தி நகர் நெரிச்சல் கண்டு மலைப்பாக உள்ளது.போக்குவரத்து நெரிச்சலை குறைப்பதற்கு பாலம் கட்டியும் நெரிச்சல் மேலும்,மேலும் அதிகமாகிப்போனதை தவிர வேறு பலன் இல்லை.சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள பாலத்தை கடக்க அரை மணி நேரத்திற்கும் மேல் தேவைப்படுகின்றது.எறும்பு மொய்த்தாற் போல் ஜனத்திரள்.ரங்கநாதன் தெரு வாசிகள் எப்பொழுதோ வீடுகளை காலி செய்து விட்டு புலம் பெயர்ந்தாலும்,பக்கத்து பக்கத்து தெருக்களில் வசிப்போர் நிலை பரிதாபத்துக்குறியது.மேலும் மேலும் புதிது புதிதாக வணிக கடல்கள் உருவாக்குவதை குறித்து யோசித்து செயல் படுத்தினால் நன்றாக இருக்கும்.
ஒரு வலையுலக நட்பு தன் கணவர் புதிதாக ஒரு ரெஸ்டாரெண்ட் இதே பகுதியில் திறந்திருப்பதாக கூறினார்.நீங்கள் அங்கு சென்றால் போன் செய்யுங்கள். ரங்கமணியிடம் கூறி டிஸ்கவுண்ட் தரச்சொல்லுகின்றேன் என்றார்.சரி நட்பின் உணவகத்திற்கு போய்த்தான் பார்க்கலாமே என்று கூட்டத்தில் நீச்சல் அடித்து போய் சேர்ந்தோம் இஃப்தார் நேரத்தில்.உணவகத்தில் அமர்ந்து கொண்டு போன் செய்தால் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.கடைசி வரை ஆன் செய்யவே இல்லை. சாப்பிட்டு விட்டு டிஸ்கவுண்ட் இல்லாமல் பணம் செலுத்திவிட்டு வந்தோம்.விலை கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் அரேபிய உணவு வகைகள் அற்புதமாக இருந்தது.
ஈத் பர்சேஸுக்காக கடை,கடையாக ஏறி இறங்கும் பொழுது சென்னை ஸில்க்ஸில் ஒரு புடவை கண்களையும்,கருத்தையும் கவர்ந்தது.அலங்காரமான நகைப்பெட்டிக்குள் நகை இருப்பது போல் ஒரு அலங்காரமான பெட்டிக்குள் இருந்த பட்டுப்புடவையின் விலை என்ன தெரியுமா? 2.5லட்ச ரூபாய்.அடுத்த முறை போகும் பொழுது மறக்காமல் கடை நிர்வாகியிடம் அனுமதி பெற்று போட்டோ எடுத்து தனிப்பதிவே போடவேண்டும்.(ரங்கமணிகளே உஷார்.)
சிறிய கடை வைத்திருக்கும் வியாபாரிகள் பாடு படு கஷ்டம்தான்.இப்பகுதியில் துணிக்கடை இருப்பது போல் நகைக்கடைகளும் அதிகமே.ஆனால் இப்போதெல்லாம் பெரிய கடைகளில்தான் வியாபாரம் கன ஜோராக நடந்து வருகின்றது.நகைகடை வைத்து வியாபாரம் செய்தவர்களில் பலர் இப்பொழுது கடுமையான போட்டியை சமாளிக்க முடியாமல் கவரிங் பொருட்கள் விற்பனையகமாக மாற்றிக்கொண்டு வருவதைப்பார்க்கும் பொழுது கஷ்டமாக உள்ளது.
பனகல் பார்க்கை சுற்றி மிகவும் பிரபலமான கடைகள் நிறைந்த பகுதி.மிகவும் பிஸியான பகுதி.இப்பொழுது நல்லி,குமரன் பிரின்ஸ் ஜுவல்லர்ஸ் என்று வரிசைகட்டிக்கொண்டிருக்கும் இருக்கும் பரபரப்பான நாகேஸ்வரா சாலையை மீண்டும் ஒன்வே ஆக மாற்றி விட்டாலும்,வாகன போக்கு வரத்து வேண்டுமானால் சற்று சுலபமாக இருந்தாலும் ஜன நடமாட்டம் மிகவும் நெருக்கடியாக உள்ளது.நடைபாதை வியாபாரிகளுக்குத்தான் இந்த ஒன்வே சிஸ்டம் வசதியாக போய் விட்டது.
பனகல் பார்க்கை பஸ் ஸ்டாண்ட் ஆக மாற்றுவதற்கு பலத்த எதிர்ப்பு.அதே ஏரியாவில் ஜீவா பார்க்,நடேசன் பார்க் என்று மேலும் இரண்டு பார்க் இருக்கும் பொழுது இதனை பேருந்து நிலையமாக மாற்றி,தி.நகர் பஸ் ஸ்டாண்டை இங்கு மாற்றினால் போக்கு வரத்து நெரிச்சல் மிகவும் குறைந்து மக்களும் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.அரசாங்கம் செயல் படுத்துமா?
தி.நகர் போத்தீஸில் நோன்பு திறக்கும் சமயம் நோன்பாளிகள் எல்லாரும் வந்து நோன்பு திறந்து செல்லும்படி அனவுன்ஸ் செய்கின்றார்கள்.இஃப்தாருக்கென்று தனி இடம் ஒதுக்கி நோன்பாளிகளை நோன்பு திறக்கும் வசதியை ஏற்படுத்தி தருகின்றனர்.மாற்று மதத்தவரின் சேவை நெகிழவைக்கின்றது.
ஜி.என் செட்டி ரோடில் இருக்கும் விருதுநகர் ஹோட்டலில் சஹர் நேரத்தில் நோன்பாளிகளுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர்.இது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடை பெற்று வருகின்றது.பேச்சிலர்களும்,வசதியற்ற நோன்பாளிகளுக்கும் மிகவும் வசதியாக இருக்கின்றது.அவ்வுணவகத்தின் நிறுவனர்களுக்கு வல்ல அல்லாஹ் நற்கூலியை கொடுப்பானாக.
இதே வீதியில் உள்ள ஒரு சிறிய செருப்புக்கடையில் வீட்டிற்குள் உபயோகப்படுத்தும் ஹெல்த் பிளஸ் செருப்பு 140 ரூபாய்க்கு வாங்கினேன்.அதே செருப்பை என் பக்கத்து வீட்டுத்தோழி பெரிய கடையில் 90 ரூபாய்க்கு வாங்கி இருக்கின்றார்.ஒரு செருப்பிலேயே 50 ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்தால் இது போல் சிறிய கடைகளில் கூட்டம் எப்படி களை கட்டும்?ஒரு நாளில் 50000 ரூபாய்க்கு வியாபாரம் செய்து அடையும் லாபத்தை விட,5000 ரூபாய்க்கு மட்டும் வியாபாரம் செய்து லாபம் பெற்று விடுகின்றனர்.செம வியாபாரிகள்தான்.
பர்ஸை பறி கொடுத்து விட்டு பரிதவிக்கும் மக்கள் ஒருபக்கம்.என்னதான் உயரமான மேடை போட்டு,கண்கொத்திப்பாம்பாக போலீஸார் கண்காணிப்பு நடத்தினாலும் இந்த அவலம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.இத்தனை அவஸ்தைகளையும் அனுபவித்தும் மகிழ்ச்சியுடன் தி.நகர் ஷாப்பிங் செய்யும் மக்கள் இந்த தி. நகர் மோகத்தை என்று விடுவார்கள்?தி.நகர் வாழ் மக்களுக்கு என்று மோட்சம் கிடைக்கும்?என் வலையுலக நட்பு தி.நகர் வாடிக்கயாளர் கூட்டத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது"யானைக்கும் அடி சறுக்கும்"என்று சிரித்தார்.
Tweet |
46 comments:
அதுசரி, நீங்களே சென்னை நெரிசல் பத்தி புலம்புறீங்களா??!!
அப்பறம், பெருநாள் பர்ச்சேஸ் ஆரம்பிச்சாச்சா? பெருநாளைக்குள்ள முடிஞ்சுடுமா? இல்ல, //அடுத்த முறை போகும் பொழுது மறக்காமல் ...//னு எழுதிருக்கீங்களே அதான் கேட்டேன்!
உங்க ஹோட்டல்கார ஃப்ரண்டு விவரமானவங்களாத் தெரியிறாங்க!! உங்க ஃப்ரண்டாச்சே!!
கூட்ட நெரிசல்களை கண்டாலே தீஈஈஈஈஈஈஈஈஈ தான் வருது
அந்த ஹோட்டல் விலாசம் கொடுக்கலாமே, நல்லாயிருக்குன்னா நாங்களும் ட்ரை பன்னுவோம்ல
( not phone :P )
கடைசி பத்தி : தெளிவு
நானும் மெட்ராஸ் போகும் பொழுது இந்த தி.நகர் கூட்டிட்டு போங்கன்னு சொல்றேன்,இன்னும் கூட்டிட்டு போகலை,இது தான் செய்தியா?அப்பாடா இந்தக்கூட்டத்தில் போய் எப்படி ஷாப்பிங் செய்றது.கஷ்டம்தான்.
enna than sollunga t.nagar shopping t.nagar shopping than...enna than too much crowd irunthalum apadi poi shopping panuvathu niraya perugu pidigum...Me too the same...
போன முறை இந்தியா சென்றிருந்த சமயம் சென்னை சில்க்ஸில் துணிகள் வாங்கினோம்.எனக்கு மயக்கம் வராத குறைதான்.சாதரண நாளிலயே அவ்வளவு கூட்டம்.அங்கயே என் கணவர் நான் அப்பவே சொன்னேன் நம்ம ஊர்லயே வாங்கிக்கலாம் இங்க வந்து இவ்வளவு கூட்டத்தில் வந்து வாங்கனுமான்னு ஒரே அர்ச்சனை...அடுத்தமுறை தீ நகர் கூப்பிட்டா உன்னை என்ன பண்ணுவேண்ணு தெரியாதுன்னு சொல்லி ஊர் வந்து சேர்ந்தோம்...
நல்ல பதிவு!
மலரும் நினைவுகளை தூண்டி விட்டுடிங்களே... உஸ்மான் ரோட்டில உள்ள நுழைஞ்சா அப்படியே ஸ்டேஷன் வரை மக்கள்ஸ் தள்ளி விட்டுடுவாங்க.. அது ஒரு எக்ஸ்பீரியன்ஸ்.. இப்ப அப்படி போவேனான்னு தெரியலை :))
சரவணா ஸ்டோரில 5 ரூபாய்க்கு ஒரு வீட்டுக்கு போட சப்பல் வாங்கினேன் 2006ல இன்னும் இருக்கு.. அதை கண்டாலே பிரெண்ஸ் ஓட்டுறாங்க.. இன்னுமா இதை விடலன்னு...
Oh My!!! Traffic Jam mess!
அக்கா, நான் தீநகர் போனதில்லை. சினிமாவில் பார்த்திருக்கேன். சும்மா செட் போட்டு, துணை நடிகர்களை வைத்து பிலிம் காட்டுறாங்கன்னு நினைப்பதுண்டு. மெய்யாலுமே இவ்வளவு கூட்டமா!!! மலைக்கோட்டைப் பிள்ளையார் இருக்கும் தெப்பக்குளம் பரவாயில்லை போல இருக்கே!
பெருநாள் கொண்டாட்டம் இப்பவே ஆரம்பமா அக்கா..
என்னதான் தீ யா இருந்தாலும் தி நகர் தி நகர்தான் ஸாதிகா.. நெரிசலும் நெருக்கடியுமிருந்தாலும் எல்லா தரப்பு மக்களும் ஷாப்பிங் செய்யலாம்..
அக்கா அங்காடி தெருவை அலசி அழகாய் ஒரு பதிவு... எனக்கு பழிய ச்சே பழைய நியாபகம்லாம் வருது...மம்மி....
நோன்பு திறக்கும் வசதியை செய்து கொடுத்து, மாற்று மதத்தவரை கண்ணியபடுத்தி நட்புறவை வளர்க்கும்
இது போன்ற சகோதரர்கள் ஏராளம்.
புடவை விலையை சொன்னவுடன் தான் உஷார் உஷார் , தி நகர் அது எங்கே இருக்கு? எப்பா தப்பிச்சோம்.
தீஈஈஈ.. நகர் அனுபவம்.. அருமையா சொல்லியிருந்தீங்க..
ஒரே ஒரு முறை தான் சென்னையில் ஷாப்பிங் செய்ய போனேன்...
கடைக்குள்ள போனது தான் தெரியும்... அங்க உள்ளவங்களே...
நம்ம, உள்ள தள்ளிட்டு போய்... விட்ருவாங்க...
வெளில வரும் போதும் அப்படியே.. ஒரு இடமா நின்னிங்கன்னா..
அவங்களே உங்கள தள்ளி கொண்டு வந்து வெளில விட்ருவாங்க...
ப்ரீ சர்வீஸ்... :-))))) செம கூட்டம் தாங்க..
வந்துட்ட்டேஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்..!!!
//இஃப்தார் நேரத்தில்.உணவகத்தில் அமர்ந்து கொண்டு போன் செய்தால் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. கடைசி வரை ஆன் செய்யவே இல்லை.//
யக்கோவ் இது பிசினஸ் டிரிக் ஹய்யோ......ஹய்யோ (( பேட்டரி சார்ஜ் இல்லாம இருக்கலாம் ))
//ஹெல்த் பிளஸ் செருப்பு 140 ரூபாய்க்கு வாங்கினேன்.அதே செருப்பை என் பக்கத்து வீட்டுத்தோழி பெரிய கடையில் 90 ரூபாய்க்கு வாங்கி இருக்கின்றார்.ஒரு செருப்பிலேயே 50 ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்தால்//
இதுல கணக்கு சரியா வரலியே நல்லா படிங்க தாய் குலமே..!!
140 ரூபாயா இல்ல வெறும் 40 ரூபாயா..???
வெறும் 40 ஆ இருந்தாதான் 40 + 50 = 90 ஆகும்
உங்க கணக்குப்படி லாபம் 50 இல்லாட்டி ........???
ச்சே.. ஜெய்லானியை சந்தேகம் கேக்காம விட மாட்டாங்க போலிருக்கே இந்த பதிவுலகம்
//ஒரு அலங்காரமான பெட்டிக்குள் இருந்த பட்டுப்புடவையின் விலை என்ன தெரியுமா? 2.5லட்ச ரூபாய்.அடுத்த முறை போகும் பொழுது மறக்காமல் கடை நிர்வாகியிடம் அனுமதி பெற்று போட்டோ எடுத்து தனிப்பதிவே போடவேண்டும்.(ரங்கமணிகளே உஷார்.) //
ஏன் இந்த கொல வெறி ..எத்தனை நாளா இப்பிடி ..ஹி..ஹி.. போகும் போது வீட்டு பத்திரத்தையும் கொண்டு போகனுமா ..!!
//தி.நகர் போத்தீஸில் நோன்பு திறக்கும் சமயம் நோன்பாளிகள் எல்லாரும் வந்து நோன்பு திறந்து செல்லும்படி அனவுன்ஸ் செய்கின்றார்கள்//
//ஜி.என் செட்டி ரோடில் இருக்கும் விருதுநகர் ஹோட்டலில் சஹர் நேரத்தில் நோன்பாளிகளுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர்.//
இதை கேக்கும் போதே இணிமையா சந்தோஷமா இருக்கு :-))))
ஏதோ, படிச்சுப் பார்த்து வைப்போம். பின்னால உதவும். ;)
தீ ஈஈ நகர் இந்த நெரிசலைல் எபப்டி போட்டோ எடுத்தீங்க.
நானும் தீநகர் வந்த போது இருந்த டென்ஷனில் போட்டோ எடுக்கல.
தீநகர் பக்கம் ஷாப்பிங்க் போவதா இருந்தால். காலை 10 மணி அல்லது மதியம் 3 மணி சரியான நேரம்.கொஞ்சம் பிரியா பார்க்கலாம்/
அந்த விருதுநகர் ஹோட்டல் காரர் ரொம்ப நல்லவர்
கடைசியா உங்களுக்கே உரித்தான வரிகள்//உங்க ஹோட்டல்கார ஃப்ரண்டு விவரமானவங்களாத் தெரியிறாங்க!! உங்க ஃப்ரண்டாச்சே!!//
பின்னே?
ஷாப்பிங் சுகமான அனுபவமாக இருக்கனும்.. ஆனால் சென்னை தீ...........நகரை பார்த்தாலே டெண்ஷன் தலைக்கு மேல் ஏறும் .. வேறு வழியில்லை அங்கு தான் போய் ஆகனும்...
பெருநாள் பர்சஸ் முடிந்துவிட்டதா..
ஓவ்வொருமுறையும் வீட்டுகாரர் கிட்ட திட்டு வாங்கிகொண்டே எப்படியும் வலம்வந்துவிடுவேன்..
ஹோட்டல் பெயர் என்னு எனக்கு மட்டும் சொல்லுங்க..
அல் பைக்(al baiq family restaurant)ரெங்கநாதன் தெருவுக்கு இரண்டாவது தெருவான ரங்கன் தெருவில் taz kamar inn வளாகத்தில் உள்ளது.டிரை பண்ணிப்பாருங்கள் சகோ ஜமால்.கருத்துக்கு நன்றி!
ஆசியா தோழி,நீங்க முதலில் சென்னைக்கு வாங்க.நான் கூட்டிப்போகின்றேன்.கருத்துக்கு நன்றி தோழி.
கீதா ஆச்சல் உங்கள் கருத்துக்கு நன்றி
//அடுத்தமுறை தீ நகர் கூப்பிட்டா உன்னை என்ன பண்ணுவேண்ணு தெரியாதுன்னு சொல்லி ஊர் வந்து சேர்ந்தோம்.// மேனகா இந்த வரிகள் எனக்கு சிரிப்பைத்தந்தது.
2006 இல் ஐந்து ரூபாய்க்கு செருப்பு வாங்கினீர்களா இலா?அதை இன்னுமும் வைத்து இருக்கின்றீர்களா?ஆச்சரியம்தான்.
நன்றி சித்ரா கருத்துக்கு.
/மலைக்கோட்டைப் பிள்ளையார் இருக்கும் தெப்பக்குளம் பரவாயில்லை போல இருக்கே!// அந்த தெப்பகுளத்தை நான் பார்த்ததில்லையே வானதி.
//பெருநாள் கொண்டாட்டம் இப்பவே ஆரம்பமா அக்கா// ரியாஸ் தம்பி தி நகர் போறது கொண்டாட்டமாகவா தெரிகின்றது உங்களுக்கு?
//என்னதான் தீ யா இருந்தாலும் தி நகர் தி நகர்தான் ஸாதிகா.. நெரிசலும் நெருக்கடியுமிருந்தாலும் எல்லா தரப்பு மக்களும் ஷாப்பிங் செய்யலாம்.// இல்லை தேனம்மை.இதில் எனக்கு உடன் பாடில்லை.நான் வசிக்கும் இடத்திற்கு அருகிலே இருந்தாலும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை போவது கூட அதிசயம்தான்.ஏதோ இலவசமாக பொருள் வாங்குவது போல் சே..சே..
ஹை..சீமான் கனி திநகரை காட்டியதும் மம்மி நினைப்பு வந்து விட்டதா?
//நோன்பு திறக்கும் வசதியை செய்து கொடுத்து, மாற்று மதத்தவரை கண்ணியபடுத்தி நட்புறவை வளர்க்கும்
இது போன்ற சகோதரர்கள் ஏராளம். // உண்மைதான் இளம் தூயவன்.இப்படி சிலர் இருக்கின்றார்கள்.
// ஒரு இடமா நின்னிங்கன்னா..
அவங்களே உங்கள தள்ளி கொண்டு வந்து வெளில விட்ருவாங்க...
ப்ரீ சர்வீஸ்... :-)))// உண்மைதான் ஆனந்தி கருத்துக்கு நன்றி
//யக்கோவ் இது பிசினஸ் டிரிக் ஹய்யோ......ஹய்யோ (( பேட்டரி சார்ஜ் இல்லாம இருக்கலாம் // இருங்க ஜெய்லானி அந்த ஹோட்டல்கார அக்காவிடம் சொல்லி உங்கள் வலைப்பூவில் பின்னூட்டம் போட சொல்லுகின்றேன்.
//
இதுல கணக்கு சரியா வரலியே நல்லா படிங்க தாய் குலமே..!!
140 ரூபாயா இல்ல வெறும் 40 ரூபாயா..???
வெறும் 40 ஆ இருந்தாதான் 40 + 50 = 90 ஆகும்
உங்க கணக்குப்படி லாபம் 50 இல்லாட்டி ........???
// இது பாருங்க ஜெய்லானி,என்னை இப்படி எல்லாம் கேள்வி கேட்டு கடைசியில் ஏர்வாடிக்கு அனுப்பி வைக்க கங்கனம் கட்டிக்கொண்டிருக்கின்றீர்கள் என்று சந்தேகப்படுகிறேன்.நியாயமா?
//ஏன் இந்த கொல வெறி ..எத்தனை நாளா இப்பிடி ..ஹி..ஹி.. போகும் போது வீட்டு பத்திரத்தையும் கொண்டு போகனுமா ..!!// ஜெய்லானி இந்தியா வரும் பொழுது 2.5 லட்ச ரூபாயை ஒரு பிரீப்கேசுக்குள் தனியா கொண்டு வந்து தங்கமணிக்கு இந்த புடவை வாங்கிக் கொடுத்து அசத்தப்போறீங்கதானே?
//ஏதோ, படிச்சுப் பார்த்து வைப்போம். பின்னால உதவும். ;)// ஹா..ஹா.. நன்றி இமா
ஜலீலா,முதல் நாண்கு போட்டோக்களும் நான் வண்டியில் இருந்தபடி எடுத்தது.கடைசி இரண்டு சுட்டது.
கருத்துக்கு நன்றி பாயிஷா.ஹோட்ட்ல் பெயர் சொல்லி விட்டேன்.
தி.நகர் கட்டுரை நல்ல பகிர்வு..
இது என்ன பட்டணமா ?
இல்லை பிரியாணி பொட்டலமா ?
இதுவே எங்க ஊரா இருந்த விட்டுருவனாக்கும் இந்த நாட்டாமை.
எல்லாரையும் பிடிச்சு ஊரைவிட்டு ஒதிக்கி வச்சுப் புடுவேன்லே.
ஒருத் தைய்யல் தக்கிரவன் வெட்டி வெட்டி பொழுதைக் கழிச்சா தப்பில்லை.
இப்படி கூட்டம் கூட்டமா எங்கே போறோம், எதுக்கு போறோம்னுத் தெரியாமல் பொழுதைக் கழிச்சாத்தான் தப்பு.
இங்கு நான் தீர்ப்பு சொன்னால் சிரிப்பானுக.
அதுனாலே நான் வர்றேன் "நாட்டாமைன்னு"ப்ளாக் தொடங்கப் போறேன்.
வந்துக் கலந்துக்குடுங்க அக்கா.
// இது பாருங்க ஜெய்லானி,என்னை இப்படி எல்லாம் கேள்வி கேட்டு கடைசியில் ஏர்வாடிக்கு அனுப்பி வைக்க கங்கனம் கட்டிக்கொண்டிருக்கின்றீர்கள் என்று சந்தேகப்படுகிறேன்.நியாயமா? ..//
அந்த கணக்கு நிங்க போட்ட கணக்கு தாங்க. நா கேட்டது அதுல சந்தேகம் மட்டுமே,,ஹி..ஹி...
ஸாதிகா அக்கா படங்கள் எடுத்துப்போட்டுக்காட்டி, தி நகரை தெரியப்படுத்திவிட்டீங்கள். அதுசரி அங்கு எப்பவும் இப்படியா சனத்திரள் இருக்கும்.
இருப்பினும் தி.நகரை.... “ஈ” எனச் சொல்லியிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்......(மிகுதியை நீங்களே முடிச்சுக்கொள்ளுங்க:)).
அக்கா அடுதமுறை ஊர் வரும்போது இந்த தீஈஈஈஈஈஈ யில் நாமளும் கொஞ்சம் குளி காயனும் அதுக்கு நீங்க தான் விறகு சுள்ளியெல்லாம் ரெடிபண்ணனும் ஓகேவா.
பதிவு கலக்கல்.
தி.நகர், ‘ தீ ‘ நகராக மாறி வரும் அனுபவங்களை சுவைபட எழுதியிருக்கிறீர்கள் ஸாதிகா1 சென்னைவாசிகளுக்கே இத்தனை கஷ்டம் என்றால் எங்களைப்போன்ற வெளியூர் வாசிகள் என்ன செய்வது? இந்த மாதிரி இடங்களுக்கு ஷாப்பிங் செய்வதென்றால் எப்போதுமே காரையும் டிரைவரையும் வெகு தூரத்தில் நிறுத்தி வைத்து விட்டு, ஆட்டோ பிடித்து வந்து ஷாப்பிங் செய்வதுதான் வழக்கம்! அதுதான் வசதியும் கூட!!
Post a Comment