ஆன்- லைன் வர்த்தகத்திலிருந்து தங்கத்தை நீக்க உலக நாடுகள் ஒரு மித்த முடிவு.
தங்கம் விலை வரலாறு காணாத வீழ்ச்சி!
அமெரிக்கன் டாலர் தடாலடி உயர்வு!
பங்கு வர்த்தகத்தில் காளையின் ஆதிக்கம்!
மீடியாக்களில் கடந்த சில தினங்களாக இவைகள்தாம் தலைப்புச்செய்திகள்.
நாளுக்கு நாள் தங்கத்தின் விலை குறைந்து கொண்டே போவதால் நாளைக்கு இன்னும் குறையும்,நாளன்னிக்கு மேலும் குறையும் இந்த கண்ணோட்டத்தில் மக்கள் நகைகளை வாங்கத்தயங்கினாலும் சில தைரியசாலிகள் இதுதான் சான்ஸ் என்று வாங்கவும் செய்தனர்.அதனாலேயே நகைக்கடையில் கூட்டம் களைக்கட்டியது.
தங்கம்மாவின் கணவர் வைரமணி நகைக்கடைக்கு சென்று பத்து தங்க காயின் வாங்கி வந்து மனைவின் கையில் வாயெல்லாம் பல்லாக தந்த பொழுது தங்கம்மாவுக்கு மனம் நிறைய வில்லை.”காயினா வாங்கினதுக்கு பதிலாக காசுமாலை வாங்கித்தந்தால் என்ன”என்ற ஆதங்கம்.
“அதுக்கென்ன இப்போ..என் செல்லத்துக்கு அடுத்த வாரமே வாங்கித்தந்துடுறேன்”கணவனின் வார்த்தைகளில் மெழுகாய் உருக்கிப்போனாள் தங்கம்.
வங்கியில் போட்டு இருந்த ஒரு லட்சரூபாய் பிக்சட் டெபாஸிட் முதிர்வு அடையாமலே தங்கம் வாங்கும் நிமித்தமாக பணத்தை எடுக்க சென்றால் வங்கியில் எள் போட இடமில்லாமல் கூட்டம் களைக்கட்டியது.கூட்டத்தில் நின்ற பாதி பேருக்கும் மேலே வைப்புநிதிகளை க்ளோஸ் செய்யும் நிமித்தமாக வந்து இருந்தனர்.
ஒரு கட்டத்தில் ஒரு ஸ்டாஃப் வந்து நாளைக்குத்தான் பணம் பட்டுவாடா செய்யப்படும் என்று அறிவித்ததும் முணு முணுப்புடன் கலைந்து சென்றனர்.
கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த வைரமணியும் அவரது சகதர்மினி தங்கமும் என்ன ஏது என்று விசாரிக்கையில் வங்கியில் பணம் காலியாகிவிட்டது என்ற தகவல் கிடைத்தது.
‘நாளைக்காலை சீக்கிரமே வங்கிக்கு வந்து பணத்தை எடுத்து விடவேண்டும்’முணு முணுத்தபடி இருவரும் வங்கியை விட்டு வெளியே வந்தனர்.
வீட்டை அடைந்த பொழுது வேலைக்கார தாயம்மா வாசல் அருகே நின்றிருந்தாள்.
”என்ன தாயம்மா இந்த நேரத்திலே..”
“ஒரு மூவாயிரம் ரூபாய் கடனா கொடும்மா”
“என்ன இப்படி திடும் என்று மூவாயிரம் கேட்டால் எங்கே போறது?போன மாசம் வாங்கிய கடனையே இன்னும் முடிச்ச பாடில்லையே?”
“என் ஊட்டுக்காரக்கடங்காரன் குடிச்சுட்டு பக்கத்து வீட்டு ஆளைப்போட்டு விளாசித்தள்ளிட்டானுங்கம்மா.அந்த பொறம் போக்கு நேரா போய் ஸ்டேஷனில் கம்ப்ளையிண்ட் கொடுத்துட்டான்.இப்ப மூவாயிரம் கட்டினால்தான் வெளியே விடுவாங்க...த்தூத்தேறி..”
”தாயம்மா இப்ப சுத்தமா என் கிட்டே பணம் இல்லே”
“இல்லே தங்கம்மாக்கா..நீ தான் எனக்கு கொடுத்து உதவணும். அப்பாலே சம்பளத்திலே கழிச்சுக்கறேன்.” பிடிவாதமாக நின்றாள் தாயம்மா.
விரலில் கிடந்த இரண்டு மோதிரத்தைக்கழற்றிக்கொடுத்து “இதைப்போய் சேட்டுக்கடையிலே வச்சி காசை வாங்கிக்க .வேற என்ன பண்ணுவது?”வேண்டா வெறுப்பாக கழற்றிகொடுத்த மோதிரங்களை வாங்கிக்கொண்டு சந்தோஷமாக கிளம்பினாள்.
சேட்டுக்கடை.
“இந்தா சேட்டு..இதை வச்சிட்டு ஒரு மூவாயிரம் கொடு.அவசரமா வோணும்.”
சேட்டு மூக்கு கண்ணாடியை போட்டுக்கொண்டு மோதிரத்தை திருப்பி திருப்பிப்பார்த்தான்.
“என்னா சேட்டு பாக்கிறே..அது சுத்த தங்கம்தான்..”
“அதுலே சந்தேகம் இல்லை.ஆனால்...”இழுத்தான்.
“என்னா சேட்டு இழுக்கறே,,முள்ளங்கிப்பத்தையாட்டம் ரெண்டு மோதிரத்தை கொண்டாந்துட்டு மூவாயிரம் கேட்கறேன்.இந்த யோசிப்பு யோசிக்கறியே..”
அவசரப்பட்டாள் தாயம்மா.
’இந்நேரம் லாக்கப்பில் இருக்கும் அவள் புருஷனை லத்தியால் எத்தனை அடி அடித்திருப்பார்களோ..’
முகத்தை சுளித்து உதட்டைப்பிதுக்கி”சவரன் போற போக்கை பார்த்தால் நான் எதுவும் ரிஸ்க் எடுக்க விரும்பலே.பேசாமல் வூட்டுலே இருக்கற பண்டம் பாத்திரத்தை எடுத்துட்டு வா.பைசா தர்ரேன்.”
மோதிரங்களை திருப்பித்தந்தவனை “அடப்பாவி”என்றபடி திகைத்து நின்றாள் தாயம்மா.
“இந்த வருஷ தீபாவளிக்கு நம்ம பொண்ணுக்கு டிஷ்யூ பட்டு எடுத்துக்கொடுத்துடணும்”
“டிஷ்யு பட்டு எதுக்கு?ஆறு சவரனில் நெக்லஸ் வாங்கிப்போட்டுடலாம்.”
“அதுவும் நல்ல யோசனைதான்.அப்படியே சின்னப்பொண்ணுக்கு ஒரு ஒட்டியாணம் எப்படியாவது வாங்கிடணும்.ஒட்டியாணம் என் ரொம்ப நாள் கனவுங்க”
“உன் கனவு நிறைவேறும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை தங்கம்மா..டோண்ட் வர்ரி”சந்தோஷமாக சிரித்தான் வைரமணி.
“ஆங்..தங்கத்துக்கு உடம்பு பூரா தங்கம்..”முணங்கியவாறு புரண்டு படுத்த தங்கத்தை வைரமணி விநோதமாக பார்த்தான்.
“தங்கம்..அடி தங்கம்..என்னடி ஆச்சு உனக்கு?தூக்கத்தில் சிரித்துட்டே ஏதோதோ உளறுகிறே?ஏதாவது கனா கினா கண்டியா?”
Tweet |
44 comments:
:)))))))) நல்ல கற்பனை.. இப்படி எல்லாம் நடக்கப்போவது கற்பனையில் மட்டும்தான்.
கற்பனை super!
மிக அழகாகக் கதை சொல்லி இருக்கிறீர்கள்
முதலில் நினைவு நிலையில் இருந்து
கனவு நிலைக்குச் செல்வதைப் போலவே
கதையைக் கொண்டு சென்றிருக்கும் பாங்கு
மிக மிக அருமை
தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கல்
தங்கமணி-வைரமணி நல்லப் பொருத்தம்!! தங்கம் இனி இப்படி கனவுல மட்டும்தான் வாங்கிக்கலாம் போல... :-((((
ஆமா, சேட்டு ஏன் மோதிரம் வேணாம்கிறார்? அடகுல முங்கிப்போச்சுனா, நல்ல சொளையா கிடைக்குமே?
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி புதுகைத்தென்றல்.
கருத்துக்கு மிக்க நன்றி கீதா6!
உடன் பின்னூட்டலுக்கு மிக்க நன்றி ரமணி சார்.
//ஆமா, சேட்டு ஏன் மோதிரம் வேணாம்கிறார்? அடகுல முங்கிப்போச்சுனா, நல்ல சொளையா கிடைக்குமே?// ஹுசைனம்மா ,அதான் தங்கத்தின் விலை தடாலடியாக இறங்கிக் கொண்டே போகுதே (நம்ம தங்கம்மாவின் கனவில்) இந்த நிலையில் சேட்டு அடகுக்கு தங்கத்தை வாங்கினாரானால் முதலுக்கே மோசமாகி விடுமே.அதான் மோதிரத்துக்கு பதிலாக பண்டம்,பாத்திரம் இருந்தால் எடுத்துட்டு வா என்கின்றார்.
கனவுகள்.....கற்பனைகள்....... ஆதங்கங்கள்........... !!!! நல்லா எழுதி இருக்கீங்க.
ஆஹா........
இப்படி மட்டும் நடந்துட்டா.....
வீட்ல இருக்குற அண்டா குண்டா, தட்டு டம்ளர்லாம் நகையாக்கிவிட்டுடலாமே ஹி...ஹி...ஹி...
நல்ல கற்பனைதான். எப்படி வேகமா
விலை ஏறிச்சோ அப்படி இறங்கித்தானே
ஆகனும் ஒரு நாள்
அஸ்ஸலாமு அழைக்கும்
ஆஹா... கற்பனை கதை அருமை. தங்கம் விலை ஏறிச்சு. ஒரு பதிவும் போட்டாச்சு . வாழ்த்துக்கள்.
உங்க பதிவு தனி ஸ்டைல் தான்.
உங்க பதிவு தனி ஸ்டைல் தான்.
//கனவுகள்.....கற்பனைகள்....... ஆதங்கங்கள்.// நன்றி சித்ரா.இன்னொரு பதிவெழுத அருமையான தலைப்பு தந்துவிட்டீர்கள்.:)
//வீட்ல இருக்குற அண்டா குண்டா, தட்டு டம்ளர்லாம் நகையாக்கிவிட்டுடலாமே ஹி...ஹி...ஹி...// இந்த வரிகளைப்பார்த்ததும் சிறு வயதில் கேட்ட கதை நினைவுக்கு வந்து விட்டது.
தேவதை ஒருவனிடம் ஒரு என்ன வரம் வேண்டும் என்று கேள் என்றதாம்.
தான் தொட்டதெல்லாம் பொன்னாகும் வரம் வேண்டும் என்று கேட்டானாம்.
தேவதையும் வரம் வழங்கியதாம்.வரம் கிடைத்ததும் அவன் தொட்டதெல்லாம் பொன்னானதாம்.ஒரு கவளம் சாப்பாட்டை தொட்டு அள்ளி வாய்க்கு கொண்டு போகு முன்னரே ஒரு கவளம் சோறும் பொன்னாகி விட்டதாம்.வரம் கேட்டவன் நொந்து நூடுல்ஸ் ஆகி விட்டானாம்.திரும்ப தேவதையை அழைத்து வரத்தை கேன்சல் பண்ண சொல்லிட்டானாம்.கதை எப்படி ??
கருத்துக்கு நன்றி ஆமினா.
//
நல்ல கற்பனைதான். எப்படி வேகமா
விலை ஏறிச்சோ அப்படி இறங்கித்தானே
ஆகனும் ஒரு நாள்// லக்ஷ்மிம்மா..அப்படீங்கறீங்க..உங்கள் வாக்கு பலித்தால் அனைவருக்கும் மகிழ்ச்சிதான்.
வ அலைக்கும் சலாம் ஆயிஷா.கருத்துக்கு நன்றி,
கருத்துக்கு நன்றி அந்நியன்.
தங்கம் விலை ஏறியது குறித்து சூப்பரா கலக்கலான சிறுகதை படைத்துவிட்டீர்கள் அருமை
கனவு நனவாகட்டும்
உங்க கதையில் வருவது போல நினைவில் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்...
அதுக்குனு இப்படியா குறையும்...அப்படி எல்லாம் நடக்க வேண்டாம்...ஒரு சவரம் 8 ஆயிரம் - 10 ஆயிரம் வரை இருந்தாலாவது நல்லது...
உங்கள் கதை கற்பனை என்றாலும் நிஜம்.அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.
ஓய்வு நேரத்தில் என் வலைப்பக்கம் வந்து போங்கள்.பயனுள்ளதாக இருந்தால் உங்கள் வாசக நண்பர்களிடம் அறிமுகப்படுத்துங்கள்.
இதுக்குதான் பகல்ல தூங்கக்கூடாதுன்னு சொல்றது கேட்டாத்தானே , பாருங்க எப்படியேல்லாம் கனவு வருது ஹி...ஹி...
இந்த கனவு எப்படியும் நனவாகும் :-))
நல்லாருக்கு சகோ....
ஸாதிகா அக்கா.. வந்துட்டேன்ன்ன்ன்ன்.. தங்கம் எனக்குத்தான். கனக்க வாணாம்... ஒரு பார்சல்போதும்.
உண்மையிலயே வலு சீரியசாகப் படித்துக் கொண்டே வந்தேன். ஏனெண்டால், ஜெயா நியூசில் தினமும் தங்கம் பற்றி விலை சொல்வார்கள். எப்பவும் அதிகரித்திருக்கு என்றே சொல்வார்கள், கடைசியாக 260 ரூபா இறங்கியிருக்கு என்றார்கள்.
நானும் அதைத்தான் சொல்றீங்களாக்கும் எனப் படித்துக்கொண்டே வந்தேன்.
கலக்கிட்டீங்க சிறுகதை சூப்பர். இது பிடித்திருக்கு எனக்கு.
இப்போ ஸாதிகா அக்காவும் கனவு காணத் தொடங்கிட்டா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).
//தங்கம் விலை வரலாறு காணாத வீழ்ச்சி!//
இது கனவுலயும் நடக்காது நண்பரே
ஆஹா........
இப்படி மட்டும் நடந்துட்டா.....
வீட்ல இருக்குற அண்டா குண்டா, தட்டு டம்ளர்லாம் நகையாக்கிவிட்டுடலாமே ஹி...ஹி...ஹி...
nalla aasaithan.
aana enakku thangam pudikkathu.
ஹா.ஹா.. ஹா... அட்டகாசம்.
அருமையான கற்பனைகள் தோழி .வாழ்த்துக்கள்
உங்கள் எண்ணம் ஈடேற .நன்றி பகிர்வுக்கு .நாம்ம
வீட்டுக்கும் வாங்க சகோ .
நல்ல கற்பனைதான் ஸாதிகா அக்கா. எப்போ இதெல்லாம் நடக்கப்போகுதோ?..
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.
பெருநாள் வாழ்த்துக்கள் ஸாதிகா அக்கா.
ரம்லான் வாழ்த்துக்கள்.
பெருநாள் வாழ்த்துக்கள்.
இன்று வலைச்சரத்தில் உங்களை அறிமுகம் செய்திருப்பதில் மிகுந்த மகிழ்வடைகிறேன்.
www.blogintamil.blogspot.com
ஹை! சுப்பர், சுப்பர், சுப்பர் ஸாதிகா. ;))
டாப்பிக்கே களைகட்டுதே! வெரி இண்ட்ரெஸ்டிங்..
என்ன ஆச்சு ரம்ஜான் முடிந்து
மூன்று நாளாகிவிட்டது
தங்கள் பதிவைக் காணோம்
தங்கள் பதிவின் ரசிகர்கள் எல்லாம்
இரண்டு நாளாய் தங்கள் பதிவுக்கு
வந்து வந்து திரும்புகிறோம்
உடன் பதிவு தர அன்புடன் வேண்டுகிறோம்
கருத்திட்ட அன்புள்ளங்களுக்கு என் நன்றிகள்.
இப்படி நடக்காதா என்ற ஏக்கம் கனவில் வெளிப்படுகிறது..இறுதியில் அதை சொன்னது சிறப்பு.வாழ்த்துகள்..
நன்றாக இருந்தது. படைத்துக்கொண்டே இருங்கள்!
Post a Comment