October 17, 2010

இனிய இல்லம் - 2

இனிய இல்லம் இரண்டாம் பாகத்தினை படிப்பதற்கு முன் படிக்காதவர்கள் முதல் பாகத்தினையும் இங்கு கிளிக் செய்து படிக்கவும்.
இல்லப்பராமரிப்பை வீட்டிற்கு வெளியில் இருந்து ஆரம்பிப்போமா?

வீட்டின் வெளிப்பகுதி:
தனி வீடோ அடுக்குமாடிவீடோ வீட்டிற்கு வெளியில் குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்து தூசி கிளம்பாமல் நீர் தெளித்து,கேட் கிரில்கள்,காம்பவுண்ட் விளக்குகளை,வீட்டிற்கு வெளிப்பகுதியில் உள்ள ஜன்னல் கிரில்களை அவ்வப்பொழுது சுத்தம் செய்து வந்தால் வீடே தனித்துவமாக காட்சி அளிக்கும்.காம்பவுண்டுக்குள் செடி கொடிகள் இருந்தால் காய்ந்த தளைகள் அகற்றி,அவ்வப்பொழுது மண் சட்டிகளை இடம் மாற்றி கீழே படிந்துள்ள மண் துகள்களை சுத்தம் செய்வதைக்கடை பிடியுங்கள்.வீட்டிற்கு முன் செருப்புகள் சிதறிக்கிடக்காமல் ஸ்டேண்ட் வாங்கி வைத்து வீட்டிலுள்ளவர்களை செருப்பை கழற்றும் பொழுது ஸ்டேண்டில் கழற்றி வைக்க பழக்குங்கள்.வாசலுக்கு வெளியில் உள்ள கால் மிதி தூசி தும்புகள் இல்லாமல் தினமும் தட்டி சுத்தப்படுத்த தவறாதீர்கள். மாதம் இரு முறையாவது சோப்பினால் சுத்தம் செய்யுங்கள்.கதவு,நிலைப்படி போன்றவற்றை துணியினால் துடைத்து ஒட்டடை இன்றி சுத்தம் செய்யுங்கள்.

ஹால்:
நம்மை பிறர் மதிப்பீடு செய்வதில் வீட்டின் முன்னறை பெரும்பங்கு வகிக்கின்றது.விலைஉயர்ந்த சோபாக்கள்,கம்பளங்கள்,சாண்டிலியர்கள்,ஓவியங்கள் போன்றவற்றை அடுக்கி அழகு படுத்த வேண்டுமென்பதில்லை.இருப்பவற்றை சுத்தமாக வைத்து இருந்தாலே போதும்.தூசிகள் இல்லாத சோபா,கோடிழுத்தால் கோடு வராத டீபாய்,சோபாவுக்கு அடியில் குப்பைகள் தேங்காத நிலை,தொலைக்காட்சி பெட்டி இருக்கும் அலமாரியில் பொருட்கள் கன்னா பின்னவென்று இராமல் நேர்த்தியாக அடுக்கி வைத்தல்,அன்றைய தினசரியைத்தவிர மற்ற பழைய பேப்பர்களை பிறர் கண்களுக்கு படாமல் மறைவான இடத்தில் வைத்தல்,தினசரி,மற்றும் புதிய பத்திரிகைகள் போன்றவற்றை நேர்த்தியாக அடுக்கி வைத்தல்,மாதம் ஒரு முறை துவைத்து மாற்றிய கர்ட்டன்கள்,விளக்குகள் பேன் போன்றவற்றை துணியினால் 10 நாட்களுக்கு ஒரு முறையாவது துடைத்து சுத்தப்படுத்துதல் போன்றவற்றில் உறுதியாக இருங்கள்.ஆங்காங்கு உங்கள் பொருளாதர வசதிக்கு ஏற்ற படி படங்கள்,பூங்கொத்துக்கள் போன்றவற்றை மாட்டினால் வீடு அழகு கொஞ்சும்.

படுக்கையறை:
கட்டில் வாங்கினால் ஸ்டோரேஜ் கட்டிலாக பார்த்து வாங்குதல் படுக்கை அறை அடைசல் இல்லாமல் இருக்க வழிவகுக்கும்.காலையில் எழுந்ததுமே போர்வைகளை மடித்து தலை அணைகளை எல்லாம் அப்புறப்படுத்தி கட்டிலுக்கடியில் இருக்கும் ஸ்டோரேஜில் அடுக்கி வைத்து,பெட் சீட்டை உதறி சுருக்கமில்லாமல் விரித்து வையுங்கள்.வாரம் ஒரு முறை பெட்ஷீட் மாற்றும் பழக்கத்தினை மேற்கொள்ளுங்கள்.அதே போல் படுக்கையறையில் இருக்கும் திரைச்சீலைகளையும் அடிக்கடி துவைத்து சுத்தம் செய்யுங்கள்.படுக்கை அறையில் நசநசவென்று பொருட்கள் அடைத்து இருப்பதை விட எளிமையாக சுத்தமாக வைத்து இருந்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.குளிர்சாதன வசதியுடன் கூடிய படுக்கையறையாக இருந்தால் நறுமணமாக இருப்பதற்கு செலவு செய்யத்தயங்காதீர்கள்.இதமான வர்ணத்தில் பெயிண்டும்,ஒரு சில இதமான ஓவியங்களும் மனதிற்கு இதம் தரும்
கப்போர்ட்:
அநேகமாக எல்லாப் படுக்கை அறைகளிலும் இருக்கும்.ஆறுமாதத்திற்கு ஒரு முறையாவது உள்ளே இருக்கும் பொருட்கள் அனைத்தையும் எடுத்து நன்கு துணியால் துடைத்து பேப்பர் மாற்றுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.அநேக வீடுகளில் நியூஸ்பேப்பரை கப்போர்ட் தட்டுகளுக்கு விரித்து பொருட்களை அடுக்குவார்கள்.இந்த முறை கனமான சார்ட் பேப்பர்,அல்லது பிரவுன் ஷீட்டை விரித்துப்பாருங்கள்.இனி அந்த பழக்கத்தை விடவே மாட்டீர்கள்.அழகாக இடைவெளி விட்டு அடுக்கி,நாப்தலின் பால்களை ஆங்காங்கே வைத்து ,துணிகளும் மற்ற பொருட்களையும் தனித்தனி அடுக்குகளில் வைத்து தேடினால் உடனே கிடைக்கும் படியாக அமைத்துக்கொள்ளுங்கள்.
பாத் ரூம்:
இது அநேக வீடுகளில் படுக்கையறையுடன் அமைந்திருக்கும்.இதனை அதிகம் கவனம் செலுத்தி எப்பொழுதும் உலர்ந்த நிலையில் வைத்திருந்தால் ஆரோக்கியமாக இருக்கும்.குளிக்கும் முன்னர் தினமும் சுத்தப்படுத்தும் வழக்கம் அவசியம்.வாஷ் பேசின்கள்,டாய்லெட்டுகளை அதற்குறிய கிளீனிங் உபகரணங்களை வைத்து சுத்தப்படுத்தி,தரையை பிரஷ் செய்து நறுமணயூட்டிகளை மாட்டி வையுங்கள்.ஒரு வைப்பரை வாங்கி வைத்து ஒவ்வொருவரும் உபயோகித்தபின் வைப்பரால் நீர் தேங்காத வண்ணம் சுத்தம் செய்யும் பழக்கத்தினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படுத்திக்கொண்டால் நலம் பயக்கும்.வைப்பர்,புரூம்,பிரஷ் போன்றவற்றை பாத்ரூமின் மூலையில் சாய்த்து வைப்பதைத்தவிர்த்து சின்ன ஹூக்குகளை ஓரமாக பொருத்தி அதில் மாட்டி வைத்தால் தரையை இலகுவாக சுத்தம் செய்யலாம்.டாய்லெட்டினுள் இருக்கும் கேபினெட்டின் கண்ணாடி மற்றும் கேபினெட்டை ஈரத்துணியால துடைத்து பொருட்களை நேர்த்தியாக அடுக்கி வைத்து நாப்தலின் உருண்டைகளைப்போட்டு வையுங்கள்.பழைய பிரஷ்கள்,காலியான பேஸ்ட்கள்,குப்பிகள்,காலியான சாஷேக்கள் போன்றவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்துங்கள்.ஜலபாதையில் ஒரு போதும் முடி தங்கி இருக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.தரையை மட்டுமின்றி சுவரில் பதித்திருக்கும் டைல்ஸ்,மற்றும் பிட்டிங்குகளையும் அவ்வப்பொழுது அதற்குறிய கிளீனிங் லிக்விட் கொண்டு சுத்தம் செய்ய தவறாதீர்கள்.
அடுத்து ஒரு இடுகையை வீட்டின் இன்னும் பிற இடங்களைப்பார்ர்ப்போம்.

படங்கள்:கூகுள்



54 comments:

Jaleela Kamal said...

இல்ல பராமரிப்பின் டிப்ஸுகள் சூப்பர்,

சாட் பேப்பர் , பிரவுன் பேப்பர் ஐடியா அருமை.

நட்புடன் ஜமால் said...

எம்பூட்டு அழகான டிஸைன்கள் வாங்கி வைத்தாலும்

சுத்தப்படுத்தி கொண்டேயிருந்தால் தான் வீடும் பொருட்கள் பளீச்

:)

Asiya Omar said...

நல்ல அருமையாக விளக்கியுள்ளீர்கள்.தொடருங்க,அடுத்து என்ன டிப்ஸ்?

ஜெய்லானி said...

ஒக்கே..ஓக்கே...!! இதெல்லாம் தங்ஸ் வேலைகள்...!!
நாங்கலெல்லாம் ஃபிரீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ :-))))

ஹுஸைனம்மா said...

//சார்ட் பேப்பர்,அல்லது பிரவுன் ஷீட்டை விரித்துப்பாருங்கள்//

புது ஐடியா!! செஞ்சுப் பார்க்கணும்!!

பீர் | Peer said...

சொன்னா கேட்கவா செய்றாங்க.

ஹுஸைனம்மா said...

// பீர் | Peer said...
சொன்னா கேட்கவா செய்றாங்க.//

ஏன் சொல்லறீங்க? செய்ங்க!! :-)))

ஸாதிகாக்கா, இது பெண்களுக்கு மட்டுமான இடுகைன்னு சொல்லிருக்கீங்களா என்ன? ;-))

Gayathri said...

nalla pagirvu nalla tips nandri

Unknown said...

இப்படியெல்லாம் சுத்தமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
தங்ஸ் உடம்புக்கு முடியல. வேலைக்கு ஆள் கிடைப்பதும் கடினமாக இருக்கிறது.

அப்படியே ஹூஸைனம்மாவின் இரண்டாவது கருத்துரையையும் பார்க்கவும். :) !? :(

மனோ சாமிநாதன் said...

இல்லப் பராமரிப்புக்கான அனைத்துக் குறிப்புகளும் அருமை ஸாதிகா!

ஜெய்லானி said...

//ஸாதிகாக்கா, இது பெண்களுக்கு மட்டுமான இடுகைன்னு சொல்லிருக்கீங்களா என்ன? ;-)) //

ஆஹா..பதில் எப்படி வரப்போகுதுன்னு தெரியலையே..!!

ஸாதிகா said...

ஜலி கருத்துக்கு நன்றி .நான் இதுதான் உபயோகப்படுத்துகின்றேன்.

ஸாதிகா said...

//சுத்தப்படுத்தி கொண்டேயிருந்தால் தான் வீடும் பொருட்கள் பளீச்// உண்மை வரிகள் சகோ ஜமால்.

ஸாதிகா said...

ஆசியா,வீட்டில் என்னென்ன அறைகள் உள்ளதோ அத்தனையும் பார்த்து விடுவோம்.

ஸாதிகா said...

.//ஒக்கே..ஓக்கே...!! இதெல்லாம் தங்ஸ் வேலைகள்...!!
நாங்கலெல்லாம் ஃபிரீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ :-))))// என்னது???? உங்கள் வீட்டு தங்ஸ் பிழைக்கத்தெரியாத தங்கச்சியாக இருக்காங்க.ஒரு ரெண்டு நாளைக்கு இந்தப்பக்கம் அனுப்பி வையுங்க.சூப்பரா டிரைனிங் கொடுத்துடலாம்.

ஸாதிகா said...

பீர் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.//சொன்னா கேட்கவா செய்றாங்க// நான் சொல்ல நினைத்தை ஹுசைனம்மா சொல்லிட்டாங்க.

ஸாதிகா said...

ஹுசைனம்மா கை கொடுங்க.எங்கே மோதிரம்ன்னு கேட்டுடப்படாது.கையை குலுக்க மட்டும்தான்.

ஸாதிகா said...

காயத்ரி,கருத்துக்கு மிக்க நன்றி

ஸாதிகா said...

//இப்படியெல்லாம் சுத்தமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
தங்ஸ் உடம்புக்கு முடியல. வேலைக்கு ஆள் கிடைப்பதும் கடினமாக இருக்கிறது.
// சுல்தான் நானா.இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டு இருப்பதை விட நிங்கள் செயல் முறைப்படுத்தி விடுங்கள்.அதைப்பார்த்து தங்ஸ் சுறுசுறுப்பாகிடுவாங்க.

ஸாதிகா said...

////ஸாதிகாக்கா, இது பெண்களுக்கு மட்டுமான இடுகைன்னு சொல்லிருக்கீங்களா என்ன? ;-)) //

ஆஹா..பதில் எப்படி வரப்போகுதுன்னு தெரியலையே..!// ஜெய்லானி,நான் என்ன பதில் சொல்லுவேன்னு தெரிந்தும் இப்படி ஒரு வரி?நான் என்றுமே ஆண்களுக்கு,பெண்களுக்கு என்று தனியாக பதிவிட்டதில்லை.அடுத்த மூன்றாவது இல்லபாரமரிப்பில் ரங்ஸ் களுக்கு இதில் எந்தளவு ஈடுபாடு காட்டவேண்டும் என்று எழுதுகின்றேன்.அப்ப சொல்ல்லுங்க நான் ஃபிரீஈஈஈஈ என்று . கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

எஸ்.கே said...

மிக அருமையான எளிமையான கட்டுரை!

Menaga Sathia said...

இல்ல டிப்ஸ்கள் சூப்பர்ர் அக்கா...

//சாட் பேப்பர் , பிரவுன் பேப்பர் ஐடியா அருமை.
// ரீப்பிட்ட்ட்ட்ட்..இனி நானும் அப்படியே செய்கிறேன்....

Unknown said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

Vijiskitchencreations said...

நல்ல அருமையான டிப்ஸ்+ அழகா எடுத்து சொல்லிட்டிங்க.இனிமேல் எல்லோர் வீடும் வெரி நைஸ் லுக் தான் போங்க.

Chitra said...

neat ideas!

அன்புடன் மலிக்கா said...

எம்பூட்டு அழகான டிஸைன்கள் வாங்கி வைத்தாலும்

சுத்தப்படுத்தி கொண்டேயிருந்தால் தான் வீடும் பொருட்கள் பளீச்.//

அதேதான் ஜமால்காக்காவோடு கூட்டு நானும்..

அருமையான பகிர்வு..

vanathy said...

very nice tips, akka.

அரபுத்தமிழன் said...

வீடு என்பது உடல் என்றால் வீட்டில் வசிப்பவரின் ஒற்றுமை உயிர் போல.
உயிரில்லையெனில் அல்லது உயிர் ஊசலாடுமெனில்
மேனி மட்டும் அழகாயிருந்து என்ன பயன்.வெறும் பிணம்தான் பராபரமே :))

Unknown said...

வீட்டைப் பற்றி பயனுள்ள குறிப்புகள் தந்திருக்கிறீர்கள்.
சிறப்பான பார்வை.
வாழ்த்துக்கள் சகோதரி.

ராஜவம்சம் said...

//ஏன் சொல்லறீங்க? செய்ங்க!! :-)))//

ஒரு நாள் தெரு வாசல் குப்பையா கடக்குன்னு கட்ட வெலக்கமாத்த எடுத்து கூட்ட ஆரம்பிச்சா பக்கத்து வீட்லேர்ந்து தோழி ஒருத்தி வந்து ஒனக்கு ஏன் இந்த வேலை எங்கிட்ட குடு நா கூட்றேன்ங்றா

மேழ் வீட்லேருந்து பாசமலர் (அக்கா)வந்து திட்டிக்கிட்டே என் கையில உள்ளத புடிங்கி கூட்ட ஆரம்பிச்சிட்டாங்க

நாங்க சுத்தம் செய்ய நினைச்சாலும் விட மாட்டிங்களே!

ஸாதிகா said...

எஸ் கே கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

மேனகா கருத்துக்கு நன்றி

ஸாதிகா said...

விஜி உங்கள் கருத்துக்கும் நன்றி.

ஸாதிகா said...

நன்றி சித்ரா

ஸாதிகா said...

நன்றி வானதி.

ஸாதிகா said...

//வீடு என்பது உடல் என்றால் வீட்டில் வசிப்பவரின் ஒற்றுமை உயிர் போல// அழகாய் கூறியுள்ளீர்கள் அரபுத்தமிழன்.நன்றி

ஸாதிகா said...

சகோ அபுல்பசர் கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

ராஜவம்சம் said...//நாங்க சுத்தம் செய்ய நினைச்சாலும் விட மாட்டிங்களே!// அதெல்லாம் கண்டுக்க கூடாது பிரதர்.

Anisha Yunus said...

அருமையான டிப்ஸ் அக்கா. கல்யாணம் செய்து புது வீடு போற எல்லாத்துக்கும் தேவையான ஒரு விஷயம். ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. ரொம்ப நன்றிங்கக்கா.

Ahamed irshad said...

க்ளீன் ப‌திவு..

Thenammai Lakshmanan said...

இனிய இல்லம் மிக அழகு ஸாதிகா..:))

மாதேவி said...

அழகிய இல்லம் அருமை.

புல்லாங்குழல் said...

அருமையான குறிப்புகள். நல்ல இடுகை. வாழ்த்துகள்.

Thanglish Payan said...

Superb..

yen ponnunga na vittu kuruppu than sollanuma???

ஸாதிகா said...

அன்னு கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

நன்றி இர்ஷாத்

ஸாதிகா said...

நன்றி தேனம்மை.

ஸாதிகா said...

நன்றி மாதேவி

ஸாதிகா said...

நன்றி சகோ நூருல் அமீன்

ஸாதிகா said...

//Thanglish Payan said...
Superb..

yen ponnunga na vittu kuruppu than sollanuma??//கருத்துக்கு நன்றி தங்கிலீஷ் பையன்.(உச்சரிப்பு சரிதானே?)நான் பெண்களை மட்டும் வைத்து பதிவு எழுதவில்லை சகோதரரே.இனிய இல்லம் பதிவில் ஆண்களுக்கும் பங்குண்டு.

ஆமினா said...

நல்ல நல்ல உபயோகமான கருத்துக்கள்

ஸாதிகா said...

நன்றி ஆமினா முதல் வருகைக்கும்,கருத்துக்கும்.

apsara-illam said...

அனைவரும் படித்து பயன்பெரும் வகையில் உள்ளது இல்லபராமரிப்பு அக்கா... தொடரட்டும் உங்கள் சுத்தமான எழுத்துக்கள்.

அன்புடன்,
அப்சரா.

Anonymous said...

good ideas