அசோர்டட் பஜ்ஜி வகைகளை டிஸ்போசபிள் பிளேட்டுகளில் புளிச்சட்னியுடன் சூடாக விற்பனை செய்பவர்.மிளகாய்,வெங்காயம்,கத்தரி,உருளை,வாழை,காலிபிளவர் போன்றவற்றில் பஜ்ஜி விற்பனைக்கு வருமே தவிர வடை போன்றவை பீச்சில் விற்பது கிடையாது.இவரிடம் காரணம் கேட்ட பொழுது ”வடைக்கு எல்லாம் மாவு அரைத்து,பொடியாக வெங்காயத்தை நறுக்கி..வேலை இழுத்து விடும்.பஜ்ஜி என்றால் எவ்வளவு வேண்டுமானாலும் சுலபமாக செய்து விடலாம்.”என்கின்றார்.கடற்கரை காற்று இவரது வியாபரத்துக்கு ஒரு சவால் ஆயினும் வீறு கொண்டு காற்றை ஜெயித்து,குடுமபத்தைக்காப்பாற்ற காற்றுடன் போராடி,போராடி ஜெயித்து வருகின்றார்.
சோளத்தை நெருப்பில் காட்டி உப்பு.காரம்,புளிப்பு தடவி மணக்க மணக்க விற்பனை செய்யும் பெண்ணிவர்.”நெட்டில் போடப்போகின்றேன்” என்றதும் “தாராளமா போட்டுக்கோ”என்று போஸ் கொடுத்தார்.”குளிர் சீஸன் ஆரம்பித்து விட்டது.இனி யாபாரம் டல்லு தான்.வூட்லே இனி கொஞ்சம் கஷ்டம்தான்”என்று கவலை தோய்ந்த குரலில் கூறினார்.
மும்பை இறக்குமதியான பேல்,பானி பூரிவகைகள்,பாவ்பாஜி போன்றவை விற்பனை செய்யும் வடநாட்டினை சேர்ந்தவர்கள்.தமிழில் பெயர் என்ன என்றால் கூட பதில் சொல்லத்தெரியாத இவர்கள் கனஜோராக வியாபாரம் செய்வதைக்காணும் பொழுது வியப்பாகத்தான் உள்ளது.
பலூன் சூட்டிங் நடத்துபவர்.பலூன்களை பெரிய போர்டுகளில் கட்டி வைத்து துப்பாக்கியால் சுடும் விளையாட்டு.சிறுவர்கள் இவரை சூழ்ந்து விளையாட போட்டி போடுகின்றனர்.சிறுவர்களின் கூட்டத்தினை பார்த்து இச்சிறுவனுக்கு குஷி ஏற்பட்டு வியாபாரத்தை சுறுசுறுப்பாக கவனிக்கின்றார்.
சில்வர்கேன்களில் சூடாக சுக்குக்காப்பி விற்பனை செய்பவர்.காப்பி விற்றுத்தான் தன் தாய்,சகோதர சகோதரிகளை காப்பாற்றி,படிக்கவைத்து சுமைகல்லாக இருக்கும் இச்சிறுவனைக்காணும் பொழுது கழிவிரக்கம் வருகின்றது.
“மல்லி..மல்லிப்பூ” என்று சுற்றி சுற்றி வந்து விருப்பமில்லாதவர்களையும் வாங்க வைத்து விடும் சாமர்த்தியசாலிகள்.காலையிலேயே பூ வாங்கி கட்டி கூடையில் சுமந்து கடற்கரைக்கு விற்பனைக்கு எடுத்து வந்து விடுவாராம்.மிஞ்சிய பூக்களை ஈரத்துணியில் சுற்றி மறு நாள் காலை அக்கம் பக்கத்தினருக்கு விற்பனை செய்து விடுவாராம்.”போட்டோ எடுக்கட்டுமா” என்று கேட்டபொழுது ”ஐயையோ..அம்புட்டுதேன்.என் வூட்டுக்காரன் தொடப்பக்கட்டயை தூக்குவான்”என்றவர் ”தாரளமா என் பூக்க்கூடையை எத்தினி போட்டோ வோணுனாலும் எட்துக்கோ.என்னை வுட்ரு”என்று பயந்து போய் பூக்கூடையை முன்னால் வைத்து விட்டு தூரமாகபோய் நின்றவரை அனைவரும் சிரிப்புடன் பார்த்தோம்.
கலர்கலராய் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யும் சிறுவன்.”நாளொன்றுக்கு 200 ரூபாய்க்கு விற்பனையாகும்.அதனை வைத்துத்தான் குடும்பத்தை காப்பாற்றுகின்றேன்”என்று பெரிய மனுஷன் தோரணையில் கூறும் அச்சிறுவனை கலங்கிய மனதுடன் பார்த்தோம்.அநேக உழைப்பாளிகள் சிறுவர்களாக இருப்பது மனதினை பாதித்த விஷயம்.படிப்பு,ஜாலி,கொண்டாட்டம் என்று குதூகலாமாக கழிக்க விரும்பும் இப்பதின்ம வயதில் இச்சிறார்கள் தங்கள் ஆசாபாசங்களை கடல்மண்ணுக்கடியில் புதைத்து விட்டு சுமையை தோளில் சுமந்து,ஏழ்மையை கண்களில் சுமந்து,ஏக்கத்தை நெஞ்சினில் சுமந்து கடல் மண்ணில் பாதம் புதைய புதைய உழைத்து ஓடாய் தேய்பவர்கள்.
சிறுவர்களை கவரும் பலூன் விற்பனை செய்பவர்.இவர்களில் சிலர் காலையில் பள்ளி சென்று படித்து விட்டு மாலையில் பீச்சுக்கு வந்து விற்பனை செய்வதைக்கேட்கும் பொழுது உண்மையில் சற்று சந்தோஷமாக இருந்தது.”அக்கா..நான் படித்து கலேட்டர் ஆகணும்க்கா”என்று கூறும் பொழுது மனதார வாழ்த்தி விட்டு வந்தோம்.
மிஷினில் கரும்பு ஜூஸ் பிழிந்து ஐஸ்கட்டிகளைப்போட்டு விற்பனை செய்பவர்.காலையில் வெளியில் வியாபாரம் செய்து விட்டு மாலையில் பீச்சை நோக்கி ஓடி வருபவர்.பீச்சில் கூட்டம் அடங்கும் வரை நின்று வியாபாரம் செய்து தம்பி தங்கைகளை படிக்கவைக்கின்றார்.
குதிரை மேல் குழந்தைகளை ஏற்றி சவாரி செய்து சிறார்களை மகிழ்விப்பவர்.கண்ணுக்கெட்டும் தூரம் வரை சின்ன ரவுண்டுக்கு 30 ரூபாய் வாங்கினாலும் குதிரை தீனி,பராமரிப்புச் செலவு.குதிரைக்கு மருத்துவம் என்று இவருக்கு வருமானம் சவாலாகவே உள்ளது.இது போல் ஒட்டக ஓட்டிகளும் இருக்கின்றனர்.
பீச் என்றதும் தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டலை நினைவுக்கு வராதவர்களே இருக்க முடியாது.இப்படி சுண்டல் விற்கும் சிறுவர்கள் மட்டும் நூற்றுக்கணக்கில் இருக்கின்றனர்.அம்மா செய்து தரும் சுண்டலை மாங்காய்த்துருவலால் அலங்கரித்து பேப்பர் சுருள்களில் விற்கின்றார்.”சாதரண நாளில்1 ,1 1/2 கிலோ சுண்டல் போடுவோம்.சனி ஞாயிறுகளில் 2 ,2 1/2 கிலோ சுண்டல் விற்பனை செய்வோம்.”என்கின்றார்.இவர்களுக்கு கோடைகாலம் பிறந்தால்தான் கொண்டாட்டம்.மார்ச் மாதத்திற்காக வழி மேல் விழி வைத்து காத்து இருக்கும் ஜீவன்கள்.
சோன்பப்டியை விளக்கு வெளிச்சத்தில் வைத்து விற்பனை செய்பவர்.இவர்கள் பெரும்பாலும் வட இந்தியர்களாகவே இருக்கின்றனர்.”டிணிங்..டிணிங்..”என்று மணி அடித்தவாறு இவர்கள் வருவது யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே”என்பதை நினைவு கூறும்.
வீட்டில் கை முறுக்கு செய்வதில் மனைவி மக்கள் ஈடுபட்டு அவர்கள் செய்த முறுக்கை இவர் பீச்சில் விற்பனை செய்கின்றார்.பக்குவமாக மாவரைத்து பதமாக சுட்டெடுத்த முறுக்குகள்.பல வருடகாலங்களாக முறுக்குத்தொழிலில் இவரது குடும்பம் ஈடு பட்டு அதில் ஸ்பெஷல் ஆகி விட்டனராம்.நாளொன்றுக்கு 300,400 ரூபாய்க்கு விற்பனை ஆகும்.கோடைகாலம்தான் எங்களுக்கு கொண்டாட்டம்”என்கின்றார்.
டிஸ்கி:நான் எடுக்கத் தயங்கிய சில புகைப்படங்களை என் தங்கையின் பத்து வயது மகன் ஹம்ஜா பாய்ந்து பாய்ந்து கிளிக் செய்து உதவினான் ”பிளாக்கில் இன்னிக்கே போட்டு விடுங்க” என்று உத்தரவு இட்டுவிட்டான்.
Tweet |
59 comments:
மெரீனாவை சுற்றி வந்தாச்சு! இதுவரை நான் ஒருமுறை கூட பீச் பக்கம் போனதில்ல,இப்ப அந்தக் குறை தீர்ந்துடுச்சு. :)
உழைக்கும் சிறுவர்களைப் பார்க்கையில் மனசு வலிக்கிறது. :-|
நானும் மெரீனாவை சுற்றி வந்து அனைவரையும் பேட்டி கண்டது போல் இருக்கு.உழைக்கும் இவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் ஒரு நல்ல நிலைக்கு வருவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.பகிர்வுக்கு நன்றி ஸாதிகா.ஹம்ஸாவிற்கு என் வாழ்த்துக்கள்.அருமையாக படம் பிடித்திருக்கிறார்.
மெரீனா பீச்சை நல்லா சுத்தி காண்பிச்சிருக்கீங்க அக்கா.
உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே..
நாளைய புது உலகை உண்டாக்கும் கைகளே..
Missing all these goodies!!!
மெரீனாவை நேரில் பார்த்த உணர்வு. உழைக்கும் சிறுவர்களுக்கு என்றுதான் விடிவோ :(
மெரினா பீச்ச் மறகக் வே முடியாது.
நாங்க எல்லோரும் குடுமப்த்தோடு போகும் இடம்.
ஆஹா நம்மை மறந்து அங்கு அடிக்கும் காற்றும், அலைகளும், பீச்சில் , போடும் பஜ்ஜி, சுண்டல் , மாங்காய்,பூ பல விதமான உழைப்பாளிகளை அங்கு கானலாம்
காலையில் வாங்கிங் போகும் போது அவித்த சோள சுண்டல் சூப் விற்பனையாளர்களை அங்கு அதிகமாக பார்க்கலாம், லெமன் டீ, சுக்கு காப்பி
எல்லாம் அங்கு விற்பார்கள்
சூப்பரா வளைத்து வளைத்து போட்டோ எடுத்து இருக்க்கிறார் தஙகை மகன் வாழ்த்துகக்ள்,
நிறைய இடத்தில் எனக்கும் ரொம்ப தயகக்மா இருக்கும் போட்டொ எடுக்க, வந்துட்ட பா கேமரா வ தூக்கிகிட்டுன்னு சொல்லிடுவாஙக்|ளோன்னு , வேர
ரொம்ப நல்லா பதிஞ்சிருக்கிறீர்கள்
மெரினா பிச்..சென்ற முறை ஊர் சென்ற போது,ஒரு எட்டு போய்ட்டுதான் வந்தேன்...போட்டொக்கள் அருமை...அவர்களின் அன்றாட வாழ்க்கையையும் குறித்து எழுதியது சிறப்பு...
வாழ்த்துக்கள்
அன்புடன்
ரஜின்
//"உழைப்பாளர் சிலையை சுற்றி உழைப்பாளிகள்"//
தலைப்பே பிரமாதம் அக்கா!!
கடற்கரைக்குப் போகும் சமயங்களில் இவர்களைக் கண்டும், வியந்தும் இருந்தாலும் இவர்களைக் குறித்த ஒரு பதிவு எழுத வேணுமென்று உங்களுக்குத் தோன்றியது பாராட்டுக்குரியது அக்கா.
உடல் இளைக்க நடக்கும் சிலர் வயிறு நிறைக்க நடக்கும் பலர்
இதுதான் கடற்கரை!!
அஸ்ஸலாமு அழைக்கும் ஸாதிகா!
//திரைகடல் ஓடி திரவியம் தேடு என்பது பழ மொழி.இவர்களோ திரைகடல் நோக்கி ஓடி உழைக்கும் வர்க்கத்தினர்.சென்னையின் அடையாளமாக இருக்கும் மெரினா பீச்சை நம்பி ஏகப்பட்ட ஏழைத்தொழிலாளிகள்//
நல்ல பதிவு.வாழ்த்துக்கள்
சிறப்பான பகிர்வு அக்கா...பொருமையா அழகா பதிவ செதுக்கி இருக்கீங்க...எனக்கு இந்த பதிவு ரெம்ப பிடிச்சிருக்கு...பழைய நினைவுகள் மனசுகுள்ள வந்து போகுது...
அக்கா கொஞ்சம் இங்க வந்து பாருங்க...
http://ganifriends.blogspot.com/2010/12/blog-post_19.html
வித்தியாசமான கோணத்தில் மெரினா! உழைப்பவருக்கு என் வணக்கம்!
முதல் கருத்துக்கு நன்றி மகி.//உழைக்கும் சிறுவர்களைப் பார்க்கையில் மனசு வலிக்கிறது. :// எனக்கும்தான்.இவர்களுக்கு என்று விடிவு காலமோ?
நன்றி ஆசியா.என் தங்கை மகனுக்கு படம் எடுப்பதில் ஆர்வம் அதிகம்
//
உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே..
நாளைய புது உலகை உண்டாக்கும் கைகளே..// பொருத்தமான பாடலைத்தேடிப்பிடித்து பின்னூட்டி விட்டீர்கள் ஸ்டார்ஜன் நன்றி.
நன்றி சித்ரா
//மெரீனாவை நேரில் பார்த்த உணர்வு. // மிக்க மகிழ்ச்சி.நன்றி இர்ஷாத்.
இந்த முறை நாம் மெரீனாவில் சந்திப்பதாக ஏற்பாடு.ஆனால் அது முடியாமல் போய் விட்டது.அடுத்த முறை பார்க்கலாம்.கருத்துக்கு நன்றி ஜலி.
Several tips முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.
கருத்துக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ ரஜின்.
//உடல் இளைக்க நடக்கும் சிலர் வயிறு நிறைக்க நடக்கும் பலர்
இதுதான் கடற்கரை!!.. அட..அழகான தத்துவத்தை அருமையா சொல்லீட்டீங்க ஹுசைனம்மா.மிக உண்மையும் கூட.கருத்துக்கு நன்றி.
ஆயிஷாஅபுல்.வ அலைக்கும் வஸ்ஸலாம்.வாழ்த்துக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.
//அழகா பதிவ செதுக்கி இருக்கீங்க// ஆஹா..மேற்கண்ட வரிகள் பூஸ்ட் குடித்த தெம்பு எனக்கு.கருத்துக்கு மிக்க நன்றி சீமான்கனிதம்பி.
சகோ தேவன்மாயன் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.
பொருததமான தலைபபு அனைதது விசயததையும பதிநது விடடீரகள அறுமை.
அருமையான தொகுப்பு அதே நேரத்தில் ஒரு பனிரெண்டு அல்லது பதிமூன்று வயது சிறுவன் சுண்டலை விற்கும் காட்சி மனதை ரொம்ப சங்கடத்தில் ஆழ்த்துகிறது.
கண்டிப்பாக அவன் பள்ளியில் பயிலும் மாணவனைப் போன்ற ஒரு வெளிச்சம் அவன் முகத்தில் தெரிகிறது,பாவம் வறுமையின் கோர முகத்திற்கு அவனும் ஒரு பலிகடா ! பகலில் படிப்பு,மாலையில் சுண்டல் வியாபாரம்.
பாராட்டக் கூடிய விஷயம்,அதே சமயத்தில் சிந்திக்கக் கூடிய விசயமாகவும் இருக்கிறது.நிச்சயாமாக பிற்க காலத்தில் அவன் ஒரு அணில் அம்பானியாகவோ அல்லது ஒரு பிர்லாவாகவோ வருவான் காலம் பதில் சொல்லும்.
எல்லாமே அருமை வாழ்த்துக்கள் அக்காள்.
தலைப்பு மிக அழகு! வித்தியாசமான பதிவு. எத்தனையோ தடவைகள் பார்த்திருந்தாலும் உங்கள் புகைப்படம் வழியே உழைக்கும் அந்த சிறுவர்களைப் பார்த்தபோது மனம் நெகிழ்ந்தது!
மிக அருமையான பதிவு, இவர்களுக்காகவே காதலர்கலும், குடும்பத்தார்களும் அதிகமாக மெரீனாவில் பொழுதை கழிக்கட்டும்
நல்ல இடுகை. தமிழ்மணம் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்.
பகிர்வு அருமை! சென்னை வந்தாலே அவசர, அவசரமாக வேலைகளை முடித்துவிட்டு ஊர் திரும்பதான் நேரம் சரியாக இருக்கும். சின்ன வயதில் எப்போதோ ஓரிரு முறை மெரீனா பீச் வந்ததுதான். இப்போ வீட்டில் இருந்தே உங்களோடு சுற்றி வந்தாச்சு :) நன்றி ஸாதிக அக்கா! படிக்கும் வயதில் உழைக்கும் சிறுவர்களைப் பார்க்கும்போதுதான் ரொம்ப பாவமாக உள்ளது :(
ரொம்ப நன்றாக இருக்கிறது. அடிமட்ட மக்களின் வாழ்வியலை அழகாக சொலோவியமாய் தீட்டியுள்ள உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!
கருத்துக்கு மிக்க நன்றி சகோ ராஜவம்சம்
//நிச்சயாமாக பிற்க காலத்தில் அவன் ஒரு அணில் அம்பானியாகவோ அல்லது ஒரு பிர்லாவாகவோ வருவான் காலம் பதில் சொல்லும்.//அழகான ”ஆசி”என்று இதைத்தான் சொல்லுவதோ?கருத்துக்கு மிக்க நன்றி அந்நியன்.
மனோ அக்கா,உங்கள கருத்துக்கும்,உற்சாக வரிகளுக்கும் மிக்க நன்றி
//இவர்களுக்காகவே காதலர்கலும், குடும்பத்தார்களும் அதிகமாக மெரீனாவில் பொழுதை கழிக்கட்டும்
// அட வித்தியாசமான கோணத்தில் சிந்திக்கறீங்க இரவுவானம் கருத்துக்கு நன்றி.
சகோ நூருல் அமீன்,கருத்துக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி!
//டிக்கும் வயதில் உழைக்கும் சிறுவர்களைப் பார்க்கும்போதுதான் ரொம்ப பாவமாக உள்ளது :(
// உண்மைதான் அஸ்மா.கருத்துக்கு மிக்க நன்றி.
பாரதிவைதேகி,முதல் வருகைக்கும்,கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
மெரீனா பீச் போனதில்லை. பார்க்க ஆசையாக இருக்கு.
போடோஸ் சகிதம் ஒரு அசத்தலான பதிவு. வாழ்த்துக்கள்.
வாழ்த்துகக்ள்.
வானதி கருத்துக்கு நன்றி!
myth-buster கருத்துக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.
நன்றி கீதா!
நல்ல தலைப்பு ,உழைக்கும் தலைமுறையை அழகாக படம் பிடித்து காட்டி உள்ளீர்கள்.
ஸாதிகாக்கா, இந்த அவார்டை பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
Be prepared!! :))))))
http://mahikitchen.blogspot.com/2010/12/blog-post_22.html
parattugal
nallasuvai thanisuvai
உழைக்கும் சிறுவர்களைப் பார்க்கையில் மனசு கனக்கிறதக்கா.
நிச்சயம் நல்லநிலைக்கு வருவார்கள்..
படங்களின் தொகுப்பு அருமை..
இங்க குளிர் கொடுமைல நொந்து போய் இருக்கறப்ப பஜ்ஜி, murukku, மாங்காய், சோளம்னு நல்லா கெளப்பறீங்க stomach fire ஐ... ஹ்ம்ம்... ஹா ஹா அஹ...நல்ல போஸ்ட்... (கண்ணுலயாச்சும் பாத்துக்கறேன்..அதுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்)
பீச்சுக்கு போய் காத்து வாங்கினீங்களோ இல்லையோ எல்லாத்தையும் நுனுக்கமா பார்த்திருக்கிறீங்க..!! படிக்க வேண்டிய வயது சிறுவர்களை நினைதாலே கவலையாக இருக்கு
பீச்சில் நிறைய பேர் கண்டும் காணாமல் விடுகிற பல விஷயங்களைப் பற்றி அழகா எழுதியிருக்கீங்க... பண்டங்களைப் பார்த்ததும் ஊறும் நாக்கு பசங்களைப் பார்த்ததும் வறண்டு விடுகிறது. ஏதோ நம்மாலானது இவர்கள் அனைவரிடமும் பேரம் பேசாமல் பொருட்கள் வாங்குவது தான். நல்ல பதிவு அக்கா.
கருத்துக்கு நன்றி சகோ இளம்தூயவன்.
என்னையும் மறவாமல் அவார்ட் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி,நன்றி மகி.
போளூர் தயாநிதி,பாராட்டுக்களுக்கும்,கருத்திட்டமைக்கும் நன்றி!
எனக்கும்தான் மலிக்கா.இந்த சிறுவர்களை பார்க்கும் பொழுது மனம் பாரமாகி விட்டது.பதிவு போட்டு நீண்ட நாள் ஆகிவிட்டது போல் இருக்கே? கருத்துக்கு நன்றி.
//stomach fire // ஹா..ஹா..தங்கமணி நானும் ரொம்பவே சிரித்து விட்டேன்.கருத்துக்கு நன்றி.
ஜெய்லானி கருத்துக்கு நன்றி.
என்றென்றும்,கருத்துக்கு மிக்க நன்றி.//ஏதோ நம்மாலானது இவர்கள் அனைவரிடமும் பேரம் பேசாமல் பொருட்கள் வாங்குவது தான்// இதுவும் நல்ல யோசனைதான்.
ஓவ்வொருமுறை கடற்கரை போகும்போதும் இவர்களிடம் பேசி புகைப்படம் எடுக்க விரும்புவதுண்டு ஸாதிகா. எனினும், ஒருமுறை கூட விருப்பம் நிகழவில்லை. இங்கே உங்கள் படைப்பாகப் பார்க்கையில் பெருமிதமாக உள்ளது. வாழ்க உங்கள் சீரிய சேவை. வளர்க உங்கள் பணி.
Post a Comment