நான் ஸ்டாப் பார்வதிமாமி
****************************
மனிதர்கள் பல விதம்.அதில் இந்த பார்வதி மாமி ஒரு விதம்.அவ்வப்பொழுது என் கற்பனையில் உதித்த சுவாரஸ்யமான பாத்திரங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன்.பாத்திரங்கள் உங்கள் மனதோடு பாத்திரமாகி விட்டார்களா என்று உங்கள் பின்னூட்டம் வழியே கேட்க ஆவல்.
*******************************************************************************************************************************************
பார்வதியா?
அடடா!சொல்லு கலா எப்படி இருக்கே?என்ன ரொம்ப நாள் கழிச்சி போன் பண்றாப்போலே இருக்கு?
எப்படி இருக்கே பாரு?
இருக்கேண்டி.நன்னா இருக்கேன்.எனக்கென்ன குறைச்சல் ?ஆனாக்க..அப்பப்ப இந்த ஒற்றைத்தலைவலிவந்துதான் பாடாய் படுத்துது.ஈகா தியேட்டர் சந்து இருக்கோல்லியா?நேரா [போய் லெஃப்ட் திரும்பினால் பர்ஸ்ட் கட்டிங்க்லேயே ஈ எண்டி டாகடர் இருக்கார்.
எனக்கென்னடி தெரியும்?சென்னை சந்து பொந்தைப்பற்றி?
அட முழுசாக்கேளு முன்னே பின்னே உதவுமோல்லியோ?நல்ல வயசான டாக்டர்தான்.கைராசிக்காரர்.அங்கு போனாக்கா ஒற்றைத்தலை வலி என்ன?ரெட்டை,மூன்று எல்லாமே போயே போய் விடும்.அப்புறம் இந்த பிரஷர் வந்தோல்லீயோ நம்மை இந்த பாடாக படுத்தறது.எங்கம்மா எதைத்தந்தாளோ இந்த ரத்தக்கொதிப்பைமட்டும் மறக்காமல் தந்துட்டாள்..
ஐயோ அப்புறம்?
நாலு படி எறினாக்க அப்படியே மூச்சு வாங்கறது.ஒரு நாளைக்கு ரெண்டு வேளை பிரஷர் மாத்திரை போட்டுண்டு வர்ரேன்.ஒரு வேளை மறந்தாக்கூட அப்படியே பொலபொலான்னு வர்ரதுடி.ஐயோ நாப்பது வயசைத்தாண்டினாலே மனுஷாளுக்கு உபத்ரவம் தாங்க முடியலே.அதுக்கு வேளச்சேரியிலே ஒரு கார்டியாலஜிஸ்ட் இருக்காரு..அந்தாளு என்னன்னா டயட் டயட்ன்னு மனுஷியை பட்டினியா போட்டு கொன்னுடுவார் போலிருந்தது.இது நமக்கு சரிப்பட்டு வராதுன்னு விட்டுட்டேன்.நம்ம தங்கம் இருக்கால்லிய்யோ?ஞாபக ம் இருக்கா?காமர்ஸ் டிபார்ட்மெண்ட்.குண்டா செவப்பா சுருட்டை முடியோட இருப்பாளே?அவதான்.அவளோட நாத்தானாரோட ஓர்ப்படி பையன் நன்னா பார்க்கறார்.அமிஞ்சிக்கரையிலே கிளினிக் போட்டு இருக்கார்.அப்பல்லொஹாஸ்பிடலுக்கு கூட போயிண்டு இருக்கார்,இப்ப அவரை பிடிச்சுண்டேன்.அது சரி உங்க ஆத்துக்காரர் எப்படி இருக்கார்?
நல்லா இருக்கார்.
ஐயோ என் கதையை கேட்காதே?இத்தனை அவஸ்தைகளையும் உடம்பு பூரா வச்சிண்டு பாடாய் பட்டுண்டு இருக்கேன்.சித்த நாழி நான் தலையை சாய்ச்சிடக்கூடாது.பாரு,பாரூ ன்னு ஒரே கூப்பாடுதான்போ.பாரு அந்த ஈபி கார்டை எடுத்துக்கொடு?வாய் நமநமக்குது கொறிக்க ஏதாவது கொடேன்.மணி ஆறரை ஆகுது காபி கலக்க பில்ட்டர் போடலியோ?அங்கே பாரு ஒட்டடை தொங்குது என்ன பொம்மனாட்டி நீயி இப்படி ஒரே ரோதனை தாங்க முடியலே!
ஏண்டி இதெல்லாம் ஒரூ ரோதனையா?
அட குறுக்கே பேசாதே.இவர் கூட நீயெல்லாம் குடுத்தனம் ஒரு நாள் நடத்திப்பாரு.உனக்கு அவார்டே வாங்கித்தர்ரேன்.அது சரி உன் பையன் எப்படி இருக்கான்?
ஐ பி யெம்மில் வேலைக்கு போயிட்டு இருக்கான்.
மகராசன்.கஷ்டப்பட்டு படிக்க வச்சி இப்ப பிரயோஜனமாக இருக்கோல்லியோ?இங்கே எங்கதையைக்கேளு.படிச்சு முடிச்சி ஒரு கால் செண்டரில் வேலைக்கு போனான்.முள்ளங்கி பத்தையா இருபதாயிரம் வாங்கிண்டு வந்தான் தான்.மொத மாசம் சமபளம் வாங்கி எங்க கால்லே சாஷ்ட்டாங்கமா விழுந்து நமஸ்காரம் பண்ணிண்டு சம்பளக்கவரை கையிலே கொடுத்தாந்தான்.பெற்ற மனம் அப்படியே சந்தோஷத்திலே பூரிச்சு போச்சு.போன மாசம் வர்ரான்.மாலையும் கழுத்துமா?லோகமே தல மேலே விழுந்து போச்சி போ.என்ன பண்றது என் தலவிதி.எங்கே இருந்தாலும் நன்னா இருன்னு தனிக்குடித்தனம் அனுப்பிச்சுட்டோம்.இந்த வெட்ககேட்டை நாலு பேருக்கு சொல்லுவாளோ என்ன.பகவான் எந்தலையில் இப்படி எழுதி வச்சிட்டானே.அது சரி உன் பையனுக்கு வரன் ஏதும் பார்க்கறியோ..இரு இரு ..சொல்லி முடிச்சுடுறேன்.படிச்ச பொண்ணு ,வேலைக்குப்போற பொண்ணு இந்த ரீதியிலே தான் இப்ப உள்ள காலத்துலே மனுஷாள் பார்த்து பாத்து மாட்டுப்பொண்ணு தேடுறா.
இப்ப என்ன தான் சொல்ல வர்ரே?
அட எவ்வளவு நாள் கழிச்சி பேசறோம்.காலேஜ் காலத்திலே ஹாஸ்டல்லே உக்காந்துண்டு நாம பேசாதா பேச்சா என்ன?அடிக்காத அரட்டையா என்ன?பாரு போர் அடிக்குது உன் திருவாயைத்திறவேன்னு பூங்கதவே தாள் திறாவாய்ன்னு பாடுற மாதிரி பாடிய காலமெல்லாம் மறந்துட்டியா?ஆங்..எதிலே விட்டேன்..!ம்ம்..இந்தக்கால மனுஷாள் நல்ல பொம்மனாட்டியா?குடும்பம் எப்படி?கோத்ரம் எப்படி.வீட்டுக்கு அடங்கிப்போறவளா இருப்பாளா ன்னா பாக்கறா.எந்த ஐடி கம்பனியிலே வேலைக்கு போறா?ப்ரமோஷனுக்கு சான்ஸ் உண்டா?சம்பளம் எப்படி இப்படித்தானே கணக்குப்போடுறாங்க.அப்புறம் லபோலபோன்னு அடிச்சுப்பாங்க?இந்த விஷயத்திலே நீ கவனமா இரு.மூத்தவன் எதோ போய்ட்டான் இருக்கற சின்னவனை தக்க வச்சிக்கணும்.நீயும் இந்த விஷயத்திலே கவனமாக இருக்கங்கோசாரமாத்தான் சொல்றேன்.
அதெல்லாம் நம்ம தலை எழுத்துப்பிரகாரம்தான் நடக்கும்.அப்புறம்..
இதையும் கேட்டுண்டுடு.தஞ்சாவூருலே இருக்கச்சே அக்ரஹாரத்திலே மணி மணின்னு ஒரு சமையல்க்காரன் இருப்பானோல்லியோ?ஆத்துலே காரியங்களுக்கு கூப்பிட்டான்னா டாண்டான்ணு வந்துடுவான் .வத்தக்குழம்பு வச்சான்னா அக்ரஹாரமே மணக்கும்.ஞாபகம் இருக்கோல்லியோ?
வந்து பாரு ..என் பொண்ணு..
அடடா,லலிதா வை மறந்தே போய்ட்டே.நன்னா இருக்கோலீயோ?பூஞ்சையா இருப்பாளே?சதை பிடிச்சிண்டிருக்காளா?அவளுக்கு முடி அப்படியே உன் மாமியாரைக்கொண்டு இருக்குமே?சாட்டையா நீளமா?அப்படியே மெயிண்டன் பண்றால்லியோ.இந்தக்காலத்து பசங்க ஷாம்பூ ஹேர் வாஷ் கண்டிஷனர்,கலரிங் இப்படி எதோதோ தலையிலே தடவிண்டு அநியாயப்படுத்துதுகள்.அப்படியே விட்டுடாதே.நம்ம காலத்துலே தலை மயிர் இப்படி இருக்காதான்னு ஆசைப்பட்டோம்.எங்கே வந்தது.கொத்துமல்லிகாட்டு சைசிலே..இப்ப அதுவும் தேஞ்சி கழுதை தேய்ஞ்சி கட்டெறுப்பான கதையா ஆகிப்போச்சு.
அவளுக்குத்தான் இப்ப..
என்ன அவளுக்கு ராசாத்தியாட்டம் வளர்த்தே.அவள் வயசுக்கு வர்ரதுக்கு முன்னரே 60 பவுன் நகை சேர்த்தே.இப்ப குறஞ்சது 200 சவரனாவது தேத்தி இருப்பே..இன்னிக்கு சவரன் விக்கற விலையிலே 200 பவுன் கணக்குபோட்டு பாரு.என்னை பற்றி யெல்லாம் உன் பொண்ணு விசாரிப்பாளோ?இந்த பார்வதம் மாமியை நன்னா ஞாபகம் இருக்குமோல்லியோ?
அதத்தான் சொல்லவர்ரேன்.
இரு இரு முடிச்சுடுறேன்.குறுக்காலே பேசினாக்க என்ன பேசினோம்ங்கறது மறந்துடுமோல்லீயோ?அப்ப நம்ம காலத்திலே கணமும் எனமுமா நகைங்க செய்தோம் இப்ப அப்படியா ?லைட் வெயிட்,ஆண்டிக்,குந்தன்,பிளாட்டினம்ன்னு காசை கரியாக்குதுகள்.நீ கெட்டிக்காரி அப்படி யெல்லாம் போகமாட்டே..எப்பவும் இப்படியே இருந்துடுவோன்னு பகவான் கிட்டக்க வரனா வாங்கிண்டு வந்தோம்.நாளைப்பின்னெ நகைகள் உதவனுமோல்லியோ?வித்தாக்க பல்க்கா பைசா திரும்ப கிடைக்க வேண்டாம்.
பாரு..பாரு நான் சொல்ல வர்ரதை சித்த கேளேன்.
ஆங் இப்பதான் ஞாபகத்திற்கு வர்ரது.உன் நாத்தானார்..அதான் கடைசி கடைக்குட்டி.எப்ப பாரு வாய்தொணதொணன்னு பேசிண்டே இருப்பாளே?நாம கூட பகவான் இவளுக்கு வாயைப்படச்சிட்டுத்தான் மத்த அங்கங்களைபடச்சான்னு நம்ம சாரு கூட சொல்லுவாளே?அதான்.தண்ட பாணி ..அதான்ப்பா.. மளிகைக்கடை வச்சிண்டிருந்தாரே..கடைத்தெருவிலே அதே தண்ட பாணி அவரோட நாட்டுப்பொண்ணு..
பாரு தலைக்கு மேலே வேலை இருக்கு.நான் சொல்ல வர்ரதை கேளேன்.
அட மனுஷாள்ன்னா வேலை இல்லாமல் என்ன?இப்ப பாரு இத்தனை வருஷம் கழிச்சு நீ போன் போட்டு இருக்கே.எத்தனை சந்தோஷமா இருக்கு.பழசெல்லாம்நினைவுக்கு வந்து மனசைப்போட்டு பிசையறதோல்லியோ?பழசெல்லாம் ங்கறப்போதான் ஞாபகத்திற்கு வர்ரது.பழைய துணிகளை எல்லாம் என்ன பண்றே?கூவிண்டு வர்ர பாத்திரக்காரணுக்கு போட்டுறியா?இப்ப கிலோ கணக்கிலே எடை போட்டு வாங்கி பணமா கொடுத்துடுறான்.நம்ம பாமா இல்லே பாமா?கருப்பா,திவ்யமா இருப்பாளே?சரசக்கா பொண்ணு இப்ப எங்க ஏரியாவிலேதான் இருக்கா..
ஐயோ பாரு நான் என்ன சொல்ல வர்ரேனா
தோ முடிச்சுறேண்டிமா.நீ பழைய கலா இல்லேடி.நான் இனிக்க பேசினாக்க என்னை சுற்றி வட்டமா உக்காந்துண்டு என் வாயை பார்த்துண்டு இருந்த காலமெல்லாம் மலை ஏறிப்போச்சு.நம்ம ஸ்நேகிதம் எப்பாற்பட்ட ஸ்நேகிதம்..எப்படி இருந்தோம்.அக்ரஹாரமே நம்ம நட்பைப்பார்த்து மூக்கிலே கை வைக்கும்.
நான் இல்லேங்கலே..இப்ப உனக்கு எதுக்கு போன் பண்ணேன்னா..
ஆங் போன்ன்னு சொன்னதும் ஞாபகம் வர்ரது.இந்தக்காலத்து பசங்களைப்பார்த்தியோன்னா...
ஐயோ..பாரு..பார்வதி. .
கதா பாத்திரங்கள் தொடரும்
Tweet |
21 comments:
ha ha ha Very funny... Parvatham maami nice character...
நன்றி இலா.
ரொம்ப சூப்பராயிருக்கு.அழகான எழுத்து நடை.தொடருங்கள் அக்கா!!
அக்கா,
என்ன சொல்ல வந்தாங்கன்னு கடைசி வரை சொல்லவேயில்லயே? அடுத்த பதிவுல சொல்லிடுவீங்கதானே?
பதிவு அருமை, ஆனாலும் இவா (பார்வதி மாமி ) செத்த நாழி அவாள (கலா மாமியை) பேசவிட்டின்டிருக்கலாம்..........
ஹுசைனம்மா,
மற்றவங்க என்ன சொல்ல வருகின்றார்கள் என்பதை கேட்பதற்குக்கூட பொறுமையில்லாமல் தான் பேச்சுதான் முக்கியம் என்ற கேரக்டர்தான் பார்வதி என்பதைத்தானே சொல்ல வந்தேன்.மறக்காமல் பின்னூட்டம் போட்டு விடுகின்றீர்கள்.மிக்க நன்றி.
பதிவுக்கு மிகவும் நன்றி சோனகர்,
மற்ற மனுஷாளை பேச விடவே மாட்டாள் நம்ம பார்வதி மாமி.அதான் அவாளோட ஸ்பெஷாலிடி.
தங்கை மேனகா,
பின்னூட்டத்திற்கு நன்றி.மறு மொழி போட்டு என்னை உற்சாகப்படுத்துவதை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
தொடருங்கள், apparam pathil poodureen
very nice maami character!!
ஸாதிகா அக்கா தொடர்கதை யா அதுவும் மாமி ஆத்து கதையா ம்ம் கலக்குங்கள்.
அது தொடர் கதை அல்ல.இதுபோல் வேறுவேறு பாத்திரங்கள் அவ்வப்பொழுது தொடரும்.நன்றி ஜலி உங்கள் பின்னூட்டத்திற்கு
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சுஸ்ரீ.
"ரூம் போட்டு யோசிப்பாய்ங்க"என்பார்களே!அதானா இது??
ரூம் போட்டெல்லாம்யோசிப்பதில்லேங்க.ரூமுக்குள் உட்க்கார்ந்து யோசிப்போம்.வருகைக்கு நன்றி
ஸாதிகா அக்கா. வாவ் நல்ல ப்ளாக். இன்றைக்கு தான் பார்த்தேன். அருமை.
நல்ல பார்வதி கதாபாத்திரம் எங்க இப்படி அச்சு அசத்தலா அய்யராத்து பாஷையை புட்டு புட்டு வைச்சிட்டிங்க. ம்... தொடருங்கள் கதையை ஆவலோடு காத்திருக்கேன்.
அடுத்தாது அம்புஜத்தை பார்த்தேளா....
வருகைக்கு மிக்க நன்றி விஜி.உங்கள் வலைப்பூவையும் பார்த்தேன்.இன்னும் நிறைய பதியுங்கள்
அஸ்ஸாலாமு அலைக்கும்
மாமி கதை சூப்பரு
வ அலைக்கும் வஸ்ஸலாம் தாஜ்.மாமி கேரக்டரை ரசித்தீர்களா?நான் மிகவுமே ரசித்து எழுதியது.வாழ்க்கையில் அன்றாடம் பார்க்கும் உண்மையான கதா பாத்திரங்களை கொஞ்சம் பில்ட் அப் செய்து எழுதினேன்.
Post a Comment