சிங்கம் என்றால் என் தந்தைதான்
செல்லம் என்றால் என் தந்தை தான்
கண் தூங்கினால் துயில் நீங்கினால்
என் தந்தை தான் என் தந்தை தான்
எல்லோருக்கும் அவர் விந்தை தான்
விண்மீன்கள் கடன் கேட்கும் அவர் கண்ணிலே
வேல் வந்து விளையாடும் அவர் சொல்லிலே
அவர் கொண்ட புகழ் எங்கள் குலம் தாங்குமே
அவர் பேரை சொன்னாலே பகை நீங்குமே
அழியாத உயிர் கொண்ட என் தந்தையே
அழியாத உயிர் கொண்ட என் தந்தையே
ஆண் வடிவில் நீ என்றும் எம் அன்னையே
வீர்த்தின் மகன் என்று விழி சொல்லுமே
வேகத்தின் இனம் என்று நடை சொல்லுமே
நிலையான மனிதன் என வேர் சொல்லுமே
நீதானே அசல் என்று ஊர் சொல்லுமே
உன் போல சிலர் இங்கு உருவாகலாம்
உன் உடல் கொண்ட அசைவுக்கு நிகர் ஆகுமா?
எப்போதும் தோற்காது உன் சேவைதான்
இருந்தாலும் இறந்தாலும் நீ யானைதான்
கண்டங்கள் அரசாலும் கலைமூர்த்தி தான்
கடல் தாண்டி பொருள் ஈட்டும் உன் கீர்த்தி தான்
தலை முறைகள் கடந்தாலும் உன் பேச்சுதான்
தந்தயெனும் மந்திரமே என் மூச்சுதான்
Tweet |
48 comments:
Ai...!!me the 1st...
தாத்தாவுக்கு புதல்வராய் தாரணி வந்து
தந்தை என்னும் உறவில் உங்களுக்கு முதல்வராய் இருக்கும் தந்தைக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள் அக்கா...
ஒரு மகளாக உங்கள் தந்தையினை பற்றி அழகாக சொல்லியிருக்கிங்க. அனைத்து வரிகளிலும் உங்கள் அழமான அன்பு தெரிகிறது
யூடியூப்பில் பூக்களுக்கு நடுவில் உங்கள் தந்தை போட்டோ அழகு
குட்டியாக கவி பாடி வாழ்த்தி பதிவிட்ட தம்பி சீமான்கனிக்கு என் அன்பு நன்றிகள்.
உண்மைதான் பாயிஜா.தந்தையின் நினவு வந்தாலே இன்னும் கண்கள் குளம்கட்டிக்கொள்ளும்.இப்பாடலை கேட்கும் பொழுது என்னைப்பொருத்தவரை இதற்கு பொருத்தமானவர் என் தந்தைதான் என்று நினைத்தேன்,பரத்வாஜின் மென்மையான குரலில் அழகாக பாடப்பட்ட இனிய பாடல்.
People Never leave us. Their body may not be with us, their soul is always there protecting us.
பாட்டும் , ஸ்லைடு ஷோவும் அழகா வந்திருக்கு ..!! :-))
Youtube இல் பாட்டு பார்த்தேன். மனதை கனக்க வைத்து விட்டது!
Nov. 28 , முதலாம் ஆண்டு நினைவு நாள் காணும் என் தந்தையில் நினைவில், கண்ணீருடன் இந்த கவிதையை வாசித்தேன்.
ஆம் இலா.மிக நெருக்கமானவர்கள் நம்மை விட்டு பிரிந்து விட்டாலும் நம்முடனே வாழ்ந்து வருவது போல் அவர்களுடைய நினைவில்,நம்முடன் வாழ்ந்து வருவதைப்போல் உணர்வு எஞ்சத்தான் செய்கின்றது.
மிக்க நன்றி ஜெய்லானி.
மிக்க நன்றி சித்ரா.உங்கள் தந்தையாருக்கு என் அஞ்சலிகள்
மிகவும் அருமையாக அழகாக சொல்லி இருக்கின்றிங்க...வாழ்த்துகள்...
ஸாதிகா அக்கா அப்பாக்கள் என்றுமே கிரேட் தான்
அழகாக கவிதையை எடுத்து போட்டு இருக்கீங்க
யு டியுபிலும் ரொம்ப அருமை. பூக்களோடு, கலயானம் போட்டோ, கைய்யில் யாரு அந்த் குழந்தை நீங்க்ளும் உங்க தங்கையு, தம்பியா?
உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் வாழ்த்துக்கள்..
நல்லா எழுதி இருக்கீங்க, வாழ்த்துக்கள்
தந்தையை பற்றி அழகா சொல்லிருக்கிங்க..வீடியோ பார்த்தேன் நல்லாயிருக்குக்கா...படித்ததும் எனக்கும் எங்கப்பா ஞாபகம் வந்துவிட்டது...
வாப்பாவுக்கான நினைவஞசலியை அழகாக படைத்து யு ட்யூபில் வெளியிட்டுவிட்டீர்கள், கவிதைக்கும் அதற்கு உயிர் கொடுத்த இசைக்கும், மிக்ஸ் செய்த படங்களுக்கும் மிகவும் பொறுந்தி அற்புதமாக வந்திருக்கிறது. இவர்களின் தோற்றத்திலும், பாவனைகளிலும், சொல் ப்ரயோகங்களிலும், கட்ட பொம்மனின் கம்பீரம் என்றால் என்ன என்ற வார்த்தைக்கான விளக்கத்தை கானலாம், தன் வாழ் நாள் முழுதும், எளிமையும், வீரமுமாய் வாழ்ந்து இறவனடி சேர்ந்தார்கள், அண்னாரை நல் சொர்க்கப்பதவியில் இருத்த படைத்த இறைவனை வேண்டுகிறேன்.
ஆஹா அருமை அருமை உங்களுக்கும் தந்தைக்கும் வாழ்த்துகள்
தாயைப் புகழும் மகளைக் கேள்விப் பட்டிருக்கேன்,மகளைப் புகழும் தாயையும் கேள்விப் பட்டிருக்கேன்,ஆனால் தந்தையைப் புகழும்
மகளை இப்பத்தான் பார்க்கிறேன்,நாம் வசிக்கும் வீடும் சரி போற்றும் நாடும்சரி,குழந்தைகள்,இளைஞர்கள்,இளைஞிகள் ,பெரியவர்கள்,
நல்லவர்கள்,கெட்டவர்கள்,என்று பொதுவான மானுடப் பிரிவுகளை கொண்டிருக்கின்றன.
குழந்தைகள் உலக வாழ்வின் பரிமாணங்களைப் பலவகைகளிலும் பார்த்தும்,பழகியும்,கேட்டும்,பிறகு கல்வி வளாகங்களிலும் கற்றும் புரிந்து கொள்கிறார்கள்,இந்த வகையில் பெரியவர்கள் அவர்களுக்கு வழி காட்டுகிறார்கள்.
அந்த வகையில் உங்களின் தந்தையும் உங்களுக்கு உதவியிருக்கார்கள்.
அந்நியன் :
பாடலும்,ஸ்லைட்ஷோவும் அருமையா இருக்கு ஸாதிகாக்கா!
நல்லா இருக்கு. எனக்கும் என் அப்பா என்றாலே உயிர். அப்பா எப்போதுமே கிரேட்.
உங்கள் தந்தைக்கு என் வணக்கங்கள்!
கீதா ஆச்சல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.
ஜலி,என் தந்தையார் மகளை,மகனை,பேரனை தூக்கி வைத்திருக்கும் போட்டோக்கள்தான்.கருத்துக்கு நன்றி!
மிக்க நன்றி இர்ஷாத்
இரவு வானம் உங்கள் கருத்துக்கு நன்றி.
மேனகா கருத்துக்கு மிக்க நன்றி!
சோனகன் உங்கள் கருத்துரையை கண்கள் கலங்க வாசித்தேன்.கருத்துக்கும்,பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி!
அப்துல்காதர் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
//அந்த வகையில் உங்களின் தந்தையும் உங்களுக்கு உதவியிருக்கார்கள்.
// உண்மை வரிகள் ஐயூப்.கருத்துக்கு மிக்க நன்றி.
வானதி உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
சகோதரி ராமலக்ஷ்மி உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.
யூடியூப்பில் பூக்களுக்கு நடுவில் உங்கள் தந்தை போட்டோ அழகு அருமை..
தந்தையினை பற்றி
அருமையான வரிகள்.
வாழ்த்துகள் அக்கா ..
அட. இவர் உங்கள் தந்தையா.. யூட்யூப்பில் பாடல் கேட்டேன்.. அருமை.. முகப்புத்த்கத்திலும் பகிர்ந்து இருந்தார்கள்.. அப்பா என்றால் அன்புதான்..ஸாதிகா..
அருமை சகோதரி... வாழ்த்துக்கள்
ஒரு அன்பான தந்தைக்கு மகளின் சமர்ப்பணக் கவிதை அருமை!
அருமையான பாடல்,அற்புதமான அசத்தலான ஆக்கம் தோழி.உங்கள் தந்தையாரைப்பற்றி அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.
shadiqah akka,check this link for a sweet award! :)
http://mahikitchen.blogspot.com/2010/11/blog-post_12.html
அழகான கவிதையால் பெருமை சேர்த்தீர்கள்!
யூடூப்பும் மிக அருமை!
மிக்க நன்றி மலிக்கா.
மிக்க நன்றி தேனம்மை.
சர்ஹுன் கருத்துக்கு நன்றி.
மனோ அக்கா உங்கள் கருத்துக்கு நன்றி
ஆசியா உங்கள் கருத்துக்கு நன்றி.
மகி விருதுக்கு மிக்க நன்றி.
மிக்க நன்றி ஆமினா.
அப்பா என்றால் சொல்வதற்க்கு கேட்கனுமா. எனக்கும் தான் அப்பா என்றால் என் உயிர்.
எனக்கும் பரத்வாஜின் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் நல்ல அருமையானது.
நல்ல கவிதை.
என் கம்யூட்டர் வைரஸ் ப்ராப்ளமானதினால் கொஞ்சம் லேட்.
Post a Comment