August 4, 2010

பதிவுலகில் ஸாதிகா


சகோதரர் சீமான்கனி அவர்கள் அழைத்த தொடர் பதிவு.அழைப்புக்கு நன்றி சீமான்கனி.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

ஸாதிகா என் அம்மா அப்பா ஆசை ஆசையாக வைத்த அருந்தவப்பெயர். அடுத்து வருவது என் குடும்பப்பெயர்.இறுதியில் வருவது என் இறுதிகாலம் வரை மட்டுமல்லாமல் அதற்கப்புறமும் எனக்கே என்னவராக என்றென்றும் இருக்கவேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்யும் என் பெட்டர் ஹாஃபின் பெயர்.

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இதிலென்ன சந்தேகம்.ஸாதிகாவேதான்.ஆனாக்க ஏன் புனைப்பெயரில் வந்து இருக்கக்கூடாது என்று இப்ப ஃபீல் பண்ணுவதுதாங்க உண்மை.(இன்னும் சுதந்திரமாக எழுதலாமே)

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

காலடி இல்லேங்க.கையடி என்று சொன்னால்தான் பொருத்தமாக இருக்கும்.ஏன்னா கையாலேதானே டைப் பண்றோம்.பொதுவாக எழுதுவதில் ஆர்வம் உள்ள எனக்கு பிளாக் உலகம் என்று இருப்பது பார்த்ததுமே முன்னே பின்னே யோசிக்காமல் வசமா மாட்டிக்கொண்டேன்.பிளாக்ன்னா என்ன என்று சரியாக கூட புரிந்து கொள்ளாமல் ஆரம்பிக்கப்பட்டதுதான் என் பிளாக்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

பிரபலம் அடைந்து விட்டதா?இல்லேங்க!என்னுடைய டார்கெட் 1000 ஃபாலோவர்ஸ்.ஒரு இடுகைக்கு குறைந்தது ஒரு சதத்திற்கும் மேல் பின்னூட்டம்.அதற்குத்தான் யோசித்துக்கொண்டு இருக்கின்றேன்.இன்னும் பெரிசா ஒன்றும் செயல் படுத்தலேங்க.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

நிறைய பகிர்ந்து கொண்டதுண்டு.விளைவுகள் இனிமையான பின்னூட்டங்கள் தவிர வேறொன்றும் இல்லை.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பொழுது போக்காகத்தான் ஆரம்பித்தேன்.இப்பொழுது வேறெதிலும் பொழுதை செலுத்த மனமில்லாமல் இருப்பதுதான் என்னுடைய நிலை.இதில் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து விட்டால்..ஐயோ வேண்டவே வேண்டாம்.எனக்கும் பிள்ளைகுட்டிங்க இருக்கு.அதுகளை நன்றாக படிக்க வைத்து அவங்க நல்ல படி சம்பாதித்து உயர்வடைந்தால் போதும்.முக்கியமான விஷயம்.வலைப்பூவால் இனிய நட்புகள்,உடன் பிறவா பிறப்புகளின் அன்பை நிறைய சம்பாதித்து இருக்கின்றேன்.சம்பாதித்துக்கொண்டிருக்கின்றேன்.அது போதும் எனக்கு.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

மொத்தம் இரண்டு இது அனைவரும் அறிந்தது.அறியாதது ஒன்று.ஆனால் பதிவிடுவதில்லை.வேறொரு பெயரில் உள்ளது.(கண்டு பிடித்து சொன்னால் 10 பித்தளைக்காசுகள் பரிசாக வேண்டுமானல் வழங்குகின்றேன்.)நான் பதிவெழுதுவதைப்பார்த்து என் மகன்களுக்கும் ஆர்வமாகி அவர்களும் பிளாக் ஆரம்பித்து விட்டார்கள்.இது பெரியவரது பிளாக்.இது சிறியவரது பிளாக்.நான் தான் நன்றாக படிக்கின்ற வேலையை பாருங்கள் என்று பிளாக்குக்கு தடா போட்டு விட்டேன்.இருந்தாலும் நான் அசந்த சமயம் பெரியவர் பதிவிட்டு விடுவார்.(அவர் எழுதிய கதைகள் கத்தை கத்தையாக கப்போர்ட் லாஃப்டில் தூங்குகின்றது.)

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

இது இரண்டும் வந்ததில்லை.சிலரது இடுகைகளைப்பார்க்கும் பொழுது வருத்தம் ஏற்படும்.அவர்களது வலைப்பூ பக்கம் நான் எட்டிப்பார்ப்பதுடன் சரி.பின்னூட்டம் இடமாட்டேன்.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முதன் முதல் பிளாக் ஆரம்பித்து என் மகனிடம் காட்டினேன்.அவரது பின்னூட்டம்தான் முதல் பின்னூட்டம்.அது எனக்கு கிடைத்த நோபல் பரிசு.இந்த நிமிடம் வரை தினம் ஒரு முறையாவது என் பிளாக் பற்றி விசாரிக்கமட்டுமல்லாமல் மற்றவர்களுடைய பிளாக் பற்றியும் விசாரித்துக்கொள்வார்.


Blogger hamid kaashif said...

Mummy, I salute your wonderful work.
I thank God for you giving birth to me.
You're great.

--
Hamid காஷிப்

இதுதான் எனக்கு முதன் முதல் வந்த பின்னூட்டம்.எனக்கு கிடைத்த நோபல் பரிசு.


10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

என்னைப்பற்றி சொல்றதுக்கு பெரிசா ஒன்றுமே இல்லையே!

அனைவரது வலைப்பூவிலும் இந்த தொடர் அழைப்பு ஏனைய வலைப்பூதாரர்களால் அழைப்பிடப்பட்டுள்ளதால் நான யாரை அழைக்கட்டும்???






தங்கை மேனகா எனக்கு இந்த விருதினை மட்டுமல்லாமல் மேலும் ஆறு விருதுகளை அள்ளித்தந்து இருக்கின்றார்.விருதுகளை கை கொள்ளாமல் பெற்று மனம் நிறைய மகிழ்ச்சியுடன் மேனகாவுக்கு நன்றி கூறிக்கொள்கின்றேன்.

இது தங்கை பாயிஷா தந்த விருது.இவ்வளவு நாட்களாக லாக்கரில் பத்திரமாக பூட்டி பாதுகாத்து விட்டு இப்பொழுது உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.நன்றி பாயிஷா.

50 comments:

Menaga Sathia said...

அனைத்து பதில்களும் யதார்த்தமாக உள்ளது அக்கா..

நட்புடன் ஜமால் said...

100 பின்னூட்டமெல்லாம் ஒரு டார்க்கெட்டா

ஒரு சிரிப்பு பதிவு போடுங்க, 100 என்ன ... நீங்க போடுங்க அப்புறம் சொல்றேன்

athira said...

ஆ... ஸாதிகா அக்கா.... பூவுலக் பிரவேசம் பற்றி அழகாகச் சொல்லிட்டீங்கள்... நான் அழகாக்கிக்கொண்டிருக்கிறேன் சொல்ல:).

இன்னும் வளரட்டும் உங்கள் வலைப்பூ.

புல்லாங்குழல் said...

சகோதரி உங்கள் எண்ணம் நிறைவேற என் வாழ்த்துக்கள். உங்கள் அன்பு செல்வன் ஹாமித் காஷிபின் வார்த்தைகள் சந்தேகத்திற்கிடமின்றி நோபல் பரிசு தான். நமது கண்ணியத்திற்குரிய, நாகரீகமான ஒப்பனைகள் கலைந்த நிலையில் நாமாக நாம் இருக்கும் போது நம் முகத்தையும், அகத்தையும் பார்த்தவர்கள் நம் குடும்பத்தினர். அவர்கள் நம்மை ஏற்றுக் கொளவது என்பது சந்தேகத்திற்கிடமின்றி உங்கள் நல்ல மனதிற்கு கிடைத்த நோபல் பரிசு தான்.

ஸாதிகா said...

நன்றி மேனகா!

ஸாதிகா said...

//100 பின்னூட்டமெல்லாம் ஒரு டார்க்கெட்டா
// இதற்கு நான் எப்படி பதில் கொடுப்பது??

நாங்கள்ளாம் அதிகம் ஆசைப்படாத ஜாதி..ஹி..ஹி..

1000ன்னு போடுறதுக்கு பதிலாக 100 ன்னு தவறுதலாக போட்டு விட்டேன்.

அட போங்க ஜமால் தம்பி..எப்படித்தான் போட்டாலும் என்னுடைய பதில் பின்னூட்டங்களையும் சேர்த்து நூறைத்தாண்ட மாட்டேன் என்கின்றதே!உங்கள் ஆலோசனையைப்பற்றியும் சிந்திக்கறேன்.நன்றி!

ஸாதிகா said...

//ஆ... ஸாதிகா அக்கா.... பூவுலக் பிரவேசம் பற்றி அழகாகச் சொல்லிட்டீங்கள்..// அழகா என்ன உண்மையை சொன்னேன் அதிரா.இப்படி சிம்பிளா பின்னூட்டியதற்கு கர்ர்ர்ர்ர்ர்.....

ஸாதிகா said...

சகோதரர் நூருல் அமீன் உங்களின் பின்னூட்ட வரிகளில் மிக்க மகிழ்ச்சி.நன்றி!

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப அருமையான பதில்கள் ஸாதிகா அக்கா.. இறைவன் கிருபையினால் எல்லாமும் பெற்று மேலும் சிறக்கட்டும்.

சௌந்தர் said...

100 பின்னூட்டம் சாதாரண விசயம்....விரைவில் வரும் 100 100 பின்னூட்டம்

எம் அப்துல் காதர் said...

"பதிவுலகில் ஸாதிகா" மிக அருமையாய் சொல்லிடீங்கக்கா.

பிள்ளைகளை அறிமுகப் படுத்திய விதமும் அருமை.

அப்புறம் என்னமோ சொல்ல நெனச்சேனே அந்த
"பித்தளைக் காசுகள்" ரெடி பண்ணி வைங்க. விரைவில் வர்றேன்.

சீமான்கனி said...

அழைப்பை ஏற்று மின்னல் வேகத்தில் அசத்தலாய் தந்த பதிவுக்கு நன்றிகள் அக்கா ஜூனியர்களின் அறிமுகம் அழகு காஷிபின் முதல் பின்னுட்டம் நிஜமாவே சிறப்பான பொக்கிஷம்தான் அவர்களுக்கும் உங்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் அக்கா...

Mahi said...

அழகா சொல்லிட்டீங்க ஸாதிகா அக்கா! உங்கள் விருப்பபடி வலைப்பூ செழித்து வளர வாழ்த்துக்கள்!

'பெரியவரது' ப்ளாக்-ஐ பார்த்தேன்..கதைகளை மெதுவா படித்து பின்னூட்டமிடுகிறேன். இப்ப சமையலுக்கு நேரமாச்சு!:):)

CNC Job Offers said...

Allah promise I know about you as well i never read any article in your web but i like very that how were you introduce your son with his comment. Maasallah,
wish you all the best by the help of Allah.
கொஞ்சம் எங்கட ஊரு வெப்பையும் போய் பாருங்கோ......

தூயவனின் அடிமை said...

தெளிவாக கூறியுள்ளிர்கள். உங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்தும்.அன்பு சகோதரன்

ஜெய்லானி said...

//எப்படித்தான் போட்டாலும் என்னுடைய பதில் பின்னூட்டங்களையும் சேர்த்து நூறைத்தாண்ட மாட்டேன் என்கின்றதே//

இதெல்லாம் சீக்ரெட் பதில், ஒரு சாக்லெட் , ஐஸ்கிரீம் வாங்கிதரேன்னு சொன்னா சொல்றேன் ..

ஜெய்லானி said...

அழகா சொல்லி இருக்கீங்க ...

Chitra said...

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முதன் முதல் பிளாக் ஆரம்பித்து என் மகனிடம் காட்டினேன்.அவரது பின்னூட்டம்தான் முதல் பின்னூட்டம்.அது எனக்கு கிடைத்த நோபல் பரிசு.இந்த நிமிடம் வரை தினம் ஒரு முறையாவது என் பிளாக் பற்றி விசாரிக்கமட்டுமல்லாமல் மற்றவர்களுடைய பிளாக் பற்றியும் விசாரித்துக்கொள்வார்.


Blogger hamid kaashif said...

Mummy, I salute your wonderful work.
I thank God for you giving birth to me.
You're great.

--
Hamid காஷிப்


..... Cho Chweet!!!!!! It is a great blessing, indeed! :-)

GEETHA ACHAL said...

அனைத்து பதில்களும் மிகவும் அருமை...அதிலும் முதன்முதல் பின்னுட்டம் தான் highlight...வாழ்த்துகள்...கண்டிப்பாக கூடிய சீக்கிரத்தில் 1000 பாலோவர்கஸ் வருவாங்க..வாழ்க வளர்க....

Unknown said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

ஸாதிகா said...

உங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்டார்ஜன்.

ஸாதிகா said...

//100 பின்னூட்டம் சாதாரண விசயம்....விரைவில் வரும் 100 100 பின்னூட்டம்//மகிழ்ச்சி, நன்றி சௌந்தர்.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி சகோ அப்துல்காதர்.பித்தளைக்காசுகள் தயாராக உள்ளது.எங்கே கண்டு பிடியுங்கள் பார்ப்போம்.

ஸாதிகா said...

கருத்துக்களுக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி சீமான்கனி.//அழைப்பை ஏற்று மின்னல் வேகத்தில் அசத்தலாய் தந்த பதிவுக்கு //...மின்னல் வேகம்..ஹா..ஹா..

ஸாதிகா said...

கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி மகி.இந்த பதிவால் எத்தனை நட்புகளின் வாழ்த்துக்களைப்பெற்று இருப்பேன்.//.கதைகளை மெதுவா படித்து பின்னூட்டமிடுகிறேன்.// அவசியம் பார்த்து பின்னூட்டமிடுங்கள்.

ஹைஷ்126 said...

வாழ்க வளமுடன் !!!

வளர்க வலைபூஊஊஊ:)

Vijiskitchencreations said...

அக்கா நல்ல அருமையா பதில் சொல்லிட்டிங்க. குரு என்று தான் இனிமேல் நான் அழைக்கலாம் என்று முடிவெடுத்திட்டேன்.

மகன் ப்ளாக் பெரியவருது ஸூப்பர் * தாங்க.

நானும் உங்க கட்சி தான். நானும் ப்ளாக் ஆராம்பித்தது என் தோழிகளின் பாசதொல்லையா. அது என்னடான்ன சுத்தமா தினமும்அப்டேட் செய்ய முடியவே இல்லைங்க. என் சின்ன மக்ள் ஸ்கூல் போ தொடங்கினால் தான் முடியும். சரி அடுத்து எனக்கும் அதேன் தான் பாலோவார்ஸ் ஆகட்டும், பதிவுகள் ஆட்டும் நகரே வே மாட்டேங்குது அக்கா. அந்த கால் மீட்டர் கேஜ் வண்டி போல் தான் போகுது. பார்க்கலாம் ப்ராட்கேஜ் போல் போகுமா என்று வெயிட்டிங்க்.நல்ல கேள்வி பதில். வலைப்பூ வளர வாழ்த்துக்கள்.

Athiban said...

இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற பதிவுகளை படிக்க...

http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.html

vanathy said...

ஸாதிகா அக்கா, நல்லாஇருக்கு. உங்கள் மகனின் பின்னூட்டம் அருமை.
உங்கள் பெரியவரின் ப்ளாக் பார்த்தேன். நல்ல எழுத்து நடை. புலியிடமிருந்து எப்படி தப்பினார்கள் என்று சொன்ன விதம் அருமை.
ஆனால், நீங்கள் செய்தது தான் சரி. இந்த வயதில் ப்ளாக் பக்கம் விட்டால் படிப்பில் ஆர்வம் குறைந்து விடும். அதனால் தான் அங்கு பின்னூட்டம் கொடுக்கவில்லை. உங்களிடம் சொல்லிவிட்டேன். நீங்கள் மகனிடம் சொன்னாலும் சரி.

Priya said...

யதார்த்தமான பதில்கள். முதல் பின்னூட்டம் மகனிடம் இருந்து... இதைவிட வேறு என்ன சந்தோஷம் வேணும்!
அப்புறம் 1000 ஃபாலோவர்ஸ் விரைவில் கிடைக்க எனது வாழ்த்துக்கள்.

மனோ சாமிநாதன் said...

அனைத்தையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஸாதிகா! வாழ்த்துக்கள்!!

Thenammai Lakshmanan said...

என்னுடைய டார்கெட் 1000 ஃபாலோவர்ஸ்.ஒரு இடுகைக்கு குறைந்தது ஒரு சதத்திற்கும் மேல் பின்னூட்டம்.//நிறைவேறட்டும் எண்ணம் ஸாதிகா..
அருமையான பகிர்வு ..

Asiya Omar said...

பதிவுலகில் ஸாதிகா சூப்பர்.

Asiya Omar said...

http://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_8967.html
விருது பெற்றுகொள்ள அன்புடன் அழைகிறேன்.

சிநேகிதன் அக்பர் said...

பதில்கள் அனைத்தும் அருமை.

//பிரபலம் அடைந்து விட்டதா?இல்லேங்க!என்னுடைய டார்கெட் 1000 ஃபாலோவர்ஸ்.ஒரு இடுகைக்கு குறைந்தது ஒரு சதத்திற்கும் மேல் பின்னூட்டம்.அதற்குத்தான் யோசித்துக்கொண்டு இருக்கின்றேன்.இன்னும் பெரிசா ஒன்றும் செயல் படுத்தலேங்க.//

விரைவில் கிடைக்க வாழ்த்துகள்.

மின்மினி RS said...

அருமையான பதில்கள் ஸாதிகா அக்கா.. நான் மறுபடியும் எழுத ஆரம்பித்துள்ளேன். உங்களின் இந்த தொடர்பதிவை எழுதலாம் ஆசைப்படுகிறேன். அனுமதி கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

அன்புடன் மின்மினி.

Gayathri said...

மிக மிக அருமையாய் இருக்கு உங்க பதில்கள்...சீக்கிரமா உங்க கனவு நினைவாகும்...வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

வாழ்த்துக்கு மிக்க நன்றி ஹைஷ் சார்!

ஸாதிகா said...

விரைவில் பிராட்கேஜ் வண்டி போல் போகும் விஜி.கருத்துக்கு நன்றி1

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி.என் மகனின் பிளாக் பார்த்தமைக்கும் நன்றி வானதி.

ஸாதிகா said...

// 1000 ஃபாலோவர்ஸ் விரைவில் கிடைக்க எனது வாழ்த்துக்கள்.//வாழ்த்துக்களுக்கு நன்றி பிரியா!

ஸாதிகா said...

நன்றி மனோ அக்கா!ஊரில் இருந்து கொண்டும் அத்தனை பிஸியிலும் பின்னூட்டம் கொடுத்ததற்கு நன்றி!

ஸாதிகா said...

நன்றி சகோதரி தேனம்மை.

ஸாதிகா said...

கருத்துக்கும்,விருதுக்கும் நன்றி ஆசியா.

ஸாதிகா said...

நன்றி அக்பர்.

ஸாதிகா said...

நன்றி மின்மினி.நீங்கள் எழுதியது படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.நன்றி மீண்டும்

ஸாதிகா said...

நன்றி காயத்ரி.

Riyas said...

எல்லாம் அழகான பதில்கள் தொடர்ந்து எழுதங்கள் அக்கா.. இந்த தம்பியின் வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

நன்றி ரியாஸ்

mohamedali jinnah said...

please visit
பதிவுலகில் ஸாதிகா
http://seasonsnidur.wordpress.com/2012/07/27/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/