September 13, 2010

அஞ்சறைப்பெட்டி - 3

புதியதாக திறந்து இருக்கும் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் உள்ளே நுழையும் பொழுதே செக்யூரிடி கைப்பைகளை திறந்து சோதித்து அனுப்புவதைப்பார்த்து அந்த பிருமாண்டமான மாலுக்கும்,சின்னத்தனமான செயலுக்கும் சற்று கூட பொருத்தமில்லாமல் இருந்தது."என்னப்பா..இது சரவணா ஸ்டோர் ரேஞ்சில்.."என்ற முணுமுணுப்பு எனக்கு பின்னால் இருந்து ஒலித்தது.மேலே புட் கோர்ட் சென்றால் இரண்டு பீஸ் பிராஸ்டட் சிக்கன் 135 என்றனர்.அதே கடையினுடைய மற்றுமொரு பிராஞ்ச்இன்னொரு பெரிய மாலில் உள்ளது.அங்கு அதே பிராஸ்டட் சிக்கன் இரண்டு பீஸ் 85 ரூபாய்தான்.இரண்டு பீஸ் சிக்கனில் மட்டும் 50 ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்கின்றனர்.கட்டணத்தைக்கட்டி கார்ட் ரீசார்ஜ் பண்ணி விடுவதால் மக்கள்ஸ் வேறு வழி இல்லாமல் வாங்கி சாப்பிட்டுவிட்டே செல்கின்றனர்.



பின்னணி பாடகி ஸ்வர்ணலதா இளம் வயதில் மரணம் அடைந்து விட்டார்.இனிய குரலால் கட்டிப்போட்ட அவரது மறைவு ரசிகர்களுக்கு பெரிய இழப்புதான்.அவரது ஆன்மா சாந்தியடையவும்,அவரது குடும்பத்தினருக்கு பொறுமையும் ,அமைதியும் கிடைக்கவும் வேண்டிக்கொள்கின்றேன்.



பிரார்த்தனா டிரைவ் இன் தியேட்டருக்கு நீண்ட இடை வேலைக்குபிறகு சென்றிருந்தேன்.சாதரணமாக படம் பார்ப்பதென்றால் எனக்கு எட்டிக்காய்.பிள்ளைகளின் வற்புறுத்தலுக்காக சென்று கொசு கடித்து வெந்து,நொந்து திரும்பினேன்.(இனி தியேட்டர் பக்கம் போவேன்...?)டிரைவ் இன் தியேட்டர் செல்பவர்கள் இனி கண்டிப்பாக மஸ்கிடோ பேட்,ஒடோமஸ்,டார்டாய்ஸ் எல்லாம் எடுத்துட்டுப்போங்க.மறந்திடாமல் வீட்டிலேயே மஸ்கிடோ பேட்டை சார்ஜ் பண்ணிக்கோங்க.டார்டாய்ஸை கொளுத்த வத்திப்பெட்டியும் எடுத்துட்டு போக மறந்துடாதீங்க மக்கா.



ஏடிஎம்மில் கொள்ளை அடிப்பது அதிகரித்து வருகின்றது.சம்பளம் வாங்கும் காவலாளியும் கூலாக தூங்கி விட்டதாக வாக்குமூலம் கொடுத்து இருக்கின்றார்.வங்கிகளும் காவல்துறையும் இன்னும் விழிப்புடன் செயல் பட்டு தொடர்கதையாகாமல் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்(என்னா ஈஸியா நோகாம சம்பாதிக்கப்பார்க்கறாங்கப்பா..)

"காலையில் எழுந்ததும் தினத்தந்தி காப்பி குடிப்பது அதன் பிந்தி"இது தினத்தந்தி தினசரியின் வாசகம்.ஆனால் முதல் பக்கத்திலேயே 'கடன் வாங்குங்க.நாங்கள் இருகிறோம்.' 'வட்டிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.' இப்படி வாசங்கள் எரிச்சலூட்டுகின்றது. காலையிலே முதல் பக்கத்தில் வந்து மக்களை கடனாளியாக ஆக்கப்பார்க்கின்றது.(அதனாலே நான் இப்போதெல்லாம் நான் முதல்லேயே முதல் பக்கத்தை மட்டும் விட்டுட்டு அடுத்தடுத்த பக்கங்களைத்தான் தந்தி பேப்பரில் பார்க்கிறேனாக்கும்)



"வீட்டுக்கொரு மரம் வைப்போம்"இது தமிழக அரசின் தாரக மந்திரம்.கூட ஒரு படி மேலே போய் நான் வீட்டுக்கு வெளியிலும் வைத்தேன்.அதை இப்ப அகற்றிவிட்டு கேட்டை பெரிது பண்ண கார்ப்பரேஷனுக்கு அழைய வேண்டியதாக உள்ளது.நம்ம தேவையை நிறைவேற்ற முடியாமல் இழுத்தடிகின்றனர்.இன்னும் நாலே அடி தள்ளி மரத்தை வைத்துவிடுகின்றோம் என்று சொன்னாலும் எடுபடவில்லை.நல்லதுக்கு காலமில்லேங்கறது நிஜம்தான் போலும்.

62 comments:

Mahi said...

ஸாதிகாக்கா,மீ தி பர்ஸ்ட்டு! :)
இருங்கோ,படிச்சிட்டு வரேன்.

Mahi said...

1.இது நான் டெல்லி ஏர்போர்ட்டில் முதலில் பார்த்து மலைத்த சம்பவம்.சென்னைக்கும் வந்துட்டதா?

2.என்னது? பாடகி ஸ்வர்ணலதா மறைந்துவிட்டாரா? :(

3.என்ன படத்துக்குப் போனீங்கன்னு சொல்லவே இல்ல?

4.ATM கொள்ளை..மக்கள்தான் ஜாக்கிரதையா இருக்கணும்.

5.நாங்க படிப்பது தினமலர்-e பேப்பர் ஸாதிகாக்கா..அதிலும் இந்த பாப்-அப் விளம்பரங்கள் வந்து எரிச்சல்மூட்டும்.

6.ஊரெல்லாம் மரங்களை வெட்டித்தள்ளுவாங்க.இதுக்கு அலையவைப்பாங்க.கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

நல்ல தகவல்கள்.காப்பியும் குடிச்சி முடிச்சிட்டேன்,இனி வேலையப் பாக்கணும்.:)

Menaga Sathia said...

கலக்கல் அஞ்சறைப்பெட்டி...பாடகி ஸ்வர்ணலதாவுக்கு அஞ்சலிகள்..அவர் மறைவு மிகவும் வருத்தமாக இருக்கு...

Asiya Omar said...

ஆஹா !அஞ்சறைப்பெட்டி திறந்தாச்சா?பாடகி சுவர்ணலதா மறைவு மிக வருத்தமானது.மற்ற செய்திகளில் உங்க லொள்ளு சூப்பர்.

அந்நியன் 2 said...

உங்கள் குறைகள் எல்லாவற்றையும் நாட்டாமை அய்யாகிட்டே எழுதிக் கொடுங்கள் ஊருக்கு போயிட்டு வந்து தீர்ப்பு சொல்றேன் வீட்டிற்கு வெளியே வேம்பு மரம் வைக்க வேண்டாம்,கருவ மரமா பார்த்து வையுங்கள் அப்பத்தான் தீர்ப்பு சொல்ல வசதியா இருக்கும்.
இன்ஷா அல்லாஹ் வரும் வியாழன் ஊருக்குப் போறேன் அக்டோபர் பதினாறு ரிட்ட்டன் வந்து கருத்துக்களை பரிமாரிக்கொல்லாம்,என்னெண்டே தெரியலை எல்லோரும் என்னை அண்ணன் என்றுதான் சொல்லுகிறார்கள் தம்பி என்று யாருமே கூப்பிட வில்லை ஒரு வேலை நான் பெரிய ஆம்பிளையாக இருப்பேனோ ? சரிக்கா வருகிறேன் பை ..பை.

அஸ்ஸலாமு அலைக்கும்

Chitra said...

ஏடிஎம்மில் கொள்ளை அடிப்பது அதிகரித்து வருகின்றது.சம்பளம் வாங்கும் காவலாளியும் கூலாக தூங்கி விட்டதாக வாக்குமூலம் கொடுத்து இருக்கின்றார்.வங்கிகளும் காவல்துறையும் இன்னும் விழிப்புடன் செயல் பட்டு தொடர்கதையாகாமல் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்(என்னா ஈஸியா நோகாம சம்பாதிக்கப்பார்க்கறாங்கப்பா..)


....... என்னங்க சர்வசாதாரணமாக சொல்லி இருக்கீங்க.... வீடியோ கேமரா எல்லாம் இல்லையா? என்ன கொடுமைங்க இது?
அஞ்சரை பெட்டி நல்லா இருக்குதுங்க..... அடிக்கடி பெட்டியை திறக்க வேண்டுகிறோம்.

Gayathri said...

அருமை உங்க பதிவு..

ஸ்வர்ணலதாவின் மறைவு நம்பா முடியவில்லை..

Unknown said...

அக்கா அஞ்சறைபெட்டி சாமான்கள் எல்லாமே சரியாக இருக்கு....

ஜெய்லானி said...

நெட்-தினத்தந்திதான் படிச்சிகிட்டு இருந்தேன் .இப்பெல்லாம் அதுல மால்வேர் இருக்குன்னு ஆண்டி வைரஸ் சொல்லுது அதனால் திறக்கிறது இல்லை..!!


சின்ன வயதிலேயே முரளி , சொர்ண லதா போனது அதிர்ச்சிதான்

கொசுவுக்கு பாட்டு பாடாம போனா பின்ன கடிக்காம என்ன செய்யும்.. ஒரு பதிவு போட்டு எனக்கு என்ன புண்ணீயம் மக்கள் கேக்க மாட்டேங்கிறாங்களே..அவ்வ்வ்வ்

ஜெய்லானி said...

ஏ டி எம்மில் கொள்ளையா...!! அப்போ காவலாளிக்கு பங்கு இருக்கும்.. , கேமரா ஆப்பரேட்டருக்கும் பங்கு இருக்கும் ,, இது இல்லாம நடக்காது

ஜெய்லானி said...

அப்போ ஊர்ல சிக்கன் விலைவாசி ஏறிப்போச்சா..??

ஜெய்லானி said...

அஞ்சறை பெட்டி கமகமக்குதே..!!

Vijiskitchencreations said...

அக்கா பெருநாள் எல்லாம் நல்ல படியா முடிந்ததா?

ஆமாம் மஹி சொல்வது போல் நாங்க எல்லாம் படிப்பது ஈ பேப்பர். அதிலும் பாப்பாப் வந்து தொல்லை.

நானும் படித்தேன். ஸ்வர்னலதா மறைவு படித்து கஷடமா இருக்கு. நல்ல பாடகி
எனக்கு இன்றைக்கும் அவரோட மாலையில் யாரோ மனதோட பேச
அந்த பாட்டு ரொம்ப பிடிக்கும். நல்ல கீச் குரல்வளம்.அவரோட ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

அன்புடன் மலிக்கா said...

ஆகா அஞ்சரைபெட்டி அசத்தலாக இருக்கே!

பேப்பர்படிக்கும்போது இந்த தொல்லை உங்களுக்குமா!

சூப்பர் ஸாதிக்காக்கா. வெளுத்துகட்டுங்க..

Jaleela Kamal said...

அஞ்சறை பெட்டி விஷியங்க்ள் அருமை, ஆனால் நிறைய படம் மிஸ்ஸ்ஸிங் ஆகுது.

செக்கிங் அய்யோ எல்லா இடத்திலும் இப்படி தான்

ஹுஸைனம்மா said...

//செக்யூரிடி கைப்பைகளை திறந்து சோதித்து அனுப்புவதைப்பார்த்து//

அவங்க கவலை அவங்களுக்கு!! அதுவும் நீங்க புர்கா போட்டுடுப் போயிருப்பீங்க, அதனால இன்னும் ஸ்பெஷல் செக்கிங் இருந்திருக்குமே??

//காலையிலே முதல் பக்கத்தில் வந்து மக்களை கடனாளியாக ஆக்கப்பார்க்கின்றது//

ஏன்க்கா அப்படி நினக்கிறீங்க? காலையிலேயே இன்னிக்கும் கடன் வாங்காத வாழ்வு வாழ்வேண்டும் என்ற எண்ணத்தை விதைப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாமே? (ஆனா, கடன் கொடுக்கலாம்... :-)))) )


மரத்தை வெட்ட மாநகராட்சி அனுமதி வாங்கணுமா, அப்படியா?

சீமான்கனி said...

என்ன கா எல்லாம் சொந்தகதையும் நொந்தகதையுமா இருக்கு பாடகி ஸ்வர்ணலதா மரணம் வேதனை தான் ....

GEETHA ACHAL said...

அஞ்சறைபெட்டி அருமை...ஆமாம் மரத்தினால் தான் இப்பொழுது பெரும் அவஸ்தை..எங்க மாமியார் வீட்டிலும் வெளியில் இருக்கும் மரத்தினால் இதே பிரச்சனை தான்...

Ahamed irshad said...

அசத்தல் அஞ்சறைப் பெட்டி..பாடகி ஸ்வர்ணலதாவுக்கு அஞ்சலிகள்..

ஸாதிகா said...

ஆறுக்கும் தனித்தனியா விமர்சனம் செய்து வடையை வாங்கிய மகிக்கு நன்றி!

ஸாதிகா said...

மேனகாவுக்கு நன்றி!

ஸாதிகா said...

//மற்ற செய்திகளில் உங்க லொள்ளு சூப்பர்// அப்ப "லொள்ளு"ங்கறீங்க?நன்றி தோழி ஆசியா!

ஸாதிகா said...

நல்ல படியா போய்விட்டு சந்தோஷமாக திரும்பி வாருங்கள் ஐயூப்.அப்ப்டியே ஊரில் இருந்து கருவ மர விதையும் எடுத்து வாங்க.வாசலிலே நாட்டாமை ஞாபகமா நட்டு வைத்து விடலாம்.

ஸாதிகா said...

கேமரா இருக்கு சித்ரா.முகமூடி போட்டுக்கொண்டு வந்து அல்ல்வா கொள்ளை அடித்திருக்கின்றனர்.

ஸாதிகா said...

காயத்ரி,கருத்துக்கு நன்றி!

ஸாதிகா said...

அஞ்சறைப்பெட்டி சாமான்கள் மட்டும்தான் நன்றாக இருக்கா பாயிஷா?(நான் படத்தைக்கேட்டேன்)

ஸாதிகா said...

ஜெய்லானி,கொசுவுக்கு எப்படி பாட்டு பாடி விரட்டணும்.அதை முதலில் பதிவு போடுங்க.//ஏ டி எம்மில் கொள்ளையா...!! அப்போ காவலாளிக்கு பங்கு இருக்கும்.. , கேமரா ஆப்பரேட்டருக்கும் பங்கு இருக்கும் ,, இது இல்லாம நடக்காது//இப்படியெல்லாம் காவல்துறை சிந்திக்காமலா இருக்கும்.கட்டாயம் குற்றவாளிகள் பிடிபட்டுவிடுவார்கள்.தமிழ்நாடு காவல்துறை கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் ஏகப்பட்ட திறமையை வைத்து இருக்கின்றார்கள்!

ஸாதிகா said...

ஆம் விஜி பெருநாள் நல்லபடி கழிந்தது.கருத்துக்கு நன்றி விஜி.

ஸாதிகா said...

மலிக்கா என்ன ஆளையே நீண்ட நாட்களாக காணவில்லை.கருத்துக்கு நன்றி!

ஸாதிகா said...

//
செக்கிங் அய்யோ எல்லா இடத்திலும் இப்படி தான்//வேறு எங்கு ஜலி இப்படி பெரிய மால்களில் நடக்கின்றது??

ஸாதிகா said...

//ஏன்க்கா அப்படி நினக்கிறீங்க? காலையிலேயே இன்னிக்கும் கடன் வாங்காத வாழ்வு வாழ்வேண்டும் என்ற எண்ணத்தை விதைப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாமே? (ஆனா, கடன் கொடுக்கலாம்... :-)))) )
// ஹுசைனம்மா..இப்படி வேறு இருக்கா?//மரத்தை வெட்ட மாநகராட்சி அனுமதி வாங்கணுமா, அப்படியா?

// மாநகராட்சியில் என்ன ஊராட்சியில் கூட அனுமதி வாங்கித்தான் மரத்தை வெட்டணும்.கிளையை வெட்டினால் கூட பக்கத்து வீட்டுக்காரகள் கேள்வி கேட்கின்றார்கள். நன்றி ஹுசைனம்மா கருத்துக்கு.

ஸாதிகா said...

//என்ன கா எல்லாம் சொந்தகதையும் நொந்தகதையுமா இருக்கு// ஆமாம் சீமான்கனிதம்பி..அப்படித்தான் ஆகிப்போச்சு.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி கீதாஆச்சல்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி இர்ஷாத்.

Priya said...

அஞ்சரைபெட்டி நல்லா இருக்கு....சூப்பர்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கமகமன்னு எல்லா பெட்டியும்!!!

//அங்கு அதே பிராஸ்டட் சிக்கன் இரண்டு பீஸ் 85 ரூபாய்தான்.இரண்டு பீஸ் சிக்கனில் மட்டும் 50 ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்கின்றனர்.//

ஹலால்தானா?

ஸாதிகா said...

நன்றி ப்ரியா!

ஸாதிகா said...

//ஹலால்தானா?//நீண்ட நாள் கழித்து வந்திருக்கீங்க சகோ நிஜாமுதீன்.100 சதவிகிதம் ஹலால்தான்.ஹலால் என்று அறிவிக்கப்பட்ட உணவகங்களில் மட்டுமே சாப்பிடும் பழக்கத்தை கடைபிடித்து வருகின்றோம்.மேலும் இது ஒரு அரேபிய உணவகம்.அரேபிய பெயரை முன்னிறுத்திகொண்டு இருக்கும் உணவகம்.நன்றி சகோ.

அந்நியன் 2 said...

இந்த அஞ்சரை பெட்டி இன்னும் இருக்கா ? என் தாத்தன் காலத்தில் உள்ள அபூர்வ பொருளு,அமெரிக்காக்காரன் ஏவுகணையைக் கண்டு பிடிச்சப் பிறகு நம்மாளு நாமும் ஏன் சும்மா இருக்க என்று போட்டிக்கு கண்டு பிடிச்சதுதான் இந்த அஞ்சறைப் பெட்டி.

Abdulcader said...

நல்ல கார சாரமான அஞ்சறைப்பெட்டி.

vanathy said...

அக்கா, நல்லா இருக்கு அஞ்சறைப் பெட்டி.

Anisha Yunus said...

பாடகி ஸ்வர்ணலதா மறைந்துவிட்டார்னு நீங்க எழுதிதேன் எனக்கு தெரியும். வசீகரமான குரல். எல்லாருக்கும் முடிவு ஒன்றுதானே. ப்ச்.

மர விஷயத்துல அரசாங்கம் வெறும் விளம்பர போர்டு மாதிரிதேன் செயல்படுதுன்னு இதிலருந்தே தெரியல?

மனோ சாமிநாதன் said...

இந்த Mall பற்றி நீங்கள் எழுதியது நல்லதாகப்போயிற்று ஸாதிகா! சென்னை வரும்போது அதைப்பார்க்காமல் தவிர்த்து விடலாம்.
அஞ்சறைப்பெட்டி அருமை.
அதுவும் சென்னைச் செய்திகள் அடிக்கடி வருவது உபயோகமாக உள்ளது.

ஸாதிகா said...

//இந்த அஞ்சரை பெட்டி இன்னும் இருக்கா ?//ஐயூப் நீங்க கிச்சன் பக்கம் போவதே இல்லையா?கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

காயாலான்கடைகாதர் கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

வானதி உங்கள் கருத்துக்கும்நன்றி!

ஸாதிகா said...

அன்னு உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி!

ஸாதிகா said...

மனோ அக்கா.கருத்துக்கு மிக நன்றிக்கா.இங்கு எவ்வளவோ நல்ல விஷயங்களும் உள்ளது.அதனையும் அவ்வப்பொழுது எழுதுகின்றேன்.

ஸாதிகா said...

மனோ அக்கா.கருத்துக்கு மிக நன்றிக்கா.இங்கு எவ்வளவோ நல்ல விஷயங்களும் உள்ளது.அதனையும் அவ்வப்பொழுது எழுதுகின்றேன்.

Thenammai Lakshmanan said...

காலையிலே முதல் பக்கத்தில் வந்து மக்களை கடனாளியாக ஆக்கப்பார்க்கின்றது.(அதனாலே நான் இப்போதெல்லாம் நான் முதல்லேயே முதல் பக்கத்தை மட்டும் விட்டுட்டு அடுத்தடுத்த பக்கங்களைத்தான் தந்தி பேப்பரில் பார்க்கிறேனாக்கும்)//

ஆமா ஸாதிகா. காலையில் இப்படி செய்திகள் ரொம்ப எரிச்சலூட்டுகிறன..

Thenammai Lakshmanan said...

ஈத் முபாரக் ஸாதிகா..

சிநேகிதன் அக்பர் said...

பல விசயங்களின் கலவை. அருமை.

ஸாதிகா said...

எனக்கும்தான் தேனம்மை இப்படி விளம்பரங்களை காலையிலேயே பார்ப்பது எரிச்சல் உணர்வை ஊட்டுகின்றது.ஈத் வாழ்த்துக்கு நன்றி!கருத்துக்கு நன்றி!

ஸாதிகா said...

அக்பர் தங்கள் கருத்துக்கு நன்றி!

Unknown said...

அஞ்சறைப் பெட்டி தகவல் அசத்தல்.காரம்,மனம் குணம் நிறைந்திருக்கிறது.

நல்ல பயனுள்ள பகிர்வு.

Unknown said...

அஞ்சறை பெட்டி அருமை....
நல்ல பயனுள்ள பகிர்வு..

சாமக்கோடங்கி said...

கதம்ப மாலை போன்ற கோர்க்கப்பட்ட அழகான தகவல்கள்...

SUFFIX said...

EA யில் ஃபுட் கோர்ட் அருமைன்னு எல்லோருமே சொல்றாங்க, மாலுக்கு தகுந்த மாதிரி மாலும் மாறும் போல. ட்ரைவன் இன் தியேட்டர் இயற்கையான சூழளில் படத்தை ரசிக்கும் போது இது மாதிரி கடிகளையும் சேர்ந்தே ரசிக்கணும் போல.

ஸாதிகா said...

நன்றி சகோ அபுல்பசர்.

ஸாதிகா said...

நன்றி ஜிஜி

ஸாதிகா said...

நன்றி பிரகாஷ் என்ற சாமகோடங்கி

ஸாதிகா said...

//EA யில் ஃபுட் கோர்ட் அருமைன்னு எல்லோருமே சொல்றாங்க// அருமைதான் சகோ ஷஃபி.நான் சென்னையில் பார்த்த மால்களில் அழகும் விஸ்தீரணமும் உள்ள மால் இதுதான்.இருந்தாலும் உள்ளே நுழையும் பொழுதே அனைவரது கைபைகளையும் சோதிப்பது,புட் கோர்ட்டில் உணவகங்களில் பணபறிமாற்றமின்றி கார்டு கொடுத்து உணவு வாங்குதல்,உச்சகட்ட விலை இப்படி எரிச்சல் ஏற்படுத்தும் சம்பவங்கள் நிறைய.இங்கு வந்தால் சென்று பார்த்து உங்கள் அனுபவத்தை பகிருங்கள்.