கோழிக்கோடில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் பேப்பூர் (BEYPORE) என்ற அருமையான சுற்றுலா தளம் உள்ளது.அழகிய கடற்கரை,அதனை ஒட்டி பேப்பூர் துறைமுகம்,அருகிலேயே கப்பல் கட்டும் தளம் ,கடலுக்குள் பயணிக்கும் கல் பாலம், மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் கடலுண்டி பறவைகள் சரணாலயம் என்று செல்ல வேண்டிய இடங்கள் எராளமாக உள்ளன.
மாபெரும் இலக்கிய மேதை ,சுதந்திர போராட்ட வீரர் வைக்கம் முஹம்மது பஷீர் வாழ்ந்து மறைந்த ஊர் என்ற பெருமையும் இந்த பேப்பூர் நகருக்கு உணடு.
பேப்பூர் பீச் மிக அழகாக காட்சி அளிக்கிறது.நாங்கள் சென்றது வீக் எண்ட் தினத்தில்.ஆகையால் கூட்டம் மெரினா பீச்சை நினைவூட்டியது.கடல்காற்று வாங்கிய படி குடும்பத்துடன் அமர்ந்து கொள்வதற்கு வசதியாக பீச் நெடுக கிரானைட் தளம் போட்ட உட்காரும் மேடை பீச் ஓரம் நீளமாக போடப்பட்டுள்ளது.பீச்சுக்கு செல்லும் பொழுது பெட்ஷீட்டோ,ஜமக்காளமோ சுமந்து செல்லும் வேலை மிச்சம்.வழி நெடுகிலும் அழகான விளக்கலரங்காரக்கம்பங்கள் கலை நயத்துடன் கண்களை கவர்ந்தாலும் பாராமரிப்பின்றி இருந்ததுதான் சோகம்.
கட்டணம் செலுத்தி துறைமுகத்துக்குள் நுழைந்தால் ஆங்காங்கே பெரிய பெரிய படகுகள் காணப்பட்டன.பல அடி ஆழமுள்ள கடலுக்கு அருகிலேயே தரைத்தளம் எந்த வித கைப்பிடி சுவரும் இல்லாமல் இருந்தது கிலியை கொடுத்தது.எங்கள் வீட்டு குட்டியின் கையை இறுக பற்றிக்கொண்டேன்..அருகில் போய் கடலை குனிந்து பார்த்தால் பயத்தில் விழி பிதுங்கிப்போனது.கொச்சிக்கு அடுத்த பெரிய துறை முகம் என்ற பெயரை பேப்பூர் துறைமுகம் பெற்றுள்ளது.
பேப்பூர் கப்பல் கட்டுமானத்தொழிலுக்கு புகழ் பெற்ற ஒரு கட்டுத்தளமாகும்.பண்டைய காலத்தில் உருசு என்ற மரக்கலன்கள் தயாரிப்பதில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியதாக இத்தளத்தை குறிப்பிடுகின்றனர்.சுமார் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்னரே அனுபவம் நிறைந்த தொழிலாளர்கள் தொழில் நுணுக்கத்துடன் கப்பல் கட்டும் பணியில் ஈடு பட்டு இருந்தனராம்
வெயில் மழை படாமல் நேர்த்தியாக மறைக்கப்பாட்ட பின்னர்தான் கப்பல் தயாராகின்றன.
உருவாகிக்கொண்டு இருக்கும் கப்பல்.
கப்பலின் அடிப்பாகம்.
கத்தார் மன்னருக்காக தயாராகிக்கொண்டுள்ள சொகுசுக்கப்பல்.இது அங்கிருந்த காவலாளி சொன்ன தகவல்.
கப்பலின் பக்கவாட்டுப்பகுதி..கப்பல் நிர்மாணிக்கப்பட்டு மலேஷியாவுக்கு எடுத்துச்சென்று எஞ்சினும் ஏனைய அலங்காரமும் மேற்கொள்ளப்படுமாம்.
கப்பலின் உயரத்தைப்பார்த்து அங்கிருந்த மர ஏணியில் ஏற நான் தயங்கினாலும் என்னவரும் எங்கள் வீட்டு குட்டி ஆமிரும் சரசர வென்று அங்கிருந்த மர ஏணியில் ஏறி கப்பலின் உச்சிக்கு சென்று எடுத்து வந்த படங்கள்.
கப்பலின் உள் அலங்காரம்.சொகுசுக்கப்பல் ஆகையால் கப்பலினுள் ஒவ்வொரு மில்லி மீட்டரும் பார்த்து பார்த்து செதுக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

Tweet |
33 comments:
படங்களையும் விளக்கங்களையும் ரசித்தேன்.
மூன்று வருடங்கள் நான் கோழிக்கோட்டில் (கல்லாயி) இருந்திருந்தாலும் ஒரு நாள் கூட பேப்பூர் சென்றதில்லை... அருமையான படங்கள்.... நன்றி...
வணக்கம்
அருமையான தேடல் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
படங்கள் மிக அருமை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அழகான படங்களுடன் அருமையான விளக்கங்கள்.
பகிர்வுக்குப் பாராட்டுக்கள். நன்றிகள்.
மணலில்லாத பீச் நல்லாத்தான் இருக்கு :-)
பேரனுடன் பேப்பூர் சூப்பர்.இந்த இடம் பற்றி இப்பொழுது தான் கேள்விபடுறேன்.படங்கள் பகிர்வினால் நாங்களும் இடத்தை பார்த்த திருப்தி.
கப்பலைப் பார்த்திருக்கிறேன். கப்பலை அதுவும் அடித்தளத்திலிருந்து கட்டுவதிலிருந்து படமெடுத்து போட்டிருப்பது ரொம்பவுமே இன்டரஸ்டிங் . ரசித்துப் படித்தேன்.
mika arumaiyaa irukku
niingka eeniyil eeriniingkalaa??
பெரிய கப்பல் பார்க்க ரொம்ப சூப்பராக இருக்கு, ஏணியில் ஏறினீங்களா?
சொகுசு கப்பல் கண்ணுக்கு விருந்தாக இருந்தது பணம் கொடுக்கும் சொகுசு
kaatchikalai kan munnaal niruthideenga thaaye...!
mikka nantri!
கப்பலின் உள்பகுதியைப் பார்த்தால் மாளிகையையே மிஞ்சிவிடும் போலிருக்கிறது.
படங்களும் பதிவும் அருமை.வாழ்த்துக்கள் சகோதரியாரே
கப்பலின் உள் அலங்கராம் மனத்தைக் கவர்ந்து சென்றது கூடவே உங்கள் குட்டிப் பயலின் புன்னகையும் தான் .
வாழ்த்துக்கள் தோழி .சிறப்பாகப் படம் பிடித்து பகிர்வாகத் தந்தமைக்கு எமது நன்றி கலந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு .
ம்.. ஒரு வழியா கேரளாவுக்கு போயிட்டு வந்திட்டு இருக்கிங்க. மலையாள கரையோரம் தொட்டிங்க.
சிப்ஸ் வாங்கி சாப்பிட்டிங்களா. அடுத்த தடவை போனிங்கனா போட் ஹவுஸ் + கேரளா கதகளி பார்க்க முடிந்தால் பார்க்கவும். மறக்காமல் அவலோஸ் உருண்டை, அவலோஸ் என்று கேட்டால் கிடைக்கும். வாங்கி சாப்பிடுங்க. புட்டு, பயறு மலபார் பரோட்டா, கடலை கறி, பப்படம். சாப்பிடுங்க. அருமையா படங்களோட பகிர்வு சூப்பர்.
ஹையோ!...
என்னவொரு கற்பனையும் கைவேலைத்திறனும்..
அற்புதம்!
அவர்களுக்கான கப்பலுக்கே இத்தனை சிறப்பென்றால்...
மாளிகைகள் நினைக்கவே முடியவில்லை!..
அழகிய பதிவும் பகிர்வும் ஸாதிகா.
நன்றியுடன் வாழ்த்துக்கள்!
த ம.7
உடன் கருத்துக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
மிக்க நன்றி ஸ்கூல் பையன்
கருத்துக்கு மிக்க நன்றி ரூபன்.
மிக்க நன்றி விஜிகே சார்.
மணலில்லாத பீச்//இல்லை சாரல்..சில இடங்களில் மணலுடன் இருக்கிறது கடற்கரை.நன்றி.
ஆம் தோழி.சென்ற முறை தனியாக செல்லும் பொழுது சுற்றிப்பார்க்க வாய்ப்பில்லை.இப்பொழுது கணவருடன் சேர்ந்து சென்றதால் பல இடங்களை பார்க்க இயன்றது நன்றி தோழி.
ரசித்து படித்ததுக்கு மிக்க நன்றி ராஜலக்ஷ்மி.
ஏணியில் ஏறினீங்களா?//இல்லை ஜலி.உயரத்தை பார்த்து ஏற பயந்துவிட்டேன்.நன்றி ஜலி.
மிக்க நன்றின் வைரமணி.
மிக்க நன்றி சகோ சீனி.
கப்பலின் உள்பகுதியைப் பார்த்தால் மாளிகையையே மிஞ்சிவிடும் போலிருக்கிறது//உண்மைதான்.முழுமை படுத்தும் தருவாயில் பார்த்தால் இன்னும் அழகாக இருக்குமாயிருக்கும்.நன்றி ஜெயக்குமார்
மிக்க நன்றி அம்பாளடியாள்.
நீங்கள் வாருங்கள் விஜி.சேர்ந்தே போகலாம்.அவலோஸ் உருண்டை கேள்விப்படதா பெயராக உள்ளதே.சிப்ஸ் வகைகள் மிகவும் சுவையாக இருந்தாலும் அங்கு பேமசான அல்வா வகைகள் எனக்கு பிடிக்க வில்லை.அல்வாவுக்கு என்றே ஒரு மார்க்கெட் உள்ளது.நுங்கு அல்வா.இளநீர் அல்வா,கவுனி அரிசி அல்வா என்று வகை வகையாக வித விதமாக இருந்தாலும் எங்களில் யாருக்கும் அது பிடிக்கவில்லை.நன்றி விஜி.
வாங்க இளமதி.கருத்துக்கு மிக்க நன்றி.
மிக அருமை. வித்யாசமான பகிர்வு ஸாதிகா :)
நன்றி தேனு.
தகவல்கள், படங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி ஸாதிகா.
அருமையான பதிவு.....அரிய தகவல்களுடன்.....வாழ்த்துக்கள் நன்றியுடன்.
Post a Comment