நேற்று மத்தியானப்பொழுது.வீதியில் தங்கத்தை கரைத்து அப்படியே ஊற்றி விட்டாற்போல் பொன்னிற கதிரவனின் செங்கதிர்கள்.மதிய உணவுக்கும் பின் ஓய்வெடுக்கும் அமைதி வீதியின் நிசபத்ததிலேயே தெரிகிறது.வழக்கம் போல் அமைதியாக இருந்து குர் ஆன் ஓதிக்கொண்டிருந்த பொழுது அந்த அழகான அமைதியை கலைக்கும் விதமாக பயங்கரக்கூக்குரல்.
சிறுவர்களின் அட்டகாசம்,சிரிப்பு,ஓ..என்ற சப்தம்.எரிச்சல் அடைந்து அவர்களை விரட்டிவிடும் நிமித்தமாக வெளியே வந்தால் பிளாட் பாரத்தில் அழகானதொரு பிளாக் பாரஸ்ட் கேக்.சுற்றிலும் சிறுவர்கள்.உற்சாகக்கூக்குரலால் கும்மாளம் போட்டுக்கொண்டு இருந்தார்கள்.
சிறுவர்களின் உற்சாகத்துள்ளலை நேரில் பார்த்ததும் என் கோபம் சற்று தணிந்து என்ன செய்கிறார்கள் என்று ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்தேன்.
பள்ளியில் 11ஆம் வகுப்பு பாடம் முடிந்து 12 ஆம் வகுப்புப்பாடம் ஆரம்பித்து விட்டதாம்.ஆதலால் கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள் தெருவில் வைத்து.
என்னையும் சுவாரஸ்யம் தொற்றிக்கொண்டது.இதற்கெல்லாமா கேக் கட் செய்து கொண்டாடுவார்கள்?ஆர்வத்துடன் வீட்டினுள் திரும்பி வந்து கேமராவுடன் வந்தேன்.
"பசங்களா..போட்டோ எடுக்கட்டுமா"
"ஒகே ஆண்ட்டி"
"அது மட்டுமல்ல..என் பிளாக்கிலும் போடப்போகிறேன்"
"தாராளமா ஆண்ட்டி"
"ஆனால் ஆண்ட்டி ,உங்கள் பிளாக் அட்ரஸ் கொடுத்துடுங்க"
"கண்டிப்பா"
அப்புறம் என்ன கொண்டாட்டத்தை அப்படியே கிளிக்கிக்கொண்டேன்.என்னையும் அவர்களின் உற்சாகம் தொற்றிக்கொள்ள அந்த உற்சாகம் மாறமலே வீட்டுக்குள் வந்து மீண்டும் குர் ஆன் ஓத ஆரம்பித்து விட்டேன்.
கேக் தயாரக உள்ளது.
அனைவரும் அருகில் வருமாறு அழைப்பு
வெட்டிய கேக்கை முகத்தில் பூசி ஆர்ப்பாட்டம்.
கொண்டாடிய திருப்தியில்
ஆனந்தத்துடன் ஒரு போஸ்
Tweet |
47 comments:
ரைட்டு
அடடா..இப்பொழுதும் மீ த பர்ஸ்டா?ரொம்ப சந்தோஷம் சகோ அண்ணாமலை.
துள்ளி திரி(யும்)ந்த காலம்..
உண்மைதான் சகோ ஜெயிலானி.அவர்களின் உற்சாகம் நம் கோபத்தையும் கரைத்து நம்மையும் அந்த உற்சாகம் தொற்றிக்கொண்டுவிடும்.
நம்ம காலத்தில் இப்படியெல்லாம் இல்லை.. இந்த வருஷம் தான் இந்த பசங்க ஜாலியா இருப்பாங்க. அடுத்த வருடம் 12ம் வகுப்பு பள்ளியிலே பிழிந்து எடுத்துவிடுவாங்க.. 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுக்க பசங்க அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
இது நல்லாருக்கே , பதிவு நல்லாருக்கு .
கேக் வெட்டும் கலாச்சாரம் எங்கிருந்து தொத்திச்சோ ...
----------------------
அவர்களின் சந்தோஷம் பார்க்கையில் சந்தோஷமாகத்தான் இருக்கிறது, நேற்று வேற எதுக்கோ செய்யாமல் இப்படி செய்திருப்பது ஒரு வித திருப்தியையும் தருகின்றது.
-----------------------
நேற்று மத்தியானப்பொழுது.வீதியில் தங்கத்தை கரைத்து அப்படியே ஊற்றி விட்டாற்போல் பொன்னிற கதிரவனின் செங்கதிர்கள்]]
ஆஹா ஆஹா அருமை.
மாணவப்பருவம் எப்பொழுதும் திரும்பிப்பார்க்கும் பொழுது இனிமையாகத்தான் இருக்கும்.அந்த இனிமையை ரசித்து அனுபவித்து பதிவும் போட்டு அசத்திட்டீங்க தோழி.இது தான் புரிந்து நடந்து கொள்ளல் என்பதோ!அவர்கள் முகத்தில் தான் எத்தனை சந்தோஷம்.
ஆமாம் பிள்ளைகள் சகோ ஜாமால் சொன்ன மாதிரி எதுக்கோ கேக் வெட்டாமல். இப்படி வித்தியாசமாக கொண்டாடினார்களே. அவர்கள் இப்ப ஆடும் ஆட்டம் தான் மன நிம்மதி, பிறகு படிப்பு உத்தியோகம், மனைவி மக்கள் என்று பிஸியாகிடுவார்கள்.
ஆகா சூப்பரா போட்டோ எடுத்து இருக்கீங்க
மன்னிப்பை எதிரிக்கு கொடுங்கள்!
பொறுமையை போட்டியாளருக்கு கொடுங்கள்!
மரியாதையை பெரியவர்களுக்கு கொடுங்கள்!
மாதிரி வாழ்வை பிள்ளைகளுக்கு கொடுங்கள்!
உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கு கொடுங்கள்!!
நானும் ஓவ்வொரு முறையும் பின்னூட்ட பெட்டியில் போட்டதை உங்களை சொல்லி வாழ்த்தனும் என்று அப்படியே பின்னூட்டம் மட்டும் போட்டு விட்டு போய் விடுவேன்.
//ரொம்ப சூப்பரா ஒரு வித்தியாசமாக போட்டு இருக்கீங்க ஸாதிகா அக்கா//
அடடா, நானும் வேறு ஏதோ கொண்டாட்டமோன்னு நினைச்சுட்டேன், பரவாயில்லையே வித்யாசமாக கொண்டாடி எங்களையும் மகிழ்ச்சி ஆழ்த்திவிட்டார்கள் அவர்கள்.
உண்மைதான் சிநேகிதி,இதுதான் கவலை தெரியாமல் கலகலப்பாக இருக்கும் பருவம்.வரம்பு மீறாத வளர்ச்சியும்,கலகலப்பும் சந்தோஷமும் வரவேற்புக்குறியது.நன்றி!
சகோ ஸ்டார்ஜன்,
//இது நல்லாருக்கே//
நேரில் பார்த்த எனக்கும் மிகவும் நன்றாக இருந்தது.வருகைக்கு மிக்க நன்றி!
//நேற்று வேற எதுக்கோ செய்யாமல் இப்படி செய்திருப்பது ஒரு வித திருப்தியையும் தருகின்றது.//உண்மைதான் சகோ ஜமால்.நானும் பயந்து போய்தான் ஓதிக்கொண்டிருந்தவள் வெளியே போய் பார்த்தேன்.சிறுவர்களின் சந்தோஷத்தை பார்க்கும் பொழுது என் மனதும் சந்தோஷமாகி விட்டது.நன்றி!
தோழி ஆசியா,வருகைக்கு நன்றி.வித்தியாசமாகத்தான் இருந்தது அந்த நிகழ்வு!
ஆமாம் ஜலி,படிப்பு முடிந்து வேலை,திருமணம்,குழந்தை என்று அவர்களுக்கென்று வாழ்க்கை வந்து விட்டால் எல்லாமே மாறி விடும்.இதுதானே இயல்பு?வருகைக்கு நன்றி!
சகோ ஷஃபி,//நானும் வேறு ஏதோ கொண்டாட்டமோன்னு நினைச்சுட்டேன்//நானும்தான் அப்ப்டி நினைத்து விட்டேன்.உண்மையில் என்னையும் அந்த நிகழ்வு மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது,மறுமொழிக்கு மிக்க நன்றி!
அட, நல்ல புள்ளைங்க! :)
\\வீதியில் தங்கத்தை கரைத்து அப்படியே ஊற்றி விட்டாற்போல் பொன்னிற கதிரவனின் செங்கதிர்கள்\\
அட, அட, அட.. :)) சூப்பர் அக்கா!
\\ஆமாம் ஜலி,படிப்பு முடிந்து வேலை,திருமணம்,குழந்தை என்று அவர்களுக்கென்று வாழ்க்கை வந்து விட்டால் எல்லாமே மாறி விடும்.இதுதானே இயல்பு?\\
ஆமா..ரொம்ப சரி..
உங்கள் பதிவு அருமை
அப்பா நாங்களும் இனி கேக் வெட்ட போரம் 25 ம் வகுப்பு பாஸ்
நாசியா,
கருத்துக்கு நன்றி!//அட, நல்ல புள்ளைங்க! :// உண்மைதான்.
நினைவுகளுடன் - நிகே,
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!
v.a.s சங்கர்,
தங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!
ஸாதிகா அக்கா... நானும் வந்திட்டேன்... நான் “வேறு எதுக்கோ கேக் வெட்டப் போயிட்டேன்” அதுதான் கொஞ்சம் தாமதம்..
திகதியைப் பார்த்ததும்.. காதலர்தினக் கேக்காக்கும் என ஆவலோடு பார்த்தேன்... ஏமாற்றிப்போட்டீங்கள்:)
நல்ல விஷயத்துக்குத்தானே வெட்டிக் கொண்டாடுகிறார்கள் சந்தோஷமாக இருக்கு... அவர்களின் சந்தோஷத்தைப் பார்க்க...
இதை அவர்களும் பார்ப்பார்களெல்லோ... சோ இது அவர்களுக்கான மெஷேஜ்....
அன்புத் தம்பிமாரே... இதே குதூகலத்தோடு.. நன்கு படித்து பல்கலைக்கழகம் செல்ல எனது வாழ்த்துக்கள்... ALL THE BEST.
பதிவும் போட்டோவும் கலக்கல்....
பதிவை படித்ததும் இதுக்கு ஒரு கேக் வெட்டனும் போல இருக்கு...ராத்திரி ஒரு மணிக்கு எங்க போறது???அருமை....
அதிரா,
உங்கள் வாழ்த்துக்களைப்பார்க்கும் பொழுது எனக்கும் சந்தோஷமாக இருந்தது.சிறுவர்கள் கண்டிப்பாக பார்ப்பார்கள்.அதிரா ஆண்ட்டி உங்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்காங்க என்ற மெசேஜ்ஜை சொல்லிவிட்டேன்.இன்னும் ஒன்று தெரியுமா அந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவர் அதிரடியாக பிளாக் ஒன்றையும் ஆரம்பித்து விட்டார்.நான் தான் இப்பொழுது பிளாக் எல்லாம் வேண்டாம்.நன்றாக படிக்கும் வழியைப்பாருங்கள் என்று கூறிவிட்டேன்.
தங்கை மேனகா,போட்டோவும்,பதிவும் பிடித்து இருந்ததா?மிக்க சந்தோஷம்.
தம்பி சீமான் கனி,பதிவைப்பார்த்து விமர்சித்து இருக்கின்றீர்கள்.மிக்க மகிழ்ச்சி
அஸ்ஸாலாமு அலைக்கும்
நலமா?
தலைப்பை பார்த்ததும் ஆஹா உங்களையும் பசங்க சாச்சிபுட்டாங்களே என நினைத்தேன் படித்ததும்தான் புரிந்தது.புதுமையான விழா ஒன்றுக்கு பசங்க ஆரம்பம் போட்டு இருக்காங்க என்று இன்னும் எதுக்கெல்லாம் கேக் வெட்டுவாகளோ தெரியலையே !!!!!!
ஸாதிகா அக்காஆஆஆஆஆஅ...
அதிராஆஆஆ.... ஆண்ட்ரியாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ? இட்ஸ் ஓகை.... கிக் கிக் கிக்...:).
தாஜ்..வஸ்ஸலாம்.//தலைப்பை பார்த்ததும் ஆஹா உங்களையும் பசங்க சாச்சிபுட்டாங்களே என நினைத்தேன் //வரிகளைப்பர்த்ததும் சிரித்து விட்டேன்.பசங்க ஆட்டம் போட்டால் நான் நெற்றிக்கண்ணை திறந்து விடுவேன்.என் பையன் கூட ரொம்பவே டெரர் காட்டுறீங்க என்பான்.ஒரு சோகம் என்ன வென்றால் என்னைப்பார்த்தாலே இந்த பசங்களுக்கு கொஞ்சம் பயம்தான்.கோபத்தோடு போன என்னை பசங்களின் இந்த சந்தோஷக்கொண்டாட்டம் உண்மையில் என்னை சாய்த்துபோட்டு விட்டதுதான்.பிளாக் வரை எழுத தூண்டி விட்டுவிட்டதே!
அதிரா,கூல் கூல்மா.அதிரா ஆண்ட்டி இல்லை .அக்கா என்றே விளிக்க சொல்லிவிடுகிறேன்.இந்தாங்க கர்சீப்.கண்ணை தொடைத்துக்குங்க.//கிக் கிக் கிக்...:).//அதிரா,,அதிரா,,அப்படியே பக்கத்து வீட்டு வெள்ளைப்பூனை சிரிக்கிற மாதிரியே அசப்பிலே அப்படியே சிரிகறீங்களே.....!கிக்..கிக்..கிக்..
அக்கா,
இந்தப் பதிவு அன்னிக்கே பாத்துட்டேன். பின்னூதான் தாமதம்.
தலைப்பைப் பாத்ததும் நீங்க கோவப்பட்டுத்தான் அட்வைஸ் பதிவு எழுதிருக்கீங்கன்னு நினைச்சேன். ஆனா பாத்தவுடனே சந்தோஷம்தான். அந்த வயசுல இதுபோல சின்னசின்ன விஷயங்களும் ஒரு சந்தோஷம்தானே!! (டீனேஜ் கொசுவத்தி இப்பத்தானே சுத்துனேன், அதனால ரொம்பவே ஃபீலிங்ஸ்!)
//பசங்க ஆட்டம் போட்டால் நான் நெற்றிக்கண்ணை திறந்து விடுவேன்.... என்னைப்பார்த்தாலே இந்த பசங்களுக்கு கொஞ்சம் பயம்தான்.//
எனக்கும் இப்பத்தான் கொஞ்சம் பயம் வருது உங்க மேல!!
;-))))))
அன்பு ஸ்னேகிதி ஸாதிகா,
எப்படி இப்படி எல்லாவற்றையும் சுவாரசியமான பதிவாக்க முடிகிறது?!!
தலைப்பைப் பார்த்ததும் வேறு ஏதோவாக இருக்குமோன்னு நினைச்சேன். நல்ல பசங்க தான்.
பசங்களுக்கு,
ஆல் த பெஸ்ட்!!
உங்களுக்கு,
கலக்கறீங்க!!!
அவ்வ்வ்வவ்வ்வ்.....படித்தும்தான் விமர்சனம் போட்டேன்....
தோழி,ப்ளாக் அமைப்பு அருமை,என்னை தானே மலர் தூவி வெல்கம் செய்றீங்க.
ஹுசைனம்மா,
//எனக்கும் இப்பத்தான் கொஞ்சம் பயம் வருது உங்க மேல//இப்படியே சொல்லி,சொல்லி உடம்பை ரண்களமாக்குகின்றீர்களே.இன்னொரு இணைய தளத்தில் ஒருதங்கை "ஸாதிகா அக்கா எப்பவும் கம்போடு திரிவா" என்று சொன்னார்,இன்னொரு தங்கையோ உருட்டுக்கட்டையுடன் அலைகிறீர்கள் என்றார்,இப்ப நீங்க இப்படி சொல்லி எனக்கு டெரர் காட்டுகின்றீர்களே.
தோழி செல்வி,
//எப்படி இப்படி எல்லாவற்றையும் சுவாரசியமான பதிவாக்க முடிகிறது?!! //ஊக்கவரிகளுக்கு மிக்க நன்றி!
தம்பி சீமான் கனி ,
எதுக்கு இந்த அவ்வ்வ்வ்வ்வ்வ்...?
//பதிவைப்பார்த்து விமர்சித்து இருக்கின்றீர்கள்.//இந்த வரிகள் தப்புதான்.பதிவைப்படித்துப்பார்த்து விமர்சித்து இருகின்றீர்கள் என்று போட்டு இருக்கணும்.ஹிஹிஹி
தோழி ஆசியா,
பிளாக் அமைப்பு நன்றாக உள்ளதா?உங்களுக்கும்,மற்றவர்களுக்கும்தான் இந்த மலர் வரவேற்பு.நேற்று தங்கை பாயிஷா இல்லத்திற்கு சென்று இருந்த பொழுது நானும்,அவருமாக உட்கார்ந்து மாற்றினோம்.பாயிஷாவினுடனான முதல் சந்திப்பு இது.
ஸாதிகா அக்கா புது வீடு அசத்தலாக இருக்கு.
பசங்களோட சந்தோஷத்தை நிங்களும் சேர்ந்து பங்கேற்றதும் அதை எங்களோடு பகிர்ந்துக்கதும் நன்றி அக்கா. உண்மையிலேயே துள்ளிதிரியும் காலம் பொன் போன்றது பசங்களை பார்த்தாலெ தெரியுது அவங்களோட சந்தோச்ஷத்தை.
அட....
உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு :)
சாதிகா மேடம் அங்க இங்க சுத்தி உங்க பக்கத்துக்கு வந்துட்டேன் :-). எல்லாரும் என்னமா கலக்குறீங்க?! "அங்கு" அதிகமா காணலியேன்னு இங்க வந்து தேடினால் எல்லாரும் இங்கிட்டு கும்மியா!
புள்ளைங்க ஃபோட்டோ பார்க்கையில நாமளும் சின்னப்புள்ளையாவே இருந்திருக்கலாமேன்னு தோனுது. ஆனா அப்போ எப்படா இந்த ப்ளஸ்டூ முடியும்னு இருந்துச்சு :-)
nice. tanx for d comments.....
சுஸ்ரீ,கருத்துக்கு நன்றி!
விஜி,உங்கள் கருத்துக்கும்,ஊக்க வரிகளுக்கும் நன்றி!
கவிசிவா,வந்துவிட்டீர்களா?சந்தோஷம்.///புள்ளைங்க ஃபோட்டோ பார்க்கையில நாமளும் சின்னப்புள்ளையாவே இருந்திருக்கலாமேன்னு தோனுது. ஆனா அப்போ எப்படா இந்த ப்ளஸ்டூ முடியும்னு இருந்துச்சு :-)/// உண்மையான வரிகள்.முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!
abdul, thanks dear!
நல்ல பகிர்வு, புகைப்படங்களும் அருமை... பதிவைப் படித்த எனக்கும் கொண்டாட்டம் தொற்றிக் கொண்டது.
-
ட்ரீமர்
சகோதரி வணக்கம்,உங்களை போன வாரம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்தேன்,நேரமிருந்தால் பார்க்கவும்.
good one.
சகோதரி ஸாதிகா, உங்க பின்னூட்டம் என் பதிவில் பார்த்தேன். உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டதுக்கு மிக்க மகிழ்ச்சி. உங்க ஊர் பாஷையில கலக்கியிருக்கீங்க. உங்க ஊர் எது ?.
DREAMER,
என் பதிவு படித்து உங்களியும் கொண்டாட்டம் தொற்றிக்கொண்டதற்கு மிகவும் மகிழ்ச்சி.கருத்துக்கு நன்றி!
சகோதரர் ஜெரி ஈசானந்தா,
வலைச்சரத்தில் உடனே பார்த்தேன்.மிக்க சந்தோஷம்.உங்கள் அறிமுகம் எனக்கு கொடுத்து இருக்கும் பூஸ்ட்.நன்றி!பின்னூட்டமும் இட்டுவிட்டேன்.
சகோதரர் பித்தனின் வாக்கு ,
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!
சகோதரர் ஸ்டார்ஜன்,
நன்றி! என் சொந்த ஊர் பவுத்திரமாணிக்கபட்டிணம.(புரிஞ்சுதோ?)என்னுடைய பழைய இடுகைகளை படித்திருந்தால் இப்பொழுது வழங்கி வரும் பெயர் தெரிந்து விடும்.
பிரபு எம் உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி!
ஸாதிகா
உங்க ஊர் குலசை (குலசேகரபட்டினம்) தானே . உங்க மச்சி உடன்குடிதான். அவங்க தான் சொன்னாங்க. அங்கே மானா என்றால் வேண்டாம்.என்று அர்த்தமாமே..
Post a Comment