய ப்ரோக்ராம்ஸ் அதில் எல்லாம் என் மக கலந்து கொள்கிறாள் அதற்க்கு ப்ராக்டிஸ் டீம் வொர்க் என்று ஒரே பிசி, மற்றபடி நான் வருகிறேன். என் ப்ளாக் இன்னும் அப்டேட் கூட செய்ய முடியல்லை.

அடுத்த முறை வாழையிலையில் சாப்பிட விரைவில் வருகிறேன்.

Unknown said...

உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

வெள்ளரி பவுல் நல்லாயிருக்குங்க.

விருதுகளுக்கு வாழ்த்துக்கள்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும்:)!

ஸாதிகா said...

நன்றி சகோ இனியவன்.தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஸாதிகா said...

வாழ்த்துக்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோ ராமலக்ஷ்மி .உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஜெய்லானி said...

விருது பெற்ற உங்களுக்க்கு வாழ்த்துக்கள்...!!

ஒரு சந்தேகம் வெள்ளரிகாய் பவுல திருப்பி கேப்பீங்களா..? இல்லை அதையும் சாப்பிட்டுடலாமா..?

இதையே முருங்கை காய்ல செஞ்சிருந்தா கேட்டிருக்க மாட்டேன் ஹி..ஹி.. :-)