பிரதமர் - இந்திராகாந்தி
ஆளுனர் - சரோஜினி நாயுடு
முதல்வர் - சுதேஷாகிருபாளினி
உயர்நீதிமன்ற - பாத்திமாபீவி
நீதிபதி
தலைமைநீதிபதி - லீலாசேத்
சபாநாயகர் - மீராகுமார்
குடியரசுத்
தலைவர் - பிரதீபாபட்டீல்
மேயர் - அருணாஆஸிப் அலி
காபினட்
அமைச்சர் - ராஜ்குமாரி அம்ரித் கவுர்
மருத்துவர் - ஆனந்த பாய்ஜோஷி
பொறியாளர் - லலிதா
கமிஷனர் - ரமாதேவி
ஐ பி எஸ்
அதிகாரி - கிரன்பேடி
புற்றுநோய்
மருத்துவர் - முத்துலட்சுமிரெட்டி
துணை
வேந்தர் - ஹன்ஷாமேத்தா
பத்திரிக்கையாளர் - சுவர்ணக்குமாரிதேவி
விமானி - துர்காபானர்ஜி
மாலுமி - உஜ்வாலாபட்டீல்
விமானப்படை - ஹரிதாகவுர்
விமானி
ஒலிம்பிக்
வீராங்கனை - மேரி டிசோஷா
ஒலிம்பிக்கில் - கர்ணம் மல்லேஷ்வரி
பதக்கம் வென்றவர்
எவரஸ்ட்டில்
ஏறியவர் - பச்சோந்திரிபால்
கட்சித்தலைவர் - அன்னிபெஸண்ட்
பங்குச்சந்தைத்தலைவர் - ஓமனா ஆப்ரஹாம்
பேருந்துஓட்டுனர் - வசந்தகுமாரி
ரயில் ஓட்டுநர் - சுரேகா யாதவ்
அதிகபாடல்
பாடியவர் - லதா மங்கேஷ்கர்
உலக அழகி - ரீட்டா ஃபேரியா
Tweet |
44 comments:
ஜெயலலிதாவை பிடிக்காதா உங்களுக்கு?????.
நல்ல பதிவு!! உங்களால் சில பெயர்களை இப்போ நானும் தெரிந்துக் கொண்டேன்.பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா!!
என்னங்க ஜெயிலானி இப்படிக்கேட்டுட்டீங்க?இந்தியாவின் இரும்பு மனுஷி(iron lady)இந்திரா காந்தி என்றால் ,தமிழகத்தின் இரும்பு மனுஷி நம்ம ஜெயலலிதானே.அவருடைய தைரியம்,விடாமுயற்சி,தன்னம்பிக்கை ,எனக்கு மிகவும் பிடிக்கும்.அவருக்கு முன்பு சிலர் (தமிழகத்தில் கூட)முதல் அமைச்சர் ஆக இருந்து இருக்கின்றனரே.
மேனகா,இதன் மூலமாகவும் மேலும் சில பெயர்களை நீங்கள் தெரிந்து கொண்டது குறித்து மிக்க மகிழ்ச்சி.கருத்துக்கு நன்றி!
சான்சே இல்லை ஆன்டி!!! எனக்கும் இப்படியான பெண்கள் பற்றி படிப்பது பிடிக்கும். சின்ன வயசில் அப்பா என்னை கொ.ப.செ என்று அழைப்பார் :))
தெரியாத நிறைய முதல் பெண்களை தெரிய செய்த உங்களுக்கு எனது நன்றிகள்
நல்ல பதிவு...
அருமையான தகவல் பகிர்வு அக்கா.
கருத்துக்கு நன்றி இலா.நானும் உங்களைப்போல் கொ.ப.செ தான் :-) (அதிரா தங்கச்சி இப்ப ஓடி வருவார் அப்படி என்றால் என்ன என்று.விளக்கம் சொல்லி மெயில் போட்டு விடுங்கள்.:-)
பாயிஷா,கருத்துக்கு நன்றி
சங்கவி,கருத்துக்கு நன்றி.
சரவணக்குமார்,கருத்துக்கு மிக்க நன்றி.
///தமிழகத்தின் இரும்பு மனுஷி நம்ம ஜெயலலிதானே.அவருடைய தைரியம்,விடாமுயற்சி,தன்னம்பிக்கை ,எனக்கு மிகவும் பிடிக்கும்///
உண்மைதான்.(ஒருசில தவறுகளைத் தவிர )பிரதமராக்கினால் மூன்றே வருடத்தில் இந்தியாவை வல்லரசாக்கி விடுவார். அவர் திறமை அவருக்கே தெரியாது.
ஸாதிகா அக்கா பின்னிட்டிங்க போங்க
எனக்கும் தெரியாத சிலபெயர்களை இந்த பதிவு மூலம் தெரிந்து கொண்டேன்.
இன்னும் பல தெரியாத தகவல்களை அளிக்க வாழ்த்துக்கள்
ரொம்ப சந்தோஷம் தெரியப்படுத்தினதுக்கு! :)
நல்ல இடுக்கை உங்க தகவல்கள் தொடர்ந்து எங்களை அசத்தட்டும்...வாழ்த்துகள்...
கருத்துக்கு நன்றி ஜெய்லானி
நாஸியா, வந்து கருத்து சொன்னதுக்கு எனக்கும் ரொம்ப சந்தோஷம். நன்றி
சீமான்கனி,
உங்கள் தொடர் கருத்துகளுக்கு மிக்கநன்றி
நன்றி ஜலி இது போல் உபயோகமான கருதுக்களைதிரட்டித்தரநானும் ஆவலுடன் இருக்கின்றேன்
Nice . It is very useful information.
புதுத் தகவல்கள்!!
இந்தியாவின் முதல் உலக அழகி ரீட்டா ஃபேரியாவை விட்டு விட்டீர்களே அக்கா!! ;-)
நல்ல தகவல்,இது நல்லாஇருக்கு
பாரதத்தின் முதல் பெண்கள் பற்றி தெரிந்தாயிற்று.இதில் யாராவது தமிழ்நாட்டிலிருந்து ? வசந்தகுமாரி நம்ம தமிழகமா?நன்றி ஸாதிகா.
ஸாதிகா அக்கா.. நல்ல தகவல்கள் திரட்டிக்கொடுத்திருக்கிறீங்க... படிக்கும் பிள்ளைகளுக்கு உபயோகமாக இருக்கும், ஆனால் உண்மையை சொல்ல வேணும் மகனிடம் கேட்டுக்கேட்டுத்தானே எழுதினனீங்கள்? கடவுளே எனக்கெதுக்கு ஊர்வம்பெல்லாம்...
சத்தியமாக இலாவின் பதிவு படித்து, அதென்னது எனக்கேட்கவேணும் என மனதில் நினைக்க நீங்க சொல்லிட்டீங்கள்... இலா என்னைப்போல நிறையக் குழந்தைகள் யோசித்துக்கொண்டிருப்பினம் அதென்ன என்று, இங்கேயே சொல்லிட்டால் நல்லது..
ஸாதிகா அக்கா இது பின் குறிப்பு:
நான் நினைத்தேன் எங்கட ஹைஷ் அண்ணன் தான் முதல் விமானி என்று. வேறு ஆற்றையோ பெயர் போட்டிருக்கிறீங்கள் . அப்போ அவர் இல்லையா?:)?
Indiatastes,முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!
ஹுசைனம்மா,இந்திய அழகியை இணைத்து விட்டேன்.நீங்கள் அளித்தது எனக்கு தெரியாத விஷ்யம்.நன்றி!
பாத்திமா ஜொஹ்ரா,கருத்துக்கு நன்றி!
தோழி ஆசியா,கருத்துக்கு நன்றிப்பா!முதல் பெண் ஓட்டுநர் வசந்த குமாரி தமிழர் என்றுதான் ஞாபகம்.விசாரித்து பின் தகவல் தருகின்.எங்க்ள் ஊர் சதக் பாலி டெக்னிக் கல்லூரியில் படித்த ஒருவர் கூட பஸ் ஓட்டுநர் தான்.சில வருஷங்களுக்கு முன்னர் பத்திரிகையில் இவரைப்பற்றி நிறைய பேசப்பட்டது.
அதிரா,
கருத்துக்கு நன்றி.இலா உங்களுக்கு விளக்கம் சொல்லி மெயில் அனுப்புவார்.
உண்மையில் எனக்கு தெரியாத நிறைய விஷயங்கள் என் மகனிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்வேன்.
ஹைஷ் அண்ணன் தான் முதல் விமானியா..?அப்போன்னா அண்ணனுக்கு எத்தனை வயது இருக்கும்.அவசியம் கேட்டு சொல்லுங்கள்.(அவர் பாட்டுக்கு விமானத்தை ஓட்டிக்கொண்டு,சுற்றுலா போய்க்கொண்டு,மிஞ்சிய நேரத்தில் பிளாக்கில் எழுதிக்கொண்டு இருப்பவரை இப்படி வம்புக்கு இழுக்கின்றீர்களே...நான் எஸ்கேப்...)
அருமையான தகவல்!!!
அக்கா, யூத் விகடன்ல வந்துட்டீங்க!! வாழ்த்துக்கள்!!
தங்கை ஹுசைனம்மா..நானும் பார்த்தேன்.ச்ந்தோஷமாக இருந்தது.உங்கள் கண்களுக்கும் தென் பட்டு விட்டது.வாழ்த்துக்களுக்கு நன்றி
முத்துலெட்சுமி ரெட்டி எங்க ஊரு.
எங்க ஊர் அரசு மருத்துவமனைக்கு அவங்க பெயர்தான் இப்பவும்.
இனி அடிக்கடி வரவும்
புதுகைத்தென்றல்,தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி எங்கள் ஊர் என்று மட்டும் சொல்லி விட்டீர்களே?எந்த ஊர்?நாங்களும் தெரிந்து கொள்கிறோமே.
என் பெயரிலேயே எங்க ஊர் பேரையும் வெச்சிருக்கேனே! புதுகை எனப்படும் புதுக்கோட்டை, காரைக்குடிக்கு பக்கத்துல இருக்கும் ஊர்.
hi...correct me if i'm wrong...malleswari didn't win a gold in the 2000 olympics, but she did get a bronze....Thanks..
really informative.. nice..
அட நம்ம ஊருக்கு பக்கமே நெருங்கி விட்டீர்கள்.எங்கள் ஊருக்குபோகும் பொழுது புதுக்கோட்டையைத்தாண்டித்தான் செல்ல வேண்டும்.அநேகமாகஊர் பயணங்களில் உங்கள் ஊரில் ஏதாவது ஹோட்டலில்தான் பகல் உணவை முடிப்போம்.
காரில் போய்க்கொண்டிருக்கும் பொழுது சிகப்பு நிற உங்கள் ஊர் கோட்டையை கடக்கும் பொழுது,கோட்டையின் மதில் சுவர்களில் இருக்கும் தூண்(பில்லர்)எத்தனை என்று எண்ணிக்கொண்டே பயணிப்பது என் வாடிக்கை.ஆனால் பாருங்கள் இதுவரை சரியான எண்ணிக்கை தெரியாது.நன்றி புதுகைத்தென்றல்.தொடர்ந்து வருகை தாருங்கள்.
nive,கருத்துக்கும்,வருகைக்கும் நன்றி.திருத்தி விட்டேன்.
சக்தியின் மனம்,தங்களின் வருகைக்கும்,கருத்துக்கு நன்றி!
யுத் ஃபுல் விகடன் குட் பிலாக்கில் இந்த பதிவு வந்தததற்கு வாழ்த்துக்கள், ஸாதிகா அக்கா
தேடுதலில் தொலைத்த ஒன்றை தேடியவளை....என்னை நான் தொலைப்பதற்குள்...என்னை இந்த வலையை அறிமுகப்படுத்தி மாய வலைக்குள் சிக்கி சின்னபின்னமகாமல் தடுத்து என்னை அறியவும்...நான் அறியாதவற்றை தெரிந்துகொள்ள என்னை இந்த வலையை அறிமுகப்படுத்திய என் இனிய எஜமானருக்கு,இந்த செல்ல அடிமையின் நன்றிகள் பல...இனி இந்த வலையின் ஆஸ்தான வாசகி என்று சொல்லி கொள்வதில் பெருமை அடைகிறேன்...
தேடுதலில் தொலைத்த ஒன்றை தேடியவளை....என்னை நான் தொலைப்பதற்குள்...என்னை இந்த வலையை அறிமுகப்படுத்தி மாய வலைக்குள் சிக்கி சின்னபின்னமகாமல் தடுத்து என்னை அறியவும்...நான் அறியாதவற்றை தெரிந்துகொள்ள என்னை இந்த வலையை அறிமுகப்படுத்திய என் இனிய எஜமானருக்கு,இந்த செல்ல அடிமையின் நன்றிகள் பல...இனி இந்த வலையின் ஆஸ்தான வாசகி என்று சொல்லி கொள்வதில் பெருமை அடைகிறேன்...
Post a Comment