September 7, 2010

ஸ்நேகிதச்சமையல்

மேனகாவின் கேரட் ஹல்வா.
பிரியாணி செய்யும் பொழுதெல்லாம் இப்பொழுது இதுதான் இனிப்புக்கு செய்வேன்.அந்தளவு எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தமான ஐட்டம்.
பாயிஷாவின் தயிர் பச்சடி.
பிரியாணி,நெய்சாதம் போன்றவற்றுக்கு ஏற்றவை.கூடவே கிரீம் சிறிது சேர்த்தால் டேஸ்ட் தூக்கும்.
சுஸ்ரீயின் கத்தரிக்காய் மசாலா.
இதுவும் பிரியாணிக்கு ஜோடி.பிளைன் சாதத்திற்கு ஏற்றது
மனோ அக்காவின் சிக்கன் 65.
எங்கள் வீட்டினருக்கு மட்டுமின்றி அனைவர் வீட்டிலும் விரும்பி சமைப்பவை.இதுவும் பிரியாணிக்கு சைட் டிஷ் ஆக வைத்தால் நன்றாக இருக்கும்.
இது ஜலிலாவின் குறிப்பு.கிட்டதட்ட நாங்கள் செய்வதைப்போல் இருந்தது.அளவுகளில்தான் சிறிது வித்தியாசம்.இன்னும் மற்ற சகோதரிகள் அவரவர் வீடுகளில் தயாரிக்கும் நோன்புக்கஞ்சி குறிப்பைக்கொடுத்தால் வித்தியாசாமான முறையில் செய்து பார்க்கலாம்.

மேனகாவுடையது.சூப்பர் சுவை.மாவை சற்று கெட்டியாக வைத்து அடை போல் செய்தேன்.கூடவே சிறிது மைதாமாவும் கலந்து.இரண்டு நாளானாலும் கெடவில்லை.

அம்முமதுவின் மெதுவடை வழக்கம் போல் இல்லாமல் ஜவ்வரிசி சேர்த்து அரைத்து வித்தியாசமாக இருந்த்து.

கீரை போண்டா
ஜலீலாவின் கீரை போண்டா.சத்துமிகு மொறு,மொறு போண்டா.
ஜலீலாவின் கேரட் ஜூஸ்.சுலபான அருமையான,சத்தான ஜூஸ்.தினமும் என் பிள்ளகள் பள்ளி சென்று வந்ததுமே பிரிட்ஜ்ஜில் இந்த ஜூஸ் இருகின்றதா என்று திறந்து பார்ப்பார்கள்.

மகியின் குறிப்பு.தயிரின் புளிப்புடன் சுவையாக இருந்தது.கூடவே சிறு தேங்காய்துண்டுகள் கடிபட வித்தியாசமான போண்டா.

27 comments:

இமா க்றிஸ் said...

கலக்கல் இடுகை ஸாதிகா. ஒவ்வொருவர் குறிப்பாகச் சமைத்துச் சுவைத்து... ம். பாராட்டுக்கள். ;)

நட்புடன் ஜமால் said...

நல்ல தொகுப்பா கொடுத்து இருக்கீங்க

Asiya Omar said...

நல்ல அருமையான படைப்பு.ஸாதிகா நட்புச்சமையல் பெயர் நல்லாதானே இருந்தது.பாராட்டுக்கள்.

எம் அப்துல் காதர் said...

அருமை!! எல்லோருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துகள்..

அந்நியன் 2 said...

நாங்கல்லாம் ..உப்புக்கு சப்பாணியா வந்து, சூப்பரா இருக்கு அருமையா இருக்குனு ஏதோக் கடைமைக்கு மூஞ்சியைக் காட்டிட்டுப் போறோம்.

ஆனால் நீங்களோ செய்துப் பார்த்து அதனின் தன்மையையும் விளக்கியுள்ளிர்கள்.

ஒன்னும் மட்டும் புரியுது.
இதுலே நீங்கள் ரொம்ப இன்ற்றஷ்ட்டா இருக்கிகனு.
எல்லோருமா சேர்ந்து அக்காவுக்கு ஒரு "ஓ" போடுங்கள்.

Menaga Sathia said...

என்னுடைய 2 குறிப்புகள் செய்து பார்த்தது மட்டுமில்லாமல் அனைவருடைய குறிப்புகளையும் அழகா செய்து போட்டிருக்கிங்க..ரொம்ப சந்தோஷம்+நன்றி அக்கா!!

சீமான்கனி said...

படித்து பார்பதைவிட அதை அப்படியே செய்து படம் பிடிச்சு பதிவிடுவது சாதாரன காரியம் இல்லை...அக்கா யு ஆர் கிரேட்...

Chitra said...

super...super....super.....!!!
SIMPLY SUPERB!

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான தொகுப்பு.. ரொம்ப நல்லாருக்கு..

ஜெய்லானி said...

எல்லாமே சூப்பரா இருக்கு பாக்குறதுக்கு ஆனா ஒரு ஐட்டம் இல்லையே
அது......அது..அ..து
உப்புமா...ஹி..ஹி...

vanathy said...

அக்கா, எல்லாமே சூப்பரோ சூப்பர்.

Jaleela Kamal said...

கலக்கலான சமையல் ஃபைவ் ஸ்டார் ரேஞ்சுக்கு இருக்கு .

இது போல் சிரமம் எடுத்து செய்து போட்டோ போட்டது நட்பை இன்னும் பலப்படுத்துது மனதில் நீங்காத் ஒரு இடம் பெற்று விட்டீர்கள்.

நான் செய்ததை விட நீஙக்ள் செய்துள்ளது இன்னும் அட்ராக்டிவாக இருக்கு.

ஸாதிகா said...

இமா,வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி!

ஸாதிகா said...

நட்புச்சமையல் பாகம் ஒன்று என்று போடாமல் ஸ்நேகிதச்சமையல் என்று போட்டுள்ளேன்.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

நன்றி அப்துல்காதர்.உங்கள் அனைவருக்கும் எனது "ஈத் முபாரக்"

ஸாதிகா said...

//.உப்புக்கு சப்பாணியா வந்து// இதற்கு நாட்டாமை தகுந்த விளக்கம் சொன்னால் நானும் தெரிந்துகொள்வேன்.

//ஒன்னும் மட்டும் புரியுது.
இதுலே நீங்கள் ரொம்ப இன்ற்றஷ்ட்டா இருக்கிகனு...உங்கள் பிளாக்கில் அப்படி ஒரு புரோஃபைல் படத்தினைப்போட்டுவிட்டு இப்படி சொல்லலாமோ ?

எங்கள் பக்கம்(முகவை மாவட்டத்தில் )இருந்து அதிகம் பதிவர்கள் இல்லை.இப்பொழுது நாட்டாமை வருகையால் மிக்க மகிழ்ச்சி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி மேனகா!

ஸாதிகா said...

மிக்க நன்றி சீமான்கனி.

ஸாதிகா said...

மிக்க நன்றி சித்ரா!

ஸாதிகா said...

மிக்க நன்றி ஸ்டார்ஜன்.

ஸாதிகா said...

மிக்க நன்றி வானதி.

Vijiskitchencreations said...

நல்ல செலக்‌ஷன் சமையல். குட்.

இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.

அந்நியன் 2 said...

//.உப்புக்கு சப்பாணியா வந்து// இதற்கு நாட்டாமை தகுந்த விளக்கம் சொன்னால் நானும் தெரிந்துகொள்வேன்.


என்ன நீங்க அப்புடி கேட்டுப் புட்டிக, உப்புக்கு சப்பாணி என்றால் உங்களுக்கு தெரியாதுக்கும் ? அட நம்ம சின்னப் புள்ளைகள்கிட்டே கேட்டா டக்குனு சொல்லிப்புடும் அம்மணி நீங்கள் தெரியாதுன்னு சொல்ட்ரியலே.

தென்னந்தோப்புலே தேங்காய் பறிக்கும் போது, தேங்காய் வியாபாரி ஆயிரம் காய் கேட்ட்ப்பான்லே தோட்டக்காரனும் ஆயிரம் காய் போட்டுடுவான்லே ,ஆனால் நப்பாசை பிடிச்ச வியாபாரி பயவுள்ளே இருக்கே,என்ன முதலாளி.. கூட ஒரு காய் போடுங்கள் என்று கேட்ட்ப்பான்லே ,அதுக்கு அந்த முதலாளி பயவுள்ளே ஏலே கருப்பு,அந்த மூலைலே குவிச்சுக் கிடக்கே, அதுலே இருந்து ஒருகாயி எடுத்து போடுலே என்று சத்தம் போடும்லே .அந்த ஒருகாயிதான் ஒண்ணுக்கும் லாயிக்கி இல்லாதக் காய்.அதுக்குத்தான்லே உப்புக்கு சப்பாணி என்று சொல்லுட்றது.

நீங்கள் கூட கேக்கலாம்லே, என்ன நாட்டாமை ஆயிரம் தேங்காய் வாங்குறவனுக்கு ஒரு காய் நல்லாக் காயப் போடக் கூடாது என்று, அதுதான்லே கிடையாது இந்தப் பயவுல்லைக வியாபாரத்தில்,தேங்காய் விக்கிறவன் ஆயிரம் காய் என்றால் ஆயிரம்தான் போடுவான், கூடப் போட்டால் அவன் மரம் நிறையாக் காய்க்காது என்பது சம்பிராதாயம்லே .வாங்குற பயவுள்ளேக தேங்காயை வித்துட்டுத்தாம்லே பைசா கொடுக்கும்.அதுலே சிலே நூறை சுட்டுட்டுத்தான் கொடுக்கும்லே.

இன்னும் ஒன்னும் இருக்குலே சின்னப் புள்ளைக விளையாடும்போது ஒரு பயவுள்ளே கூட வந்துருச்சுனா, அதை உப்புக்கு சப்பாணியா ஒரு டீமில் சேர்க்கும்லே.


//ஒன்னும் மட்டும் புரியுது.
இதுலே நீங்கள் ரொம்ப இன்ற்றஷ்ட்டா இருக்கிகனு...உங்கள் பிளாக்கில் அப்படி ஒரு புரோஃபைல் படத்தினைப்போட்டுவிட்டு இப்படி சொல்லலாமோ ?


நான் அந்த அர்த்தத்தில் சொல்லலே அம்மணி,நீங்கள் பிறர் தரும் படைப்புகளை மதித்து செய்து பார்த்து அதனின் ருசியை எங்களுக்கும் பகர்ந்து அளித்தீர்களே அதுக்குத்தான் ஒரு ஓ போடச்சொன்னேன் .


//எங்கள் பக்கம்(முகவை மாவட்டத்தில் )இருந்து அதிகம் பதிவர்கள் இல்லை.இப்பொழுது நாட்டாமை வருகையால் மிக்க மகிழ்ச்சி//.

ஐயோ நீங்கள் முகவை மாவட்டமா ? அப்படினா எந்த ஊரு ?

எங்க ஊர்லே கீர்லே போட்டுக் கொடுத்துராதியே,எல்லாப் பயவுள்ளேயும் இந்த ப்ளாக்கிற்கு வந்து தொல்லைக் கொடுக்கும். எனக்கு வலையில் மொத்தம் நூறுக்கு மேலானா நண்பர்கள் இருக்கிறார்கள்,மேக்சிமம் சாட்டிங்கில் பேசிகொள்வோம். மத்தப் படி எனக்கு பொழுது போக்க இந்த கணினிதான்.

வேலைக் கடலில்னாலே, கரைக்கு... ஊருக்கு வரும்போது வருவேன், அதுனாலே வெளியே எங்கேயும் சுத்த முடியாது.நானும் ஒருப் பட்டதாரிதான்,சும்மா பொழுதுப் போக்கிற்காக நான் வந்து சும்மா ஒளரிகிட்டு கிடக்கேன். அந்தப் போட்டோ அபு தாபிக்கு வந்தபோது நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்தது,கிறுக்குப் பயவுல்லைக போட்டோ எடுத்து அதை மெயில் அனுப்பி இருக்குக,அதான்.

Mahi said...

ஆஹா,சூப்பர் ஃபீஸ்ட் ஸாதிகாக்கா! :P:P

மைசூர் போண்டா செய்து பாத்திருக்கிங்களா? மிக்க நன்றி!

Angel said...

frienship band maadhiri idhu suuuuper friendship recipes shadhiqah .wish you a very happy Eid.

செய்தாலி said...

வலைச்சரம் வாங்க
http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_26.html