August 18, 2010

வலி


கருவறையில் நிறைந்திருக்கும்

சுமை குறைய

கலங்கி தவித்து அழுது அலறி

கத்தி கதறி மயங்கி துவண்டு

வயிற்றில் சுமந்ததற்காக

உடம்பின் அத்தனை அணுக்களிலும்

வலி சுமந்து

ஜனனத்தில் இருந்து கிட்டாத வலிகளின்

அத்தனை வேதனைகளையும்

ஒரு சேர அனுபவித்து

உடலில் உள்ள அத்தனை சக்திகளையும்

சில கணம் இழந்து

உயிர் போய் உயிர் வந்து

நாடி நரம்பு நெக்குருகி

குருதி எல்லாம் கொதித்துப்போய்

கண்கள் இரண்டும் கழன்று போய்

கருவிழிகள் நிலைத்துப்போய்

மயிர்கால்களெல்லாம் விரைத்துப்போய்

புனர் ஜென்மம் எடுத்தது போல்

புதிய உயிரை பிரசவித்தேன்

வருவோர்க்கெல்லாம் உவகையுடன்

அள்ளி அள்ளி இனிப்பு வழங்கி

இன்முகத்துடன் கூறி மகிழ்கின்றாள்

என் அன்னை "இது சுகபிரசவம்"என்று.

51 comments:

athira said...

கொடுமை படிப்பதற்கு முன் வட எனக்குத்தான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்..

athira said...

சூப்பர் கவிதை ஸாதிகா அக்கா. உண்மைதானே..... எத்தனை வலிகள், கொடுமைகளின் பின் கூறுகிறோம் அதனை “சுகப்பிரசவம்” என்று.

Asiya Omar said...

கவிதை அருமை.என்னதான் சொன்னாலும் பிள்ளை பிறந்து விழும் பொழுது கிடைக்கும் சுகம் தனி தானே.

நட்புடன் ஜமால் said...

எது கொடுமை

கவிதையும் நல்லாத்தான் இருக்கு

பெற்றுடுக்கும் கவிதை முன் எதுவும் கொடுமையாக இருக்காது ...

( புரிஞ்சிக்க மட்டுமே இயலும் உணர இயலாது எங்களுக்கு )

Gayathri said...

arumaiyaana kavithai

GEETHA ACHAL said...

அருமையாக அழகாக பிரசத்தின் உணர்வினை எழுத்தாக வடித்து இருக்கின்றிங்க...அருமை...

Menaga Sathia said...

சூப்பர்ர் அக்கா..பெள்ளை பெற்றெடுத்ததும் வலியெல்லாம் எப்படிதான் மறைந்துபோகும்னே தெரியவில்லை..அது ஒருதனி சுகம்தான்..

Abdulcader said...

kavithai super

ஜெய்லானி said...

கவிதைக்கு(?) ஒரு ராயல் சல்யூட் .

Ahamed irshad said...

Super Lines... Arumai

Jerry Eshananda said...

என்ன மேடம் திடீர்னு கவிதையில மிரட்றீங்க..

சிநேகிதன் அக்பர் said...

உண்மையிலேயே கஷ்டமான விசயம்தான்.

அதனாலதான் தாயின் காலடியில் சொர்க்கம் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.

மதுரை சரவணன் said...

//August 18, 2010
என்ன கொடுமையடா

கருவறையில் நிறைந்திருக்கும்
சுமை குறைய
கலங்கி தவித்து அழுது அலறி
கத்தி கதறி மயங்கி துவண்டு
வயிற்றில் சுமந்த குற்றத்திற்காக
உடம்பின் அத்தனை அணுக்களிலும்
வலி சுமந்து
ஜனனத்தில் இருந்து கிட்டாத வலிகளின்
அத்தனை கொடுமைகளையும்
ஒரு சேர அனுபவித்து
உடலில் உள்ள அத்தனை சக்திகளையும்
சில கணம் இழந்து
உயிர் போய் உயிர் வந்து
நாடி நரம்பு நெக்குருகி
குருதி எல்லாம் கொதித்துப்போய்
கண்கள் இரண்டும் கழன்று போய்
கருவிழிகள் நிலைத்துப்போய்
மயிர்கால்களெல்லாம் விரைத்துப்போய்
புனர் ஜென்மம் எடுத்தது போல்//


உண்மை... என் மனைவியின் முதல் பிரசவத்தில் இதை உணர்ந்தேன். வாழ்த்துக்கள்

ஹுஸைனம்மா said...

பிரசவங்களில் வலியையும் அனுபவித்து, முடியாமல் சிஸேரியனாகி, பின்னர் புண் இன்ஃபெக்‌ஷன் ஆகி, மாதக்கணக்கில் வலியோடு கஷ்டப்பட்டு, பின் விளைவாக தீரா வயிற்றுவலியையும் அனுபவித்து வருபவ(ர்க)ளுக்கு, நிச்சயமாக நீங்கள் சொல்லியிருப்பது “சுகப்பிரசவமே”!! அதுவாவது ஒருநேர வலியோடு போய்விடும். :-(

Chitra said...

அருமையான கவிதை.... அத்தனை வலிகளையும் தாங்கி, சுகமாய் மீண்டு வருவதாலோ?
இன்ட்லியில், இந்த கவிதைக்கு ஓட்டு போட இயலவில்லை. error மெசேஜ் வருது. பிறகு முயற்சிக்கிறேன்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

கவிதைக்கு வாழ்த்துகள்.. தாய்மையின் உணர்வுகளை சித்தரித்தது அருமையாக உள்ளது.. ஒரு ராயல் சல்யூட்.

சீமான்கனி said...

எனக்கு தலைப்பு மட்டும் பிடிக்கலை அக்கா...

vanathy said...

அக்கா, சூப்பர் கவிதை. உண்மை தான் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும் வலி.

Ramesh said...

சூப்பர்..பிரசவ வேதனையை..அப்படியே தெளிவாக கொட்டி இருக்கிறீர்கள்...ஆனால்...

//என்ன கொடுமையடா!

பிடிக்கலை...

//வயிற்றில் சுமந்த குற்றத்திற்காக

நம் குழந்தையை வயிற்றில் சுமந்ததே குற்றம் என்று எந்த தாயும் நினைக்க மாட்டார் இல்லையா...தவறுதலாக இந்த வரி இடம் பெற்றுவிட்டது என நினைக்கிறேன்...சாரி...

//ஜனனத்தில் இருந்து கிட்டாத வலிகளின்
அத்தனை கொடுமைகளையும்

பிடிக்கலை..

இந்த வரிகளைத் தவிர்த்துவிட்டு பார்த்தால்..பிள்ளை பெறுவதின் சிரமங்களை அப்படியே உணர வைத்திருக்கிறீர்கள்..வாழ்த்துக்கள்...

ஸாதிகா said...

நன்றி அதிரா.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி தோழி ஆசியா.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி சகோ ஜமால்.

ஸாதிகா said...

நன்றி காயத்ரி.

ஸாதிகா said...

நன்றி கீதாஆச்சல்.

ஸாதிகா said...

//பிள்ளை பெற்றெடுத்ததும் வலியெல்லாம் எப்படிதான் மறைந்துபோகும்னே தெரியவில்லை..அது ஒருதனி சுகம்தான்//உண்மை வரிகள் மேனகா.மிக்க நன்றி.

ஸாதிகா said...

முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி கா.க.கா (காயலான்கடை காதர்)பெயர் வித்தியாசமாக பெயரைப்பார்த்ததும் பிளாக் போய் பார்க்கத்தோன்றியது.அப்புறமாக உங்கள் பதிவுகளுக்க்கு பின்னூட்டுகின்றேன்.

ஸாதிகா said...

ராயல் சல்யூட்டுக்கு மிக்க நன்றி ஜெய்லானி பிரதர்.

ஸாதிகா said...

நன்றி இர்ஷாத்

ஸாதிகா said...

//என்ன மேடம் திடீர்னு கவிதையில மிரட்றீங்க.// என்ன ஜெரிசார் இப்படி கேட்டுட்டீங்க.இந்த கவிதை மிரட்டலாகவா இருக்கு?:-(கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி அக்பர்.

ஸாதிகா said...

கவிதையை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து பின்னூட்டம் கொடுத்த மதுரை சரவணன் அவர்களுக்கு நன்றி.

ஸாதிகா said...

ஹுசைனம்மா உங்களில் சிலர் பின்னூட்டங்கள் கண்டு எனக்கும் தலைப்பும்,சில வரிகளும் பிடிக்காமல் போய் விட்டது.ஸோ..மாற்றி விட்டேன்.கருத்துக்கு நன்றி

ஸாதிகா said...

மிக்க நன்றி சித்ரா.மறவாமல் ஓட்டும் போட்டுவிட்டீர்கள்.ஸோ..டபுள் நன்றி.

ஸாதிகா said...

ஸ்டார்ஜன் பிரதர் உங்கள் ராயல் சல்யூட்டுக்கும் நன்றி.

ஸாதிகா said...

தலைப்பை மாற்றிவிட்டேன் சீமான் கனி.ஒகேவா?

ஸாதிகா said...

வானதி கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

ரமேஷ் கருத்துக்கு மிக்க நன்றி.மீண்டும் தலைப்பில் இருந்து ஒரு முறை பாருங்களேன்.

crown said...

அருமையாய் பிரசவித்தீர் அழகு கவிக்குழந்தை.பிரசவம் என்றுமே பிற சவமே பெண்ணுக்கும் கவிஞனுக்கும்.
Mohamed Thasthageer(usa)

தூயவனின் அடிமை said...

வலியின் வேகம் கவிதையில் தெரிந்தாலும், ஒரு பெண் தாய் ஆகின்றாள் என்ற வார்த்தை, வலியிலும் ஒரு
சுகம் தான். இந்த பாக்கியம் கிடைக்காத எத்தனை சகோதரிகள் எவ்வளவு ஏளனத்திற்கு ஆளாகி உள்ளார்கள்.

Mahi said...

அனுபவித்து எழுதிருக்கீங்க ஸாதிகாக்கா! அருமை.

ஸாதிகா said...

சகோ முஹம்மத் தாஜுதீன் தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

//வலியின் வேகம் கவிதையில் தெரிந்தாலும், ஒரு பெண் தாய் ஆகின்றாள் என்ற வார்த்தை, வலியிலும் ஒரு
சுகம் தான். இந்த பாக்கியம் கிடைக்காத எத்தனை சகோதரிகள் எவ்வளவு ஏளனத்திற்கு ஆளாகி உள்ளார்கள்.//உண்மைதான் இளம் தூயவன்.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

//அனுபவித்து எழுதிருக்கீங்க ஸாதிகாக்கா! // :-) மகி ,நானும் தாயானாலும் பிரசவ வலி என்னென்று அறியமாட்டேன்.தூங்கச்செய்து,தட்டி எழுப்பி ஈன்ற குழந்தையை பார்த்ததுதான் என் அனுபவமின்றி இக்கவிதை என் அனுபவம் இல்லை.என் ஆசை என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

புல்லாங்குழல் said...

தத்ரூபமான ஓவியத்தைப் போல பிரசவ அவஸ்தையை மிகவும் அற்புதமான கவிதையாக்கியுள்ளீர்கள் சகோதரி!.

ஹைஷ்126 said...

அருமையான கவிதை...

வாழ்க வளமுடன்

ஹுஸைனம்மா said...

//தூங்கச்செய்து,தட்டி எழுப்பி ஈன்ற குழந்தையை பார்த்ததுதான் என் அனுபவம்//

வார்த்தைகளில் விளையாடிருக்கீங்க!! வாவ்!!

Thenammai Lakshmanan said...

எனக்கு ரெண்டும் சிசேரியன் .ஸாதிகா.. ஆனால் வலியை புரிந்து கொள்ள முடியுது..

மனோ சாமிநாதன் said...

அருமையான கவிதை ஸாதிகா. வாழ்த்துக்கள்!

செவத்தப்பா said...

அருமையான கவிதை; சிந்தித்து உணரவேண்டிய கடைசி வார்த்தை/வரி...

இக்கவிதையைத் தந்தமைக்கு சகோதரி ஸாதிகாவுக்கு மிக்க நன்றி!

செவத்தப்பா said...

//மாதிரி வாழ்வை பிள்ளைகளுக்கு கொடுங்கள்!// இதைவிட அழகிய முன்னுதாரணங்கள் வேண்டுமா என்ன?

நன்றி!

செவத்தப்பா said...

//மாதிரி வாழ்வை பிள்ளைகளுக்கு கொடுங்கள்!// இதைவிட அழகிய முன்னுதாரணங்கள் வேண்டுமா என்ன?

நன்றி!