December 10, 2010

கீழக்கரையும்,டிசம்பரும்!

டிசம்பர் என்றால் சங்கீதசீசன்,கிருஸ்துமஸ்,மழை,குளிர்,கண்களைப்பறிக்கும் டிசம்பர் பூக்கள் இத்யாதி..இத்யாதி ஞாபகத்திற்கு வரும்.கீழக்கரையை அறிந்தவர்களுக்கு டிசம்பரில் நடக்கும் கோலாகலங்கள் தான் நினைவுக்கு வரும்.
வெளிநாடு,வெளியூர்களின் வசிக்கும் அநேக கீழை வாசிகள் சீஸனுக்கு வேடந்தாங்கல் நோக்கி படை எடுக்கும் பறவைககள் போல் படை எடுப்பார்கள்.ஊரே களைகட்டி விடும்.வருடம் முழுக்க இருண்டிருந்த சாலைகள் வெளிச்சத்தில் மின்னும்.பூட்டப்பட்ட வாசல் கதவுகள் திறந்து ஜெகஜோதியாக இருக்கும்.திசைக்கொன்றாக வாழும் உறவினர்கள் இப்பொழுதான் ஒருவரை ஒருவர் சந்தித்து அன்பை பகிர்ந்து கொள்வார்கள்.

எல்லோரும் ஒன்று கூடும் இம்மாதத்தில்தான் வீட்டு விஷேஷங்களை நடத்துவார்கள்.ஒரே நாளில் ஏழெட்டு திருமணங்களில் கலந்து கொள்ளும் சூழ்நிலையும் வரும்.

விஷேஷம் கருதி இறைச்சி,மீன் காய்கறிகள்,பூக்கள்,பழங்கள் விலை உச்சத்தில் எகிறிவிடும்.கல்யாணவிருந்துக்காக ஆங்காங்கே ஆட்டுமந்தைகளை ஓட்டிச்செல்பவர்களையும்,வருடந்தோறும் ஆராவரம் இல்லாத சாலைகளில் வெளியூர்களில் இருந்து வந்த கார்களும்,மனிதர்களும் தெருவை அடைத்துக்கொண்டு போக்குவரத்தையே ஸ்தம்பிக்க செய்து விடுவார்கள்.
தெருவெல்லாம் அலங்காரமும்,வண்ணவிளக்குகளும்,ஆர்ப்பாட்டமும் அமர்க்களப்படும்.இம்மாதம் கீழைவாசிகள் வீடுகளில் சமைப்பதற்காக அடுப்பெறிவதே அபூர்வம் என்றாகி விடும்.ஏனெனில் திருமணத்திற்காக சமைக்கப்படும் சாப்பாட்டை பிளாஸ்டிக் பக்கெட்,டப்பாக்கள்,ஸ்டீல் தூக்குகளில் போட்டு வீட்டுக்கு வீடு விநியோகம் பண்ணி விடும் பழக்கம் இங்கு நடை முறையில் உள்ளது.ஒரே நாளில் நாண்கு,ஐந்து திருமண வீடுகளில் இருந்து வரும் சாப்பாடை வைத்துக்கொண்டு திணறிக்கொண்டிருப்பார்கள் இல்லத்தரசிகள்.

பிரியாணி,எண்ணெய் கத்தரிக்காய்,தயிர்பச்சடி,ஸ்வீட்,கோழிப்பொரியல் போன்றவற்றை தனித்தனியாக பேக் செய்து பிளாஸ்டிக் ,சில்வர் வாளிகளில் நிரப்பி அனுப்பப்படும் சாப்பாடு ஒரு முழுக்குடும்பமே சாப்பிடலாம்.நெய் சோறு,இறைச்சி குழம்பும்,தாளிச்சா,மாசிக்கறி,தக்காளி ஜாம் போன்றவற்றையும் இதே போல் பேக் செய்து விநியோகிப்பார்கள்.இவை எல்லாம் அலுத்துப்போகும் அளவுக்கு மாத இறுதில் நடக்கும் திருமணங்களில் இதன் கூட பொட்டுக்கடலை துகையலுடன்,ரசமும் சேர்த்து கல்யாணவிருதை அனுப்புவார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

தெருக்களில் திருமண ஊர்வலம் நடைபெறுவதால் போக்குவரத்து தடைபட்டும், தெருக்களிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்துப்போவதும் அடிக்கடி நிகழ்வதுண்டு.

ஒரே தெருவில் பல்வேறு திருமணங்கள் நடைபெறுவதால் திருமணத்திற்கு வெளியூரில் இருந்து வருபவர்கள்திருமண வீட்டைக் கண்டு பிடிக்காமல் திண்டாடும் அவலமும் நடைபெறும்

இலை விரித்து மேஜைகளில் உணவுவகைகள் பறிமாறப்பாட்டாலும் இஸ்லாத்தின் கொள்கையான சகோதரத்துவம்,சமத்துவம் மிளிற இங்கு இன்னும் சஹன்களில் உணவருந்தும் பழக்கமும் நடைமுறையில் உள்ளது.
திருமணத்தைத் தொடர்ந்து விருந்துகளும்,பிக்னிக்குகளும் அமர்க்களப்படும்.பிருமாண்டமான திருமணங்களும்,ஆர்ப்பாட்டங்களும்,ஆடம்பரங்களிலும் திளைக்கும் மக்கள் திணறித்தான் போவார்கள்.கீழைநகரின் ஆடம்பரத்திருமணங்களை கீழை வாசி ஒருவரே விளாசித்தள்ளி இருப்பதைப் பாருங்களேன்.

வீதிக்கு வீதி ஓலைப்பாய் விரித்து பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் சீலா மீன்,நெய்மீன் என்று அழைக்கப்படும் வஞ்சிரமீனை கிலோ 600 விலைகொடுத்துக்கூட வாங்கிச்செல்ல மக்கள் தயாராக இருப்பார்கள்.

கீழை நகரின் ஸ்பெஷல் உணவு வகைகளான தொதல்,ஓட்டுமா,பணியம்,கலகலா,நவதானியம் போன்ற திண்பண்டங்கள் செய்து விற்பனை செய்பவர்களுக்கு இம்மாதம் செமத்தியான வியாபரம் கிடைக்கும்.


எண்ணிலடங்கா ஆடுகள் கறி சமைப்பதற்காக வெட்டப்படும் பொழுது ஆட்டின் தலை,குடல்,கால் போன்றவை சாதாரண நாட்களில் ஒரு செட்டின் விலை 250 இல் இருந்து 300 வரை விற்கப்பட்டாலும் இந்த சீஸனில் வெறும் 50 ரூபாய்க்கு விற்பனை ஆகும் பொழுது கூட வாங்கிச்செல்ல ஆள் இருக்காது.


பூவியாபாரிகள்,பந்தல் அலங்கரிப்போர்,விளக்குகள் மற்றும் அலங்காரவிளக்குகள் ,ஜெனரேட்டரகள் வாடகை விடுவோருக்கு இந்த சமயத்தில் பயங்கர டிமாண்ட் இருக்கும்.

பள்ளி வாசல் மினாராக்களில் விளக்கு வெளிச்சம் தகதகக்கும்.டிஸம்பர் சீஸனுக்காவே புத்தாடை எடுப்பவர்களும் உண்டு.

பந்தியில் இலையை எடுப்பதற்கும்,ஏனைய சிறுசிறு வேலைகளுக்கும் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட அரவாணிகளை சேவை செய்ய அழைத்து கூலியைக்கொடுக்கும் மனித நேயத்தையும் பல திருமணக்களில் காணமுடியும்..கரன்ஸிகளை கணக்கில்லாமல் கொட்டி பிரமிப்பை ஏற்படுத்தும் திருமணங்களில் கூடவே ஏழை பெண்களுக்கும் சேர்த்து தங்கள் இல்லத்திருமணத்துடன் தங்கள் செலவிலேயே திருமணம் செய்து வைக்கும் நல்ல பண்பினையும் பாராட்டத்தான் வேண்டும்.

என்னதான் வெளிநாடுகளில் வெளியூர்களிலும் வசித்தாலும் தங்களது வீட்டுத் திருமணங்களை சொந்த ஊரான கீழக்கரையில் அதுவும் டிசம்பர் மாதத்தில் நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள் கீழைவாசிகள்.பழங்கால நவாப்களின் திருமணங்கள் பண்டைய ராஜபுத்திர வம்சத்து திருமணங்களுக்கு நிகரான ஆடம்பரம், கமகம பிரியாணி,அலங்காரங்கள்,விருந்தோம்பல்,வந்து குவியும் வி.ஐ.பி.க்கள் பட்டாளம்,நட்சத்திரப்பட்டளம் என திருமணங்கள் ராஜகளை கட்டும்.


பெண், மாப்பிள்ளை சமாசாரத்தை எல்லாம் ‘சம்பந்திகள்’ வெளிநாட்டிலோ,வெளியூரிலோ வைத்து சந்தித்துப் பேசி முடித்துவிடுவார்கள். ஆனால், கல்யாணத்தை மட்டும் கட்டாயம் டிசம்பரில் கீழக்கரையில் வைத்துத்தான் நடத்துவார்கள். வெளிநாடுகளில் பெரும்பாலும் டிசம்பர் மாதம்தான் விடுமுறை காலமாகும். அதைப் பயன்படுத்தித்தான், சொந்தவூரை நாடி வந்து விஷேஷங்களை நடத்துகின்றனர்.பிறந்த மண்ணுக்கு நாங்க செய்கின்ற மரியாதைதான் இந்த ‘டிசம்பர் திருமணங்கள்’ என்று பெருமிதப்படுகின்றனர் கீழைவாசிகள்.


டிசம்பர் திருமணங்கள் கீழக்கரையில் ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை அதிகப்படுத்துகிறது,விலை வாசி உயருகின்றது,கோடிகளை கொட்டி இறைத்து அனாச்சாரம் தலை விரித்தாடுகின்றது,ஊரே ஸ்தம்பித்து விடுகின்றது,இது முடியாத எளியவர்கள் ஏங்கிப்போய் விடுகின்றார்கள் ,பெருமைக்காக ஆடம்பரம் செய்து விட்டு பின்னர் அவஸ்த்தைப்படுகின்றனர் என்று பல சர்ச்சைகள் இருந்து வந்தாலும் விஞ்ஞான மாற்றங்களால் உலகம் விரிவடைந்து, பல புதிய புதிய விஷயங்கள் நாளும் அவதரித்து வந்தாலும், கீழக்கரை மக்களின் கலாசார பேணலும், பிறந்த மண்ணுக்கு அவர்கள் காட்டும் மரியாதையும் ‘டிசம்பர் திருமணங்கள்’ ஆயிரம் சர்ச்சைகளை கடந்தும்,எண்ணற்ற விமர்சனங்களைக்கடந்தும் பிரியாணி போல் மணக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்!


56 comments:

ராஜவம்சம் said...

அனாச்சாரம் அதிகம் உள்ளவிசயத்திற்க்கு இவ்வளவு பெரிய விரிவாக்கம் தேவை இல்லை என்றே தோன்றுகிறது.

ஸாதிகா said...

அனாச்சாரம் நடந்தேறினாலும் சில நல்ல விடயங்களும் நடந்தேறுகின்றது என்பதும் உண்மை.கருத்துக்கு மிக்க நன்றி சகோதரர் ராஜவம்சம்.

Mahi said...

உங்களுடன் கீழக்கரைக்குள் சுற்றி வந்த அனுபவம் ஏற்படுகிறது ஸாதிகாக்கா!

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி மகி.

Chitra said...

கீழக்கரை மக்களின் கலாசார பேணலும், பிறந்த மண்ணுக்கு அவர்கள் காட்டும் மரியாதையும் ‘டிசம்பர் திருமணங்கள்’ ஆயிரம் சர்ச்சைகளை கடந்தும் பிரியாணி போல் மணக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்!



........படங்கள் மூலமாகவும் பதிவின் மூலமாகவும், நாங்களும் அங்கே இருப்பது போன்ற உணர்வு. பகிர்வுக்கு நன்றிங்க.

அந்நியன் 2 said...

கீழக்கரை...அந்த ஊருக்கும் எனக்கும் ரொம்ப சம்பந்தம் இருக்கு,அந்த ஊருக்கு புதிதாக வரும் நண்பர்கள் திகைத்துத்தான் போவார்கள்,ஏன் என்றால் தலைநகரமாக இருக்கும் ராமநாதபுறத்தில,இல்லாத மனுசக் கூட்டம் அங்கு காணலாம்.
பட்டப் படிப்பு கல்லூரி,பார் போற்றும் வள்ளல் சீதக்காதி வாழ்ந்த இடம்,வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் மதரஸாக்கள்,மற்றும் ஏனைய நகரில் காணக்கிடைக்காத பல செல்வ செழிப்புகளும் கிடைக்கப் பெற்ற ஊருதான் கீழக்கரை.
திருமணம் நடைமுறைகள் ஏழை எளியோரை திகைப்புடசெய்யும் வண்ணமாகவே அங்கு காட்சி அளிக்கும், எனது நண்பனின் சகோதரி கல்யாணத்திற்கு அங்கு சென்று இருந்தேன்,நம்ம ஊருக்கும் கீலக்கரைக்கும் பதினைந்து கிலோ மீட்டர்தான்.தடப் புடலாக கல்யாணம் நடை பெற்றது, சொல்லப் போனால் இருபது இலட்ச்சங்களை தாண்டி.
இன்னும் செலவழித்துக் கொண்டு இருக்கான் காரணம் கேட்டதற்கு, கல்யாணத்திற்கு பிறகு சகோதரி குடும்பத்தை தனியாக வீடு கட்டி கொடுத்து, தனிக் குடித்தனம் போக வைக்கணுமாம் அந்த செலவும் இந்த மகராசன் தலையில்தான் வந்து விழுந்து இருக்கு இவனை பொறுத்த வரையில் இருபது லட்சம் என்ன ?அம்பது லட்சம் என்றாலும் தூசிதான்.ஆனால் இல்லாத ஏழை ஜனங்கள் என்ன செய்யும் என்று பெண்ணின் அத்தாவிடமே கேட்டு விட்டேன். அதற்க்கு அவர் பதில் சொன்னதோ தம்பி இங்கு ஏழை பணக்காரன் என்று பாகுபாடு கிடையாது எங்களின் கவுரவம் இது,அப்படியே பழகி போச்சு என்றார்.

இப்போது இளைஞர்கள் மத்தியில் பெரும் மாற்றம் தெரிகிறது கூடிய விரைவில் வரதட்ச்சனை விஷசெடியை அறுத்து எடுக்க, இளைஞர்களும் காலேஜ் மாணவிகளும் போர் குரல் எழுப்பி வருகிறார்கள் கூடிய விரைவில் அது முழு வெற்றி அடையும்.

உங்களின் கட்டுரையும்,புகைப் படமும் அருமை அக்காள் வாழ்த்துக்கள்.

vanathy said...

அக்கா, நான் இது பற்றி முன்பு கேள்விப்பட்டதில்லை. நல்ல விளக்கம் & அழகான படங்கள்.

ஆமினா said...

அடிக்கடி அந்த பக்கம் வந்தாலும் டிசம்பர் திருமணம் பற்றி இப்போது தான் தெரிந்துக்கொண்டேன்!!!

Jaleela Kamal said...

நானும் எல்லாம் கேள்வி பட்டேன்
எல்லோரும் எந்த நாட்டில் இருந்தாலும் அந்த மாதத்தில் வந்து ஒன்று கூடுகிறார்களே அது தான் மிகச்சிறப்பு


இந்த முறை 20 கல்யானஙக்ளாம்

ஸாதிகா said...

மிக்க நன்றி சித்ரா.

ஸாதிகா said...

மிக நீண்ட பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அந்நியன்.// கூடிய விரைவில் அது முழு வெற்றி அடையும்.// இப்போழுதும் அது நடந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றது.இளையவரகளிடன் நல்லதொரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டு நல்லதொரு மாற்றம் மகிழ்ச்சியைத் தந்து கொண்டிருக்கின்றது.

ஸாதிகா said...

மிக்க நன்றி வானதி.படங்கள் கூகுளில் இருந்து எடுக்கப்பட்டவை.

ஸாதிகா said...

பரமக்குடியிலேயே இருந்து கொண்டு கேள்விப்படாதது ஆச்சரியம்தான்.கருத்துக்கு நன்றி ஆமினா.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி ஜலி.//இந்த முறை 20 கல்யானஙக்ளாம்

//சென்ற ஆண்டைக்காட்டிலும் இப்பொழுது குறைவுதான்.

சாந்தி மாரியப்பன் said...

நிறைய புதிய தகவல்கள்..

ஸாதிகா said...

நன்றி அமைதிச்சாரல்

Asiya Omar said...

கீழக்கரைக்கு நான் இன்னும் வந்தது இல்லை,ரொம்ப செல்வச்செழிப்பான ஊர் என்று சொல்ல கேள்விபட்டிருக்கிறேன்,சுற்றி காட்டியமைக்கு மகிழ்ச்சி..இந்த டிசம்பர் செய்தி புதுசு.படங்கள் அருமை.அட நம்ம களமும் இருக்கு போல.

தூயவனின் அடிமை said...

சகோதரி சமிபத்தில் காயல்பட்டினத்தில் நடக்கும் திருமண சம்பவங்களை சன் டிவியில் பார்த்தேன். கீழக்கரைக்கு ஒரு முறை வந்துள்ளேன். ஆனால் திருமண வைபவங்களில் கலந்தது இல்லை.

Ahamed irshad said...

thank you for sharing..

Vijiskitchencreations said...

நானும் இன்று உங்க இந்த பதிவு வழியாக நன்றாக தெரிந்து கொள்ள முடிந்தது.எனக்கு கீழக்கரை பற்றி நிறய்ய தெரியாது.

உங்களுக்கு ஒரு சின்னதா தொடர்பதிவு அதுவும் நிங்க தான் ரிப்பன் கட் செய்து தொடங்கறிங்க.
கெதியா இந்த விஜிஸ் கிரியேஷன்ஸ் பக்கம் வந்து உங்க பொன்னான நேரத்தில் ஒரு ஐந்து விநாடிகள் மட்டுமே வந்து போங்கோ.
நன்றிஙோ. நன்றி மறாவாத இந்த விஜி.
ரிப்பன் கட் செய்தால் போதாது வந்து தொடர் அழைப்பை மறக்காமல் எழுதனும். இல்ல என்றால்என்ன பனிஷ்ன்மெண்ட் கொடுக்கலாம் என்று நிங்களே சொல்லுங்கோ.
சரி போனால் போகட்டும்.
ஒரு சின்ன பனிஷ்மெண்ட் எவ்வள்வு சீக்கிரமா வந்து எழுதறிங்கோ.அவ்வளவு பனிஷ்மெண்ட் கம்மி.(ஜஸ்ட் ஜோக் டோண்ட் டேக் சீரியஸ்)ஹா..ஸாதிகா
நிங்க எழுதும் எழுத்திலே ஒரு தனி அழகு இருக்கும் அதை பார்க்க படிக்க காத்திருக்கும் பலபேரில் நானும் ஒருத்தி.

www.vijiscreations.blogspot.com

குறையொன்றுமில்லை. said...

இந்தவிஷயங்கள்பற்றி இதுவரை நான் அறிந்திருக்கவில்லை. உங்க பதிவின் மூலமாக தெரிந்துகொண்டேன்.மகிழ்ச்சி.

சிநேகிதன் அக்பர் said...

நிறைய விசயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. பகிர்வுக்கு நன்றி

மனோ சாமிநாதன் said...

‘டிசம்பர் திருமணங்கள்’ ஆயிரம் சர்ச்சைகளை கடந்தும் பிரியாணி போல் மணக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்!

உங்களின் அருமையான எழுத்தும் நடையும் அதேமாதிரி பிரியாணி போல மணக்கிறது ஸாதிகா!!

மின்மினி RS said...

அடேங்கப்பா.. உங்க ஊர்ல இவ்வளவு விசயம் நடக்குதா.. உங்க ஊர் டிசம்பர் திருமணம் பற்றி இப்பதான் கேள்விபடுதேன் அக்கா. ஆனாலும் கவுரவ‌த்துக்காக வேண்டி இப்படி 20 லட்சம் செலவு பண்ணி கல்யாணம் செய்துவைத்து கஷ்டப்படுகிறங்களே என்று நினைக்கும்போது வருத்தமாத்தான் இருக்கு.

ஊர் பழக்கத்த மாத்தவா முடியும். :((

நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம். பகிர்வுக்கு நன்றி ஸாதிகா அக்கா.

சாருஸ்ரீராஜ் said...

கீழக்கரை ஊரை பற்றி கேள்வி பட்டு இருக்கேன் ஆனால் டிசம்பர் திருமணம் உங்கள் மூலமாக அறிந்து கொண்டேன். புது அனுபவமாக இருக்கிறது

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி ஆசியா.ஒரு முறை அவசியம் கீழை வாருங்கள்.

ஸாதிகா said...
This comment has been removed by the author.
ஸாதிகா said...

கிட்டத்தட்ட கீழையும் காயலும் செயல் முறைகளில் தெரு அமைப்புகளில் ஒரே போல்த்தான் இருக்கும்.அதே போல் உள்ளூரில் சம்பந்தம் வைத்துக்கொள்ளும் கீழைவாசிகள் காயலிலும்,தொண்டியிலும் மட்டுமு சம்பந்தம் வைத்துக்கொள்வார்கள்.
நன்றி இளம்தூயவன்.

ஸாதிகா said...

நன்றி அஹ்மது இர்ஷாத்.

ஸாதிகா said...

நன்றி தங்கை விஜி.உங்கள் அழைப்புக்கும் மிக்க நன்றி.நீங்கள் தண்டனைக்கொடுக்கும் முன் எனது புத்தாண்டு உறுதி மொழியை சொல்லிவிடுகின்றேன்.மெயிலில் சரியா?

ஸாதிகா said...

மிக்க நன்றி லக்ஷ்மி அக்கா!

ஸாதிகா said...

கருத்திட்டமைக்கு மிக்க நன்றி அக்பர்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி மனோஅக்கா.உங்களிடம் தனிப்பட்ட முறையிலும் எங்கள் ஊர் கலாச்சாரத்தைப்பற்றி விவரித்தது ஞாபகத்தில் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி மின்மினி.

ஸாதிகா said...

கருத்திட்டமைக்கு நன்றி தங்கை சாருஸ்ரீராஜ் .

mohamedali jinnah said...

திருமணங்கள் சிறப்பாக செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதுதான் அதில் அவசியமில்லாதவைகளை தவிர்த்தல் நல்லது . வலிமா விருந்து கொடுத்தல் அவசியம் . ஆனால் அதனை பெண் வீட்டார் சுமையாக மாற்றுவது கூடாது.
இதனைப்போல் திருமணம் நடத்த வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் வந்து கடன் வாங்கி செலவு செய்யாமல் இருந்தால் நல்லது .
அதென்ன காயல்பட்டினம், கீழக்கரை, கூத்தாநல்லூர் போன்ற ஊர்களில் வெளி ஊர்களில் இருந்து திருமண ஒப்பந்தம் நடைபெருவதில்லையே ! ஏன் ? இதுவும் பிறந்த மண்ணுக்கு அவர்கள் காட்டும் மரியாதையோ !இவைகள் என்ன தனி தீவுகளா!

அழகிய படங்களும் போட்டு விட்டீர்கள் பசி வந்துவிட்டது.
சகோதரி ஸாதிகா கட்டுரை சமைப்பதிலும் சிறந்தவர். வாழ்த்துகள் .

சிந்தையின் சிதறல்கள் said...

அருமையான விளக்கம் சகோதரி
நல்லவைதானே என்று உருவாக்கப்படுகின்ற இஸ்லாம் கூறாத விடயங்களை அடையாளங்காண்பது மிகஅவசியமானது

அருமையான பகிர்வு

ஹுஸைனம்மா said...

1990களில் ஒரு கீழக்கரைகாரர் எங்கள் வீட்டில் பணிபுரிந்தார். அவரின் சொ(நொ)ந்த அனுபவங்கள் சில மட்டும் கூறினார். இப்போது விரிவாகத் தெரிந்துகொண்டேன். படித்ததும் ஒரு பெருமூச்சுதான் வருகிறது.

GEETHA ACHAL said...

ரொம்ப அழகாக எங்களுக்கும் கீழக்கரையின் கல்யாணத்தினை சூற்றி காட்டி இருக்கின்றது..

ஏன் அக்கா டிசம்பார் மாதம் கல்யாணம் செய்வதில் ஏதாவது விசேஷம் இருக்கின்றது....

சோனகன் said...

கீழக்கரை கலாச்சார, பண்பாட்டு சாரங்களின் தற்போதைய கொண்டாட்டமான இந்த டிசம்பர் திருமனங்களை பற்றிய தங்களின் பதிவு மனதை சுகமாக வருடி சென்றது. ஆனாலும் 1990 களில் கீழக்கரை திருமணங்களில் வலிந்து கானப்பட்டஆடம்பரஙகளும், கேளிக்கைகளும், சமீப காலங்களாக வெகுவாக குறைந்து விட்டது என்றே கருதுகிறேன். 2003 ஆம் ஆண்டுக்கு பின்பே டிசம்பர் திருமனங்கள் வெகுவாக பிரபலமாகியது, அத்ற்கு முன் “மே” திருமனங்கள்தான் ஊரையே கலக்கி வந்த்து, எல்லாம் புலம் பெயர் வாழ் மக்களின் வசதிக்காகவே...........

சீமான்கனி said...

அக்கா நண்பன் ஒருவன் உங்க ஊருக்கு வரசொல்லி தொல்லை பண்ணுவான் எனக்கும் நேரம் இருக்காது உங்கள் பதிவை படித்ததும் இந்த சீசனில் கண்டிப்பாய் அவங்க வீட்டுக்கு ஒரு விசிட் அடிக்க ஆசை வந்து விட்டது...இன்ஷா அல்லா..நன்றி கா...

ஸாதிகா said...

சகோதரர் நீடுர் அலி,கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.//அதென்ன காயல்பட்டினம், கீழக்கரை, கூத்தாநல்லூர் போன்ற ஊர்களில் வெளி ஊர்களில் இருந்து திருமண ஒப்பந்தம் நடைபெருவதில்லையே ! ஏன் ? இதுவும் பிறந்த மண்ணுக்கு அவர்கள் காட்டும் மரியாதையோ !இவைகள் என்ன தனி தீவுகளா!// நியாமான கேள்விகள்தான்.இந்த முறை மூலம் பிரச்சினைகளே வருவதில்லை என்று சொல்வதிற்கில்லை என்றாலும் பிரச்சினைகள் மிகவும் குறைவு என்ற உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.தொடர்ந்து தங்களின் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

ஸாதிகா said...

நேசமுடன் ஹாஷிம்,கருத்திட்டமைக்கு மிக்க நன்றி!

ஸாதிகா said...

//அவரின் சொ(நொ)ந்த அனுபவங்கள் சில மட்டும் கூறினார்// ஹுசைனம்மா திருமணம் செய்து நொந்த கதையச்சொன்னாரா?:)கருத்துக்கு நன்றி!

ஸாதிகா said...

//வெளிநாடுகளில் பெரும்பாலும் டிசம்பர் மாதம்தான் விடுமுறை காலமாகும். அதைப் பயன்படுத்தித்தான், சொந்தவூரை நாடி வந்து விஷேஷங்களை நடத்துகின்றனர்.//கீதா ஆச்சல் மேற்கண்ட காரணத்தைத்தவிர பெரிதாக டிசம்பர் திருமணங்களுக்கு வேறு காரணம் இல்லை.கீழே திரு.சோனகன் கொடுத்து இருக்கும் பின்னூட்டத்தையும் பாருங்கள்.கருத்துக்கு மிக்க நன்றி கீதா.

ஸாதிகா said...

சோனகன்,வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்ரி.பின்னூட்டம் வாயிலாகவும் இன்னும் மேலதிகத்தகவல்கள் தருவதில் நீங்கள் முதன்மையானவர் எனும் உண்மையை மீண்டும் இந்த பின்னூட்டம் மூலம் உறுதிப்படுத்தி இருக்கின்றீர்கள்.மேலதிகத்தகவல் தந்தமைக்கும் நன்றியும்,பாராட்டுகளும்.

ஸாதிகா said...

ஸீஸன் ஆரம்பித்து விட்டது சீமான் கனி.சான்ஸ் கிடைத்தால் ஒரு முறை வாருங்கள்.கருத்துக்கு மிக்க நன்றி.

போளூர் தயாநிதி said...

பாராட்டுகள் . மக்களின் பண்பாட்டை பதிவு செய்துள்ளீர்

ஜெய்லானி said...

ஊரை பத்தி ஒரு தொடரா போடுங்க படிக்க ஆவல்...

//ராஜவம்சம் said...

அனாச்சாரம் அதிகம் உள்ளவிசயத்திற்க்கு இவ்வளவு பெரிய விரிவாக்கம் தேவை இல்லை என்றே தோன்றுகிறது.//

கேட்டா வாழ்கையில ஒருதடவைதானேன்னு நிறைய பேர் சொல்றாங்க.. :)

ஜெய்லானி said...

ஊரை பத்தி ஒரு தொடரா போடுங்க படிக்க ஆவல்...

//ராஜவம்சம் said...

அனாச்சாரம் அதிகம் உள்ளவிசயத்திற்க்கு இவ்வளவு பெரிய விரிவாக்கம் தேவை இல்லை என்றே தோன்றுகிறது.//

கேட்டா வாழ்கையில ஒருதடவைதானேன்னு நிறைய பேர் சொல்றாங்க.. :)

Geetha6 said...

nice experience!

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

சாதிகா தகவல்களை தெளிவாக கோர்வையாக சுவையாகச் சொல்லி இருக்கிறீர்கள்..

ஸாதிகா said...

போளூர் தயாநிதி தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ஜெய்லானி.இன்ஷாஅல்லாஹ் நீங்கள் ஒரு முறை கீழக்கரை போய் வந்து பயணக்கட்டுரை எழுதுங்களேன்.

ஸாதிகா said...

சகோதரி வித்யா சுப்ரமணியம் மோதிரக்கையால் வாழ்த்து.மிக்க நன்றிமா.அடிக்கடி வலைப்பூ பக்கம் வந்து செல்லுங்கள்.

Anonymous said...

சகோதரி எல்லாம் புதிதான தகவல்களாக இருந்தது. அறிந்து மகிழ்ந்தேன்.
மிக்க நன்றி.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.