September 12, 2011

தாம்பூலமும் நானும்.



தாம்பூலமும் நானும்.

சின்ன வயது முதல் வெற்றிலை என்றால் மிகவும் பிரியம்.பசேல் என்ற வெற்றிலையின் காம்பை கிள்ளி,(சிலர் நரம்பை கூட கிள்ளி எறிவார்கள்)வெற்றிலையை ஈரம் போக துடைத்து ரோஸ் நிற பன்னீர் சுண்ணாம்பை சன்னமாக தடவி,வாசனை பாக்கு,விறு விறுப்பான இனிப்பு சட்னி,குல்கந்து இன்ன பிற ஐட்டங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வைத்து மடித்து பீடா பிரியாமல் இருப்பதற்காக நடுவில் ஒரு கிராம்பை குத்தி அம்மா தரும் வரை பொறுமையாக கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டு அம்மா தந்ததும் பீடாவை வாங்கி வாயில் அதக்கிக்கொண்டு தெருவுக்கு ஓடும் சந்தோஷம் இருக்கின்றதே.அடடா!!!!!!!!!!!!!

அந்தக்கால பல் இல்லாத பாட்டி மார்கள் வெற்றிலையை உரலில் இட்டு இடித்து சாப்பிடுவார்கள்.அது தனி டேஸ்ட்.பாட்டி எப்படி பொருட்கள் போட்டு இடித்து சாப்பிடுவார்கள் என்று கவனித்து நாங்களும் சிறிய உரலில் நங் நங் என்று இடித்து வெற்றிலையை பேஸ்ட் ஆக்கி சாப்பிட்டு இருக்கின்றோம்.தூரமாக சென்று இருக்கும் பாட்டி என்னடா இது உரல் உலக்கை இடிக்கும் சப்தம் கேட்கின்றதே என்று ஓடி வருவதற்குள் அரையும் குறையுமாக இடிபட்ட வெற்றிலையை அள்ளி வாயில் திணித்துக்கொண்டு சிட்டாக பறந்து விடுவோம்.

என் சிறுமி பருவத்தில் நடக்கும் கல்யாணம்,விஷேஷங்களில் காபி டீயுடன் வெற்றிலையும் கொடுப்பார்கள்.வெற்றிலை சாப்பிடுவதற்காகவே கல்யாணவீடுகளுக்கு அலைவதை நினைத்தால் இப்பொழுதும் சிரிப்பு வருகின்றது.

உறவினர்கள் வீடுகளுக்கு அம்மாவுடன் தொற்றிக்கொண்டு போனால் அங்கு நடக்கும் டீ டிபன் உபசாரத்திற்கு பிறகு நடக்கும் தாம்பூல உபசாரத்துக்காகவே அம்மாவுடம் தொற்றிக்கொண்டு சென்ற காலமும் உண்டு.பெரியவர்கள் ஜாலியாக பேசிக்கொண்டிருக்க நைசாக தாம்பூலத்தட்டுடன் ஒரு ஓரமாக எஸ்கேப்தான்.

இப்படியாக இருந்த தாம்பூல மோகத்தைப்பார்த்து பெரியவர்கள் வெற்றிலை சாப்பிட்டு வாய் சிகப்பானால் மாடு குத்தும் என்று பயமுறுத்தலையும்,வாய் கோணிப்போகும் என்ற பயமுறுத்தலையும் புறந்தள்ளிவிட்டு தாம்பூலம் மென்ற காலங்கள் தான் எத்தனை ?

வீட்டிற்கு தயிர் கொண்டு வரும் ஆயா ஒருவர் வருவார்.தயிரை அளந்து நாம் கொடுக்கும் பாத்திரத்தில் விட்டு விட்டு சில்லரை எடுப்பதற்காக சுருக்குப்பையை திறந்து சில்லரையை தந்து விட்டு,சில்லரை காசுகளுடன் கலந்து கட்டிய பாக்கு,வெற்றிலை சுண்ணாம்பு,புகையிலை சேர்த்து சாப்பிடுவதை ஆச்சரியமாக பார்த்து இருக்கின்றோம்.அவர் எங்களைப்போல் வாசனை பாக்கு,வாசனையூட்டிகள்,இனிப்பு கலந்து சாப்பிடுவதில்லை.நாலைந்து வெற்றிலையை எடுத்து மடியில் துடைத்துக்கொள்ளுவார்.ஒரு முழு வெட்டைப்பாக்கில் இரண்டு மூன்றை எடுத்து கடைவாய்பற்களால் நன்றாக மெல்லுவார்.வாய் ஒரு பக்கம் மென்று கொண்டிருக்க கைகள் ஜரூராக வேலை செய்து கொண்டு இருக்கும்.

காம்பை நீக்கி,சுண்ணாம்பு தடவி கிட்ட கிட்ட அரை டசன் வெற்றிலைக்கு மேலும் ஒவ்வொன்றாக வாயில் தள்ளி,கடைசியாக இரண்டு விரல்களால் பன்னீர் புகையிலையை கிள்ளி வாயில் போட்டுக்கொள்வார்.வாய் எப்பொழுதும் சிகப்பு நிறத்தில் அவருக்கு இருப்பது எங்களுக்கெல்லாம் பெருத்த ரசனையாக இருக்கும்.

“ஆயா..ஆயா..கடைசியா வைக்கோல் மாதிரி ஒன்றை வாயில் போட்டியே அது என்ன?”

“அழுவா..அழு போயிழை”

“எதுக்கு ஆயா இதை வெற்றிலையோட சேர்த்துப்போடுறே?”

“போயிழை சேழ்த்து வெழ்ழிலை போழ்ட்டால் சூப்பழா இழுக்கும்.உழக்கு வேழுமா?”

வாங்கி சாப்பிட ஆசை இழுத்தாலும் அழுக்கு சுருக்குப்பையும் அதில் இருக்கும் அழுக்கு நோட்டுகளும் ஞாபகத்திற்கு வர தலை பலமாக இடமும் புறமுமாக அசைத்து விட்டு “இந்த புகையிலை எங்கே கிடைக்கும் ஆயா”
மெல்ல ஆர்வத்துடன் நாங்கள் கேட்க,

“பூச்சை கழை பக்கத்தில் மழ்ழை காழ்கா கழையில் கிழைக்கும்”

வேறு என்ன?அடுத்த பத்தாவது நிமிஷம் நானும்,என் சகாக்களும் பூச்சைக்கடை பக்கத்தில் உள்ள மண்டைக்காக்கா கடையில்.வெற்றிலை,பாக்கு,சுண்ணாம்பு புகையிலை வகையாறாக்களுடன் பட்டையை கிளப்பினோம்.

தயிர்க்கார ஆயா செய்வதைப்போல செய்து புகையிலையுடன் வெற்றிலையை ஒரு கடி கடிப்பதற்குள் புரை ஏறி அதனால் கத்திய கத்தலில் வீட்டில் மதியத்தூக்கம் போட்டுக்கொண்டிருந்த அத்தனை பேரும் ஒருமித்து ஓடி அலறி அடித்துக்கொண்டு வர கண்ணீரும் கம்பலையுமாக நாங்கள் அலற ..விஷயம் தெரிந்து பிரம்படியும்,நறுக் என்ற குட்டும்,நங் என்ற அடியும்,பளிச் என்ற கிள்ளும்,டும் என்ற குத்தும் பொல பொலவென்றவசவுகளும் இலவசமாக எக்கசக்கமாக வாங்கிக்கட்டிக்கொண்டதில் வெற்றிலையை மறந்தே போனோம் பல காலமாக.

இப்பொழுது வெற்றிலை போட்டால் கண்டிப்பதற்கு ஆள் இல்லை என்ற தைரியத்தில் ஹோட்டல்களில் சாப்பிட்டாலும் சாப்பிடவிட்டாலும் ஹோட்டல் வாசலில் குடை நிழலில் நிற்கும் பீடாக்கடைக்காரை பார்த்தால் கை ஹாண்ட் பேக்கை திறக்காமல் இருக்காது.

சென்னை முழுதும் பல பிராஞ்ச்கள் இருக்கும் காரைக்குடி ரெஸ்டாரெண்டில் கிடைக்கும் இலவச தாம்பூலத்திற்காவே காரைக்குடி ரெஸ்டாரெண்ட்தான் என்று ஒற்றைக்காலில் நின்று அங்கு சாப்பிட செல்லுவோம்.

சாப்பிட்டு அவசர அவசரமாக கை கழுவி டிஷ்யூவில் துடைத்துக்கொண்டு வேகமாக தாம்பூலம் இருக்கும் பக்கமாக எஸ்கேப்.அவசர அவசரமாக வெற்றிலையை ஒரு ரவுண்ட் கட்டி விட்டு மீண்டும் சாப்பிடும் இடத்தில் அமர்ந்து கொள்ளுவேன்.பில்லை எல்லாம் கட்டி விட்டு வெளியேறுகையில் அடுத்த ரவுண்ட் தாம்பூலம்.வீட்டாட்கள் “இனி உன் தலையைக்கண்டாலே ஹோட்டல் காரன் தாம்பூலத்தட்டை எடுத்து உள்ளே வச்சிடுவாங்க”என்று சிரிப்பார்கள்.

நுங்கம்பாக்கம் சங்கீதா ரெஸ்டாரெண்டுக்கு பக்கத்தில் இருக்கும் கல்கத்தா பான் ஷாப் பிரசித்தம் .இங்குள்ள பீடா கடையில் கிடைக்கும் பீடா விலையைப்போலவே சுவையும் அதிகம்.

சின்ன வயதில்தான் தாம்பூல ஆசைக்கு தடா.இப்போ என்ன கவலை என்று உற்சாகமாக வெற்றிலை மணக்க மணக்க வலம் வந்த பொழுதுதான்

என் மகன் சின்ன கிஃப்ட் பார்சலை நீட்டினார்.

”என்னப்பா”

“பீடாவுக்கு பதில் இதனை யூஸ் பண்ணுங்கம்மா’

”ஏன்பா..இது என்ன?பீடா போட்டால் என்ன?”

“நீங்க பீடா போடுவது ஒரு மாதிரியாக உள்ளது.ஹெல்துக்கு நல்லதில்லை.ஸோ..இதை இனி யூஸ் பண்ணுங்கம்மா”

’அது என்ன வெற்றிலைக்கு மாற்றாக..”

யோசித்த படி ரேப்பரை பிரித்து கையில் எடுத்தால் அடிக்கின்ற சிகப்பு நிறத்தில் ஒரு ரெவ்லான் லிப்ஸ்டிக்.

நான் இனி பீடான்னு உச்சரிக்கக்கூட செய்வேன்ங்கறீங்க????????

டிஸ்கி:என் பீடாவுக்கு உற்ற துணையான வாசனை பாக்கு செய்முறையை இங்கே பார்த்து விரும்பினால் நீங்களும் பாக்கு தயாரித்து சாப்பிடவும் செய்யலாம்.சாப்பிட்டு வீட்டில் வாங்கிக்கட்டிக்கொண்டால் கம்பெனி பொறுப்பில்லை.வியாபாரமும் செய்யலாம்.லாபத்தில் கம்பெனி பங்கு கேட்காது.








73 comments:

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா உங்கள் பையனுக்கு ரொம்ப தான் குசும்பு ஜாஸ்தி
நானும் விரும்பி சாப்பிடுவதுண்டு
படிச்சிட்டு வாய் நம நம்ம்ன்னு து
உடனே வெற்றிலை பாக்கு சாப்பிடனும் போல இருக்கு, கல்யாணவீடுகளிலும் இப்ப வைக்கிறார்கள்

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஆஆஆஆஆஆஅ... நான் தான் 1ஸ்டூஊஊஊஊஊஊஊ:)

முற்றும் அறிந்த அதிரா said...

ஸாதிகா அக்கா... மருவாதையா தாம்பூலத்தை என்னிடம் த்ந்திடோணும் சொல்லிட்டேன், ஏணெண்டால் 0 comments இருக்கும்போதுதான் நான் அனுப்பினேன் முதேஏஏஏஏல் பதில்:))).

நில்லுங்க படிச்சிட்டு வாறேன்.

முற்றும் அறிந்த அதிரா said...

ஸாதிகா அக்கா, இப்போ கொஞ்ச நாளாக நான் இந்த வெற்றலைப் பதிவு ஒன்று போட நினைத்துப் படம் எடுத்திருக்கிறேன், அதேபதிவு நீங்க போட்டிருக்கிறீங்க.

நானும் ஒரு வெற்றலை + பாக்கு + பீடா பிரியை.... இங்கு கிடைப்பது கஸ்டம்... வாசனைப்பாக்கு, பீடா எல்லாம் இப்பவும் எம் ஃபிரிஜ்ஜில இருக்கூஊஊஊஊஊ:)).

முற்றும் அறிந்த அதிரா said...

பதிவைப் பார்த்து சாப்பிடும் ஆவலை இன்னும் தூண்டி விட்டுவிட்டீங்க.

என் வெற்றலைக் கதையை விரைவில் எழுதுகிறேன்:)))... தொடர்ப்பதிவாக்கியிருக்கலாமோ என எண்ணத் தோணுது:)).

சூப்பராக எழுதியிருக்கிறீங்க.

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா அருமையா சுவைபட சொல்லி இருக்கீங்க, சின்னவயசு நினைவுகள் சுகமானவை...!!!

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா, வெத்தலை பிரியரா நீங்க. ரசித்து சுவைபட எழுதி இருக்கீங்க. நானும் ஒரு மசாலா பாக்குப்பொடி செய்வேனாக்கும் . எங்க வீட்டுக்கு சாப்பிட வரவங்க அந்தபாக்குப்பொடி இருக்கான்னு கேட்டுட்டுதான் சாப்பிடவே உக்காருவாங்க. எப்பவுமே அந்த பாக்குப்பொடி ஸ்டாக்கில் வச்சிருப்பேன். வரீங்களா?

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான சுவைபட எழுதியிருக்கீங்க.. வெத்தலைப்பாக்கு போட்டால்.....> ம்ம்ம்ம்... அடஅட.. :}}.

Jaleela Kamal said...

ஐ வடை எனக்கா?

ஜெய்லானி said...

ஊரில இருந்த வரை இந்த பழக்கம் இல்லை , ஆனால் பாம்பாய் போன புதுசுல பத்தடிக்கு ஒரு பீடா ஸ்டானடை பார்த்துட்டு ஆர்வ கோளாறுல ஒன்னு வாங்கி கிட்டு போனேன் . நல்ல வேளை ரோடில போகும் போது சாப்பிடல :-)
ரூமுக்கு போனதும் இரெண்டு கடி கடிச்சது தான் தெரியும் . திரும்ப கண் முழிச்சி பார்க்கும் போது அடுத்த நாள் மதியம் ஆகிடுச்சி அவ்வ்வ்வ்

பிறகுதான் தெரியும் பாவி பயலுங்க விக்கிறது எல்லாம் போதை டைப் .

வெத்திலை , பீடா பேரை கேட்டாலே எஸ்கேப்தான் :-)

ஜெய்லானி said...

லிங்கை பார்த்துட்டு வரேன் :-)

//நானும் ஒரு வெற்றலை + பாக்கு + பீடா பிரியை.... இங்கு கிடைப்பது கஸ்டம்... வாசனைப்பாக்கு, பீடா எல்லாம் இப்பவும் எம் ஃபிரிஜ்ஜில இருக்கூஊஊஊஊஊ:)).//


அதீஸ்..ஏன் ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் வருதுன்னு இப்ப தான் புரியுது ஹி..ஹி...

ஜெய்லானி said...

//நானும் விரும்பி சாப்பிடுவதுண்டு
படிச்சிட்டு வாய் நம நம்ம்ன்னு து
உடனே வெற்றிலை பாக்கு சாப்பிடனும் போல இருக்கு,//

ஜலீலாக்கா..ஏன் பக்கத்துல யாரும் பெங்காலி இல்லையா ..? இருந்தா கிடைக்குமே ஹா..ஹா.. :-))

ஜெய்லானி said...

ஸாதிகாக்காவ்... ஒரு புது பிஸினஸ் ஆரம்பிச்சிடலாம் போலிருக்கே சூப்பர் :-)

பனித்துளி சங்கர் said...

குழந்தையில் பாட்டிக்கு வெற்றிலை பாக்கு இடித்து கொடுத்த நினைவுகளை மீண்டும் கண் முன் நிறுத்துகிறது தங்களின் பதிவு . பகிர்ந்தமைக்கு நன்றி

ஜெய்லானி said...

ஊருக்கு வந்து செட்டில் ஆனா என்ன செய்யலாமுன்னு யோசிச்சா அருமையான ஐடியா ஸாதிகாக்கா வாழ்க :-))))))))))))))))

((எப்படியும் ஜெ-வுக்கு அஸிஸ்டண்ட் ஆக முடியாது ஹி..ஹி.. ))

vanathy said...

முன்பு ஊரில் இருக்கு போது சாப்பிட்டதுண்டு. இப்ப இங்கு கிடைப்பதில்லை. வாசனைப் பாக்கு உடலுக்கு கேடு என்று படித்திருக்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

எனக்கு வெற்றிலை சுவை பிடித்ததில்லை. அப்போது திருமண வீடுகளில் இப்படிதான் தாம்பூலத் தட்டு சூழ அரட்டைகள் நடக்கும். நினைவுகளை அருமையாகப் பதிந்துள்ளீர்கள்:)!

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
இப்போது கல்யாண வீடுகளில் கூட வெற்றிலை வைப்பது மாதிரி இல்லை.
வாழ்த்துக்கள்.

முற்றும் அறிந்த அதிரா said...

Jaleela Kamal said...

ஐ வடை எனக்கா?
////

karrrrrrrrrrrrrrr...naan saathuvaka irukiren:) saathu mirandal kaadu kollathaam:))).

முற்றும் அறிந்த அதிரா said...

//ரூமுக்கு போனதும் இரெண்டு கடி கடிச்சது தான் தெரியும் . திரும்ப கண் முழிச்சி பார்க்கும் போது அடுத்த நாள் மதியம் ஆகிடுச்சி அவ்வ்வ்வ்

பிறகுதான் தெரியும் பாவி பயலுங்க விக்கிறது எல்லாம் போதை டைப் .//

ஹா..ஹா..ஹா... ஜெய்... உண்மையாகவோ?.

நான் எங்கு பீடாவைக் கண்டாலும் பிரேக் போட்டிடுவேன்:)), என் கணவர் சொல்வார், கண்ட நிண்ட இடத்திலெல்லாம் வாங்கக்கூடாது, நன்கு தெரிந்த இடத்தில மட்டும்தான் வாங்கவேணும் என, நான் சொல்வது.. நீங்க சும்மா கதைகளைக் கேட்டு பயப்பிடுறீங்க என.

இப்போ உங்கள் பதில் பார்த்துப் பயம் வந்திட்டுதூஊஊஉ:)))..

முற்றும் அறிந்த அதிரா said...

//அதீஸ்..ஏன் ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் வருதுன்னு இப்ப தான் புரியுது ஹி..ஹி//

karrrrrrrrrrrrrr:))).

//ஜெய்லானி said...


((எப்படியும் ஜெ-வுக்கு அஸிஸ்டண்ட் ஆக முடியாது ஹி..ஹி.. ))///

ஜெய்..ஜெய்...:)) அஸிஸ்டன்ட் ஆகாட்டில் என்ன பேசாமல் ~அட்மின்~ ஆகிடுங்க:)).. அதுவும் கஸ்டமோ?:)))).

முற்றும் அறிந்த அதிரா said...

//vanathy said...

முன்பு ஊரில் இருக்கு போது சாப்பிட்டதுண்டு. இப்ப இங்கு கிடைப்பதில்லை. வாசனைப் பாக்கு உடலுக்கு கேடு என்று படித்திருக்கிறேன்.///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), எங்கட அப்பாமாதிரியே பேசுறீங்களே... அப்போ மட்டின் சிக்கின் எல்லாம் கேடில்லையோ?:)), சரி சரி முறைக்க வாணாம்:)) எனக்கு ரல்சி வாசனைப்பாக்கு ரொம்பப் பிடிக்கும்...

ஆரைப்பார்த்தாலும் சாப்பிடாதே என அடிக்க வருகீனம்:))), ஸாதிகா அக்கா நீங்க வாங்கித்தருவீங்கதானே?:)).

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அலைக்கும்

பதிவு போட இப்படிலாம் ஐடியா வருதே.

//"தாம்பூலமும் நானும்.//

வெற்றிலையும் நானும் தலைப்பு சூப்பெரா இருக்கும்

ஓட்டுப் பட்டை ஒன்னையும் காணல

ஹுஸைனம்மா said...

அக்கா, நீங்க பாக்குக்கே ரெண்டு ரெஸிப்பி போட்டுருக்கிறதிலிருந்தே உங்களுக்கு வெற்றிலை எவ்வளவு பிடிக்கும்னு தெரியுது!! ஆனாலும், தைரியமாய் சென்னை கடைகளில் வெற்றிலை வாங்கிச் சாப்பிட்டிருக்கீங்களே!! வெற்றிலை பிடிக்கும் என்றாலும் கடைகளில் வாங்கிச் சாப்பிடப் பயம் எனக்கு.

இப்பவும் எங்க ஊர்களில் கல்யாண வீடுகளில் தாம்பூலத்தட்டு வைப்பாங்க. சுபாரி (ரோஜா) பாக்கு மட்டும் எடுத்து வாயில போட்டுக்கிறது. வெற்றிலை சாப்பிடும் ஆர்வம் விட்டுப்போயிடுச்சு!! :-(((

Ahamed irshad said...

ஸாதிகா அக்கா..பைய‌னின் குறும்பை பார்க்கும்ப்போது என்னுடைய‌ சின்ன‌ வ‌ய‌து சேஷ்டைக‌ள் அநியாய‌த்திற்க்கு ஞாப‌க‌ம் வ‌ருகிற‌து... சூப்ப‌ர் நினைவோடை..நீந்தி வ‌ந்த‌மைக்கு உங்க‌ளுக்கு ந‌ன்றிக‌ள்..அறுசுவை லிங்கிற்க்கு நேர‌ம் கிடைக்கும்போது செல்கிறேன்..அருமை..

ஹுஸைனம்மா said...

உங்க சின்னவரை ரொம்பப் பாராட்டுகிறேன்க்கா!! தன் கருத்தைத் தெளிவா, ஆனா உங்க மனம் புண்படாத மாதிரி அழகா, நாசூக்காச் சொல்லிருக்கார்.

ஸாதிகா said...

வாங்க ஜலி.எப்பொழுது கடைசி பெஞ்ச் என்று தமதமாக வருவீர்கள்.இப்பொழுது நீங்கள் தான் பர்ஸ்ட்//உங்கள் பையனுக்கு ரொம்ப தான் குசும்பு ஜாஸ்தி// கரெக்டா கண்டு பிடிச்சுட்டீங்க.நன்றி.

ஸாதிகா said...

// athira said...
ஆஆஆஆஆஆஆஅ... நான் தான் 1ஸ்டூஊஊஊஊஊஊஊ:)//ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..ஜலீக்கா ஜல் ஜல்ன்னு கொம்பை தூக்கிட்டு வரப்போறா!:-)

ஸாதிகா said...

அதீஸ்..ரெண்டாவதென்றாலும் தாம்பூலம் உங்களுக்கே.எடுத்துக்கோங்கப்பா.

ஸாதிகா said...

/
ஸாதிகா அக்கா, இப்போ கொஞ்ச நாளாக நான் இந்த வெற்றலைப் பதிவு ஒன்று போட நினைத்துப் படம் எடுத்திருக்கிறேன், அதேபதிவு நீங்க போட்டிருக்கிறீங்க.
//அவசியம் சீக்கிரம் போட்டுடுங்க பூஸ் .வெற்றிலை பிடித்த மாதிரி வெற்றிலை பதிவும் மிகவு பிடிக்கும்.உங்கள் பதிவுக்காகத்தான் வெயிட்டிங்.

ஸாதிகா said...

//சின்னவயசு நினைவுகள் சுகமானவை...!!!// கண்டிப்பாக நாஞ்சில் மனோ சார்.நன்றி கருத்துக்கு

ஸாதிகா said...

நன்றி ராஜபாட்டை ராஜா.

ஸாதிகா said...

//எப்பவுமே அந்த பாக்குப்பொடி ஸ்டாக்கில் வச்சிருப்பேன். வரீங்களா?// என்ன லக்ஷ்மிம்மா இப்படிக்கேட்டுட்டீங்க.பாக்குபொடிக்காக அவ்வளோ தூரம் வரமுடியாது.அவசியம் ரெஸிப்பியை உங்கள் பதிவில் போடுங்கள்.ஒகேயா.

ஸாதிகா said...

ஸ்டார்ஜன்,வெற்றிலையை ரொம்ப ரசிச்சு ருசிச்சி இருப்பீங்க போல் இருக்கே!கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

//பிறகுதான் தெரியும் பாவி பயலுங்க விக்கிறது எல்லாம் போதை டைப் .
// எல்லாமே போதை பீடா என்று கனித்து விடாதீர்கள்.சாதா பீடா என்று அழுத்தி கேட்கணும் ஜெய்லானி.

ஸாதிகா said...

ம்ம்..ரூஹாப்ஷா பிஸினஸ்,பீடா பாக்கு பிஸினஸ்.நிறைய ஐடியா கைவசம் வந்துடுச்சி போல் இருக்கே!ம்ம்..நடத்துங்க ஜெய்லானி.அப்ப பச்சைப்பூ ஜெய்லானி இனி பெரிய பிஸினஸ் மேக்னட் ஆக அவதாரம் எடுக்கப்போகின்றார்.வாழக!வளர்க!

ஸாதிகா said...

//குழந்தையில் பாட்டிக்கு வெற்றிலை பாக்கு இடித்து கொடுத்த நினைவுகளை மீண்டும் கண் முன் நிறுத்துகிறது தங்களின் பதிவு .// சங்கர்,பாட்டிக்கு வெற்றிலை இடித்து கொடுத்து இருக்கீங்களா?பாட்டி கிட்டே பங்கு கேட்க மாட்டீர்கள் போல் இருக்கு.அதான் வெற்றிலை இடித்துத்தர சம்மதித்து இருக்கார் பாட்டி.:)கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

//
((எப்படியும் ஜெ-வுக்கு அஸிஸ்டண்ட் ஆக முடியாது ஹி..ஹி.. )// ஜெய்லானி போயஸ் கார்டனில் நிறைய மரம் செடிகள் இருக்காம்.

ஸாதிகா said...

//வாசனைப் பாக்கு உடலுக்கு கேடு என்று படித்திருக்கிறேன்.// அப்படித்தான் சொல்லி பயமுறுத்தறாங்க வானதி.

ஸாதிகா said...

// ராமலக்ஷ்மி said...
எனக்கு வெற்றிலை சுவை பிடித்ததில்லை. // ஹ்ம்ம்ம்..கொடுத்து வச்சவங்க ராமலக்ஷ்மி.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

//இப்போது கல்யாண வீடுகளில் கூட வெற்றிலை வைப்பது மாதிரி இல்லை.// உண்மைதான் ரத்னவேல் ஐயா.கருத்துக்கும்,வாழ்த்துக்கும் நன்றி!

ஸாதிகா said...

//karrrrrrrrrrrrrrr...naan saathuvaka irukiren:) saathu mirandal kaadu kollathaam:))).// ஐ ..பூஸுக்கு கூட கோபம் வருமா?எப்படி வரும்?மியாவ் மியாவ் என்றா?

ஸாதிகா said...

அப்பப்பா..வெற்றிலை பதிவு போட்டதற்கே பூஸ் உற்சாகத்தில் இந்த குதி குதித்து கமண்டுகளாக அள்ளி வீசுகின்றாரே?அப்ப தாம்பூலம் நிறைய பீடாவைத்தந்தால்...ஹையோ...வங்க அதீஸ்,உங்களுக்கு இல்லாததா?ஒரு கிலோ கொளுந்து வெற்றிலையும்,அரைக்கிலோ ரசிக்லால் பாக்கும் வாங்கிதர்ரேன்.எப்போ வர்ரீங்கப்பா?

ஸாதிகா said...

வ அலைக்கும் ஆயிஷா.காலையில்தான் சாட்டில் பேசிக்கொண்டிருந்தோம்.புது பதிவு போடாததன் காரணத்தை.உங்களிடம் பேசி முடித்ததும் ஐடியா கிடைத்து உடனே பிறந்ததுதான் இந்த பதிவு.

ஸாதிகா said...

வாங்க வாங்க ஹுசைனம்மா.நான் சின்னவர்,பெரியவர் என்றெல்லாம் குறிப்பிடாமலே அதெப்படி கரீக்டா சின்னவர் என்று கணித்து விட்டீர்கள்?என் சின்னவரை சூப்பரா கணித்து வச்சி இருக்கீங்கப்பா.

ஸாதிகா said...

//பைய‌னின் குறும்பை பார்க்கும்ப்போது என்னுடைய‌ சின்ன‌ வ‌ய‌து சேஷ்டைக‌ள் அநியாய‌த்திற்க்கு ஞாப‌க‌ம் வ‌ருகிற‌து... // இர்ஷாத் அப்ப நீங்களும் சின்ன வயதில் ஏகப்பட்ட சேட்டைகள் பண்ணி இருக்கீங்க போலிருக்கு.:)

எம் அப்துல் காதர் said...

/“அழுவா..அழு போயிழை” “போயிழை சேழ்த்து வெழ்ழிலை போழ்ட்டால் சூப்பழா இழுக்கும்.உழக்கு வேழுமா?
“பூச்சை கழை பக்கத்தில் மழ்ழை காழ்கா கழையில் கிழைக்கும்”//

அடடா... பேச்சின் ரசனை எழுத்தில் தெறிக்கிறது. ஹா.. ஹா..

எம் அப்துல் காதர் said...

//விஷயம் தெரிந்து பிரம்படியும், நறுக் என்ற குட்டும்,நங் என்ற அடியும்,பளிச் என்ற கிள்ளும்,டும் என்ற குத்தும் பொல பொல வென்ற வசவுகளும் இலவசமாக எக்கசக்கமாக//

இதென்னாது அடியில் இத்தனை வகையா??. சுபஹானல்லாஹ்!!

எம் அப்துல் காதர் said...

//நான் இனி பீடான்னு உச்சரிக்கக்கூட செய்வேன்ங்கறீங்க???????? //

ம்ம்ம்.. நல்ல பிள்ளை.. நல்ல உம்மா.. :-))

Yaathoramani.blogspot.com said...

எதைச் சொன்னாலும் மிக நேர்த்தியாகச் சொல்லிப் போகும்
உங்கள் திறன் இதிலும் பளிச்சிடுகிறது
ஒரு சினிமா திரைக் கதைபோல வெற்றிலையின் மீதுள்ள
ஆர்வத்தில் துவங்கி அது தொடர்பான சுவையான
அனுபவங்களை அழகாக ரசிக்கும்படியாக அடுக்கி
முடிவில் எதிர்பாராத திருப்பமாக அதன் தொடர்பை இழந்ததை
ஒரு சிறு நிகழ்வாக சொல்லி முடித்து வைத்ததை
மிகவும் ரசித்துப்படித்தேன் மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Asiya Omar said...

தாம்பூலம்னால் ஸாதிகா நினைவு வரும்படியான பதிவு.வெற்றிலை சாப்பிட ஆசை தான் பல்லெல்லாம் கரையா போயிடாதா? மெட்ராஸ் வந்து காரைக்குடி ரெஸ்டாரண்ட் தேடிப்பிடித்து பீடா சாப்பிடனும் போல..

ஆமினா said...

அவ்வளவு இஷ்ட்டமா??? இன்னும் ஒரு முறை கூட ட்ரை பண்ணல வெத்தலையை :-(

அந்நியன் 2 said...

நெட் சிக்னல் பிரச்சனையால் உடனே வர முடியவில்லை.

அடுத்த பதிவில் தொடர்கிறேன் அக்காள்.

ஸாதிகா said...

அப்துல்காதர் உங்கள் மூன்று பின்னூட்டங்களையும் கண்டு சிரித்தேன்.மகிழ்ச்சி .நன்றி.

//ம்ம்ம்.. நல்ல பிள்ளை.. நல்ல உம்மா.. :-))// இதில் உள்குத்தல் இல்லையே?:-)

ஸாதிகா said...

//Ramani said...

எதைச் சொன்னாலும் மிக நேர்த்தியாகச் சொல்லிப் போகும்
உங்கள் திறன் இதிலும் பளிச்சிடுகிறது// ஒரு படைப்பாளிக்கு மிகவும் அவசியமான உற்சாகம் கொடுக்கும் வரிகளய்யா அது.உங்களால் மட்டுமே இப்படிப்பட்ட வரிகளால் ஊக்குவிக்க முடியும்.மிக்க நன்றி ஐயா.

ஸாதிகா said...

//மெட்ராஸ் வந்து காரைக்குடி ரெஸ்டாரண்ட் தேடிப்பிடித்து பீடா சாப்பிடனும் போல..// வாங்க ஆசியா.நானே அழைத்து செல்கின்றேன்.கருத்துக்கு நன்றி ஆசியா.

ஸாதிகா said...

//இன்னும் ஒரு முறை கூட ட்ரை பண்ணல வெத்தலையை :-(// ஆச்சரியமாக இருக்கே ஆமினா?

ஸாதிகா said...

//அடுத்த பதிவில் தொடர்கிறேன் அக்காள்.// கண்டிப்பா தொடருங்கள் அந்நியன்,நன்றி!

Unknown said...

மலரும் நினைவுகள். அருமை.
அம்மா வெறும் வெற்றிலைக் காம்பை மட்டும் கிள்ளிக் கொடுத்து, அதை மட்டுமே சாப்பிடும்போது உள்ள உரைப்பு. நாக்கில் நீர் ஊறுகிறது.

ஸாதிகா said...

//அருமை.
அம்மா வெறும் வெற்றிலைக் காம்பை மட்டும் கிள்ளிக் கொடுத்து, அதை மட்டுமே சாப்பிடும்போது உள்ள உரைப்பு. நாக்கில் நீர் ஊறுகிறது.// வெற்றிலைக்காம்பின் சுவையை மறந்தே போனேனே.வெற்றிலையின் சுவை பிடித்துப்போனதற்கு காரணமே அம்மா விடம் வெற்றிலைக்கேட்டு அடம் பிடிக்கையில் வெற்றிலை காம்பைக்கிள்ளித்தந்து வெற்றிலையை அறிமுகப்படுத்தியதுதான்.

கருத்துக்கு மிக்க நன்றி சகோ சுல்த்தான்.

இமா க்றிஸ் said...

//ரெவ்லான் லிப்ஸ்டிக்// சூ..ப்பர். ;) நான் சொன்னேன்னு சொல்லுங்க. ;))

Anonymous said...

சிறிய வயதில்
பாட்டி வெற்றிலை பாக்கு
இடித்து தர ஆசையை
வாங்கி சாப்பிட்டது
நினைவுக்கு வருகிறது....
நன்றி

பித்தனின் வாக்கு said...

சிறிய உரலில் நங் நங் என்று இடித்து வெற்றிலையை பேஸ்ட் ஆக்கி சாப்பிட்டு இருக்கின்றோம்.

sathika poi ellam sollak koodathu. chinna vayasuleya kutti suvarai etti thandum pothu unga pallu pona visayam enakku mattum than theriyum.
kavalai padathirkal nan yarukkum solla matten.

பிறகுதான் தெரியும் பாவி பயலுங்க விக்கிறது எல்லாம் போதை டைப் .

jey intha kathai ellam vendam. 420 podu solli pottathu neethane.

enakku chinna vayasula irunthu vethalai poduvathu pudikkathu.

so no comments

பித்தனின் வாக்கு said...

இனி பெரிய பிஸினஸ் மேக்னட் ஆக அவதாரம் எடுக்கப்போகின்றார்.வாழக!வளர்க!

appa nan nuttu bolt ahha

பித்தனின் வாக்கு said...

//மெட்ராஸ் வந்து காரைக்குடி ரெஸ்டாரண்ட் தேடிப்பிடித்து பீடா சாப்பிடனும் போல..// வாங்க ஆசியா.நானே அழைத்து செல்கின்றேன்.கருத்துக்கு நன்றி ஆசியா.

appa kasu yaru koduppathu.

nan madrasila illai illai

Kanchana Radhakrishnan said...

நல்ல பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி

Vijiskitchencreations said...

ஸாதிகா அருமையான பதிவு. நிங்க எழுதியது படித்தது என் சின்ன வயது அட்டுழியங்கள் எல்லாம் நினைவுக்கு வருது. நானும் நாக்கு சிவப்பாக் இருப்பதை பார்த்து எனக்கும் போட்டு கன்னாடியில் பார்ப்பேன் நாக்கு சிவப்பாகிவிட்டதா என்று என் தோழிகள், என் உறவினர்கள் பசங்க எல்லாம் சேர்ந்த்டு நல்ல இந்த வெற்றிலைக்காக லூட்டி அடித்தது எல்லாம் நினைவுக்கு வரும். என் கல்யானத்தின் போது வெற்றிலை மடித்து கல்யான பையனுக்கும், பெண்ணிற்க்கும் குடுப்பத்டு வழக்கம். நான் அதை அப்ப்டியே வாயில் வைத்து துப்பிவிட்டேன், அதற்க்கும் ஏதோ ஒரு கதை சொன்னாங்க எனக்கு நினைவு இல்லை.
இப்ப எல்லாம் அந்த பக்கமே பார்ப்பது கிடையாது. இங்கு ஒரு நார்த்த் இந்தியன் வீட்டிலே பீடா செய்து அப்ப அப்ப கெட் டு கெதர் வைக்கும் போது குடும்ப்பார்..
எல்லரோட வலைபக்கமும் இனிமேல் தான் அடியெடுத்து வைக்கனு.
இந்தியாவில் இருந்து வந்ததில் இருந்து இன்னும் அங்குள்ள நினைப்போடயே இருக்கு.

மனோ சாமிநாதன் said...

ஸாதிகா! பீடா கதைகள் எல்லாம் அருமை! ரொம்பவும் சரளமாக எழுதியிருக்கிறீர்கள்!!

ஸாதிகா said...

//appa kasu yaru koduppathu.

nan madrasila illai illai// கவலைபடாதீங்க சுதாகர் சார்.காசு கொண்டு போகலேன்னா மாவு ஆட்டிடலாம்.கருத்திட்டமைக்கு நன்றி.

ஸாதிகா said...

வாங்க விஜி.இன்னும் இந்தியா ஞாபகம் மனதி விட்டு போகலியா.அப்ப அடிக்கடி வலைப்பூவுக்கு வாங்க.நிறிய எழுதுங்க.படிக்க காத்துக்கொண்டு இருகின்றோம்.பின்னூட்டத்தின் வாயிலாக உங்கள் அனுபவத்தையும் பரிந்ததற்கு மிக்க நன்றி விஜி.

ஸாதிகா said...

வாங்க மனோ அக்கா.ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க.கடைசி வரை பீடா உங்களுக்கு பிடிக்குமா பிடிக்காதா என்பதை சொல்லவே இல்லையே.அடுத்த விஸிட் அப்போ கண்டிப்பா உங்களுக்கு தாம்பூல உபச்சாரம் உண்டு.நன்றிக்கா.

ஸாதிகா said...
This comment has been removed by the author.
ஸாதிகா said...

காஞ்சனா.வரவுக்கும்,கருத்துக்கும் நன்றி.