"மாப்பிள்ளை உயரமும்,உயரத்துக்கேற்ற பருமனும் பார்க்க வாட்டசாட்டமாக இருக்கார்."
"உத்தியோகத்துக்கேற்ற உருவமும் பிளஸ்பாயிண்ட்தானே?"
"பார்க்கின்ற கலெக்டர் உத்தியோகத்தில் சின்ஸியாரிடீன்னா அவ்வளவு சின்ஸியாரிட்டீ."
"அடடா..பதவி இருக்கற இடத்திலே பண்பும் இருந்ததுன்னா இன்னும் சந்தோஷம்தான்"
"ரொம்பவெல்லாம் ஆசைப்படலே.ஒரு அம்பதாயிரம் கேஷா கொடுத்தால் போதும்"
"அதுக்கென்ன?பேஸா கொடுத்துடலாம்"
"ஸ்கூட்டி பெப் ஒன்று போதும்"
"என்னங்க இது..ஆக்சுவலா காரே கேட்கனும் நீங்க.ஆனால் ரொம்ப ஆசைப்படாதவரா இருக்கீங்க.நான் ஒரு அப்பாச்சியையே வாங்கித்தரச் சொல்லுறேன்."
"அது உங்கள் தாராள மனசை காட்டுது.அரைச்சவரனில் ஒரு மோதிரம் போதும்"
"சுண்டுவிரல் பருமனுக்கு செய்ன் தரலாம் என்றிருக்கிறார்.மூத்த மாப்பிள்ளைக்கும் அப்படித்தான் செய்தார்.இருந்தாலும் நீங்க ரொம்ப எளிமையா இருக்கீங்க சார்"
"சீர்வரிசை தட்டெல்லாம் அதிகமா தந்து தடபுடல் படுத்த வேண்டாம்"
"நீங்க வேற..இதெல்லாம் தடபுடல் படுத்தினால் தான் சுற்றத்தார் அவரை மதிப்பார்ன்னு சொல்லிட்டு இருக்கார்"
"கல்யாணம் எல்லாம் ரொம்ப கிராண்டா நடத்தனும்ன்னு இல்லை..ராத்திரி ரிஷப்ஷன்,காலையிலே முகூர்த்தம்..சின்னதா கல்யாணமண்டபம் பிடிச்சால் போதும்"
"என்னங்க இப்படி சொல்லீட்டீங்க..பொண்ணோட தோப்பனார் மேயர் ராமனாதன் மண்டபத்தில் வைத்துத்தான் கல்யாணம் பண்ணனும் என்று சொல்லிட்டு இருக்காரே.அவருக்கும் எக்கசக்க ஆட்கள்.உங்கள் பையன் உத்தியோகத்திற்குத்தகுந்த மாதிரி உங்கள் பக்கம் இருந்தும் ஆட்கள் நிறைய வருவார்கள்.."
"அப்படீங்கறீங்க"
"பையன் எந்த மாவட்டதுலே கலெக்டரா இருக்காருங்க"
"செல் போன் கம்பெனியிலே காஞ்சிபுரமாவட்டதிலே பில் கலெக்டரா இருக்காரு"
Tweet |
41 comments:
நல்ல கதை. எதிர்பார்த்த திருப்பம் தான். அப்புறம் அது என்னங்க "சிஸியாரிட்டி?"...
தோழி,கதை நச்சென்று இருக்கு.சூப்பர் டுவிஸ்ட்.
கதை ரொம்ப பிரமாதமா இருக்கு.
தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்!!
"ன்" மிஸ் ஆயிடுச்சுங்கோ கலாநேசன்.இப்ப சரி பண்ணிட்டேன்.கருத்துக்கு நன்றி.
கதை ரொம்ப நல்லாருக்கு.. இதில் நல்ல எதிர்பாராத ட்விஸ்ட். மேலெருந்து படிக்கும்போதே சிரிப்பா வந்தது. கடைசி லைனில் பில் கலக்டர் என்றதும் வாய்விட்டு சிரித்துவிட்டேன். கலக்கல் நகைச்சுவை கதை.
ha ha பில் கலெக்்ர்.
ஸாதிகா அக்கா! கதை அருமை. எங்கள் ஊரிலும் கலேக்டர் என ஒரு நபரை சொல்வார்கள். நானும் ரொம்ப நாளாவே கலெக்டர் என நினைத்தேன். பிறகு தான் தெரியவந்தது தியேட்டரில் டிக்கெட் கலெக்ட் செய்பவர் என்று :)
நல்ல க்தை,நல்ல திருப்பம். பயங்கரமா சிரிச்சேன்
ஆசியா தோழி,உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
சகோ அப்துல்காதர்.கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி.உங்களுக்கும் என் அன்பான ஈதுல் அல்ஹா நல் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி ஜலி
தங்கை மின்மினி கருத்துக்கு மிக்க நன்றி.கதை சிரிப்பை வரவழைத்தில் மிக்க மகிழ்ச்சி.என்ன இப்போதெல்லாம் பதிவுல்கம் பக்கம் ஆளை அடிக்கடி காண இயலவில்லையே?பதிவு அடிக்கடிப்போடுங்கள்.
ஆமினா தங்கச்சி,பயங்கரமாக சிரிச்சீங்களா?ரொம்ப சந்தோஷம்.எங்கள் ஊரில் ஒருவரை எம் எல் ஏ என்பார்கள்.நிஜமாகவே அவர் எம் எல் ஏ என்றுதான் நினைத்தேன்.கருத்துக்கு மிக்க நன்றி.
ஆஹா..நகைச்சுவை கதை ரொம்ப நல்லா இருக்கு.. அக்கா..
நீங்க பில்டப் குடுக்கும் போதே நினைச்சேன் எங்கே தடாலடியா கவிழ்கப்போறிங்களோன்னு ஹா..ஹா..!!
நல்ல கதை..!! :-))
உங்களுக்கும் மற்றும் குடும்பத்தார் எல்லாருக்கும் ஈத் முபாரக்
இனிய ஹஜ்பெருநாள் வாழ்த்துக்கள்!! எதிர்பாராத நல்ல டிவிஸ்ட்ள்ள கதை,சூப்பர்!!
ஹஹஅஹா... நல்லா இருக்குங்க.. பெருநாள் வாழ்த்துக்கள்
enna bill collecter'ah....
shock aagiduchey....
கடைசியில் வைத்த கலக்கல் டிவிஸ்ட்டு ஜூப்பர்...
[ma]wish a happy Eid ul- Adha to u & ur family members[/ma]
ஆஹா....சூப்பர்ப்...கடைசியில் இப்படியா...சூப்பர்ப்...நல்லா இருந்தது கலெக்டர் மாப்பிள்ளை...
சூப்பர் கதை.
தங்களுக்கும் தங்களின் உறவுகள் அனைவருக்கும் தியாக திருநாள் வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன்
ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் சாதிகா அக்கா!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்,
kadhai sooppar
டிவிஸ்ட் சத்தியமா எதிர்பார்க்கலீங்க, ரொம்ப நல்லா இருக்குங்க.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இதயம் கனிந்த ஈத் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
பில் கலெக்டருக்கே அப்பாசின்னா, மாவட்ட கலெக்டருக்கு???
சிநேகிதி,உங்கள் கருத்துக்கு நன்றி.
//நீங்க பில்டப் குடுக்கும் போதே நினைச்சேன் எங்கே தடாலடியா கவிழ்கப்போறிங்களோன்னு ஹா..ஹா..!!
// அடடா...என்னே ஒரு கணிப்பு?கருத்துக்கு நன்றி ஜெய்லானி.
கருத்துக்கு நன்றி மேனகா!
எல்.கே நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்து கருத்தும்,வாழ்த்தும் சொன்னமைக்கு மிக்க நன்றி.
//Dhosai said...
enna bill collecter'ah....
shock aagiduchey....//என்னாது?இதுக்கே ஷாக் ஆகிட்டீங்களா சார்?கருத்துக்கு நன்றி.
கருத்துக்கும்,வாழ்த்துக்கும் நன்றி சீமான்கனி.
கீதா ஆச்சல் கதையை நல்லா ரசித்தீர்களா?வெரிகுட்.கருத்துக்கு நன்றி.
ஹைஷ் சார்,கருத்துக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.
கவிசிவா வாழ்த்துக்கு நன்றி.என்னப்பா கவி உங்கள் தளப்பக்கம் ஆளையே காணோம்?ஏன் இந்த இடைவெளி??
முஹம்மது ஐயூப்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
இரவுவாணம் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
காயலான்கடை காதர் உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
//பில் கலெக்டருக்கே அப்பாசின்னா, மாவட்ட கலெக்டருக்கு??//ஹி..ஹி..சார்,அவர் மாப்பிள்ளை கலெக்டர் என்று நம்பித்தானே அப்பாச்சி வாங்கித்தருவதாக சொன்னார். கார்பன் கூட்டாளி(பெயரை எல்லாம் செலக்ட் பண்ண ரூம் போட்டு யோசிப்பீங்களா?)முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!
சூப்பர் கதை.
கதை நகைச்சுவையாயிருந்தது.நன்றி!
தங்கள் அனைவருக்கும் எனது இதய்ம் கனிந்த
ஈத் முபாரக்!
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
//பெயரை எல்லாம் செலக்ட் பண்ண ரூம் போட்டு யோசிப்பீங்களா?)//
பதிவுகள் உயிரினங்களின் அடிப்படையை பற்றியது என்பதால் அந்த பெயர்.
Post a Comment