January 24, 2010

அஞ்சறைப்பெட்டி - 1



ஆதங்கம்
_________

தீவுத்திடலில் 36 வது சுற்றுலா கண்காட்சி நடைபெற்று வருகிறது.முன்பெல்லாம் கண்களுக்கும்,வயிற்றுக்கும் மட்டுமல்லாமல் அறிவுக்கும் தீனி கிடைக்கும் வண்ணம் பொதுப்பணித்துறையினர் அரங்குகள் அமைத்து பார்வையாளர்களை பரவசப்படுத்துவார்கள்.இப்பொழுது ஸ்டால்களுக்கும்,சிறுவர்களைப்பரவசபடுத்தும் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இருந்தார்கள்.அரங்குகளை இப்பொழுது நிறைய தேடித்தேடி அலைய வேண்டியதிருந்தது.



கோபம்
______

ரயில் பயணம் என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.வழக்கம் போல் அமைதியாக பயணம் செய்ய வேண்டி செகண்ட் ஏசியில் புக் செய்து பயணம் செய்தேன்.நிறைய பர்த் காலி."ஹப்பாடா"என்று மூச்சு விட்ட மறு நிமிஷம் அடுத்த ஸ்டேஷன்.குபு குபு வென்று ஒரு பெரிய கும்பல் ஏறி அனைத்து பர்த்களையும் நிரப்பி விட்டனர்.பெண்கள் கீழ் பர்த்தில் அமர்ந்திருக்க சற்று கூட மன சாட்சி இன்றி மேல் பர்த்தில் மூன்று பேர் அமர்ந்துகொண்டு கால்களை கீழே தொங்கப்போட்டுக்கொண்டு அரட்டையில் ஈடு பட்டிருந்தவர்களை பார்க்க எரிச்சல்.கீழ் பர்த்தில் அமர்ந்திருந்த பெண்கள் சங்கடப்பட ,எனக்கோ கோபம் தாங்காமல்"தம்பிகளா!கீழே லேடீஸ் இருக்காங்க"என்று சற்று கோபமாக கூறியதும் உடனே கீழ்படிந்தார்கள்.இரவு 10 மணியானதும் அவர்களின் சப்தமான அரட்டை கச்சேரி உச்ச ஸ்தாயியில் ஆரம்பித்து விட்டது.என்னை முந்திக்கொண்டு அடுத்த கம்பார்ட்மெண்டில் இருந்து கோபமாக வெளிபட்ட ஒரு சகோதரர் "தூங்குங்கப்பா..தூங்கப்போற சமயத்தில் சப்தம் போட்டு பேசறீங்களே"என்று கேட்டதும்தான் தாமதம்.அத்தனை பேரும் பிலு பிலு என்ற பிடித்த பிடியில் அந்த சகோதரர் போயே போய் விட்டார்.அவர்கள் பொது இடத்தில் மற்றவர்களுக்கு இடைஞ்சல் கொடுத்து அடித்த கொட்டத்தை தட்டிக்கேட்க மறு ஆள் இல்லை.



ஆச்சரியம்

__________

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சென்று இருந்தேன்.அங்கு சிகிச்சைக்கு வரும் கூட்டத்தைப்பார்த்து எனக்கு அவ்வளவு ஆச்சரியம்.கண் சிகிச்சைக்கென்றே எவ்வளவு பெரிய மருத்து மனை,எவ்வளவு மருத்துவர்கள்,எத்தனை ஊழியர்கள்!!!மெடிக்கல் கன்சல்ட்டிங் என்று போனாலே காந்தி தாத்தா சிரிக்கும் கரன்ஸிகளை அள்ளும் மருத்துவ உலகில் வெறும் ஐம்பது ரூபாய் கன்ஸல்ட்டிங் சார்ஜ் வாங்கிக்கொண்டு பரிசோதிக்கிறார்கள் ஒரே நோயாளியை பல மருத்துவர்கள்.மிக குறைந்த செலவில் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அரவிந்த் கண் மருத்துவமனையில் கிடைக்கும் என்றால் அது மிகை ஆகாது.




எரிச்சல்
_______

பொதுவாக எனக்கு கூட்டம் என்றால் ரொம்பவே அலர்ஜி.பொங்கல் நேரம் சென்னையே களை கட்டி விட்டது.சங்கமம்,பீஸ் மாநாடு,சுற்றுலா கண்காட்சி,நுகர்வோர் கண்காட்சி,சர்க்கஸ்,நகைகண்காட்சி,கடைகளில் சேல்ஸ் இத்யாதி..இத்யாதி...இங்கே இருந்து கொண்டு எப்படி எதற்குமே போகாமல் இருப்பது?அனைத்துக்கும் போய் பை நிறைய சாமான்களுடன்,வயிறு நிறைய உணவும்,மனம் முழுக்க எரிச்சலுடனும் வீடு திரும்பியதும்"சே..சே..என்ன கூட்டம்..?இனி போகவே கூடாது "என்று தீர்மானம் செய்தாலும் லீவில் வந்த வாண்டுகள் கெஞ்சலுக்கு மீண்டும் மறுநாள் ஹேண்ட்பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு கிளம்பவேண்டியதுதான்.





சந்தோஷம்
_________

இப்பொழுதெல்லாம் லக்ஷரி பிளாட் என்பது சென்னையின் தாரக மந்திரம் ஆயிரதெட்டு வசதிகளை வாரி வாரி வழங்கி பணத்தை கறந்து அழகிய கனவு இல்லத்தை தந்து விடுகிறார்கள்.அந்த அழகிய இல்லத்தை நம்மிடம் தரும் நாளை கெட் டு கெதர் என்று ஏற்பாடு செய்து , லட்சகணக்கில் செலவு செய்து பில்டர்கள் வாடிக்கையாளர்களை அசத்துவது இன்றைய பேஷன்.நூற்றுக்கும் மேல் இருக்கும் குடியிருப்பில் ஒருத்தொருக்கொருத்தர் அறிமுகபடுத்தவும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.ஆடல்,பாடல் மேஜிக்,கருத்தரங்கு,ஐந்து நட்சத்திர உணவகத்தில் இருந்து வரவழைக்கபட்ட பஃபே இப்படி ஆடம்பரமாக,அட்டகாசமாக கலக்குகின்றனர்.2010 ஆரம்ப நாளன்று அப்படி ஒரு ஈவண்ட் என்னை மிகவும் சந்தோஷப்படுத்தியது.


31 comments:

அண்ணாமலையான் said...

நல்ல பதிவு& நியாயமான கோபம்...

சீமான்கனி said...

ஆம் அக்கா மதுரை அரவிந்த் மருத்துவமனை நல்ல சேவையை ரெம்ப வருசமா வழங்கி வர்றாங்க...ஒரு சின்ன பிழை 1910 எனபது 2010 என்று வர வேண்டுமோ...??

செ.சரவணக்குமார் said...

அருமையான தொகுப்பு. ரயில் பயணத்தின்போது ஏற்படும் இதுபோன்ற இடையூறுகளை ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளாதது கண்டனத்திற்குரியது. உங்கள் கோபம் நியாயமானதே சகோதரி.

//1910 ஆரம்ப நாளை அப்படி ஒரு ஈவண்ட் என்னை மிகவும் சந்தோஷப்படுத்தியது.//

மன்னிக்கவும் அக்கா, 2010 என நினைக்கிறேன்.

நட்புடன் ஜமால் said...

பலதரப்பட்ட உணர்வுகள்

மென்மையாகவும், சரியாகவும்.

நாஸியா said...

போன வருசம் எனக்கு நிச்சயம் முடிஞ்ச உடன் என்னை கூட்டிட்டு போனாங்க, பொருள்காட்சிக்கு.. இனி எப்ப போக கிடைக்குமோ..

ஹைஷ்126 said...

நல்ல பதிவு: இரயில் பெட்டியின் கோபம், 46 பேர் பயணம் செய்யும் பெட்டியில் அந்த ஒருவரை தவிர மற்றோர் எல்லாம் முதுகு முள்ளெலும்பு இல்லாதவர்களாகி விட்டார்கள் என நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இதுதான் இன்றய நமது இந்திய குடிமகனின் தாந்தோன்றிதனமான கடமையுணர்வு என்பதா அல்லது சகிப்புதன்மை என்பதா?

பி.கு: புதுச்சேரியிலும் அந்த வசதிகளுடன் “அரவிந்தர் கண் மருத்துவமனை” இயங்கி வருகிறது.

Unknown said...

மிகவும் அருமையன பதிவு ஸாதிக்கா..
அழகாகவும் தெளிவாகவும் எடுத்து சொல்லியிருக்கிங்க.

ஹுஸைனம்மா said...

அடடே, அஞ்சறைப் பெட்டி - நல்ல தலைப்பு!! அதில் இருக்கும் உணவுப் பொருள்களும் நம் உணர்ச்சி/ உடல்நிலையைக் கட்டுப்படுத்த உதவும்.

SUFFIX said...

அஞ்சறைப்பெட்டி கச்சிதமான உணர்வுக்கலைவகளுடன் சுவாரஸ்யமா இருக்கு, படங்களுடன் கொடுத்திருப்பது இன்னும் சூப்பர்.

Jerry Eshananda said...

இன்சா அல்லாஹ், வாழ்த்துக்கள்,பதிவு நன்றாய் இருக்கிறது.

suvaiyaana suvai said...

அருமையன பதிவு !!!

athira said...

ஸாதிகா அக்கா!!! அஞ்சறைப்பெட்டி என்றால் மீனிங் என்ன? இதுக்குள் நுழையவே இருதரம் பதிவு போடவேண்டியதாப்போச்சு. மேலே முதலாவதாக இருப்பதுபோல ஒரு இடத்தில், நானும் என் மூத்தவரும் காரில் ஏறி இருந்தோம், ஸ்ராட் ஆனதும்தான்... உள்ளே இருட்டுக்குள் போய்விட்டது.. பேய் பிசாசின் அலறல் வேறு... கண்களை மூடிக்கொண்டு தெய்வத்தை வேண்டியபடி வேர்த்து விறுவிறுக்க வெளியே வந்து சேர்ந்தோம். அதுதான் முதலும் கடசியுமாக்கும்.

சூப்பராக, இடங்களையும் அவை பற்றிய விமர்சனங்களையும் போட்டிருக்கிறீங்கள், பார்க்க ஆசையாக இருக்கு. இன்னும் அதிகமாக படங்கள் இணைத்தால் நன்றாக இருக்கும்.

நான் Travel Channel இல் ஒரு புரோகிராமில் இந்திய ரெயினில் பெண்களுக்கு தனி கொம்பாட்மெண்ட் இருப்பதைப் பார்த்தேன், அப்படி எல்லா இடத்திலும் இல்லையோ?

உங்குள்ள பிடிக்காதனவற்றை மட்டும் சொல்லாமல், நன்மைகளையும் சொல்லியிருக்கிறீங்கள(eye hospital) வாழ்த்துக்கள்.

ஸாதிகா அக்கா!! சென்னை அடையார் ஆனந்தபவன் மிக்‌ஷர் சாப்பிட்டுக்கொண்டேதான் இதை ரைப் பண்ணுகிறேன், நல்ல ரேஸ்டாக இருக்கு(very hot mixture)

ஸாதிகா said...

சகோ.அண்ணா மலையான்,
கருத்துக்கு மிக்க நன்றி.

சகோ.சீமான் கனி,
பிழையை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.திருத்தி விட்டேன்.

சகோ.சரவணக்குமார்,
உண்மைதான்,ரயில்வே நிர்வாகம் துளிகூட கண்டு கொள்வதே இல்லை.அதிலும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயிலில் மற்ற மநிலத்தவர் நடத்தும் அராஜகம் இருக்கின்றதே..!என்னத்தை சொல்ல..1910.. தவறை சரி செய்து விட்டேன்.நன்றி.

சகோ.ஜமால்,கருத்துக்கும்,தொடர் ஊக்கத்திற்கும் நன்றி.

தங்கை நாஸியா,பொருட்காட்சி பார்க்கிறது என்ன பெரிய விஷயமா?அடுத்த முறை இந்தியா வரும் பொழுது பாருங்கள்.சென்னையில் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக நடக்கும்.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

சகோ ஹைஷ்,//46 பேர் பயணம் செய்யும் பெட்டியில் அந்த ஒருவரை தவிர மற்றோர் எல்லாம் முதுகு முள்ளெலும்பு இல்லாதவர்களாகி விட்டார்கள் என நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. //மிகச்சரியாக சொன்னீர்கள். அதே கம்பார்ட்மெண்டில் பயணம் செய்த இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னை வரும் ஒரு பெரியவரும் அடங்குவார்.அனைத்தையும் பார்த்து யாரும் எதுவும் செய்ய முடியாத கையாலாகத தனத்தை நினைக்கும் பொழுது...கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

சகோதரி பாயிஷா,
கருத்துக்கு மிக்க நன்றி.

சகோதரி ஹுசைனம்மா,
//அதில் இருக்கும் உணவுப் பொருள்களும் நம் உணர்ச்சி/ உடல்நிலையைக் கட்டுப்படுத்த உதவும்.//கவிதை எழுத ஆரம்பித்து விட்டீர்கள் அல்லவா?எழுத்து நடையிலே வாசனை அடிக்கின்றது.:-) கருத்துக்கு மிக்க நன்றி.

சகோ.ஷஃபி,
கச்சிதமான உணர்வுக்கலவையுடன் இருக்கின்றது என்ற வரிகளில் மகிழ்ச்சி.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

சகோதரர் ஜெரி ஈசானந்தா,
தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.


தங்கை சுஸ்ரீ,
கருத்துக்கு மிக்க நன்றி

ஸாதிகா said...

தங்கை அதிரா,
ஐந்து+அறை+ பெட்டி= அஞ்சரைப்பெட்டி.சிறிய,சிறிய கம்பார்ட்மெண்ட்டுகளாக கொண்டது.
அநேக தமிழ் மக்கள் பழங்காலத்தில் இருந்து ஓலையால் செய்த ,மரத்தால் செய்த,வெள்ளியால் செய்த அஞ்சரைபெட்டிகளை உபயோகிப்பார்கள்.இப்பொழுது பிளாஸ்டிக்,எவர் சில்வர் போன்றவற்றில் கிடைக்கின்றது.சமயலறையில் மாசாலா,ஸ்பைசஸ் போன்றவை வைத்துக்கொள்ள இன்னும் பல விதத்தில் உபயோகப்படுத்திக்கொள்ளவும் உதவும்.
இந்த அஞ்சரைப்பெட்டியின் மீது எனக்கு ஒரு டவுட்.அதனை அஞ்சரைப்பெட்டி படத்துடன் உங்களுக்காக இன்னொரு பதிவில் போடுகிறேன்.அப்பொழுது படத்தையும் பாருங்கள்.

இன்னும் அதிகம படத்தை போட்டு இருக்கலாம் என்று கருத்தை தெரிவித்து இருக்கின்றீர்கள்.அப்படி போட்டால் இந்த ஸாதிகா அக்காவின் முகத்தைப்பார்த்து விடுவீர்களே..:-) :-)(கவனிக்க: ஒன்றுக்கு இரண்டாக ஸ்மைலி போட்டு விட்டேன்)

ரயிலில் பெண்களுக்கு என்று தனி கம்பார்ட்மெண்ட் உள்ளதுதான்.ஆனால் மிகக்குறைந்த அளவே சீட்டுகள் அலாட் செய்து இருப்பதால் சுலபமாக கிடைக்காது.கூடவே என் மகனும் வந்திருந்தாரே.
அடையார் ஆனந்த பவன் மிக்ஷருக்கே இந்த குதி குதிக்கின்றீர்கள்.இங்கு இன்னும் சுவையான வித விதமான மிக்ஷர்கள் கிடைக்கின்றதே.அடுத்த முறை இங்கு வந்தால் அஞ்சரை பெட்டியில் வித விதமான மிக்ஷர்களை நிரப்பித்தருகின்றேன்.எப்பொழுது வருகின்றீர்கள்?

mohamedali jinnah said...

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர்-நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்.
கண்கள் இரண்டினில் ஒன்றைக் -குத்திக்
காட்சி கெடு த்திடலாமோ ?
பெண்கள் அறிவை வளர்த்தால்-வையம்
பேதமை அற்றிடும் காணீர்.

------------------------------------------------------------------------------------
இஸ்லாமிய பெண்ணுக்கு (தங்களுக்கு) இறைவன் இந்த
ஞானத்தினை தந்தமைக்கு என்றும் தாங்கள் அவனைத்
தொழுது வர துவா செய்கின்றேன்.
-அன்புடன் -
அன்பு சகோதரர் முகம்மது அலி ஜின்னா,

தங்களுக்கு இறைவன் இவ்வுலகிலும் மறுமையிலும் அருள் புரிய பிரார்த்திக்கின்றேன் அன்பு சகோதரர் முகமதலி ஜின்னா,

இஸ்லாமிய ”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!”

Asiya Omar said...

தோழி ஸாதிகா அஞ்சறைப்பெட்டி செய்திகள் இனி அடிக்கடி உண்டு தானே .இனிமேல் சமையல் கட்டுக்கு போனால் ஸாதிகா நினைவு தான் வரும்.நல்ல பேரு வெச்சீங்க.நாம தினமும் அதைச்சுற்றி தானே வரோம்.

இலா said...

ஷாதிகா ஆன்டி!!! ரொம்ப நல்லா இருக்கு பேஷ் பேஷ்!!! ஒரே நாளில் இப்படி கலவையான உணர்வுகள் வரும் சில நேரம்! அப்போ நம்மள நாமளே கவனிச்சிருந்தா எப்படி இருக்கும்ன்னு யோசிக்க வச்சிட்டீங்க....

athira said...

ஸாதிகா அக்கா பதில்களுக்கு மிக்க நன்றி. வந்தால்தான் தருவீங்களோ மிக்ஸர்? அட்ரஸ் தரட்டே..

அதிராபோல எல்லோருக்கும் தைரியமில்லையாக்கும் முகம் காட்ட:), நான் என் “சொந்தவீட்டில்”.. அதுதான் தனிக்குடியில், பக்கம் பக்கமாகப் போட்டிருக்கிறேனே...

ஸாதிகா said...

சகோதரர் நீடூர் அலி,
தங்கள் துஆவுக்கும்,கருத்துக்கும் நன்றி.இப்பொழுது அல்லாஹ்வை நான் தொடர்படியாகவும் ,ஓர்மையுடனும்வணங்குவதைப்போல் என் இறுதி சுவாசம் உள்ள வரை முழுதும் உடல் திறனுடன் வல்லோனை வணங்கவும் துஆ செய்துகொள்ளுங்கள்.

ஸ்னேகிதி ஆசியா,
அஞ்சறைப்பெட்டி..பெயர் பிடித்துள்ளதா?இனி அவ்வப்பொழுது அஞ்சறைப்பெட்டியில் அவ்வபொழுது புதிது,புதிதாக பொருட்களை நிரப்பலாம் என்றுதான் உத்தேசம்.அடடா..இனி சமையலறை சென்றால் என் ஞாபகமா?ரொம்ப சந்தோஷம்.கருத்துக்கு நன்றி.

இலா,
உங்களை என் பதிவு யோசிக்க வைத்து விட்டதா?கருத்துக்கு நன்றி.

அதிரா,
ம்ஹும்..பார்சல் எல்லாம் போட முடியாது நேரில் வந்தால்தான்.:-)

January 27, 2010 11:12 AM

அன்புடன் மலிக்கா said...

நியாமான கோபம்தான் ஸாதிக்காக்கா.
நல்லதொரு விளக்கமானபதிவு

நேரம்கிடைக்கும்போதுவந்து பாருங்கள்

http://fmalikka.blogspot.com/

Unknown said...

அருமையான தலைப்பை போட்டு விறுவிறுப்பான உணர்வுகளை கொட்டி இருக்கீங்க இனி அடிக்கடி அஞ்சறைப்பொட்டி திறக்குமோ?

Anonymous said...

Good post.

பாத்திமா ஜொஹ்ரா said...

அப்பப்பா

தாஜ் said...

salaam சாதிக்கா

உங்கள் பதிவுகள் அனைத்தும் நச்சுன்னு இருக்கு ஒரு தொடர்கதை எழுதுங்களேன்.

ஸாதிகா said...

சகோதரர் செய்யத்,
அவ்வப்பொழுது அஞசறைப்பெட்டியை திறக்கத்தான் செய்யவேண்டும்.கருத்துக்கு நன்றி.

அம்மு மது,
கருத்துக்கு மிக்க நன்றி.பாத்திமா ஜொஹ்ரா,//அப்பப்பா//எதுக்குப்பா?
:-) கருத்துக்கு நன்றி.


தாஜ்,
வஅலைக்கும்வஸ்ஸலாம்,என்ன ஆளையே காணோம் என்று பார்த்துக்கொண்டுஇருந்தேன்.கருத்துக்கு நன்றி.யோசனை சொல்லி விட்டிர்கள் அல்லவா?விரைவில் சிறுகதையாவது பதிவிட முயற்சிக்கின்றேன்

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா , உங்கள் கோபம், ஆதங்கம், எரிச்சல் , ஆச்சரியம், சந்தோஷம் எல்லாமே நியாயமானது தான்

அஞ்சறை பெட்டி போல் கொத்து பரோட்டா சூப்பர்.

அதிராவிற்குஆனந்த பவன் மிக்ஸர் ஆ எங்க பக்கம் வர சொல்லுங்கள், ரத்னா கேஃபே மிக்சர் தருகீறேன்.

Menaga Sathia said...

கலக்கலான அஞ்சறைப்பெட்டி!!

ஸாதிகா said...

ஜலி,
கருத்துக்கு நன்றி.//அஞ்சறை பெட்டி போல் கொத்து பரோட்டா சூப்பர்//அதென்ன கொத்துபரோட்டா..??அடடா..அதிராவுக்கு மிக்ஸர் ஆசையை காட்டி டிக்கெட் போட வைத்துவிடுவோம் போலும். :-)

மேனகா,
கருத்துக்கு மிக்க நன்றி