ஹளரத் அபூ ஹனீஃஃபா அவர்களின் சபைக்குஅந்தக்காலத்திலேயே (புரட்சிகரமான )சில பெண்கள் கூட்டமாக வந்தனர்.அப்பெண்களின் மனதினுள் பல நாட்களாக குடைந்து கொண்டிருதிருந்த வினா இப்படி வெளிபட்டது.
"ஆண்கள் மட்டும் பல பெண்கள் மணந்து கொண்டு வாழ்கின்றார்கள்.ஏன் பெண்களுக்கு அத்தகைய வாய்ப்பை வழங்கவில்லை?"
அறிவுசெம்மல் ஹளரத் அபூ ஹனீஃபா அவர்கள் அப்பெண்களை நோக்கி தணிவான குரலில்
"பெண்களே!நீங்கள் அனைவரும் நாளைக்காலை ஆளுக்கு ஒரு சொம்பு பாலை இதே சபைக்கு எடுத்து வாருங்கள்."
என உத்தரவு இட்டார்.அப்பெண்களும் 'என்ன இது?சந்தேகம் கேட்டால் சொம்பில் பால் எடுத்து வரச்சொல்லுகின்றார் ' என்று திகைத்தவ்ர்களாக வீடு திரும்பினர்.
மறு நாள் அந்த பெண்கள் தத்தம் வீடுகளில் இருந்து சொம்பில் பாலுடன் அபூ ஹனீஃபா அவர்களின் சபைக்கு சென்றனர்.
அங்கு ஒரு பெரிய அண்டா சபைக்கு நடுவில் இருந்தது.பெண்களைப்பார்த்த ஹளரத் அபூ ஹனீஃபா அவர்கள்,
"பெண்களே!நீங்கள் கொண்டுவந்த பாலை இந்த அண்டாவில் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக ஊற்றுங்கள்" என்று உத்தரவு இட்டார்.
பெண்களும் அவ்விதமே செய்தனர்.
"பெண்களே!இப்பொழுது,உங்கள் சந்தேகங்களுக்கு பதில் தருகின்றேன்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித பாலை அதாவது ஒட்டகப்பால்,ஆட்டின் பால்,பசுமாட்டின்பால்,எருமைப்பால் இப்படி ஒவ்வொரு விதமாக எடுத்து வந்திருப்பீர்கள்.அப்படித்தானே?"
என்ற வினாவிற்கு அனைத்துப்பெண்களும் "ஆம்" என்று தலை அசைத்தனர்.
ஹனீஃபா அவர்கள் மிக மென்மையாக "இப்பொழுது நீங்கள் கொண்டு வந்து அண்டாவில் ஊற்றிய அவரவர்களுக்கு உரிய விலங்குகளின் பாலை அவரவர்கள் எடுத்துக்கொள்ளுங்கள் "என்று உத்தரவு இட்டார்.
பெண்கள் திகைத்துப்போனார்கள்.
"பெண்களே!ஒரு பெண்ணுக்கு பல கணவர்களை மணம் முடித்தால் இந்த நிலைமைதான்.புரிகின்றதா?சென்று வாருங்கள்" என்று அனுப்பி வைத்தார்.
தாம் எழுப்பிய வினாவுக்காக வெட்கப்பட்டு இல்லம் திரும்பினர் அந்தப்பெண்கள்.
Tweet |
17 comments:
ஜசகல்லாஹு க்ஹைர்... அழகான விளக்கம்.. :)
நல்ல அழகான விளக்கம் அக்கா.
நாஸியா,பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி!
மேனகா,உங்களுக்கும் மிக்க நன்றி.என் பிள்ளைகளுக்கு இதுபோன்ற உண்மை சமபவங்களை அடிக்கடி சொல்லிக்காட்டிக்கொணடே இருப்பேன்.அதற்காகவே நிறைய படிக்கவும் செய்வேன்
அக்கா ரொம்ப நல்லா இருக்கு
பின்னூட்டம் கொடுத்து வரும் சகோதரர் கருவாச்சிக்கு என் நன்றி
ரொம்ப சூப்பர் அருமையான விளக்கம்
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.இஸ்லாமிய இல்ல விருந்துடன் மறுபடி புது சமையலைக்காணோம்?பிஸியா ஜலி?
ஸாதிகா லாத்தா நானும் தொடர்ந்து முடியும் பொழுது எல்லாம் புஹாரி மற்ற ஹதீஸ் புக்குகள் படிப்பது வழக்கம்தான் இருந்தாலும் இது நான் படித்தது இல்லை என்னோட மாற்றுமத தோழிகள் கேட்பார்கள் இஸ்லாத்தில் பெண் அடிமைதனம் இல்லை என்கிறாய் ஆனால் ஏன் உன் அல்லாஹ் ஆண்களுக்கு மட்டும் பலமணம் பிரிந்து வாழும் பொழுது ஏன் பெண்களுக்கு அந்த உரிமை இல்லை என்று நான் ஒரு விளக்கம் கொடுத்தேன் ஏற்றுக்கொண்டார்கள் அது மெயிலில் எழுதுகிறேன் அருமையான விளக்கம்
ஜுலைஹா
ஸாதிகா லாத்தா நானும் தொடர்ந்து முடியும் பொழுது எல்லாம் புஹாரி மற்ற ஹதீஸ் புக்குகள் படிப்பது வழக்கம்தான் இருந்தாலும் இது நான் படித்தது இல்லை என்னோட மாற்றுமத தோழிகள் கேட்பார்கள் இஸ்லாத்தில் பெண் அடிமைதனம் இல்லை என்கிறாய் ஆனால் ஏன் உன் அல்லாஹ் ஆண்களுக்கு மட்டும் பலமணம் பிரிந்து வாழும் பொழுது ஏன் பெண்களுக்கு அந்த உரிமை இல்லை என்று நான் ஒரு விளக்கம் கொடுத்தேன் ஏற்றுக்கொண்டார்கள் அது மெயிலில் எழுதுகிறேன் அருமையான விளக்கம்
ஜுலைஹா
முதல் வருகைக்கு நன்றி ஜுலைஹா.ஹளரத் அபூ ஹனீஃபா தொடர்பாக நிறைய சுவாரஸ்யமான ஹதீஸ்கள் உள்ளது.அவ்வப்பொழுது ஞாபகம் வரும் பொழுது பதிகின்றேன்.உங்கள் தோழிகளுக்கு நீங்கள் கொடுத்த விளக்கத்தை காணவும் ஆவல்.
அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹீ அக்பர் ஸாதிகா லாத்தா என்னது இது 10முறை பதிவாகி இருக்கிறது நான் பதிவு போட போட எரோர்னே வந்துச்சு அதனால் நான் டிரைப்பண்ணி விட்டுவிட்டேன் சாரி லாத்தா உங்களால் முடிந்தால் டிலைட் பண்ணிவிடுங்களேன் ப்ளீஸ் நான் உங்களுக்கு ஒரு மெயில் பண்ணி இருந்தேன் வந்ததா?
அன்புடன்
ஜீலைஹா
அஸ்ஸ்லாமு அலைக்கும்
நானும் இந்த ஹதீத் மௌலவி சம்சுல்லுஹா சொல்ல கேட்டு இருக்கிறேன்
ஜஸக்கல்லாஹு ஹைர்
வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோதரி தாஜ்.இது நான் எப்பவோ படித்த ஹதீஸ்.
Post a Comment