அல்ஸீமர்(Alzheimer’s disease)நினைவிழப்பு நோய்,முதியவர்களை தாக்கும் ஒரு கோரமான வியாதி எனலாம்.இந்நோய் எல்லா முதியவர்களையும் தாக்காது.ஞாபக சக்திதிறன் குறைந்த ஏனைய முதியவர்களுக்கு இந்த நோய் தாக்கி உள்ளது என்றும் கூறி விட இயலாது.
டிமென்ஷியா என்கிற நினைவிழப்பு நோய் ஏன் ஏற்படுகிறது என்பது தொடர்பாக இதுவரை ஆதாரப்பூர்வமான தகவல்கள் இல்லை. எனினும் டிமென்ஷியா உருவாவதற்கான பல காரணிகளில் அல்ஸீமர்(Alzheimer) என்று கூறப்படும் மூளை அழுகல் நோய் முக்கிய காரணம் என்று மருத்துவ உலகம் கூறுகிறது.
ஒரு பொருளைக்காட்டி அதன்பெயருக்கு முற்றிலும் மாறாக அந்த பொருளின் பெயரை சொல்லும் பொழுது மற்றவர் நீங்கள் சொல்வது தவறு என்று விளக்கினால் அதனை ஒத்துக்கொள்ளும் முதியவராயின் சரி.அதனை ஒத்துக்கொள்ளாமல் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதமாக நிற்கும் முதியவர்களை கிட்டத்தட்ட அந்த நோயின் தாக்கம் பீடித்துள்ளது என்பதினை அவரது செய்கைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.நாளடைவில் இந்நோயாளர் நோயின் தாக்கத்திற்கு படிப்படியாக உள்ளாகுவார்.
நினைவாற்றல் சிந்திக்கும் ஆற்றலையும் ஒழுங்குபடுத்தும் மூளையின் பகுதியில், இந்நோயின் தாக்கம் ஆரம்பிக்கின்றது. பிறகு, மூளையின் பிற பகுதிகளுக்குப் பரவுகிறது.
நோயாளியின் உடலில் சக்தி குறைந்து கொண்டே போவது, மறதி, மனநிலையில் தடுமாற்றம், மெதுவான உடல் இயக்கம் ஆகியவை இருக்கும். குழப்பம் அடைதல், மற்றவர்களின் பேச்சு, புரிந்துகொள்ளும் தன்மையும் குறையும்.இந்நோயால் தாக்கப்பட்டவர்கள் சில தருணங்களில் வசிப்பிடம் மறந்து போய் தொலைந்து போகவும் வாய்ப்புண்டு.
சிலருக்கு பேசிக்கொண்டு இருக்கும் பொழுது என்ன பேசுகிறோம் என்பது மறந்து போய் திணறுவார்கள்.மூளை தன் கட்டுப்பாட்டை இழப்பதால் மனமும் உடலும் சோர்ந்து பதைபதைப்புடன் காணப்படுவார்கள்.பல ஆண்டுகளுக்கு முன்னுள்ள சம்பவங்கள் மட்டும் நினைவில் இருக்கும்.சமீபத்திய சம்பவங்கள் மறந்து போய் இருக்கும்.
மூளை மீதான இந்நோயின் தாக்குதல், உயிருக்கு உலை வைக்கக்கூடியது.எட்டு முதல் பத்து ஆண்டுகள் வரை, இந்நோய் நீடிக்கிறது. சிலர், வெகு விரைவில் மரணம் அடைவதுண்டு, சிலர் 20 ஆண்டு வரை உயிர் வாழ்வார்கள்.
நோயின் உச்சத்தில் இயற்கை உபாதைகளை கட்டுபடுத்த இயலாமலும்,உணவை விழுங்க இயலாமலும்,சரியான உணவு இல்லாமையால் அதனால் உடல் தெம்பு இல்லாமல் இறுதில் மரணத்தை தொடுகின்றார்கள்.
2020- ஆம்ஆண்டில் இந்தியாவில் மட்டுமே இந்நோயால் 37 லட்சம் முதியவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் அச்சுறுத்துகிறது.
ஒவ்வொரு செப்டெம்பர் 21 ஆம் தேதி உலக அல்ஸீமர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தை (pittsburgh university) சேர்ந்த நரம்பியல் ஆய்வாளர் (Neurology researcher) கிர்க் எரிக்சன் தன் ஆய்வில் வயதாக, வயதாக மூளையின் அளவு சுருங்குகிறது.இதனால், வயதானவர்களுக்கு நினைவு வைத்துக் கொள்ளும் திறனும் படிப்படியாக குறைகிறது. இதை தடுக்கும் வகையில் முதியவர்களுக்கு உடற்பயிற்சி, நடைபயிற்சி அளிப்பதால் அல்ஸீமர் என்ற மறதி நோய், டிமென்ஷியா என்ற மனநோய் ஆகியவை தடுக்கப்படுகின்றன என்று கூறுகிறார்.
1.முதுமையில் மூளை நல்ல நிலையில் இருப்பதற்கும், நினைவு திறன் பாதிக்காமல் இருப்பதற்கும், நடுத்தர வயதில் மேற்கொள்ளும் முறையான உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி பெருமளவில் உதவுகிறது. எனவே, உடல்நலம் காக்க எல்லா வயதினரும் முறையான உடற்பயிற்சி,நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
2. சிரிப்பு தான் உலகின் சிறந்த மருந்து என்பது நமக்குத் தெரிந்ததுதான். ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று, டிமென்ஷியா பாதிக்கப்பட்ட வயதானோருக்கு சிரிப்பு அருமருந்தாகப் பயன்படுவதாக அறிவித்துள்ளது.
3.வயதாகி விட்டால், இருட்டை தவிர்த்து, வெளிச்சம் உள்ள இடங்களில் இருக்க வேண்டும். சூரிய ஒளி உடலில் படும் வகையில் நடக்க வேண்டும்.இந்த முறையை பின் பற்றினால் வயதான காலத்தில் வரும் டிமென்ஷியா பாதிப்பு குறையும் வாய்ப்பு உண்டு என்று
நிபுணர்கள் கூறுகின்றனர்.
4.அநேக முதியவர்கள் இப்பொழுது தனிமை வாழ்க்கை வாழ்கின்றனர்.வீட்டிலேயே வசித்தாலும் தனி அறையில் தனிமைப்படுத்தபடுகின்றனர்.இந்நிலை மாறி இளையவர்கள் அனுசரணையாகவும்,அன்பாகவும் நான் இருக்கிறேன் உங்களுக்கு என்ற தைரியத்தை எப்பொழுதும் ஊட்டக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.
5.இந்நோய்க்கும் அலுமினியத்திற்கும் தொடர்பு உண்டு என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.அலுமினியப் பாத்திரத்தை தொடர்ந்து உபயோகப் படுத்தியதால்தான் இந்நோய் வந்தது என்பதை உறுதியாக கூற முடியாவிட்டாலும் அலுமினிய பாத்திரங்களின் உபயோகத்தினை முற்றிலுமாக தவிர்த்துக்கொள்ளப்படவேண்டும்.
6.அதீத சிந்தனையும் இநோய்க்கு காரணம் என்கின்றனர்.பிரபல எழுத்தாளர் நாவலாசிரியை கோமகளின் இந்நோய்க்கு காரணி அவர் அதிகம் அதிகமாக சிந்தித்ததுதான் என்கின்றார்கள்.
அமெரிக்கா முன்னாள் அதிபர் ரெனால்டு ரீகன்,குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலி,பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி ஜாக்குஸ் சிராக்,பிரித்தானிய முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் காமன்வெல்த் ஊழல் வழக்கு சுரேஷ் கல்மாடி,எழுத்தாளர் கோமகள் போன்றோர் நினைவு இழப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போலியோ,அம்மை போன்ற நோய்கள் விரட்டப்பட்டது போல் இந்நோயும் உலகில் இருந்து விரட்டப்பட்டு அல்ஸீமர் இல்லாத உலகமாக திகழ வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமும்.
Tweet |
61 comments:
அருமையான கட்டுரை ஸாதிகா.
கூடவே இருக்கும்போது விடயம் தெரிந்திருந்தாலும் வயதானவர்களின் இந்த மாற்றங்கள் பலருக்குப் புரிவதில்லை.
உடற்பயிற்சி, நடை பற்றி நீங்கள் சொல்லி இருப்பது உண்மைதான். செபாவையும் அப்பாவையும் பார்க்கும் யாரும் உண்மை வயதைவிடக் குறைவாகத்தான் மதிப்பிடுகிறார்கள். மனதிலும் இருக்கிறது ரகசியம். எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
முதுமையை நினைத்தால் பயம் வருவதற்கு இந்த நோயும் ஒரு காரணம்:(
அல்ஸீமர் நோயைப்பற்றிய பல தகவல் கொடுத்திருக்கிறீர்கள். 2010ல் இம்புட்டு பேர் இந்தியாவில் பாதிக்கப்படுவார்களா?எனக்கு இப்பவே எதையோ மறந்தது போல இருக்கு.
அல்ஸீமர்ங்கற நோயைப் பத்தி ‘ப்ளாக்’ படத்து அமிதாப் கேரக்டர் மூலமா கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டேன்க்கா. இப்ப உங்க மூலமா விரிவாத் தெரிஞ்சது. டிமென்ஷியா நோய்க்கு சிரிப்பு ஒரு நல்ல நிவாரணிங்கறது ஆச்சரியத் தகவல் S.S. ‘வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகும்’னு இதுக்குத்தான் சொல்லியிருப்பாங்களோ!
நோய் குறித்து மிகத் தெளிவாக விளக்கி அதற்கான
தீர்வையும் மிக மிக அழகாக விளக்கியமைக்கு
மனமார்ந்த நன்றி
மனம் கவர்ந்த பயனுள்ளா அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 3
விழிப்புணர்வைத் தரும் நல்ல பதிவு. உங்கள் பிரார்த்தனையில் இணைகிறோம்.
அல்ஸீமர் நோய் பற்றி விரிவாக அறிந்ததில் மகிழ்ச்சி. எல்லாத்துக்கும் ஒரு தினம் கொண்டாடற ஃபேஷன் நோயையும் விட்டு வெக்கலையா? இதுக்குன்னு ஒரு தினம் இருக்குன்றது புதுத் தகவல். மிகப் பயனுள்ள பகிர்வும்மா. அருமை.
இதுவரை தெரியாத தகவல் .. நன்றி ..
Nice article. Please forward your article to the Foundation for Research on Rare Diseases and Disorders
C252 Kandasamy Salai
Periyar Nagar, Chennai 600 082
India
Contact by email:
contact@rarediseasesindia.org
நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி. வயதானவர்களுக்கு ஆரோக்கியமான உடல் நிலை ஒரு வரம்தான்.
டாக்டர் ஸாதிகாக்கா வாழ்க :-)
///2020- ஆம்ஆண்டில் இந்தியாவில் மட்டுமே இந்நோயால் 37 லட்சம் முதியவர்கள் பாதிக்கப்படுவவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் அச்சுறுத்துகிறது./////
ஐய்யயோ என்ன சகோ இப்பிடி மிரட்டுறீங்க,
அருமையான ஆக்கம் சகோ, தொடர்ந்து தரமான படைப்புகளை எழுதுங்கள் ..!
அல்ஸீமர் பற்றி அறிய தகவல்களை பகிர்ந்து இருக்கீங்க பலருக்கும் பயனளிக்கும்.
மிகவும் பயனுள்ள கட்டுரை.
நல்ல விஷயங்கள் சொல்லிட்டீங்க ஸாதிகா அக்கா...
வெளிநாடுகளில் ஏற்கனவே கண்டு பிடித்துச் சொல்லிவிடுவதனால் அதற்கேற்ப அனைவரும் ஒத்துழைக்கின்றனர்.
ஆனா நம் நாட்டிலுள்ளோரின் கதி.. அவர்களுக்கு இப்படி ஒரு நோய் ஆரம்பமாகிவிட்டது என்பதை அறியாமல், ஏனையோர் திட்டுவதும், நையாண்டி பண்ணுவதும்... எவ்வளாவு கொடுமை... வருங்காலத்தில் இவை குறைந்துவிடும் என்றே எண்ணுகிறென்ன்..
டாக்டர் ஸாதிகாக்கா வாழ்க!!!!....
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வந்துள்ள
கட்டுரை நன்று நன்று!
புலவர் சா இராமாநுசம்
//அதீத சிந்தனையும் இநோய்க்கு காரணம் என்கின்றனர்//
ஐயய்யோ.. இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுட்டீங்களே அக்கா! நாலு வரி எழுதுறதுக்கே மண்டைய பிச்சிக்கிற என்ன மாதிரி பதிவர்கள் நிலைமை?
வாழும் வரை சுய நினைவோடு வாழும் வரத்தை வல்ல இறைவன் நம் அனைவருக்கும் வழங்குவானாக!
அன்பு ஸாதிகா, இப்பொழுதுதான் பாதிக்கப் பட்ட ஒருவரைப் பார்த்துவிட்டு வருகிறேன்.
அவர் தன்னுடைய கணவர் இறந்துவிட்டார் என்பதையே உணரவே முடியவில்லை.
நடக்கறதே இல்லை. இப்ப பாரு படுத்துண்டாச்சு'' என்று சொல்லும்போது மிக வருத்தமாக இருந்தது.
மிக அருமையான விவரங்களைக் கொடுத்திருக்கிறீர்கள். செய்ய வேண்டியது என்ன என்றும் விளக்கி இருக்கிறீர்கள்.
மனம் நிறைந்த நன்றி மா. வாழ்த்துகள்.
test
பிளாக்கர்களுக்கு இந்த நோய் வருவதில்லை என்பது என் கண்டுபிடிப்பு.
அல்ஸீமர் நோய் பற்றிய விளக்கமும் தீர்வும் மிக நல்ல பகிர்வு.நிச்சயம் இதைப்பற்றிய் விழிப்புணர்வு அவசியம் தேவை.
முதல் வருகைக்கு நன்றி இமா.
//செபாவையும் அப்பாவையும் பார்க்கும் யாரும் உண்மை வயதைவிடக் குறைவாகத்தான் மதிப்பிடுகிறார்கள். // மிக்க மகிழ்ச்சி இமா.
//முதுமையை நினைத்தால் பயம் வருவதற்கு இந்த நோயும் ஒரு காரணம்:(//உண்மைதான் துளசி கோபால்.கருத்துக்கு நன்றி சகோ.
கருத்துக்கு மிக்க நன்றி விச்சு.
தங்கை நிரஞ்சனாவுக்கு நன்றிகள்.
கருத்துக்க்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்.
மிக்க நன்றி ராமலக்ஷ்மி
இதுக்குன்னு ஒரு தினம் இருக்குன்றது புதுத் தகவல்//
இது மட்டிலுமா?ஜனவரி 30 தொழு நோய் தினம்
மார்ச் 15 ஊனமுற்றோர் தினம்
மார்ச் 24 காசநோய் தினம்
ஏப்ரல் 17 இரத்தம் உரையாமை தினம்
நவம்பர் 14நிரிழிவு தினம்டிசம்பர் 1எய்ட்ஸ்தினம்
இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகுமே.கருத்துக்கு மிக்க நன்றி கணெஷண்ணா.
கருத்துக்கு மிக்க நன்றி ரஜபாட்டை ராஜா
மிக்க நன்றி சங்ககிரி சிவா
கருத்துக்கு மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.
கருத்துக்கு நன்றி ஜெய்லானி.
மிரட்ட வில்லை சகோ.உண்மைதான்...கருத்துக்கு நன்றி சகோ வரலாற்று உண்மைகள்
கருத்துக்கு நன்றி ஜலீ
அருமையான பதிவு
தெரியாத தகவல் தெரிந்துக் கொண்டதில் மகிழ்ச்சி..விழிப்புணர்வு பதிவுக்கு மிக்க நன்றிக்கா!!
கருத்துக்கு மிக்க நன்றி வி ஜி கே சார்.
ஆனா நம் நாட்டிலுள்ளோரின் கதி.. அவர்களுக்கு இப்படி ஒரு நோய் ஆரம்பமாகிவிட்டது என்பதை அறியாமல், ஏனையோர் திட்டுவதும், நையாண்டி பண்ணுவதும்... எவ்வளாவு கொடுமை... வருங்காலத்தில் இவை குறைந்துவிடும் என்றே எண்ணுகிறென்ன்..//இதுதான் என்னுடைய ஆவலும்.நன்றி அதிரா.
கருத்திட்டமைக்கு மிகவும் நன்றி புலவரய்யா.
வாழும் வரை சுய நினைவோடு வாழும் வரத்தை வல்ல இறைவன் நம் அனைவருக்கும் வழங்குவானாக!///ஆமீன் ஆமீன்..நன்றி மீரான்.
வல்லிம்மா,கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.இநோயுற்றோரை பார்க்கும் பொழுதும் அவர்களது குடும்பத்தினை பார்க்கும் பொழுதும் மிகவும் கஷ்டமாக உள்ளது.உங்களிடம் இருந்து வந்த பாராட்டுக்களுக்க்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..
பிளாக்கர்களுக்கு இந்த நோய் வருவதில்லை என்பது என் கண்டுபிடிப்பு.//மற்ற பிரருக்கும் வராமல் இருக்கவேண்டும் கந்தசாமி சார் .அதையும் கண்டு பிடித்து சொல்லுங்கள்.நன்றி.
கருத்துக்க்கு மிக்க நன்றி தோழி ஆசியா.
நன்றி காஞ்சனா ராதா கிருஷ்ணன்.
கருத்துக்கு மிக்க நன்றி மேனகா.
//Blogger தமிழ் மீரான் said...
//அதீத சிந்தனையும் இநோய்க்கு காரணம் என்கின்றனர்//
ஐயய்யோ.. இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுட்டீங்களே அக்கா! நாலு வரி எழுதுறதுக்கே மண்டைய பிச்சிக்கிற என்ன மாதிரி பதிவர்கள் நிலைமை?//
ரிப்பீட்டு!!
இந்த வயசிலயே சின்னச் சின்ன மறதிகள் அவதிப்படுத்துகின்றன. இதுக்கே பெரும்பாடா இருக்கு. ஆண்டவன் தான் காப்பாத்தணும்.
பயனுள்ள பகிர்வு .ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் பிரச்சினையில்லை .அவர்களுக்கு தேவை அன்பும் அனுசரணையுமே.
எனக்கு தெரிந்த ஒரு அங்கிள் இருக்கார் //என் மருமக சாப்பாடு தரல்ல என்றே புலம்புவார் //விடயம் என்னவென்றால் அவருக்கு சாப்பிட்டது கூட மறந்து விடுகிறது .ஆனா அந்த மருமகள் மிகவும் பொறுமைசாலி எனவே பொறுத்து போகிறார் .நீங்க குறிப்பிட்டது மிக சரியே அதீத யோசனை வேண்டாம் தனிமையில் இருப்பதையும் தவிர்க்கணும் .
என்னதான் மறதிங்கறது ஒரு வரம்ன்னு சொல்லிக்கிட்டாலும் வயசானப்புறம் எல்லாம் மறந்துரும்ங்கறது எவ்வளவு பெரிய கொடுமை,
விழிப்புணர்வூட்டும் பதிவு ஸாதிகாக்கா! தொடரட்டும் உங்கள் பணி!
அருமையான விவரங்களுடன் நல்லதொரு பகிர்வு. எங்கள் வீட்டின் ஒரு வயதான மெம்பர் நடை பயிர்ச் செய்யச் சொன்னாலும் செய்வதில்லை. ரூம் ஜன்னல் முதல் எல்லாவற்றையும் எல்லா நேரமும் மூடியே உள்ளே இருப்பார். நான் சொன்னாலும் கேட்க மாட்டார். இதைப் படித்துக் காட்டினேன்.
இந்த வயசிலயே சின்னச் சின்ன மறதிகள் அவதிப்படுத்துகின்றன. இதுக்கே பெரும்பாடா இருக்கு. ஆண்டவன் தான் காப்பாத்தணும்.//எனக்கு இதே கவலைதான் ஹுசைனம்மா:(
கருத்துக்கு நன்றி ஏஞ்சலின்
ரொம்ப பெரிய கொடுமைதான் அமைதிச்சாரல்.நன்றி.
கருத்துக்கு நன்றி மகி.
நான் சொன்னாலும் கேட்க மாட்டார். இதைப் படித்துக் காட்டினேன்.//மிகவும் நிறைவாக உள்ளது ஸ்ரீராம். நன்றி.
நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி
நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி
நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி
நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி
Post a Comment