September 20, 2013

சரவணபவன்


வெங்கட் நாராயணா சாலை பக்கம் சென்ற பொழுது சரவணபவன் வாசலில் குலைவாழைகள் தலை சாய்த்து,தோரணங்கள் காற்றில் ஆட  அந்த பக்கம் செல்பவர்களை எல்லாம் வாங்க  வாங்க என்று அழைத்துக்கொண்டிருந்தன.உட்பகுதியில் போர்வீலர்களும்,வெளிப்பகுதியில் டூவிலர்களும் ஏதோ விழாவோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது. சரவணபவனில்  மூன்று நாட்களுக்கு புரட்டாசி மாதம் தலைவாழை இலைவிருந்து அறிமுகப்படுத்தி இருந்தார்கள்.சாதரணமாக சரவணபவன் கிளைகளில் அன் லிமிடெட் மீல்ஸ் விற்கும் விலைக்கே அன்று தடபுடல் விருந்து.

விருந்து சாப்பிட்டு வெகு நாளாகிறதே.பணம் கொடுத்தாவது விருந்து சாப்பிடலாம் என்ற எண்ணத்தில் உள்ளே புகுந்தோம்.வாகனநெரிச்சல்களை பார்க்கும் போது கூட்டம் கும்மி அடிக்குமே.சரி பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் மூன்று மாடிகள் கொண்ட உணவகத்துக்குள் நுழையும் போதே வாசலில் உள்ள காவலாளி இரண்டாவது தளம் போங்க என்று கூறினார்.

அடடா..முதல் தளம் முழுக்க நிரம்பி விட்டது காத்திருந்துதான் சாப்பிட வேண்டும் என்று நினைத்தபடி லிப்டினுள் நுழைந்தோம்.மாடியில் இருந்த கூட்டத்தைப்பார்த்து ஓரமாக இருந்த ஷோபாவில் அமர்ந்த மறு நொடியே உள்ளே வருமாறு  அழைத்து விட்டனர்.மிகுதியான குளிர்ச்சியும் அழகான டெகரெஷனும்,பளிரென்ற விளக்கு அலங்காரமுமாக .சுத்தமும் கண்களை கவர்ந்தது.அதைவிட உபசரிப்பு வழக்கதைவிட அதிகம் தூக்கல்.தலை வாழை இலை விருந்து என்று தலைப்பிட்டதாலோ என்னவோ உணவக நிர்வாகம் கஸ்டமர்களை ஸ்பெஷலாக கவனிக்க சொல்லி விட்டதோ என்னவோ?உண்மையில் விருந்து உபசாரம்தான்.



திக்காக சுவையாக ஜில்லென்று கிர்ணிப்பழ ஜூஸ் குடிக்க இதமாக இருந்தது.கூடவே டிரை ஜாமூன்.அதன் பின் மேஜைக்கு வந்த ஐட்டங்களை பார்க்கும் போது
120 ரூபாய்க்கு காய்கறி விற்கிற விலையில் இத்தனை ஐட்டங்களா என்று ஆச்சரியமாக இருந்தது.வெள்ளை நிற பவுலில் இரண்டு பேர் சாப்பிடக்கூடிய அளவில் பளீரென்ற சாதம்.”இவங்களுக்கு மட்டும் எப்படித்தான் இத்தனை பளிச் என்று சாதம் வருது .?” என்று பக்கத்தில் இருந்த நட்பிடம் கேட்டபொழுது “சுண்ணாம்பை கலப்பார்கள் போலும் ”என்றாள்.இதனை செவி மடுத்த சர்வர் ”இல்லேம்மா இது நயம் பச்சரிசி”சாப்பாட்டோடு சேர்த்து இலவச இணைப்பாக பல்பு கொடுத்தார்.
கிழே லிஸ்டை நன்றாக மூச்சு விட்டுக்கொண்டு படிங்க..மூக்கு பிடிக்க சாப்பிடத்தான் முடியாது..சாதம்,சாம்பார் கூட்டு பொரியல் குழம்பு எவ்வளவு கேட்டாலும் தருகிறார்கள்.ஆனால் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடத்தான் முடியாது.லிஸ்டில் இருந்ததைவிட இன்னும் அதிகளவில் ஐட்டங்கள் இருந்தன.
கிர்ணிப்பழஜூஸ்
டிரைஜாமூன்
சேமியா பால்பாயசம்
சாதம்
புதினா சாதம்
பருப்புவடை
பைனாப்பிள் ஸ்வீட் பச்சடி
கேரட் கோஸ் சாலட்
பீன்ஸ்காரக்கறி
கத்தரி கொண்டைக்கடலை கூட்டு
முருங்கைக்காய் சாம்பார்
பருப்பு
நெய்
தக்காளி ரசம்
கருணைகிழங்கு வற்றக்குழம்பு
தயிர்
மோர்
பருப்புத்துவையல்
வடகம் 
அப்பளம் 
நெல்லிக்காய் ஊறுகாய்
மோர்மிளகாய்
வாழைப்பழம்
பீடா
சிக்கூ ஐஸ் க்ரீம்


மல்லிகைப்பூ சாதத்தின் மீது கட்டிப்பருப்பு.

கட்டிப்பருப்பின் மீது மணக்க மணக்க உருக்கு நெய்.

 வடை,மோர்மிளகாய் வடகம் ஊறுகாய் துகையல் வகையறாக்கள்



கடைசியாக பழம் பீடா ஐஸ்கிரீம்



லிஸ்டை பாருங்கள்.இன்னும் இரண்டு நாளைக்கு இந்த ஆஃபர் உள்ளது

உடன் வந்த வாண்டு எனக்கு மீல்ஸ் வேண்டாம் டிபன் தான் வேண்டும் என்றது ஒரு பனீர் தோசை ஆர்டர் செய்தோம்.இரண்டுவித சட்னிசாம்பாருடன் இருந்த பனீர் தோசையின் விலை 140 அடேங்கப்பா சொல்லவைத்தது.

சரி கடைசியாக ஒரு டம்ளர் டிகிரி காஃபி சாப்பிடலாம் என்று ஆர்டர் செய்து காஃபியை சுவைத்து பில்லை பார்த்தால் லைட்டாக மயக்கமே வந்து விட்டது..100 ml காஃபி ஒவ்வொன்றும் தலா 40 ரூபாய்..chennai guys...போய் 120 ரூபாய் கட்டி டோக்கன் வாங்கி சமர்த்தாக  மீல்ஸ் மட்டும் சாப்பிட்டுவிட்டு வாங்க.காஃபிக்கு ஆசைப்பட்டுடாதீங்க.டிப்ஸ் மற்றும் வேலட் பார்க்கிங்  தனி.இன்னும் சிம்பிளாக 95 ரூபாயில் இதே தலை வாழை விருந்து சிக்கனமாக சாப்பிடவேண்டுமென்றால் குளிரூட்டப்படாத கிளைகளுக்கு போகலாம்.



48 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இவ்வளவா...? இப்பவே கண்ணை கட்டுதே...!

திண்டுக்கல் தனபாலன் said...

பலருக்கும் உதவும்... நன்றி...

ஸாதிகா said...

இவ்வளவா...? இப்பவே கண்ணை கட்டுதே...!//சென்னைக்கு டிக்கெட் போட்டுடுங்க திண்டுக்கல் தனபாலன் சார்.உடன் கருத்துக்கு நன்றி!

Menaga Sathia said...

என்சாய் பண்ணுங்க அக்கா..பெருமூச்சு விட்டுக்கறேன்..

கார்த்திக் சரவணன் said...

ம்ம்ம்ம்... பாத்தாலே நாக்கில எச்சி ஊறுதே.... போயிர வேண்டியதுதான்...

Yaathoramani.blogspot.com said...

தான் பெற்ற இன்பம் சென்னைப் பதிவர்களும் பெற
சுடச் சுட பதிவிட்டமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
படங்களுடன் விளக்கம் எங்களைப் பொன்ற
வெளியூர் வாசிகளை ஏக்கமுறச் செய்கிறது
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

BABA said...

உப்பு, தண்ணீர் விட்டு விட்டீர்களே

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான தகவல்கள்.

இந்தப்பதிவினைப்படித்ததுமே
தலை வாழை இலை போட்டு தாங்களே எல்லாவற்றையும் அன்புடன் பரிமாறியது போன்ற ஒரு திருப்தி ஏற்பட்டது.

பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

Mahi said...

பசி நேரத்தில உந்தப் பதிவு என் கண்ணில் பட்டு இன்னும் கொஞ்சம் பசிக்குது ஸாதிகா அக்கா! ஹ்ம்ம்ம்...என்ஸாய்! :) ;)

கலியபெருமாள் புதுச்சேரி said...

இதுலாம் ஒரு பிசினஸ் தந்திரம்...நல்லா போய் பல்பு வாங்கனது பத்தாதுனு எங்களை வேற கூப்படறீங்க..

கோமதி அரசு said...

கிழே லிஸ்டை நன்றாக மூச்சு விட்டுக்கொண்டு படிங்க..மூக்கு பிடிக்க சாப்பிடத்தான் முடியாது..சாதம்,சாம்பார் கூட்டு பொரியல் குழம்பு எவ்வளவு கேட்டாலும் தருகிறார்கள்.ஆனால் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடத்தான் முடியாது//

சரியாக சொன்னீர்கள் ஸாதிகா .
நம்மால் கண்டிப்பாய் சாப்பிட முடியாது.
அருமையான் பகிர்வு.

இளமதி said...

அட்டகாசமாய் இருக்கிறதே...:)

அத்தனையையும் பார்த்து ஆழமாக க்ஹும்ம்ம்ம் என்று ஒரு பெருமூச்சு மட்டுமே என்னாலும்...:)

அருமையான பதிவும் பகிர்வும்! என் நன்றியும் வாழ்த்துக்களும் ஸாதிகா அக்கா!

த ம.5

துளசி கோபால் said...

அடடடா.............. வாவ் சொல்லவைக்குதே!

ஏம்ப்பா இந்த ஆஃபரை மார்கழி மாசம் தரமாட்டாங்களா????

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான விருந்து சாப்பிட்ட உணர்வு நன்றி

இமா க்றிஸ் said...

நானும் துளசி அக்கா கேட்டதைத்தான் கேட்க வந்தேன்.
இந்த ஆஃபரை மார்கழி மாசம் தரமாட்டாங்களா????

Asiya Omar said...

ஆஹா! நான் அங்கு வந்தப்பவே ருசித்து விட்டேன்,ஆனால் இந்த விலைக்கு அல்ல:( ! :) எஞ்சாய் நவ்!
மூன்று நாள் மூன்று வேளை ஒரு குடும்பம் சரவணபவனில் சாப்பிடுவதும், முப்பது நாள் நம்ம வீட்டில் செலவு செய்து சாப்பிடுவதும் ஒன்று.

ஸாதிகா said...

வருகைக்கு நன்றி மேனகா.

ஸாதிகா said...

போயிர வேண்டியதுதான்...//போனீர்களா ஸ் பை?

ஸாதிகா said...

தொடர் வரவுக்கும் கருத்துக்கும் ஓட்டுக்கும் நன்றி ரமணி சார்

ஸாதிகா said...

உப்பு, தண்ணீர் விட்டு விட்டீர்களே///அட..ஆமால்ல..:)நன்றி பாபா

ஸாதிகா said...

வைகோ சார் மிக்க நன்றி

ஸாதிகா said...

பசி நேரத்தில உந்தப் பதிவு என் கண்ணில் பட்டு இன்னும் கொஞ்சம் பசிக்குது ஸாதிகா அக்கா! ஹ்ம்ம்ம்...என்ஸாய்! :) ;)//அட பதிவு மகியின் பசியை தூண்ட் விட்டு விட்டதா?

ஸாதிகா said...

கலியபெருமாள் புதுச்சேரி மிக்க நன்றி.

ஸாதிகா said...

வருகைக்கு மிக்க நன்றி கோமதிம்மா.

ஸாதிகா said...

மிக்க நன்றி இளமதி.

ஸாதிகா said...

ஏம்ப்பா இந்த ஆஃபரை மார்கழி மாசம் தரமாட்டாங்களா????//என்னக்கா மார்கழியில் வர்ரீங்களா?காண்டாக்ட் பண்ணுங்க வந்தப்புறம்..:)

ஸாதிகா said...

கரந்தை ஜெயக்குமார் கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

நானும் துளசி அக்கா கேட்டதைத்தான் கேட்க வந்தேன்.
இந்த ஆஃபரை மார்கழி மாசம் தரமாட்டாங்களா????//இமா,நீங்களும் மார்கழியில் வர்ரீங்களாப்பா இந்தியாவுக்கு..?

ஸாதிகா said...

மூன்று நாள் மூன்று வேளை ஒரு குடும்பம் சரவணபவனில் சாப்பிடுவதும், முப்பது நாள் நம்ம வீட்டில் செலவு செய்து சாப்பிடுவதும் ஒன்று.//உண்மைதான்.ஆசியா.100 மில்லி காஃபி 40 ரூபாய் என்றால் ஒரு லிட்டர் பால் வாங்கி 40 ரூபாய்க்குள் எத்தனை காஃபி போட்டுவிடலாம்.ஆனால் இந்த ஆஃபர் சீப் தான்.

ஸாதிகா said...

மூன்று நாள் மூன்று வேளை ஒரு குடும்பம் சரவணபவனில் சாப்பிடுவதும், முப்பது நாள் நம்ம வீட்டில் செலவு செய்து சாப்பிடுவதும் ஒன்று.//உண்மைதான்.ஆசியா.100 மில்லி காஃபி 40 ரூபாய் என்றால் ஒரு லிட்டர் பால் வாங்கி 40 ரூபாய்க்குள் எத்தனை காஃபி போட்டுவிடலாம்.ஆனால் இந்த ஆஃபர் சீப் தான்.

சீனு said...


ஒரே ஒரு முறை சரவணபவன் சென்று சாப்பிட்டுள்ளேன்.. எங்கள் அலுவலகத்தில் மலிவு விலை சரவணபவன் மீல்ஸ் உண்டு 37 ரூபாய்.. இரண்டும் ஒரே சுவை என்பது கூடுதல் தகவல் :-))))))

Jaleela Kamal said...

ஆகா பசிய கிளப்பிட்டீங்களே. இத்தனை வகையா? இங்குள்ள சரவன பவனில் கூட சுவை அபாரமாக இருக்கும் ஆனால் விலை தான் அதிகம்.

மனோ சாமிநாதன் said...

அனைத்துப் படங்களும் விபரங்களும் விருந்தே சாப்பிட்ட திருப்தி தந்தது ஸாதிகா!

enrenrum16 said...

லிஸ்ட் பார்த்தாலே வயிறு நிறைந்துடும் போல இருக்கே..... ஆஃபர் நிஜமாவே சீப் தான்க்கா... பகிர்விற்கு நன்றி.

மாதேவி said...

அருமையான விருந்துதான்.

ADHI VENKAT said...

ஆஹா! லிஸ்ட்டைப் பார்த்தாலே பசியை கிளப்புதே....

மெனு ரொம்ப நல்லா இருக்கே...

ஜமாய்ங்க..:))

ravikumar said...

Saravana Bhavan loots people hence they lost business. hence they reduced price & increased items. But still they are looting and spending money in unethical way

ஸாதிகா said...

வருகைக்கு நன்றி சீனு.

ஸாதிகா said...

இங்குள்ள கிளைகளில் விலை அதிகம் .வெளிநாடென்றால் கேட்கவா வேண்டும்.வருகைக்கு நன்றி ஜலீ.

ஸாதிகா said...

வருகைக்கு மிக்க நன்றி மனோ அக்கா.

ஸாதிகா said...

ஆஃபர் நிஜமாவே சீப் தான்க்கா..//உண்மைதான் பானு.நன்றி.

ஸாதிகா said...

நன்றி மாதேவி.

ஸாதிகா said...


ஜமாய்ங்க..:))//ஜமாய்ச்சாச்சு ஆதி நன்றி.

ஸாதிகா said...

நன்றி ரவிகுமார்.

Kanchana Radhakrishnan said...


தகவல்கள் அருமை.

பால கணேஷ் said...

­சிங்­கை­யி­லி­­ருந்­து ­வந்­த ­நண்­பர் ­ஒ­ரு­வ­ரு­டன் ­நான் ­இந்­த ­மீல்­ஸை ­ஒ­ரு ­கை ­பார்த்­தேன். ஆ­னா... இப்­ப­டி ­ப­டம் ­பு­டிச்­சு, அ­ழ­கா ­ப­­தி­வா ­எ­ழு­த­ணும்­னு ­எ­னக்­குத் ­தோ­ணா­மப் ­போச்­சே... நீ ­இன்­னும் ­வ­ள­ர ­வேண்­டி­யி­ருக்­­கு­டா ­க­ணே­ஷா!

வல்லிசிம்ஹன் said...

நான் படிக்கும் வேளை இந்த ஆஃபர் முடிந்திருக்கும் போல:)
நன்றி. படங்கள் உண்மையிலியே கண்ணைக் கட்டுகிறது!!!!

முற்றும் அறிந்த அதிரா said...

அடடடடாஆ.. பார்க்க சூப்பராக இருக்கு.. சுவை எப்படி இருந்துது ஸாதிகா அக்கா? சரவணபவன் ஃபிரான்ஸ்சிலும், கனடாவிலும் போய்ச் சாப்பிட்டிருக்கிறோம் சுவை சூப்பரோ சூப்பர். எனக்கு செட்டிநாடுதான் பிடிக்கல்ல:(.