July 9, 2010

பெற்றோர்களே உஷார்

நான் வசிக்கும் பகுதி மிகவும் அமைதியாக இருக்கும்.இங்கு குடியிருப்பவர்களின் வாகனங்கள் தவிர பிற வாகனங்கள் தெருவில் ஓடுவது குறைவுதான்.திடீரென்று சில நாட்களாக பெருத்த சப்தத்துடன் சர் சர்ரென வரிசையாக பைக்களின் சப்தமும்,கூடவே கூச்சலும் வருவது வாடிக்கை ஆகிவிட்டது.

என்ன வென்று போய் பார்த்தால் 14 இல் இருந்து 17 வயதுக்குட்பட்ட கல்லூரி வாழ்க்கையில் நுழையாத பள்ளி மாணவர்கள் பைக்கில் பறந்து கொண்டு இருக்கின்றார்கள்.பைக்கின் வேகத்துக்கு அது ஒரு புறம் சாய்ந்து கொண்டு ஓடுவதைப்பார்க்கும் பொழுது பயமாக இருக்கும்.அதுவும் சாதாரண சன்னி,ஸ்கூட்டி போன்றவை இல்லாமல் 50 cc பைக்குகள் தான் இவர்கள் உபயோகிக்கக்கூடியவை.

தெருவில் நடந்து செல்பவர்கள் கூட இந்த பைக் ஓட்டிகளுக்கு பயப்படவேண்டிஉள்ளது. ஒரு அவென்யூவிலேயே பிளாட்பாரம் மீது ஏறி நடக்க வேண்டிய கட்டாயம்.மாலை வேலைகளில் வாக்கிங் செல்பவர்கள்,குழந்தைகளை பிரேமில் வைத்து தள்ளிக்கொண்டுப்போகும் தாய்மார்கள்,வயது முதிர்ந்தவர்கள் தன் வயது நண்பிகளுடன் உரையாடிக்கொண்டே மெது நடை நடத்தல் இந்த வழக்கம் எல்லாம் இந்த பைக் ஓட்டிகளால் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டு விட்டன என்றே சொல்லலாம்.

உச்சகட்டம் என்னவென்றால் வண்டி நிறைய பழங்களுடன் ஒரு பழவண்டிக்காரரின் வண்டியில் மோதி, பழம் அனைத்தும் தெருவில் ஆறாக ஓடிய காட்சியும் நடந்து இருக்கின்றது.

விசாரித்தில் அறிந்த விஷயங்கள் கண்டு அதிர்ந்து போனேன்.குறிப்பிட்ட அவென்யு உள்ளே குறிப்பிட்ட ரவுண்ட் சுற்றி சீக்கிரம் வந்து சேர்ந்தால் அதற்கு பணம் பரிசாக கிடைக்கிறது.

அதே போல் சற்று தூரம் சென்றாலே வந்து விடுகின்ற மவுண்ட் ரோடில் செமையான டிராஃபிக்கில் வேகமாக பைக்கை செலுத்தி யார் ஜெயிக்கின்றாரோ அவருக்கு பணம் பரிசு.

ஏழெட்டு மாணவர்கள் சேர்ந்து கொண்டு தலைக்கு ஒரு தொகையை போட்டு,அந்த ஏழெட்டு பேரும் அண்ணாசாலை டிராஃபிக்கில் வேகமாக,வாகன இடுக்குகளில் புகுந்து,நுழைந்து யார் முதலில் குறிப்பிட்ட இடம் வந்து சேருகின்றார்களோ அவர் ஜெயித்ததாக அறிவித்து மொத்த பணத்தையும் அள்ளிச்செல்லுகின்றனர்.

பெற்றோரே உஷாராக இருங்கள்.உங்கள் குழந்தைகளுக்கு இரு சக்கரவாகனம் நாம்தான் வாங்கிக்கொடுக்க வில்லையே என்று அஜாக்கிரதையாக இருந்து விடாதீர்கள்.இந்த விபரீதவிளையாட்டுகளில் ஈடுபடும் சிறுவர்கள் சொந்த வாகனத்தில்தான் பந்தயத்தை வைத்துக்கொள்ளுவார்கள் என்பது கிடையாது.

பதினெட்டு வயதானால்தான் இந்திய வாகன சட்டப்படி லைசென்ஸ் பெறலாம்.ஆனால் 13,14 வயதிலேயே இருசக்கர வாகனங்களை ஓட்டி சென்று போலீஸ் கண்களில் மாட்டினால் நூறோ,இருநூறோ கொடுத்து விட்டு தப்பித்து சென்று விடுகின்றனர்.இந்தபோக்கு மாறி,சிறுவர்கள் பைக் ஓட்டி பிடிபட்டால் அவர்கள் பெற்றோர்களுக்கு தெரிவித்து நடவடிக்கையை கடுமைப்படுத்த வேண்டும்.

பள்ளிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களாகத்தான் இருப்பார்கள்.கண்டிப்பாக லைசென்ஸ் பெற்று இருக்கமாட்டார்கள்.ஆனால் எத்தனை பள்ளிக்கூடங்களில் எட்டு,ஒன்பது படிக்கும்மாணவர்களே இருசக்கரவாகனத்தில் வந்து செல்கின்றனர்.படிப்புடன் பண்பையும்,நலவற்றையும் பயிற்றுவிக்க கடமைப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் கண்டு கொள்கின்றனாரா?இல்லையே.வண்டியை பள்ளி வளாகத்தினுள் விடுவதற்காக அதற்கொரு கட்டணத்தை தீட்டி, லாபம் கண்டு தவறுகளைத்தட்டிக்கேட்காமல் அல்லவா இருகின்றனர்.

நம் பிள்ளைக்குத்தான் பைக் நன்றாக ஓட்ட வருகின்றதே என்று பிள்ளைப்பாசத்தில் பிள்ளைகளுக்கு இருசக்கரவாகனம் வாங்கிக்கொடுக்கும் பாசமிகு பெற்றோரே சிந்தியுங்கள்.

எங்கே செல்லும் இந்த பாதை?????

67 comments:

LK said...

unmaithan .. parents should have control

ஸாதிகா said...

teSt

shadiqah said...

teSt

ஸாதிகா said...

பிறர் போடும் கமெண்ட் பப்லிஷ் ஆக வில்லை.உங்கள் யாருக்கேனும் இந்த பிரச்சனை உள்ளதா?

சௌந்தர் said...

பெற்றோகள் கவனிக்க வேண்டிய விஷயம்...

Mahi said...

உபயோகமான பதிவு ஸாதிகாக்கா!

சௌந்தர் said...

இந்த மதரி பிரச்சனை அனனவருக்கும் இருக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த மாதிரி பசங்ககிட்ட காசு வாங்கிட்டு விட்டுவிடும் போலிசை என்ன பண்ணலாம்.

athira said...

ஸாதிகா அக்கா, இளங்கன்று பயமறியாது, கேட்கவே என்னவோ செய்யுது. ஏதும் அசம்பாவிதம் நடந்து பேப்பரில் வரும்போதுதான், எல்லோரும் பெரிதாகப் பேசுவார்கள்.

நல்ல பதிவு. ஆனால் இது சென்னைப் பேப்பரொன்றுக்கு அனுப்பினீங்களென்றால், நிறையப்பேரைப் பாதுகாக்கலாம்(உண்மையாகத்தான் சொல்கிறேன்).

பி.கு:
உங்களால், உல்லாசமாக ரோட்டிலே, பயமில்லாமல் காத்துவாங்கிக்கொண்டு நடக்கமுடியவில்லையே ஆராவது இடித்துவிடுவார்களோ என்ற பயம்தானே ஸாதிகா அக்கா உங்களுக்கு?.. கிக்...கிக்..கீஈஈ:)))))))).

Chidambaram Soundrapandian said...

//...நம் பிள்ளைக்குத்தான் "பைக் நன்றாக ஓட்ட வருகின்றதே என்று" "பிள்ளைப்பாசத்தில்" பிள்ளைகளுக்கு இருசக்கரவாகனம் வாங்கிக்கொடுக்கும் பாசமிகு பெற்றோரே சிந்தியுங்கள்.//

ஹி..ஹி...
இவ்வளவு நல்லவங்களா இருக்கீங்களே...

பிள்ளைங்க தறுதலைங்க ஆகுறதுக்கு முக்கால்வாசி காரணம்,
பெத்தவங்களோட பாசம் இல்ல, கையாலாகாத்தனம்.

பெல்டால வெளாசுற அப்பங்களையும், கெரண்டியால சாத்துற
அம்மாவையும் இப்ப தேடுனா கூட கெடப்பாங்களான்னு தெரியல...

http://vaarththai.wordpress.com

எம் அப்துல் காதர் said...

//பிறர் போடும் கமெண்ட் பப்லிஷ் ஆக வில்லை.உங்கள் யாருக்கேனும் இந்த பிரச்சனை உள்ளதா? //

ஆமாம், கடந்த நாலைந்து நாளாக, உங்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுதும் இந்த பிரச்சினை இருந்து வருது மேடம்.

//settings// இல் போய்,//comments// ஐ திறந்து, //pop up//ஐ, கிளிக்கி sign out ஆகி விடுங்கள். சரியாகி விடும்.

அருமையான பதிவு மேடம்!.

செ.சரவணக்குமார் said...

எங்கே செல்லும் இந்தப் பாதை??

உண்மைதான் அக்கா. கண்டிப்பாக யோசிக்கவேண்டிய, தீர்வு காணப்படவேண்டிய விஷயம்.

இருமுறை வாகன விபத்திற்குள்ளாகியிருக்கிறேன். அந்த வலி கொடுமையானது, நமக்கும் நம்மைச் சேர்ந்தவர்களுக்கும்.

நல்ல பகிர்வுக்கு நன்றி அக்கா.

ஸாதிகா said...

chitravel has left a new comment on your post "யாதும் ஊரே":

Awesome story !This story is going to be my permanent book mark!!

Keep up the good work!

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

தற்போதைய நடைமுறைகளை பயத்துடன் உற்று நோக்கும் ஒரு சிறந்தப் பதிவு . சிந்திக்க வேண்டிய ஆதங்கங்கள் அனைத்தும் அருமை . பகிர்வுக்கு நன்றி

Mrs.Menagasathia said...

அவசியமான நல்ல பதிவு!!

அக்பர் said...

பெற்றோர்கள் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டிய விசயம்.

vanathy said...

எல்லோருடைய பெற்றோருக்கும் பிள்ளைகளின் நடவடிக்கைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதோடு பணத் தேவைக்காக வேலைக்கு செல்லும் பெற்றோர்களுக்கு இதெல்லாம் கண்டு கொள்ள நேரமிருக்காது. அமெரிக்கா போல சம்மர் ஸ்கூல் இருந்தால் பிள்ளைகள் கொஞ்சம் உருப்படுவார்கள் அல்லது ரோட்டில் திரியும் நேரம் குறைந்து விடும்.

மனோ சாமிநாதன் said...

அருமையான விழிப்புணர்வுப் பதிவு ஸாதிகா! அதிரா சொல்வது போல ஏதேனும் முக்கிய நாளிதழுக்கு இந்தக் கட்டுரையை அனுப்பி வைக்கலாம். நிறைய பெற்றோருக்கு எச்சரிக்க மணியாக இருக்கும்.

என் பதிவை ‘ தமிழிஷில்’ பதிவு செய்ததற்கு அன்பு நன்றி ஸாதிகா!

Riyas said...

நல்ல பதிவு அக்கா..

எங்க இந்த பக்கம் கானோம்.

http://riyasdreams.blogspot.com/2010/07/blog-post_09.html

இளம் தூயவன் said...

சரியாக சொன்னிர்கள் சகோதரி. இன்றைய காலகட்டம் பிள்ளைகளின் மீது நம் முழு கவனத்தையும் செலுத்த கூடிய சூழ்நிலைக்கும் உட்படுத்தபட்டுள்ளோம்.

இலா said...

ஷாதிகா ஆன்டி! நல்ல பதிவு! காலம் சென்றபின் எதுவுமே வராது... குழந்தைகள் ஒரு பொருளை விரும்பினாலும் அது அவர்கள் வயதுக்கும் மன முதிர்ச்சிக்கும் ஏற்றதுதானா என்று பார்த்து வாங்கி தர வேண்டும்...

கலாநேசன் said...

பெற்றோர்கள் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டிய விஷயம்.

கலாநேசன் said...

பெற்றோர்கள் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டிய விஷயம்.

thenammailakshmanan said...

நம் பிள்ளைக்குத்தான் பைக் நன்றாக ஓட்ட வருகின்றதே என்று பிள்ளைப்பாசத்தில் பிள்ளைகளுக்கு இருசக்கரவாகனம் வாங்கிக்கொடுக்கும் பாசமிகு பெற்றோரே சிந்தியுங்கள்.//


சரியான அறிவுரை ஸாதிகா

வல்லிசிம்ஹன் said...

ஸாதிகா,
மிகப் பயனுள்ள பதிவு. இப்போதுதான் புரிகிறது. ஏன் இத்தனை பைக்குகளில் இந்தப் பசங்க காரை ஓட்ட விடாமல் நெருக்கி ஓட்டுகிறார்கள் என்று.
இரண்டு வருடம் முன் ஒரு புதுவருடக் கொண்டாட்டத்தில் 18 வயதுப் பையன் மதுவும் அருந்திவிட்டு,மோட்டார் பைக் ஓட்டப் போய் ,பில்லியன் ரைடராக வந்த அப்பாவிப் பையன் இசிஆர் ரோடில் மேலுலகம் பயணித்துவிட்டான்.
எங்கே போகிறோம் என்றே புரியவில்லை

ஸாதிகா said...

உண்மைதான் எல்.கே.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

//சௌந்தர் said...
பெற்றோகள் கவனிக்க வேண்டிய விஷயம்...//கண்டிப்பாக சௌந்தர்

ஸாதிகா said...

நன்றி மஹி

ஸாதிகா said...

//இந்த மாதிரி பசங்ககிட்ட காசு வாங்கிட்டு விட்டுவிடும் போலிசை என்ன பண்ணலாம்// என்ன செய்யலாம்.மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை ஒரே மாதிரித்தான் இருக்கின்றாரக்ள்.எங்கு போய் கம்ப்ளைண்ட் பண்ணுவது?நன்றி ரமேஷ்.

angelin said...

well said sister,parents should have a control over their children.most of the bikes are modified also. .i saw a programme in tv also about this .but i dont know how many parents wouldve watched it..

ஸாதிகா said...

//ஆனால் இது சென்னைப் பேப்பரொன்றுக்கு அனுப்பினீங்களென்றால், நிறையப்பேரைப் பாதுகாக்கலாம்(உண்மையாகத்தான் சொல்கிறேன்).
// நல்ல ஐடியாதான் அதிரா.//உங்களால், உல்லாசமாக ரோட்டிலே, பயமில்லாமல் காத்துவாங்கிக்கொண்டு நடக்கமுடியவில்லையே ஆராவது இடித்துவிடுவார்களோ என்ற பயம்தானே ஸாதிகா அக்கா உங்களுக்கு?.. .// என்னை விடுங்க..எங்கள் ஏரியா வாசிகளுக்கு ரொம்பவே ஆதங்கம்.

ஸாதிகா said...

//பிள்ளைங்க தறுதலைங்க ஆகுறதுக்கு முக்கால்வாசி காரணம்,
பெத்தவங்களோட பாசம் இல்ல, கையாலாகாத்தனம்.
// உண்மையான வார்த்தைகள் சிதம்பரம் சவுந்தரபாண்டியன் அவர்களே!காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பும்,தண்டவாளத்தில் விழுந்து சாவைத்தேடிக்கொள்ளும் அவலங்களையும் பத்திரிகைகளில் பார்க்கும் பொழுது பெற்றோர்கள் தங்களை கையாலாகாதனக்காரர்கள் ஆக மாற்றிக்கொள்கின்றார்களோ என்னவோ!

ஸாதிகா said...

சகோதரர் அப்துல் காதர்.உடன் உதவிக்கு மிக்க நன்றி.நீங்கள் சொன்ன படி செய்தேன்.இப்பொழுது சரியாகி விட்டது.நன்றி.

seemangani said...

//போலீஸ் கண்களில் மாட்டினால் நூறோ,இருநூறோ கொடுத்து விட்டு தப்பித்து சென்று விடுகின்றனர்.இந்தபோக்கு மாறி,சிறுவர்கள் பைக் ஓட்டி பிடிபட்டால் அவர்கள் பெற்றோர்களுக்கு தெரிவித்து நடவடிக்கையை கடுமைப்படுத்த வேண்டும்.//

நிச்சயமாய் இதை நடைமுறை படுத்த வேண்டும் அக்கா...அரபு நாடுகளில் இந்த நிகழ்வு சர்வ சாதாரணம் அக்கா...10-12 வயது வாண்டுன்கலாம் கார் ஓட்டிகிட்டு பண்ணற அட்டகாசம் தாங்க முடியாது.

ஜெய்லானி said...

பைக் ஓட்டுறதுக்கு அவங்க அம்மா அப்பா என்ன செய்வாங்க பாவம் ..!இதுக்கு ஒரு தடவை கீழே விழுந்து முட்டி உடைஞ்சா சரியாகும் . இல்லாட்டி நாமே பிடிச்சி தள்ளி விடனும் .நீங்க எதுக்கு சின்ன அவின்யூல பிளாட் ஃபோமில நடக்கனும் . சொன்னா கேக்குற வயசா அது..??

ஜெய்லானி said...

முன்ன போட்டது டெரரான பதில் , இப்ப மொக்கை பதில்

மக்கள் எதுக்கு பகல்ல வெய்யில்ல போகனும் ராத்திரி ஒரு 10 டூ 3 வரை வாக்கிங் போகலாம் . தேவைபட்டா குடை கொண்டு போகலாம். ரொம்ப பனிபேயுமில்லையா அதான்

அப்புரம் அந்த சின்ன பிள்ளைகள் தொந்திரவும் இருக்காது ஹி..ஹி..


ஸாதிகாக்கா இன்னும் பதில் வேனுமா..? ஹா..ஹா..

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி சரவணக்குமார்

ஸாதிகா said...

chitravel தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

//தற்போதைய நடைமுறைகளை பயத்துடன் உற்று நோக்கும் ஒரு சிறந்தப் பதிவு .// பனித்துளி ஷங்கர் மிக்க நன்றி.

ஸாதிகா said...

மேனகா கருத்துக்கு மிக்க நன்றி.

kavisiva said...

உண்மைதான் சாதிகா அக்கா! இளம்கன்றுகள் பயமறியாமல் பைக்குகளில் சீறிப்பாயும் போது மனம் பதறுகிறது.பெற்றோர்கள் கவனித்தால் நன்று.

pinkyrose said...

wonderful lines unga comment box mela..
thappa eduthukkathinga ithu neenga eluthunathaa illa yaarachum periyavanga sonnatha? apdina yaaar avanga ?
coz this lines impressed me plz don mistake...

pinkyrose said...

wonderful lines unga comment box mela..
thappa eduthukkathinga ithu neenga eluthunathaa illa yaarachum periyavanga sonnatha? apdina yaaar avanga ?
coz this lines impressed me plz don mistake...

சிநேகிதி said...

மிகவும் பயனுள்ள பதிவு அக்கா.பெற்றோகள் கவனிக்க வேண்டிய விஷயம்

ஸாதிகா said...

அக்பர் கருத்துக்கு நன்றி!

ஸாதிகா said...

/// அமெரிக்கா போல சம்மர் ஸ்கூல் இருந்தால் பிள்ளைகள் கொஞ்சம் உருப்படுவார்கள் அல்லது ரோட்டில் திரியும் நேரம் குறைந்து விடு/// யோசிக்க வேண்டிய விஷயம் தான் வானதி.

ஸாதிகா said...

ரொம்ப நன்றி மனோ அக்கா!

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி ரியாஸ்.//எங்க இந்த பக்கம் கானோம்.// எப்பவோ வந்து விட்டேனே.

ஸாதிகா said...

//பிள்ளைகளின் மீது நம் முழு கவனத்தையும் செலுத்த கூடிய சூழ்நிலைக்கும் உட்படுத்தபட்டுள்ளோம்.//உண்மை வரிகள் இளம் தூயவன் கருத்துக்கு நன்றி!

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி இலா

ஸாதிகா said...

கருத்துக்கும்நன்றி கலா நேசன்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி சகோ தேனம்மை

ஸாதிகா said...

//இரண்டு வருடம் முன் ஒரு புதுவருடக் கொண்டாட்டத்தில் 18 வயதுப் பையன் மதுவும் அருந்திவிட்டு,மோட்டார் பைக் ஓட்டப் போய் ,பில்லியன் ரைடராக வந்த அப்பாவிப் பையன் இசிஆர் ரோடில் மேலுலகம் பயணித்துவிட்டான்// இது போல் அன்றாடம் நாம் பார்க்கும்,அறியும் விஷயங்கள் தான்.என்ன செய்வது? கருத்துக்கு நன்றி சகோ வல்லிசிம்ஹன்.

ஸாதிகா said...

ஜெய்லானி உங்க டெரர் பின்னூட்டத்திற்கான பதில்.உங்கள் பில்ளைகள் டீனேஜ் வயது ஆனதற்கப்புறம் இதே வார்த்தைகளை சொல்கின்றீர்களா என்று பார்க்கலாம்.மொக்கை பின்னூட்டத்திற்கான பதில் அர்த்த ராத்திரியில் குடை பிடிக்க சொல்லுகின்றீர்களா?எங்கே சார்ஜா ரோட்டில் ஒரு முறை நடந்து காட்டுங்கள் பார்ப்போம்.

ஸாதிகா said...

//இளம்கன்றுகள் பயமறியாமல் பைக்குகளில் சீறிப்பாயும் போது மனம் பதறுகிறது.// பதறத்தான் செய்கின்றது .இந்த இளம் ரத்தங்களுக்கு சீரியஸ்னெஸ் புரிய மாட்டேன்கின்றதே?நன்றி கவிசிவா

ஸாதிகா said...

pinkyrose கமெண்ட் பாக்ஸில் இருப்பது எப்பொழுதோ எங்கோ படித்தவை.கூடவே எனது சொந்த வரிகளையும் சில சேர்த்துக்கொண்டேன்.நன்றி.

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//ஜெய்லானி உங்க டெரர் பின்னூட்டத்திற்கான பதில்.உங்கள் பில்ளைகள் டீனேஜ் வயது ஆனதற்கப்புறம் இதே வார்த்தைகளை சொல்கின்றீர்களா என்று பார்க்கலாம்.//
உண்மைதான் பாசம் அப்படி சொல்ல சொல்லாது. ஆனா ஒரு பழமொழி இருக்கே அடி உதவுவது மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டாங்கன்னு. அந்த அர்ததில் சொன்னேன்.

//மொக்கை பின்னூட்டத்திற்கான பதில் அர்த்த ராத்திரியில் குடை பிடிக்க சொல்லுகின்றீர்களா?எங்கே சார்ஜா ரோட்டில் ஒரு முறை நடந்து காட்டுங்கள் பார்ப்போம் //

ஆத்தாடி..!! ஏன் நா நல்லா இருக்குறது பிடிக்கலையா..அவ்வ்வ்வ்
( இப்பிடி கேள்வியை திருப்பி கேப்பீங்கன்னு தெரியாதே எனக்கு )

Vijiskitchen said...

அக்கா எப்படி இருக்கிங்க? நீண்ட நாட்களுக்கு பின் இப்ப தான் வர முடிந்தது.

நல்ல பதிவு. என் அப்பா கூட இதே போல் அடிக்கடி சொல்வார் என்ன தானோ இந்த மாதிரியா ஒட்டுவது. பெற்றோர்கள் கவனிக்கவே மாட்டர்ர்களா என்று அடிக்கடி சொல்வார். சரியா சொன்னிங்க. நிங்க அதிரா சொல்வது டி.நகர் டைம்ஸ் என்று ஒரு நாளிதழ் இருக்கு அதற்க்கு போன் செய்து மைல் ஐடி இருந்தால் ஒரு பதிவு அனுப்புங்க. கண்டிப்பா பப்ளிஷ் + விழிப்புனர்வு வரும்.

asiya omar said...

ஒரு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்திய இடுகை.பாராட்டுக்கள் தோழி.

அப்பாவி தங்கமணி said...

நல்ல பதிவுங்க... கேட்டா பயமாத்தான் இருக்கு

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி விஜி.

ஸாதிகா said...

நன்றி ஆசியா

அஸ்மா said...

ஸாதிகா அக்கா, நலமா? //தெருவில் நடந்து செல்பவர்கள் கூட இந்த பைக் ஓட்டிகளுக்கு பயப்படவேண்டிஉள்ளது.// கரெக்ட்டா சொன்னீங்க. சும்மாவே வேகமா போற டூவீலர்ஸ் பார்த்தாலே பயமாயிருக்கும், இதுல வேற போட்டியா..? என்னைப் பொறுத்தவரைக்கும் இதப் பார்த்துட்டு, காசுக்காக கண்டுக்காம விடுற போலீஸ்களைதான் முதல்ல உதைக்கணும். பிறகு எல்லாம் தன்னால சரியாயிடும். பயனுள்ள‌ பதிவு!

அஸ்மா said...

ஸாதிகா அக்கா, நலமா? //தெருவில் நடந்து செல்பவர்கள் கூட இந்த பைக் ஓட்டிகளுக்கு பயப்படவேண்டிஉள்ளது.// கரெக்ட்டா சொன்னீங்க. சும்மாவே வேகமா போற டூவீலர்ஸ் பார்த்தாலே பயமாயிருக்கும், இதுல வேற போட்டியா..? என்னைப் பொறுத்தவரைக்கும் இதப் பார்த்துட்டு, காசுக்காக கண்டுக்காம விடுற போலீஸ்களைதான் முதல்ல உதைக்கணும். பிறகு எல்லாம் தன்னால சரியாயிடும். பயனுள்ள‌ பதிவு!

ஒ.நூருல் அமீன் said...

சமூக அக்கறையுடன் கூடிய உங்கள் சிந்தனை வரவேற்கபட வேண்டிய ஒன்று.நன்றி சகோதரி உங்கள் நல்ல பதிவுக்கு.

ஸாதிகா said...

அஸ்மா!விசாரிப்புக்கு நன்றி.நீங்கள் நலமா?புதிய பிளாக் ஆரம்பித்து இருக்கின்றீர்கள்.வாழ்த்துக்கள்.தொடர்ந்துவாருங்கள்.

ஸாதிகா said...

சகோதரர் ஒ.நூருல் அமீன் உங்கள் முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.தொடர்ந்து வாருங்கள்.